லெக்நாத் (Lekhnath) (நேபாளி: लेखनाथ नगरपालिका) வடமத்திய நேபாளத்தின், மாநில எண் 4ல், பொக்காரா பள்ளத்தாக்கில் உள்ள காஸ்கி மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி மன்றத்துடன் கூடிய நகரம் ஆகும்.

நேபாளத்தில் பொக்காராவின் அருகில் லெக்நாத் நகரத்தின் அமைவிடம்

லெக்நாத் நகரம், காட்மாண்டிற்கு மேற்கே 180 கிமீ தொலைவில் உள்ளது. பொக்காரா பள்ளத்தாக்கின் கிழக்குப் பகுதியின் அரைப்பங்கு நிலப்பரப்பைக் கொண்டுள்ளது. அரசியல் ரீதியாக பொக்காரா பள்ளத்தாக்கை, பொக்காரா நகரம் மற்றும் லெக்நாத் நகரம் என இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

2011ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கீட்டுன் படி, லெக்நாத் நகரத்தின் மக்கள் தொகை 71,434 ஆக உள்ளது. மக்கள் தொகையில் இந்துக்கள் 86%, பௌத்தர்கள் 8%, பிற சமயத்தவர்கள் 6% ஆக உள்ளனர்.

மச்சபூச்சர மலை (மீன் வால்) மலைத்தொடர்

இந்த நகரத்தில் கிபி 1885 - 1966ல் வாழ்ந்த புகழ்பெற்ற நேபாளி மொழி கவிஞர் லெக்நாத் பௌடியால் என்பவரின் நினைவாக இந்த நகரத்திற்கு லெக்நாத் பெயரிடப்பட்டது. லெக்நாத் நகரத்தை சுற்றிலும் ஏழு ஏரிகளும், தோட்டங்களும் கொண்டிருப்பதால், இதனை ஏழு ஏரிகளின் தோட்ட நகரம் என்று அழைப்பர். . [1] இந்நகரத்தின் நகராட்சி மன்றம் 18 உறுப்பினர்களைக் கொண்டது.

லெக்நாத் நகரத்திலிருந்து அன்னபூர்ணா 1, தவளகிரி மற்றும் மச்சபூச்சர மலைத் தொடர்களின் அழகிய மீன் வால் போன்ற இரட்டைக்கொடுமுடிகளை காணலாம்.

பொக்காரா-லெக்நாத் மாநகராட்சி

தொகு

2017 நேபாள உள்ளாட்சி தேர்தலின் போது, லெக்நாத் நகரத்தையும், பொக்காரா நகரத்தையும் இணைத்து பொக்காரா-லெக்நாத் மாநகராட்சி மன்றம் நிறுவப்பட்டது.

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Seven Vanishing Lakes of Lekhnath". Ekantipur.com. 2 April 2010. Archived from the original on 27 ஜூலை 2014. பார்க்கப்பட்ட நாள் 26 July 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

http://www.cityof7lakes.com.np/lekhnath-city/7-lakes-in-lekhnath/ பரணிடப்பட்டது 2018-08-31 at the வந்தவழி இயந்திரம் http://www.cityof7lakes.com.np/events/2nd-begnas-fish-festival-2073/ பரணிடப்பட்டது 2016-10-24 at the வந்தவழி இயந்திரம் http://www.cityof7lakes.com.np/lekhnath/lekhnath-mahotsab-2072/ பரணிடப்பட்டது 2018-09-02 at the வந்தவழி இயந்திரம் http://www.cityof7lakes.com.np/category/organisations-in-lekhnath/ பரணிடப்பட்டது 2018-02-02 at the வந்தவழி இயந்திரம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=லெக்நாத்&oldid=3570307" இலிருந்து மீள்விக்கப்பட்டது