ரோரோ சரக்கு இரயில் சேவை

ரோ-ரோ சரக்கு இரயில் சேவை (Roll On-Roll Off goods train service), இந்தியாவில் சரக்கு தொடருந்துகளில் சரக்குகள் ஏற்றிய லாரிகளை ஓட்டுனர் & துப்பரவாளருடன் ஒரிடத்திலிருந்து, மற்றொரு இடத்திற்கு ஏற்றிச் செல்வதாகும். இவ்வகையான ரோரோ சரக்கு இரயில் சேவை கொங்கண் இரயில்வேயில் கொச்சி - மங்களூர் - மும்பை இடையே சில ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.

கொரோனா பெருந்தொற்று காரணமாக, சரக்குகளை கர்நாடகாவின் பெங்களூர் முதல் மகாராட்டிரா மாநிலத்தின் சோலாப்பூர் வரை 682 கிலோ மீட்டர் தொலவிற்கு விரைவாக, குறைந்த கட்டணத்தில் கொண்டு செல்வதற்கு ரோரோ சரக்கு இரயில் சேவைகள் 20 ஆகஸ்டு 2020 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த இரயில் தர்மவரம், குண்டக்கல், ராய்ச்சூர் மற்றும் வாடி வழியாக மகாராஷ்டிராவின் சோலாப்பூர் அருகே பேல் என்ற இடத்தை சென்றடையும். இவ்வாறு தென் மேற்கு ரயில்வே தெரிவித்து உள்ளது.[1][2][3]தென்னக இரயில்வேயின் பாலக்காடு கோட்டத்தில், ரோ-ரோ சரக்கு இரயில் சேவை, மங்களூர் அருகே உள்ள தோக்கூர் -சோரனூர் இடையே ஆகஸ்டு 2020 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.[4]

நன்மைகள்

தொகு

ரோ-ரோ சேவை என்பது சரக்கு இரயில்களில் சரக்கு லாரிகளை ஏற்றிச் செல்வது ஆகும். இந்த ரயில்களில் ஏற்றப்படும் லாரிகளில் அதன் டிரைவர் மற்றும் துப்பரவாளர் பயணிப்பர். அந்தந்த லாரிகள் பயணிக்க வேண்டியகுறிப்பிட்ட ரயில் நிலையம் வந்த உடன் லாரிகள் இறக்கி விடப்படும். இதற்கு ரோ-ரோ (ரோல் ஆன்-ரோல் ஆப்) என்பர்.

இந்த சரக்கு இரயில்களில் ஒரே நேரத்தில் 42 சரக்கு லாரிகளை ஏற்றிச் செல்ல முடியும். இதனால் சலைகளில் விபத்துக்கள் குறைவதுடன் எரிபொருள் சேமிப்பு,சாலை பாதுகாப்பில் முன்னேற்றம், காற்று மாசுபாடு குறைவு, சாலை போக்குவரத்தை விட செலவு குறைவு போன்றவை மட்டுமல்லாது அத்தியாவசிய பொருட்கள், விரைவில் அழகக்கூடிய பழங்கள், காய்கறிகள் போன்ற உணவுபொருட்கள் மற்றும் சிறிய சரக்குகளை விரைவாக கொண்டு செல்ல உறுதி செய்யப்டகிறது. மேலும் ஒரு டன் எடைக்கு போக-வர கட்டண்மாக ரூபாய் 2700 மட்டும் வசூலிக்கப்படுகிறது. ஒரு லாரியில் 30 டன் சரக்கு ஏற்ற அனுமதிக்கப்படுகிறது. லாரி ஓட்டுனர் & துப்பரவாளர்கள் செல்ல வேண்டிய இடம் வரை இரண்டாம் வகுப்பு பயணச்சீட்டிற்கு கட்டணம் செலுத்தினால் போதுமானது.

மேற்கோள்கள்

தொகு
  1. பெங்களூரு- சோலாப்பூர் இடையே ரோரோ ரயில் சேவை இன்று துவக்கம்
  2. Roll On-Roll Off train service to have its maiden run on August 30 from Karnataka to Maharashtra
  3. Rail Ministry notifies RORO service between State, Maharashtra
  4. Indian Railways conducts trials of RO-RO service on Tokur-Shoranur section; details here
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரோரோ_சரக்கு_இரயில்_சேவை&oldid=3789686" இலிருந்து மீள்விக்கப்பட்டது