லெங்தெங் காட்டுயிர் காப்பகம்
லெங்தெங் காட்டுயிர் காப்பகம் இந்திய மாநிலமான மிசோரத்தில் சம்பாய் மாவட்டத்தில் உள்ளது. இங்கு அரிய வகை பறவைகள் வாழ்கின்றன.[1] 1999ஆம் ஆண்டில் இந்த இடத்தை பாதுகாப்புக்கு உட்பட்ட இடமாகவும், 2001ஆம் ஆண்டில் காட்டு விலங்குகள் காப்பகமாகவும் இந்திய் அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனங்கள் அமைச்சகம் அறிவித்தது.[2][3][4]
லெங்தெங் காட்டுயிர் காப்பகம் Lengteng Wildlife Sanctuary | |
---|---|
அமைவிடம் | மியான்மரின் எல்லைக்கு அருகில், சம்பாய் மாவட்டத்தில் காப்பகம் அமைந்துள்ளது |
அருகாமை நகரம் | இங்கோபா |
ஆள்கூறுகள் | 23°50′00″N 93°13′00″E / 23.83333°N 93.21667°E |
பரப்பளவு | 120 km2 (46 sq mi) |
நிறுவப்பட்டது | 1999 |
நிருவாக அமைப்பு | (சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை) மிசோரம் அரசு |
புவியியல்
தொகுஇந்த காப்பகம் மியான்மர் உடனான இந்திய எல்லைக்கு அருகில், சம்பாய் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது லம்சால் என்ற கிராமத்துக்கு அருகில் அமைந்துள்ளது. இங்கோபா என்ற நகரம் அருகிலுள்ளது. இந்த காப்பகம் 12000 ஹெக்டேர்கள் பரப்பளவில் அமைந்துள்ளது. இங்கு மலைக்குன்றுகளும் உள்ளன.[1]
காட்டுயிர்கள்
தொகுஇங்கு புலி, சிறுத்தை, கடமான், மான், ஹுலக் கிப்பான், செம்முகக் குரங்கு. காட்டுப்பன்றி உள்ளிட்ட விலங்குகள் உள்ளன.[5] இங்கு அரிய வகை பறவைகளும் வாழ்கின்றன.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Lengteng Wildlife Sanctuary". Birdlife International. Archived from the original on 13 ஏப்ரல் 2014. பார்க்கப்பட்ட நாள் 11 April 2014.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Protected Area Network in India" (PDF). Ministry of Environment and Forests. Archived from the original (PDF) on 7 மார்ச் 2012. பார்க்கப்பட்ட நாள் 12 April 2014.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Kathayat, JS (24 January 2011). "LIST OF PROTECTED AREAS IN MIZORAM" (PDF). National Wildlife Database Cell. Archived from the original (PDF) on 13 ஏப்ரல் 2014. பார்க்கப்பட்ட நாள் 12 April 2014.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Protected areas". Department of Environment & Forests, Government of Mizoram. Archived from the original on 13 ஏப்ரல் 2014. பார்க்கப்பட்ட நாள் 11 April 2014.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "India | Mizoram Lengteng Wildlife Sanctuary". Online Highways LLC. பார்க்கப்பட்ட நாள் 12 April 2014.