அமெரிக்க திரைப்பட நிறுவனத்தின் 10 முதல் 10
ஏ. எஃப். ஐ.யின் 10 முதல் 10 என்கிற பட்டியல் 10 தலைசிறந்த அமெரிக்க ஐக்கிய நாட்டு திரைப்படங்களை 10 பாரம்பரிய திரைப்பட வகைகளுக்குள் பட்டியலிடுகிறது.[1] அமெரிக்க திரைப்பட நிறுவனம் (ஏ. எஃப். ஐ.) வெளியிட்ட இந்த பட்டியல்கள் ஜூன் 17, 2008 ஆம் ஆண்டு சிபிஎஸ் தொலைக்காட்சியில் சிறப்பு தொலைக்காட்சி ஒளிபரப்பாக ஒளிபரப்பப்பட்டன. இந்த சிறப்பில் பல்வேறு நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் குறிப்பாக கிளின்ட் ஈஸ்ட்வுட், குவெண்டின் டேரண்டினோ, கிர்க் டக்ளஸ், ஹாரிசன் போர்ட், மார்ட்டின் ஸ்கோர்செசி, ஸ்டீவன் ஸ்பில்பேர்க், ஜோர்ச் லூகாஸ், ரோமன் போலான்ஸ்கி, மற்றும் ஜேன் ஃபோண்டா ஆகியோர் படங்களைப் பற்றிய தங்களது வியப்பு மற்றும் பாராட்டுகளையும், பட்டியலில் குறிப்பிடப்பட்ட படங்களுக்கு தங்கள் பங்களிப்பையும் பற்றி விவாதித்தனர்.
பட்டியலுக்கு பரிந்துரைக்கப்பட்ட மொத்தம் 500 திரைப்படங்களின் முழு பட்டியலானது அமெரிக்க திரைப்பட நிறுவனத்தின் இணையதளத்தில் கிடைக்கிறது.
அமெரிக்க திரைப்பட நிறுவனத்தின் சிறப்பு பட்டியல்களில் இன்றைய தினம் வரை கடைசியாக வெளி வந்த பட்டியல் இதுதான்.[2]
இயங்குபடம்
தொகுஏ. எஃப். ஐ.யின் விளக்கப்படி இயங்குபடம் வகை திரைப்படங்கள் என்பவற்றின் படங்களானவை முதன்மையாக கணினி அல்லது கையால் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும் மற்றும் திரைப்படங்களின் கதாபாத்திரங்களுக்கு நடிகர்கள் குரல் கொடுத்திருக்க வேண்டும்.
# | திரைப்படம் | ஆண்டு |
---|---|---|
1 | ஸ்னோ வைட் அண்ட் த செவன் டுவார்ப்ஸ் | 1937 |
2 | பினோச்சியோ | 1940 |
3 | பேம்பி | 1942 |
4 | த லயன் கிங் | 1994 |
5 | ஃபேன்டசியா | 1940 |
6 | டாய் ஸ்டோரி | 1995 |
7 | பியூட்டி அன்ட் த பீஸ்ட் | 1991 |
8 | செரெக் | 2001 |
9 | சின்டெரெல்லா | 1950 |
10 | ஃபைன்டிங் நீமோ | 2003 |
நீதியறை நாடகம்
தொகுஏ. எஃப். ஐ.யின் வரையறையின் படி நீதியறை நாடக திரைப்படங்கள் என்பவை ஒரு திரைப்படத்தின் கதைச் சுருக்கத்தில் நீதி துறையானது முக்கிய பங்கை வகிப்பதை குறிக்கும்.
# | திரைப்படம் | ஆண்டு |
---|---|---|
1 | டு கில் எ மாக்கிங் பேர்ட் | 1962 |
2 | 12 ஆங்ரி மென் | 1957 |
3 | கிரேமர் வெர்சஸ் கிரேமர் | 1979 |
4 | த வெர்டிக்ட் | 1982 |
5 | எ ஃபியூ குட் மென் | 1992 |
6 | விட்னஸ் பார் த ப்ராசிகியூசன் | 1957 |
7 | அனாட்டமி ஆஃப் எ மர்டர் | 1959 |
8 | இன் கோல்ட் பிளட் | 1967 |
9 | எ க்ரை இன் த டார்க் (எவில் ஏஞ்சல்ஸ்) | 1988 |
10 | ஜட்ஜ்மெண்ட் அட் நியூரம்பர்க் | 1961 |
காவியம்
தொகுஏ. எஃப். ஐ.யின் வரையறைப்படி காவியம் என்பது கடந்தகாலத்தை திரைப்பட பாணியிலான கதை மூலம் கூறுவது ஆகும்.
# | திரைப்படம் | ஆண்டு |
---|---|---|
1 | லாரன்ஸ் ஆஃப் அரேபியா | 1962 |
2 | பென்-ஹர் | 1959 |
3 | சின்ட்லர்ஸ் லிஸ்ட் | 1993 |
4 | கான் வித் த வின்ட் | 1939 |
5 | ஸ்பார்ட்டகஸ் | 1960 |
6 | டைட்டானிக் | 1997 |
7 | ஆல் கொயெட் ஆன் த வெஸ்டர்ன் ஃப்ரன்ட் | 1930 |
8 | சேவிங் பிரைவேட் ரையன் | 1998 |
9 | ரெட்ஸ் | 1981 |
10 | த டென் கமண்ட்மெண்ட்ஸ் | 1956 |
கற்பனை
தொகுஏ. எஃப். ஐ.யின் வரையறைப்படி கற்பனை வகை என்பது கதாபாத்திரங்கள் கற்பனை சூழ்நிலைகளில் நடிப்பது அல்லது புவியின் இயல்பான விதிகளை மீறிய சூழ்நிலைகளில் நடிக்கும் திரைப்படங்களை குறிக்கும்.
# | திரைப்படம் | ஆண்டு |
---|---|---|
1 | த விசார்ட் ஆஃப் ஆஸ் | 1939 |
2 | த லார்ட் ஆஃப் த ரிங்ஸ்: த ஃபெல்லோசிப் ஆஃப் த ரிங் | 2001 |
3 | இட்ஸ் எ ஒன்டர்புல் லைப் | 1946 |
4 | கிங் காங் | 1933 |
5 | மிராக்கில் ஆன் 34த் ஸ்ட்ரீட் | 1947 |
6 | ஃபீல்ட் ஆஃப் ட்ரீம்ஸ் | 1989 |
7 | ஹார்வே | 1950 |
8 | கிரவுண்ட்ஹாக் டே | 1993 |
9 | த தீஃப் ஆஃப் பாக்தாத் | 1924 |
10 | பிக் | 1988 |
தாதா
தொகுஏ. எஃப். ஐ.யின் வரையறைப்படி தாதாக்கள் பற்றிய திரைப்படங்கள் என்ற வகையானது அமைப்பு ரீதியான குற்றங்கள் அல்லது வித்தியாசமான குற்றவாளிகளை நவீன சூழ்நிலையில் காட்டுவது போன்றவற்றை மையமாக கொண்டது ஆகும்.
# | திரைப்படம் | ஆண்டு |
---|---|---|
1 | த காட்பாதர் | 1972 |
2 | குட்ஃபெல்லாஸ் | 1990 |
3 | த காட்பாதர் பாகம் 2 | 1974 |
4 | வைட் ஹீட் | 1949 |
5 | போனி அன்ட் க்லைட் | 1967 |
6 | ஸ்கேர்ஃபேஸ் | 1932 |
7 | பல்ப் ஃபிக்சன் | 1994 |
8 | த பப்ளிக் எனிமி | 1931 |
9 | லிட்டில் சீசர் | 1931 |
10 | ஸ்கேர்ஃபேஸ் | 1983 |
மர்மம்
தொகுஏ. எஃப். ஐ.யின் வரையறைப்படி மர்மம் என்ற வகையானது ஒரு குற்றத்தின் தீர்வை சுற்றி நிகழும் கதைக்களத்தை கொண்டிருக்கும் திரைப்படங்கள் ஆகும்.
# | திரைப்படம் | ஆண்டு |
---|---|---|
1 | வெர்டிகோ | 1958 |
2 | சைனாடவுன் | 1974 |
3 | ரியர் விண்டோ | 1954 |
4 | லவுரா | 1944 |
5 | த தேர்ட் மேன் | 1949 |
6 | த மால்டீஸ் ஃபால்கன் | 1941 |
7 | நார்த் பை நார்த்வெஸ்ட் | 1959 |
8 | ப்ளூ வெல்வெட் | 1986 |
9 | டயல் எம் பார் மர்டர் | 1954 |
10 | தி யூசுவல் சஸ்பெக்ட்ஸ் | 1995 |
காதல் நகைச்சுவை
தொகுஏ. எஃப். ஐ.யின் வரையறைப்படி காதல் நகைச்சுவை என்ற வகையானது காதலின் வளர்ச்சி நகைச்சுவையான சூழ்நிலைக்கு இட்டுச்செல்லும் படங்களை குறிப்பதாகும்.
# | திரைப்படம் | ஆண்டு |
---|---|---|
1 | சிட்டி லைட்சு | 1931 |
2 | அன்னீ ஹால் | 1977 |
3 | இட் ஹாப்பன்ட் ஒன் நைட் | 1934 |
4 | ரோமன் ஹாலிடே | 1953 |
5 | த பிலடெல்பியா ஸ்டோரி | 1940 |
6 | வென் ஹேரி மெட் சாலி... | 1989 |
7 | ஆடம்ஸ் ரிப் | 1949 |
8 | மூன்ஸ்ட்ரக் | 1987 |
9 | ஹரால்ட் அன்ட் மௌட் | 1971 |
10 | ஸ்லீப்லெஸ் இன் சியாட்டில் | 1993 |
அறிபுனை
தொகுஏ. எஃப். ஐ.யின் வரையறைப்படி அறிபுனை என்ற வகையானது அறிவியல் முன்னேற்றத்துடன் கற்பனை ஊகங்களையும் இணைத்து எடுக்கப்படும் திரைப்படங்கள் ஆகும்.
# | திரைப்படம் | ஆண்டு |
---|---|---|
1 | 2001: ஏ ஸ்பேஸ் ஒடிசி | 1968 |
2 | ஸ்டார் வார்ஸ் | 1977 |
3 | ஈ.டி. தி எக்ஸ்ட்ரா டெரஸ்ட்ரியல் | 1982 |
4 | எ க்ளாக்வொர்க் ஆரஞ்ச் | 1971 |
5 | த டே தி எர்த் ஸ்டூட் ஸ்டில் | 1951 |
6 | பிளேட் ரன்னர் | 1982 |
7 | ஏலியன் | 1979 |
8 | டெர்மினேட்டர் 2:த ஜட்ச்மண்ட் டே | 1991 |
9 | இன்வேசன் ஆஃப் த பாடி ஸ்னாட்செர்ஸ் | 1956 |
10 | பேக் டு த ஃபியூச்சர் | 1985 |
விளையாட்டு
தொகுஏ. எஃப். ஐ.யின் வரையறைப்படி விளையாட்டு என்ற வகை திரைப்படங்களானவை கதாநாயகர்கள் விளையாட்டு வீரர்களாக நடிக்கும் திரைப்படங்கள் ஆகும்.
# | திரைப்படம் | ஆண்டு |
---|---|---|
1 | ரேஜிங் புல் | 1980 |
2 | ராக்கி | 1976 |
3 | த ப்ரைட் ஆஃப் த யாங்கீஸ் | 1942 |
4 | ஹூசியர்ஸ் | 1986 |
5 | புல் துர்ஹம் | 1988 |
6 | த ஹஸ்லர் | 1961 |
7 | கேடிசாக் | 1980 |
8 | பிரேக்கிங் அவே | 1979 |
9 | நேஷனல் வெல்வெட் | 1944 |
10 | ஜெர்ரி மக்யூரே | 1996 |
மேற்கு
தொகுஏ. எஃப். ஐ.யின் வரையறைப்படி மேற்கத்திய வகை திரைப்படங்களானவை அமெரிக்க மேற்குப் பகுதியில் கதைக்களம் நகரும் வகையில் புத்துணர்ச்சி, போராட்டம் மற்றும் புதிய எல்லைகளின் மறைவு ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.
# | திரைப்படம் | ஆண்டு |
---|---|---|
1 | த சர்ச்சர்ஸ் | 1956 |
2 | ஹை நூன் | 1952 |
3 | ஷேன் | 1953 |
4 | அன்ஃபர்கிவ்வன் | 1992 |
5 | ரெட் ரிவர் | 1948 |
6 | த வைல்ட் பஞ்ச் | 1969 |
7 | புட்ச் கேஸிடி அன்ட் த சன்டான்ஸ் கிட் | 1969 |
8 | மெக்கபே & மிசஸ் மில்லர் | 1971 |
9 | ஸ்டேஜ்கோச் | 1939 |
10 | கேட் பலோவு | 1965 |
உசாத்துணை
தொகு- ↑ "AFI's 10 Top 10". American Film Institute (in ஆங்கிலம்).
- ↑ CBS Announces "AFI 10 Top 10" to Honor Greatest Films to Air June 2008 - Cinema Spider
- ↑ AFI Crowns Top 10 Films in 10 Classic Film Genres - ComingSoon.net