இரூபினா அலி

இந்திய நடிகை
(ரூபினா அலி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

இரூபினா அலி (Rubina Ali) ( 21 ஜனவரி 1999), என்றும் இரூபினா குரேஷி மற்றொரு பெயர் கொண்ட இவர் இந்தியாவின் குழந்தை நடிகையாவார். 2008இல் வெளியான ஆஸ்கார் விருதினை வென்ற "சிலம்டாக் மில்லியனர்" என்றத் திரைப்படத்தில் லத்திகா பாத்திரத்தின் சிறு வயது குழந்தையாக நடித்தார், இதற்காக 2008இல் ஸ்க்ரீன் ஆக்டர்ஸ் கில்ட் விருதினை பெற்றார். படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, 2009இல் பாலிவுட் படமான கல் கிஸ்னே தேகா படத்தில் நடித்தார்.

இரூபினா அலி குரேஷி
பிறப்புஇரூபினா அலி குரேஷி
21 சனவரி 1999 (1999-01-21) (அகவை 25)
மற்ற பெயர்கள்இரூபினா குரேஷி
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
2008–தற்போது

சொந்த வாழ்க்கை

தொகு

இவரது திரைக்கதாப் பாத்திரத்தைப் போலவே, இரூபினா மும்பை சேரி ஒன்றில் இருந்து திரையுலகிற்கு வந்தார், பாந்த்ரா இரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள கரிப் நகர் சேரியில் வசித்தார். இவருடைய தந்தை இரபீக், சகோதரி சானா, சகோதரன் அப்பாஸ் மற்றும் இவரது இரண்டாவது தாய் மூன்னி ஆகியோருடன் இவர் வசித்து வந்தார். இரூபினாவின் தாயார், குர்ஷித், ரபிக்கை விவாகரத்து செய்துவிட்டு, மனீஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவரது தந்தை இரபீக்குக்கு முன்னியின் மூலம் சுரையா, சஞ்சீதா, பாபு மற்றும் இர்பான் ஆகிய நான்கு குழந்தைகள் உள்ளனர்.[1][2][3] 2009ஆம் ஆண்டில் மகாராட்டிர அரசின் அகாதமி விருது, பெற்ற "ஸ்லம்டாக் மில்லியனர்" வெற்றியைத் தொடர்ந்து, வீட்டு வசதி மேம்பாட்டு ஆணையம் அதில் நடித்த குழந்தைகளுக்கு வீடு மற்றும் வெகுமதியினை அறிவித்தது.[4] 25 பிப்ரவரி 2009 அன்று, மகாராட்டிர வீட்டு வசதி மேம்பாட்டு ஆணையம் அசாருதீன் மற்றும் இரூபினா ஆகிய இருவருக்கும் மும்பை சேரி கரிப் நகர் பகுதியிலேயே இலவச வீடுகளை வழங்குவதாக அறிவித்தனர்.[5] எனினும் மார்ச் 2011 வரை அலி கரிப் நகரிலுள்ள ஒரு குடிசையில் வசித்து வந்தார்.[6] பிரித்தானிய இயக்குனரான டேனி பாயல் மூலம் வாடகைக்கு ஒரு தற்காலிக புகலிடத்தை தேடிக் கொண்டபின், இரூபினாவும் அவரது குடும்பத்தாரும் கடைசியாக மும்பையின் பாந்த்ரா மேற்கு புறநகர் பகுதியில் உள்ள சொந்த குடியிருப்பில் மறுபடியும் சேர்த்து வாழ்ந்தனர்,[7][8]

தொழில்

தொகு

இரூபினாவின் நடிப்பு சிலம்டாக் மில்லியனயர் (திரைப்படம்) தயாரிப்பாளர்களிடம் சர்ச்சைக்குள்ளானது. படத்தில் உண்மையான குடிசைக் குழந்தைகளைப் பயன்படுத்தலாமா என விவாதிக்கப்பட்டது. இயக்குனர் டேனி பாயில் இவ்வாறு நியாயப்படுத்தினார்: "இந்த மக்களுக்கு எதிராக தவறுதலான் எண்ணம் இருக்கிறது, நாம் ஏன் அவர்களுக்கு எதிராகத் துரோகம் செய்ய வேண்டும்?" [9]

 
சிலம்டாக் மில்லியனயர் திரைப்படக்குழு அமெரிக்கவில் 81வது அகாடமி விருதின்போது

இந்த படத்தில் இரூபினா மற்றும் அவரது துணை நடிகருமான அசாருதீன் முகம்மது இஸ்மாயிலுக்கும் பிரிட்டனில் தயாரிப்பு நிறுவனத்தின் மூத்த ஊழியர்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர ஊதியத்திற்கு சமமாக ஊதியம் வழங்கப்பட்டிருப்பதாக திரைப்பட தயாரிப்பாளரால் கூறப்பட்டது. அவர்கள் பதினெட்டு வயது வரை தொடர்ந்து கல்விக்காக உதவ ஒரு அறக்கட்டளை நிதி அமைக்கப்பட்டது.[10] அசாருதின் மற்றும் இரூபினா இருவரும் 2009 பிப்ரவரி 22 அன்று நடைபெற்ற 81வது அகாடமி விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இவர்களுடன் படத்தில் சலீம், ஜமால், மற்றும் இலத்திகா எனற பாத்திரங்களில் நடித்தவர்களும் அங்கு சென்றனர். அசாருதீன் தனது தாயார் ஷமீம் இஸ்மாயிலுடனும், இரூபினா தனது மாமாவுடனும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.[11] ரூபினா மும்பையை விட்டு வெளியே பயணம் செய்வது இதுவே முதல் முறையாகும்

மார்ச் 209 இல் ஸ்லம்டாக் மில்லியனர் படத்தில் தன்னுடன் நடித்த அசாருதினுடன் பாலிவுட் திரைப்படமான கல் கிஸ்னே தேகா என்ற படத்தில் நடித்தார். விவேக் சர்மா இதை இயக்கியிருந்தார். மேலும், இப்படத்தில் பாலிவுட் திரைப்பட நட்சத்திரங்களான சாருக் கான், ரிசி கபூர் மற்றும் ஜூஹி சாவ்லா ஆகியோர் சிறப்புத் தோற்றத்தில் வந்து சென்றனர்..[12] ஜூலை 2009இல் 9 வயதான இரூபினா "ஸ்லம்கேர்ல் ட்ரீமிங்" எனும் சுயசரிதையை எழுதியுள்ளார், இதில் "ஸ்லம்டாக் மில்லியனர்" திரைப்படத்தில் தனது அனுபவம் மற்றும் தனது வாழ்க்கையை விவரிக்கிறார்.[13] 2009ஆம் ஆண்டில், இவர் ஆன்ட்னி ஹாப்கின்ஸ் என்ற நடிகருடன் காதல் நகைச்சுவைப் படமான "லார்ட் ஓவன்ஸ் லேடி" என்றப் படத்தில் நடிக்க இருப்பதாக அறிவித்தார்,[14] ஆனால் 2013 ஆம் ஆண்டில் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்படவில்லை.[15]

ஊதியம்

தொகு

இங்கிலாந்தின் டெய்லி டெலிகிராப் என்ற பத்திரிகையின் கூற்றுப்படி, இரூபினா அலிக்கு ஒரு மாத கால படப்பிடிப்பிற்கு 500 டாலர் வழ்ங்கப்பட்டது எனத் தெriகிறது.[16] பாக்ஸ் சர்ச்லைட் செய்தித் தொடர்பாளர் இந்த திரைப்படத்தின் ஒரு மாத வேலைக்காக வீட்டிலுள்ள வயது வந்தோருக்கான சராசரி வருடாந்திர ஊதியத்தின் அளவில் மூன்று மடங்காக வழங்கப்பட்டது எனத் தெரிவிக்கிறார்.[16] டேனி பாயில் இவற்றிக்கான பதிலை இவ்வாறு விளக்கினார், "அறக்கட்டளை நிதியத்தில் என்ன இருக்கிறது என்பதைப் பற்றிய சரியான புள்ளிவிவரங்களை நாங்கள் வெளியிட விரும்பவில்லை, அவர்கள் பள்ளியை விட்டு வெளியேறும்போது அவர்களுக்கு வங்கிக் கணக்கில் ஒரு கணிசமான தொகை இருக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது, நீண்ட காலத்திற்குப் பிறகு அவர்கள் நன்மை அடைவார்கள், இது சரியான அணுகுமுறை என்று நான் நினைக்கிறேன்".[17][18]

விருதுகள்

தொகு

வெற்றி

பரிந்துரை

  • 2008: சிலம்டாக் மில்லியனயர் படத்திற்காக பிளாக் ரீல் விருதுகள்.[20]

திரைப்பட வரிசை

தொகு
வருடம் படம் பாத்திரம் மொழி குறிப்பு
2008 சிலம்டாக் மில்லியனயர் (திரைப்படம்) சிறு வயது இலத்திகா ஆங்கிலம் மற்றும் இந்தி இந்தியில் ஸ்லம்டாக் குரோர்பதி தமிழில் நானும் கோடிஸ்வரன்
2009 கல் கிஸ்னே தேகா இந்தி
2013 லா அல்போம்ப்ரா ரோஜா தன்னுடைய கதை ஆங்கிலம் மற்றும் இந்தி த ரெட் கார்பெட் - ஆங்கிலம்; விபரணத் திரைப்படம் குறும்படம்

மேற்கோள்கள்

தொகு
  1. "Sell off Rubina? It's a lie: father". Indian Express. 20 April 2009. பார்க்கப்பட்ட நாள் 12 July 2012.
  2. "In the belly of iniquity". The Telegraph (Calcutta, India). 26 April 2009 இம் மூலத்தில் இருந்து 19 ஏப்ரல் 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180419053230/https://www.telegraphindia.com/1090426/jsp/7days/story_10876697.jsp. 
  3. Ramesh, Randeep (28 February 2009). "Slumdog actor upset at return of her mother". London: தி கார்டியன். https://www.theguardian.com/world/2009/feb/28/rubina-ali-slumdog-millionaire. பார்த்த நாள்: 2 March 2009. 
  4. "Slumdog children to be rehoused", BBC News, 25 February 2009.
  5. Serpe, Gina "Slumdog Kids No Longer Slumming It", E! Online, 25 February 2009.
  6. "Slumdog Millionaire child actress's home in Mumbai fire". BBC News. 5 March 2011. https://www.bbc.co.uk/news/world-south-asia-12655792. 
  7. Slumdog Millionaire' star Rubina Ali's flat in Bandra பரணிடப்பட்டது 2011-10-18 at the வந்தவழி இயந்திரம் IBN 16 October 2011
  8. From slums to queen of suburbs, Rubina Ali goes places The Weekend Leader 2 Apr 2012.
  9. "Slumdog stars return to reality" The Sun
  10. "Slumdog Millionaire's child stars to miss Oscars" Daily Telegraph
  11. "Two Mumbai slum kids set for fairytale journey to Oscars". Indo-Asian News Service. 19 பெப்பிரவரி 2009. Archived from the original on 1 அக்டோபர் 2012. பார்க்கப்பட்ட நாள் 20 பெப்பிரவரி 2009.
  12. "Azhar and Rubina shoot for movie where Shah Rukh has a cameo". The Siasat Daily. 5 March 2009. Archived from the original on 12 March 2009. பார்க்கப்பட்ட நாள் 5 March 2009. {{cite web}}: Italic or bold markup not allowed in: |publisher= (help)
  13. "'Slumdog' star writes memoir – at the age of nine" (in en-GB). The Independent. 2009-07-05. https://www.independent.co.uk/arts-entertainment/films/news/slumdog-star-writes-memoir-ndash-at-the-age-of-nine-1732177.html. 
  14. "Slumdog kids to star alongside Anthony Hopkins". One India. Archived from the original on 24 அக்டோபர் 2012. பார்க்கப்பட்ட நாள் 24 February 2014.
  15. Baker, Steven. "Slumdog Millionaire's Rubina Ali 'abandoned' by UK director". Digital Spy. பார்க்கப்பட்ட நாள் 24 February 2014.
  16. 16.0 16.1 Dean Nelson and Barney Henderson (26 January 2009). "Slumdog child stars miss out on the movie millions". London: த டெயிலி டெலிகிராப். https://www.telegraph.co.uk/news/worldnews/asia/4347472/Poor-parents-of-Slumdog-millionaire-stars-say-children-were-exploited.html. பார்த்த நாள்: 27 January 2009. 
  17. Tapper, Jake. "Slumdog Symphony: A Chat with Danny Boyle". ABC. Archived from the original on 1 அக்டோபர் 2012. பார்க்கப்பட்ட நாள் 29 சனவரி 2009.
  18. Ahmed, Afsana; Sharma, Smrity (5 March 2009). "From Slumdog to Bollywood". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா இம் மூலத்தில் இருந்து 23 அக்டோபர் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121023103603/http://articles.timesofindia.indiatimes.com/2009-03-05/news-interviews/28058322_1_vashu-bhagnani-rubina-ali-child-stars. பார்த்த நாள்: 5 March 2009. 
  19. "15th Annual SAG Awards, Recipients Announced!". 25 January 2009. பார்க்கப்பட்ட நாள் 25 February 2009. [தொடர்பிழந்த இணைப்பு]
  20. "Cadillac, Slumdog & Bees are Triple Threats Black Reel Awards". Daily Express. 15 December 2008. http://www.dailyexpress.co.uk/posts/view/75882/Cadillac,-Slumdog-&-Bees-are-triple-threats-at-Black-Reel-Awards/. பார்த்த நாள்: 23 February 2008. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரூபினா_அலி&oldid=3924659" இலிருந்து மீள்விக்கப்பட்டது