ரெட் ரிவர் (1948 திரைப்படம்)
ரெட் ரிவர் (Red River) என்பது 1948ஆம் ஆண்டு வெளிவந்த அமெரிக்க மேற்கத்தியத் திரைப்படமாகும். இதை ஹோவார்டு ஹாக்சு இயக்கித் தயாரித்திருந்தார். இத்திரைப்படத்தில் யோவான் வெயின் மற்றும் மான்டிகோமெரி கிலிப்ட் ஆகியோர் நடித்திருந்தனர். த சிசோல்ம் டிரைல் வழியாக டெக்சஸ் முதல்கேன்சஸ் வரையிலான முதல் கால்நடை ஓட்டுதலை ஒரு புனையப்பட்ட கதையாக இத்திரைப்படம் கூறியது. டெக்சஸ் பண்ணையாளர் வெயின் மற்றும் அவரது தத்தெடுக்கப்பட்ட மகன் கிலிப்ட் இடையிலான பிணக்குகளை இத்திரைப்படம் கூறியது.
ரெட் ரிவர் | |
---|---|
![]() திரையரங்க வெளியீட்டுச் சுவரொட்டி | |
இயக்கம் | ஹோவார்டு ஹாக்சு |
தயாரிப்பு | ஹோவார்டு ஹாக்சு |
மூலக்கதை | த சிசோல்ம் டிரைல் 1946 த சாட்டர்டே ஈவனிங் போஸ்ட் படைத்தவர் பார்டன் சேஸ் |
திரைக்கதை |
|
இசை | திமிற்றி தியோம்கின் |
நடிப்பு |
|
ஒளிப்பதிவு | ருசல் அர்லான் |
படத்தொகுப்பு | கிறித்தியன் நைபை |
கலையகம் | மாண்டரி புரடக்சன்ஸ் |
விநியோகம் | யுனைட்டெட் ஆர்டிஸ்ட்ஸ் |
வெளியீடு | ஆகத்து 26, 1948[1] |
ஓட்டம் | 133 நிமிடங்கள் (ஆரம்பத்தில்) 127 நிமிடங்கள் (திரையரங்கில்) |
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
மொழி |
|
ஆக்கச்செலவு | ஐஅ$2.7 மில்லியன் (₹19.3 கோடி)[2] |
மொத்த வருவாய் | ஐஅ$45,06,825 (₹32,23,10,096.7) (ஐ. அ. மற்றும் கனடா)[3][4] |
வெளியான நேரத்தில், ரெட் ரிவர் திரைப்படமானது வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது. இரண்டு அகாதமி விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டது.[5] 1990ல் ரெட் ரிவர் திரைப்படமானது ஐக்கிய அமெரிக்க தேசிய திரைப்படம் பதிவேட்டில் காக்கப்படுவதற்காக அமெரிக்கக் காங்கிரசு நூலகத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டது. "கலாச்சார, வரலாற்று மற்றும் கலைநயமிக்க" படம் எனக் குறிப்பிடப்பட்டது.[6][7] 2008ஆம் ஆண்டு அமெரிக்க திரைப்பட நிறுவனத்தின் 10 முதல் 10 பட்டியலில் எக்காலத்திலும் சிறந்த ஐந்தாவது மேற்கத்திய திரைப்படமாக ரெட் ரிவர் திரைப்படமானது அமெரிக்க திரைப்பட நிறுவனத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டது.
உசாத்துணை
தொகு- ↑ "Red River". AFI Catalog of Feature Films. Retrieved May 17, 2018.
- ↑ Thomas F. Brady. "Hollywood Deals: Prospects Brighten for United Artists – Budget Runs Wild and Other Matters", New York Times 1 Feb 1948, p. X5.
- ↑ Andreychuk, Ed (1997). The Golden Corral: A Roundup of Magnificent Western Films. McFarland & Company Inc. pp. 24–25. ISBN 0-7864-0393-4.
- ↑ Cohn, Lawrence (October 15, 1990). "All Time Film Rental Champs". Variety. p. M-180. ISSN 0042-2738.
- ↑ Red River (1948) – Awards
- ↑ "Complete National Film Registry Listing". Library of Congress, Washington, DC. Retrieved 2020-05-08.
- ↑ Gamarekian, Barbara (1990-10-19). "Library of Congress Adds 25 Titles to National Film Registry" (in en-US). The New York Times. https://www.nytimes.com/1990/10/19/movies/library-of-congress-adds-25-titles-to-national-film-registry.html.