ரேணுகா அருண்

ரேணுகா அருண் (Renuka Arun) ஒரு பாரம்பரிய இசை பாடகராகவும் மலையாளம் மற்றும் தெலுங்கில் பின்னணி பாடகராகவும் உள்ளார். 2017 ஆம் ஆண்டு தெலுங்கு மொழியில் சிறந்த பின்னணி பாடகருக்கான வளைகுடா-ஆந்திர இசை விருதினை இவர் வென்றுள்ளார். [1] [2]. ரேணுகா கர்நாடக இசையில் அனுபவம் மிக்கவராவார். 550 க்கும் மேற்பட்ட இசை நிகழ்ச்சிகளை நடத்தி தனது கணக்கில் வரவு வைத்துள்ளார்[3] . இசைப் பயிற்சியினை ரேணுகா தனது 4 வயதிலலேயே தொடங்கினார். பலே பலே மொகதிவாய் என்ற தெலுங்குத் திரைப்படத்தில் 'எந்தரோ' என்ற பாடலை பாடியதன் மூலம் இவர் உடனடியாகப் புகழ் பெற்றார். கர்நாடக இசை மற்றும் திரைப்படப் பின்னணி பாடல் ஆகியவற்றுக்கும் மேலதிகமாக, ரேணுகா எர்ணாகுளத்தில் உள்ள ஓர் இசை பள்ளியில் இசையைக் கற்பிக்கவும் செய்கிறார். இவர் மாத்ருபூமி என்ற மலையாளச் செய்தித்தாளில் இசை குறித்து வழக்கமாக கட்டுரைகளையும் எழுதி வருகிறார். [4].

ரேணுகா அருண்
பாடகர்
பின்னணித் தகவல்கள்
இயற்பெயர்ரேணுகா
பிறப்பு5 சூலை 1981 (1981-07-05) (அகவை 43)
பிறப்பிடம்பெரும்பாவூர், கேரளம், இந்தியா
இசை வடிவங்கள்பின்னணிப் பாடகர் கருநாடக இசை
தொழில்(கள்)வாய்ப்பாட்டுக் கலைஞர்
இசைத்துறையில்2000 முதல் தற்போது வரை

ஆரம்பகால வாழ்க்கை & தொழில்

தொகு

கேரளாவின் எர்ணாகுளத்திலலுள்ள பெரும்பாவூரில் விஜயன் நாயர் மற்றும் பத்மினி தம்பதியர்களுக்கு மகளாக ரேணுகா பிறந்தார். பெரும்பாவூரில் உள்ள இராணி மேரிப் பள்ளி மற்றும் அனிதா வித்யாலயாவில் தனது ஆரம்பக் கல்வியை முடித்த பின்னர், கொத்தமங்கலம் எம்.ஏ. பொறியியல் கல்லூரியில் பி.டெக் பட்டம் முடித்தார். பெரும்பாவூரைச் சேர்ந்த இசை ஆசிரியர்களான சுசீலா மற்றும் சரோஜா ஆகியோரிடம் நான்கு வயதிலிருந்தே ரேணுகா இசையைப் படிக்கத் தொடங்கினார். 1990 முதல் சந்திரமனை நாராயணன் நம்பூதிரியின் சீடரானார். 1992 இல் பெரும்பாவூரில் உள்ள தர்மசாஸ்தா கோவிலில் தனது இசை நிகழ்ச்சியைத் தொடங்கினார். பின்னர், சென்னையின் பிரபல இசைக்கலைஞர் சீதா நாராயணனின் சீடரானார். கேரள மாநில பள்ளி இளைஞர் விழாவில் பாரம்பரிய இசை மற்றும் மெல்லிசை ஆகிய இரண்டிலும் முதலிடம் பெற்றார். சென்னை மியூசிக் அகாதமியில் கர்நாடக இசையைப் பாடி வருகிறார். இவர் மத்திய அரசின் உதவித்தொகை பெற்றுள்ளார். [5] தற்போது இவர் ஒரு தகவல் தொழில் நுட்ப நிபுணராக பணிபுரிகிறார். [6] ரேணுகா 7 ஆம் வகுப்பு படிக்கும்போதே தனது முதல் இசை நிகழ்ச்சியை நடத்தினார். [7].

தொழில்

தொகு

உலக புகழ்பெற்ற இசைக்கலைஞர் யானியின் தீவிர ரசிகரான ரேணுகா, பிரபல இசைக்கலைஞர் எம்.எசு.சுப்புலட்சுமி அவர்களின் முன்னிலையில் பல முறை பாடியுள்ளார். கேரளாவில் ஒருங்கிணைவு இசை காட்சிகளில் ரேணுகா ஒரு வழக்கமான பங்களிப்பாளராக இருந்தார். பிளமெங்கோ நடனக் கலைஞர் பெட்டினாவின் இணைவு இசைக் குழுவிலும் இவர் ஈடுபட்டார். இவர் கடந்த 30 ஆண்டுகளாக சந்திரமனை நாராயணன் நம்பூதிரியின் கீழ் இசை கற்று வருகிறார். [8] மேட்டனூரின் சென்டை மற்றும் கருணாமூர்த்தியின் தவில், பெட்டினாவின் பிளமிங்கோ நடனம் மற்றும் அக்கீம் லூத்தின் கஜோன் ஆகியவற்றிலும் இவர் இணைந்து பாடியுள்ளார் என்பதன் மூலம் ரேணுகாவின் குரலின் நுட்பம் எடுத்துக்காட்டுகிறது. ரேணுகா திரையுலகிலும் பல இணைவு இசை நிகழ்ச்சிகள் மற்றும் இசைத் தொகுப்புகளையும் வெளியிட்டுள்ளார். பிரபல இசையமைப்பாளர் கோபி சுந்தரின் இசையிலும் பாடல்கள் பாடியுள்ளர். இசைக்கலைஞர் பெரும்பாவூர் ஜி. இரவீந்திரநாத் இவரது உறவினராவார். இவர் இசையமைத்த பாடல்களுக்காக இளைஞர் விழாவில் கௌரவிக்கப்பட்டுள்ளார். இவரது கணவர் அருண் செர்த்தலாவைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் ஆவார்.

குறிப்புகள்

தொகு
  1. രാജ്‌, അപർണാ. "ഒാർമകളുടെ വേദികളിലേക്ക് വീണ്ടും". Archived from the original on 2019-03-27. பார்க்கப்பட்ட நாள் 2020-02-17.
  2. "Renuka Arun Earned Gulf Andhra Movie Award".
  3. M, Athira (25 August 2017). "With magic in her voice" – via www.thehindu.com.
  4. renuka.arun@gmail.com, രേണുക അരുൺ. "പാട്ടോർമ്മയിലെ പെൺവസന്തം". Archived from the original on 2019-03-27. பார்க்கப்பட்ட நாள் 2020-02-17.
  5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2019-03-27. பார்க்கப்பட்ட நாள் 2020-02-17.
  6. "Meet the singer who's riding 'solo' into the hearts of melomaniacs".
  7. yentha.com. "Renuka: Telugu's Newest Music Sensation - Trivandrum News - Yentha.com". www.yentha.com. Archived from the original on 2019-03-27. பார்க்கப்பட்ட நாள் 2020-02-17.
  8. "Bhale Bhale Renuka". deccanchronicle.com. 18 February 2016. Archived from the original on 9 October 2018. {{cite web}}: |archive-date= / |archive-url= timestamp mismatch (help)

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரேணுகா_அருண்&oldid=3569966" இலிருந்து மீள்விக்கப்பட்டது