லோம ரிஷி குகை
லோம ரிஷி குகை (Lomas Rishi Cave), இந்தியாவின் பிகார் மாநிலத்தின் ஜகானாபாத் மாவட்டத்தில் சுல்தான்பூர் எனுமிடத்தில் அமைந்த பராபர் மலையில் அமைந்த குடைவரைக் குகை ஆகும். இது கிமு 3-ஆம் நூற்றாண்டில் பேரரசர் அசோகர் ஆட்சிக் காலத்தின் போது ஆசீவகம் அல்லது பௌத்த பிக்குகள் தியானம் செய்வதற்காக கொடையாக நிறுவப்பட்ட செயற்கை குகை ஆகும். [2][3][1]லோம ரிஷி குகையின் முகப்பு குதிரை லாட வடிவில் அமைந்துள்ளது.[4] இதே போன்று அசோகர் இப்பகுதியில் பல குடைவரைக் குகைகள் அமைத்து துறவிகளுக்கு தானமாக கொடுத்துள்ளார். இதே போன்று இப்பகுதிகளில் அசோகர் காத்வா, கோபிகா குகை மற்றும் வடாதிகா குடைவரைகளை நிறுவினார்.
லோம ரிஷி குகை | |
---|---|
லோம ரிஷி குகை நுழைவாயில், பராபர் மலை | |
அடிப்படைத் தகவல்கள் | |
அமைவிடம் | சுல்தான்பூர் |
புவியியல் ஆள்கூறுகள் | 25°00′23.2″N 85°03′52.3″E / 25.006444°N 85.064528°E |
சமயம் | ஆசீவகம் அல்லது பௌத்தம் [1] (கிபி 5-ஆம் நூற்றாண்டில் இந்து சமயம்) |
மாநிலம் | பிகார் |
மாவட்டம் | ஜகானாபாத் |
லோம ரிஷி குகை மற்றும் இதனருகே அமைந்த சுதாமா குகையின் குதிரை லாட வடிவ வாயில் முகப்பு போன்றே, மேற்கு தக்காணத்தின் புணே மாவட்டத்தில் கிமு இரண்டாம் நூற்றாண்டு முதல் கிபி இரண்டாம் நூற்றாண்டு முடிய காலத்தில் நிறுவப்பட்ட பாஜா குகைகள் மற்றும் கர்லா குகைகள் அமைந்துள்ளது.[5]
லோம ரிஷி குகைக் குடைவரையின் நடுவில் செவ்வக வடிவில் 9.86x5.18மீட்டர் அளவில் பெரிய மண்டம் உள்ளது. உள்ளே அமைந்த இரண்டாவது சிறிய மண்டபம், அரைக்கோள வடிவில் உள்ளது.[6] இக்குகையில் உள்ளறையின் தரை மெருகூட்டப்பட்டுள்ள்து.[7]
-
சுதாமா குகை மற்றும் லோம ரிஷி குகைக்கு செல்லும் பாதை
-
லோம ரிஷி குகையின் நுழைவாயில்
-
கல் வளைவுக்கு பதிலாக புதுப்பிக்கப்பட்ட மரக் கட்டிடக்கலை
கிபி 5 அல்லது 6-ஆம் நூற்றாண்டு காலத்தில் பிந்தைய மௌகரி வம்ச மன்னர் அனந்தவர்மன் என்பவர் பராபர் மலையில் உள்ள லோம ரிஷ் குகைகள், காத்வா, கோபிகா குகை மற்றும் வடாதிகா குகைகளில் இந்து சமயக் கல்வெட்டுகள் பொறித்தார்.[8]
ஆங்கில மொழி பெயர்ப்பு | சமசுகிருத மொழியில் அசல் கல்வெட்டு (லோம ரிஷி குகைக் கல்வெட்டு) |
---|---|
Om! He, Anantavarman, who was the excellent son, captivating the heart of mankind, of the illustrious Sardaula, and who, possessed of very great virtues, adorned by his own (high) birth in the family of Maukhari kings, - him, of unsullied fame, with joy caused to be made, as if it were his own fame represented in bodily form in the world, this beautiful image, placed in (this) cave of the mountain Pravaragiri, of the (god) Krishna. (Line 3.) - The illustrious Sardula, of firmly established fame, the best among chieftains, became the ruler of the earth, he who was a very death to hostile kings; who was a tree the fruits of which were the (fulfilled) wishes of his favourites; who was the torch of the family of the warrior caste, which is glorious through waging many battles; (and) who, charming the thoughts of lovely women, resembled (the god) Smara. (L. 5.) - On whatsoever enemy the illustrious king Sardula casts in anger his scowling eye, the expanded and tremulous and clear and beloved pupil of which is red at the comers between the uplifted brows,— on him there falls the death-dealing arrow, discharged from the bowstring drawn up to (his) ear, of his son, the giver of endless pleasure, who has the name of Anantavarman. Corpus Inscriptionum Indicarum, Fleet p.223 |
இதனையும் காண்க
தொகுஅடிக்குறிப்புகள்
தொகு- ↑ 1.0 1.1 Le, Huu Phuoc (2010). Buddhist Architecture (in ஆங்கிலம்). Grafikol. p. 104. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780984404308.
- ↑ Analayo (2004), Satipaṭṭhāna: The Direct Path to Realization, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1899579549, pp. 207-208
- ↑ Basham 1951, ப. 240-261, 270-273.
- ↑ Harle (1994), 24-25; Michell (1989), 217-218
- ↑ Pia Brancaccio (2010). The Buddhist Caves at Aurangabad: Transformations in Art and Religion. BRILL Academic. pp. 26–27. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-90-04-18525-8.
- ↑ George Michell; Philip H. Davies (1989). Guide to Monuments of India 1: 2buddhist, Jain, Hindu. Penguin. pp. 217–218. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-670-80696-6.
- ↑ James C. Harle (1994). The Art and Architecture of the Indian Subcontinent. Yale University Press. p. 24. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-300-06217-5.
- ↑ Arthur Llewellyn Basham (1951). History and Doctrines of the Ajivikas, a Vanished Indian Religion. Motilal Banarsidass. pp. 153–159. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-208-1204-8.
மேற்கோள்கள்
தொகு- Basham, A.L. (1951). History and Doctrines of the Ājīvikas (2nd ed.). Delhi, India: Moltilal Banarsidass (Reprint: 2002). பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-208-1204-2. originally published by Luzac & Company Ltd., London, 1951.
- Balcerowicz, Piotr (2015). Early Asceticism in India: Ājīvikism and Jainism (1st ed.). Routledge. p. 368. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781317538530.
- Warder, Anthony K. (1998). "Lokayata, Ajivaka, and Ajnana Philosophy". A Course in Indian Philosophy (2nd ed.). Delhi: Motilal Banarsidass Publishers. pp. 32–44. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788120812444.
- Harle, J.C., The Art and Architecture of the Indian Subcontinent, p. 24, 2nd edn. 1994, Yale University Press Pelican History of Art, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0300062176
- Michell, George, The Penguin Guide to the Monuments of India, Volume 1: Buddhist, Jain, Hindu, pp. 217–218, 1989, Penguin Books, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0140081445
- Jarzombek, Mark M. (27 May 2014). Architecture of First Societies: A Global Perspective. John Wiley & Sons. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-118-42105-5.