லூனா திட்டம்
(லூனா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
லூனா திட்டம் (Luna programme) என்பது சோவியத் ஒன்றியத்தினால் 1959 இலிருந்து 1976 வரை சந்திரனுக்கு அனுப்பப்பட்ட தானியங்கி விண்கலப் பயணங்களைக் குறிக்கும். லூனா என்பது ரஷ்ய மொழியில் சந்திரனைக் குறிக்கும். இப்பயணத் திட்டம் "லூனிக்" என்றும் சிலவேளைகளில் கூறப்படுவதுண்டு. பதினைந்து லூனாக்கள் வெற்றிகரமானவையாகும். இவை சந்திரனைச் சுற்றவோ அல்லது தரையிறங்கவோ அனுப்பப்பட்டவை ஆகும். விண்ணில் இறங்கிய முதலாவது விண்கலம் லூனா 2 ஆகும். இவை சந்திரனில் பல ஆய்வுகளையும் நிகழ்த்தின. வேதியியல் பகுப்பாய்வு, ஈர்ப்பு, வெப்பநிலை, மற்றும் கதிரியக்கம் போன்ற பல ஆய்வுகளை நடத்தின. [1].
வெற்றிகள்
தொகு- லூனா 1: (ஜனவரி 2, 1959) சந்திரனுடனான தாக்கத்தை இழந்ததில் சூரியனின் வட்டப்பாதையில் வீழ்ந்த முதலாவது விண்கலம் ஆனது.
- லூனா 2: (செப்டம்பர் 12, 1959) சந்திரனை வெற்றிகரமாக அடைந்த முதலாவது விண்கலம்.
- லூனா 3: (அக்டோபர் 4, 1959) சந்திரனைச் சுற்றி வந்து அதன் தொலைவுப் படத்தை பூமிக்கு அனுப்பியது.
- லூனா 17 (நவம்பர் 10, 1970) மற்றும் லூனா 21 (ஜனவரி 8, 1973) சந்திரனுக்கு தானியங்கி ஊர்திகளைக் கொண்டு சென்றது.
- லூனா 16 (செப்டம்பர் 12, 1970), லூனா 20 (பெப்ரவரி 14, 1972), மற்றும் லூனா 24 (ஆகஸ்ட் 9, 1976) ஆகியன மண் மாதிரிகளைச் சேகரித்து பூமிக்குக் கொண்டு வந்தன.