லாமிங்டன் சாலை

இந்திய நாட்டின் மகாராட்டிரா மாநிலம் மும்பையில் உள்ள சாலை

1903 ஆம் ஆண்டு மற்றும் 1907 ஆம் ஆண்டுக்கு இடையில் பம்பாய் ஆளுநராக இருந்த லார்டு லாமிங்டன் என்பவரின் நினைவாக பெயரிடப்பட்ட சாலை லாமிங்டன் சாலை ஆகும். இச்சாலை அதிகாரப்பூர்வமாக டாக்டர் தாதாசாகேப் பத்கம்கர் மார்க் என்று அறியப்படுகிறது. தெற்கு மும்பையில் உள்ள கிராண்ட் சாலை இரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள ஒரு பரபரப்பான சாலையாகும். சாலையின் அதிகாரப்பூர்வ பெயர் அரிதாகவே பயன்படுத்தப்படுகிறது. இச்சாலை பெரும்பாலும் "மும்பையின் தகவல் தொழில்நுட்பக் கடை" என்று அழைக்கப்படுகிறது. [1]

A view of Lamington Road
லாமிங்டன் சாலையின் ஒரு காட்சி

லாமிங்டன் சாலை அதன் மொத்த மற்றும் சில்லறை மின்னணு பொருட்கள் சந்தைக்கு பிரபலமானது.[2][3] தெருவில் உள்ள கடைகளில் அதிகபட்ச சில்லறை விலையை விட மிகக் குறைந்த விலையில் கணினி பொருட்கள், மின்னணு பொருட்கள், தொலைக்காட்சி உபகரணங்கள் மற்றும் வயர்லெசு சாதனங்களை விற்பனை செய்கின்றன. [4] சமீபத்திய கணினி தொடர்பான பொருட்களை மட்டுமல்ல டிரான்சிசுடர்கள், மின்தேக்கிகள், கேபிள்கள், ஒலி அட்டைகள், டிவி ட்யூனர்கள் மற்றும் அடாப்டர்கள் போன்ற ரேடியோக்களுக்கான காலாவதியான மின்னணு பாகங்களையும் இச்சாலையில் விற்கிறார்கள். [5] லாமிங்டன் சாலை, டெல்லியில் நேரு தெரு மற்றும் சென்னையில் உள்ள ரிச்சி தெருவுக்குப் பிறகு எலக்ட்ரானிக் பொருட்கள் மற்றும் சாதனங்களுக்கான இந்தியாவின் மூன்றாவது பெரிய சாம்பல் சந்தையாகும்.

2009 ஆம் ஆண்டு மற்றும் 2013 ஆம் ஆண்டுக்கு இடையில் போலியான மென்பொருள், ஊடகம் மற்றும் பொருட்களை விற்பதற்காக அமெரிக்காவின் வர்த்தக பிரதிநிதி அலுவலகத்தால் இச்சந்தை ஒரு மோசமான சந்தையாக பட்டியலிடப்பட்டது.[6]

புகைப்படங்கள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "EPSON Express outlet opened at Lamington Road". Archived from the original on 5 November 2008. பார்க்கப்பட்ட நாள் 2009-02-25.
  2. Balan, Biju (10 October 2018). "Maharashtra's largest electronic market". lamingtonroadmarket.com. Archived from the original on 2019-10-16. பார்க்கப்பட்ட நாள் 2018-10-18.
  3. Sudheer, Nancy (22 January 2003). "Retail Outlets Springing Up at Lamington Road". ChannelTimes.com. Archived from the original on 2009-06-18. பார்க்கப்பட்ட நாள் 2009-02-25.
  4. Viegas, Adrian (22 November 2004). "Homework Pays!". Techtree.com. Archived from the original on 25 May 2011. பார்க்கப்பட்ட நாள் 2009-02-25.
  5. MM online bureau (20 February 2009). "Lamington Road: Tech-lovers pride!". Mumbai Mirror.com. Archived from the original on 27 February 2009. பார்க்கப்பட்ட நாள் 2009-02-25.
  6. "2013 Out of Cycle Review of Notorious Markets" (PDF). Office of the United States Trade Representative. February 12, 2014. Archived (PDF) from the original on October 24, 2020. பார்க்கப்பட்ட நாள் January 10, 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=லாமிங்டன்_சாலை&oldid=4109651" இலிருந்து மீள்விக்கப்பட்டது