லோகாரு

அரியானாவிலுள்ள ஒரு நகரம்

லோகாரு (Loharu) ( லூகாரு என்றும் அழைக்கப்படுகிறது) என்பது இந்தியாவின் அரியானா மாநிலத்தின் பிவானி மாவட்டத்திலுள்ள பிவானி நகருக்கு அருகிலுள்ள ஒரு நகரமும், நகராட்சி குழுவும், சட்டமன்றத் தொகுதியும் ஆகும். இது மாவட்டத்தின் நான்கு நிர்வாக துணைப்பிரிவுகளில் ஒன்றின் நிர்வாக தலைமையகத்தையும், 119 கிராமங்களையும் உள்ளடக்கியது. [1] [2] இங்கு ஒரு தொடர்வண்டி சந்திப்பு நிலையமும் அமைந்துள்ளது.

லோகாரு
லூகாரு
மாநகரம்
லோகாரு is located in அரியானா
லோகாரு
லோகாரு
அரியானாவில் லூகாருவின் அமைவிடம்
லோகாரு is located in இந்தியா
லோகாரு
லோகாரு
லோகாரு (இந்தியா)
ஆள்கூறுகள்: 28°24′12″N 75°59′08″E / 28.4032°N 75.9856°E / 28.4032; 75.9856
நாடு India
மாநிலம்அரியானா
மாவட்டம்பிவானி
ஏற்றம்262 m (860 ft)
மக்கள்தொகை (2001)
 • மொத்தம்11,421
மொழிகள்
 • அலுவல்இந்தி, அரியான்வி
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுஐஎன்-எச்ஆர்
வாகனப் பதிவுஎச்ஆர்
இணையதளம்haryana.gov.in

அனாஜ் மண்டி என்ற ஒரு இடம் நகரின் முக்கிய வணிக மையமாகும். இது 1937 ஆம் ஆண்டில் சர் அமினுதீன் அகமது கான் என்பவரால் கட்டப்பட்டது. மண்டி ஒரு பெரிய திறந்தவெளியைச் சுற்றி வணிகர்களுக்கான குடியிருப்பு மற்றும் வணிக வளாகங்களைக் கொண்டிருப்பதால், வடிவமைப்பில் தனித்துவமானது. இது 104 கடைகள் அல்லது 52 'ஜோதாஸ்' (இணை) என பிரபலமாக அழைக்கப்பட்டது. வரிகள் இல்லாத மண்டி அதன் முதன்மையான இடத்தில் தொலைதூர மற்றும் அருகாமையில் இருந்து . மேலும், பிராந்தியத்தின் செழிப்புக்கு கணிசமாக பங்களித்தது.

முக்கிய ஈர்ப்பு தொகு

இந்த நகரத்தின் மற்றொரு ஈர்ப்பு ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் இரண்டு வருடத்திற்கு ஒருமுறை நடைபெறும் ஒட்டக கண்காட்சி ஆகும். ஒட்டகங்கள் இராசத்தான் மற்றும் அரியானாவின் பிற பகுதிகளில் இருந்து வருகின்றன, இது வண்ணமயமான மற்றும் பண்டிகை இடமாக அமைகிறது. தற்போதைய பொருளாதாரம் விவசாயம் மற்றும் வர்த்தகத்தை அடிப்படையாகக் கொண்டது.

வரலாறு தொகு

பிரித்தானிய ராச்சியத்தின் போது லோஹாரு, செகாவதி என்ற பெயரிடப்பட்ட சமஸ்தானத்தின் தலைமையிடமாக இருந்தது, தாக்கூர் ஆட்சி 1870 இல் நிறுவப்பட்டது. லோஹாரு கோட்டை இதன் முக்கியமான அம்சமாகும். இது இப்போது முக்கிய சுற்றுலா தலமாக உள்ளது.

முந்தைய செய்ப்பூர் மாநிலத்தில் நாணயங்களைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த லோகர்கள் அல்லது கொல்லர்களிடமிருந்து இந்த நகரம் அதன் பெயரைப் பெற்றது. [3]

1947 இல் இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு, மாநிலம் 1948 இல் இந்திய ஒன்றியத்துடன் இணைந்தது. பாக்கித்தானின் இலாகூரில் ஆளும் குடும்பம் மற்றும் நகரத்தின் முஸ்லிம் மக்கள் பலர் மீண்டும் குடியேறினர். இருப்பினும், தாக்கூர் மற்றும் அவரது நேரடி சந்ததியினர் இந்தியாவிலேயே தங்கினர்.

சான்றுகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=லோகாரு&oldid=3778617" இலிருந்து மீள்விக்கப்பட்டது