ரீமா காக்தி

இந்திய திரைப்பட இயக்குநர்

ரீமா காக்தி ( Reema Kagti ) என்பவர் ஓர் இந்திய திரைப்பட இயக்குநர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் ஆவார். இவர் குறிப்பாக இந்தி திரைப்பட துறையில் பணிபுரிந்து வருகிறார். இவர் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட ஹனிமூன் டிராவல்ஸ் பிரைவேட் லிமிடெட் (2007) என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனார். அதைத் தொடர்ந்து நியோ-நோயர், தலாஷ் (2012) மற்றும் வரலாற்று விளையாட்டு நாடகத் திரைப்படமான கோல்ட் (2018) ஆகிய படங்களை இயக்கினார். ரீமா, ஜோயா அக்தருடன் இணைந்து டைகர் பேபி பிலிம்ஸ், என்ற பெயரிலான திரைப்படம் மற்றும் வலை பணியகத்தை 2015 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் நிறுவினார்.[1]

ரீமா காக்தி
2011 இல் ரீமா காக்தி
பிறப்புரீமா காகதி
டிக்பாய், இந்தியா
பணிதிரைப்பட இயக்குநர், திரைக்கதை ஆசிரியர்
செயற்பாட்டுக்
காலம்
2007–தற்போது

ஆரம்ப கால வாழ்க்கை

தொகு

ஒரு நேர்காணலில், ரீமா காக்டி கூறுகையில், இவர் அசாமின் தின்சுகியா மாவட்டத்தின் போர்ஹாப்ஜானைப் பூர்வீகமாகக் கொண்டவர். அவரது தந்தை ஒரு பண்ணை நடத்தி வருபவர் ஆவார். தில்லியில் பள்ளிப்படிப்பை முடித்த இவர் பிறகு, தனது வளரிளம் பருவத்தில் மும்பைக்கு குடிபெயர்ந்ததாகவும் தன் நேர்காணலில் கூறினார்.[2]

தொழில்

தொகு

இவர் ஒரு அசாமி குடும்பத்தில் ரீமா காக்தி என்ற பெயரில் பிறந்தார். இவர் இப்போது காக்தியை தனது கடைசிப் பெயராகப் பயன்படுத்துகிறார். பர்கான் அக்தர் ( தில் சஹ்தா ஹை, லக்சயா ), அசுதோஷ் கோவாரிகர் ( லகான் ), ஹனி இரானி ( அர்மான் ), மீரா நாயர் ( வேனிட்டி ஃபேர் ) உள்ளிட்ட பல முன்னணி இயக்குநர்களிடம் ரீமா உதவி இயக்குநராகப் பணியாற்றியுள்ளார்.[3]

எக்ஸெல் என்டர்டெயின்மென்ட் திரைப்பட நிறுவனம் தொடங்கப்பட்டதில் இருந்து இவர் அதன் ஒரு கூட்டாளியாக இருந்து வருகிறார். ஏனெனில் இவர் பர்கான் அக்தர் மற்றும் சோயா அக்தர் இருவரின் அனைத்து திரைப்படங்களிலும் விளம்பரங்களிலும் இன்றுவரை உதவியாளராக இருந்திருக்கிறார்.[4] ரீமா மற்றும் ஜோயா அக்தர் இருவரும் இணைந்து டைகர் பேபி பிலிம்ஸ் என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை அக்டோபர் 2015 இல் நிறுவினர்.

இயக்குநர் வாழ்க்கை

தொகு

2006 இல் ஹனிமூன் டிராவல்ஸ் பிரைவேட் லிமிடெட் படத்தின் மூலம் இயக்குநராக இவர் அறிமுகமானார் .[5] அவரது அடுத்த படமான தலாஷ், படத்தில் ஆமிர் கான், ராணி முகர்ஜி மற்றும் கரீனா கபூர் நடித்தனர். சஸ்பென்ஸ் நாடகப் படமான இது விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டது.[6] இவர் அண்மையில் இயக்கிய படமான கோல்ட், இந்திய விடுதலைக்குப் பிறகு இந்தியா வென்ற முதல் ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தைப் பற்றிய திரைப்படமாகும். இதன் பின்னர் இவர் தஹாத் என்ற பரபரப்பூட்டும் வலைத் தொடரை இயக்கினார்.

திரைப்படவியல்

தொகு
ஆண்டு திரைப்படம் இயக்குநர் திரைக்கதை கதை குறிப்புகள்
2007 ஹனிமூன் டிராவல்ஸ் பிரைவேட். லிமிடெட் ஆம் ஆம் ஆம்
2008 ராக் ஆன்!! இல்லை இல்லை இல்லை ஒரு நடிகையாக
2011 ஜிந்தகி நா மிலேகி டோபரா இல்லை ஆம் ஆம் இணை எழுத்தாளர் : சோயா அக்தர்
2012 தலாஷ்: தி ஆன்சர் லையிஸ் வித்தின் ஆம் ஆம் ஆம் இணை எழுத்தாளர் : சோயா அக்தர்
2013 பாம்பே டாக்கீஸ் இல்லை ஆம் இல்லை
2015 தில் தடக்னே தோ இல்லை ஆம் ஆம்
2018 கோல்ட் ஆம் ஆம் ஆம் இணை எழுத்தாளர் : ராஜேஷ் தேவராஜ்
2019 கல்லி பாய் இல்லை ஆம் ஆம் இணை எழுத்தாளர் : சோயா அக்தர்
மேட் இன் ஹெவன் இல்லை ஆம் ஆம் வலைத் தொலைக்காட்சி, இணை உருவாக்கியவர் : சோயா அக்தர்
2023 தஹாத் ஆம் ஆம் ஆம் தொலைக்காட்சி தொடர், இணை உருவாக்கியவர் : சோயா அக்தர்
கோ கயே ஹம் கஹான் இல்லை ஆம் இல்லை தயாரிப்பாளரும் [7]
ஆர்க்கிஸ் இல்லை ஆம் இல்லை தயாரிப்பாளர்
தயாரிப்பில் ஜீ லே ஜரா இல்லை ஆம் ஆம் இணை எழுத்தாளர் : சோயா அக்தர் பர்கான் அக்தர்
உதவி இயக்குநராக
ஆண்டு திரைப்படம்
2001 லகான்
தில் சாஹ்தா ஹை
2004 லக்சயா

விருதுகள்

தொகு
திரைப்படம் விருது வகை முடிவு மேற்கோள்
ஜிந்தகி நா மிலேகி டோபரா 13வது ஐஐஎப்ஏ விருதுகள் சிறந்த கதை வெற்றி [8][9]
சோயா அக்தர் சிறந்த திரைக்கதை வெற்றி
18வது திரை விருதுகள் சோயா அக்தர் உடன் சிறந்த திரைக்கதை பரிந்துரை [10]
ஜீ திரைப்பட விருதுகள் சோயா அக்தர் சிறந்த கதை வெற்றி [11]
ஸ்டார் கில்ட் விருதுகள் 2012 சோயா அக்தர் உடன் சிறந்த திரைக்கதை வெற்றி [12]
சிறந்த கதை வெற்றி
கல்லி பாய் 65வது பிலிம்பேர் விருதுகள் சிறந்த கதை பரிந்துரை [13]
சோயா அக்தர் உடன் சிறந்த திரைக்கதை வெற்றி
21வது ஐஐஎப்ஏ விருதுகள் சோயா அக்தர் உடன் சிறந்த கதை வெற்றி
மேட் இன் ஹெவன் ஐரீல் விருதுகள் 2019 சிறந்த நாடகப் பட எழுத்தாக்கம் - சோயா அக்தருடன் பரிந்துரை [14]

மேற்கோள்கள்

தொகு
  1. ANI (2022-02-14). "Zoya Akhtar, Reema Kagti's 'Tiger Baby' clocks 3 years". ThePrint (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-11-16.
  2. Nair, Supriya (9 November 2012). "Reema Kagti: Being 'mad' in Bollywood". Mint. https://www.livemint.com/Leisure/7mNgBbD0nGOeGhqzc84azI/Reema-Kagti-Being-mad-in-Bollywood.html. 
  3. ""Initially I had plans to make a dark film; in fact it was darker than an average film" - Reema Kagti". Bollywood Hungama. 2006-11-07. Archived from the original on 20 November 2010. பார்க்கப்பட்ட நாள் 2011-07-04.
  4. "Honeymoon Travels". Imagineindia.net. Archived from the original on 4 March 2016. பார்க்கப்பட்ட நாள் 2011-07-04.
  5. "Reema Kagti". Excel Entertainment.
  6. "Aamir's Khan's next is suspense drama directed by Reema Kagti". Bollywood Hungama. 2010-11-01. பார்க்கப்பட்ட நாள் 2011-07-04.
  7. "It's a wrap for Ananya Panday, Siddhant Chaturvedi's Kho Gaye Hum Kahan. See pic". India Today.
  8. "IIFA Awards 2012: 'Zindagi Na..', 'Rockstar' steal the show". Zee News. 10 June 2012. Archived from the original on 23 January 2015. பார்க்கப்பட்ட நாள் 23 January 2015.
  9. "Zindagi Na Milegi Dobara (2011) — Awards". Bollywood Hungama. Archived from the original on 3 November 2013. பார்க்கப்பட்ட நாள் 24 January 2015.
  10. "Winners of 18th Annual Colors Screen Awards 2012". Bollywood Hungama. 16 January 2012. Archived from the original on 26 April 2016. பார்க்கப்பட்ட நாள் 24 January 2015.
  11. "Nominations for Zee Cine Awards 2012". Bollywood Hungama. 19 January 2012. Archived from the original on 19 June 2012. பார்க்கப்பட்ட நாள் 15 May 2012.
  12. "7th Apsara Awards – Nominees". Film Producers Guild of India. Archived from the original on 4 May 2012. பார்க்கப்பட்ட நாள் 27 January 2012.
  13. "WINNERS OF THE 65TH AMAZON FILMFARE AWARDS 2020". Filmfare. பார்க்கப்பட்ட நாள் 18 February 2020.
  14. "iReel Awards 2019: Check Out The Complete List Of Winners". News18. 2019-09-23. பார்க்கப்பட்ட நாள் 2019-09-23.

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Reema Kagti
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரீமா_காக்தி&oldid=3944654" இலிருந்து மீள்விக்கப்பட்டது