லோர்ட் ஹாவ் விசிறிவால்

லோர்ட் ஹாவ் விசிறிவால் (Lord Howe fantail)(ரைபிதுரா புலிகினோசா செர்வினா), என்பது லோர்ட் ஹாவ் தீவு விசிறிவால் அல்லது மாநிற-மார்பு விசிறிவால் என்றும் அழைக்கப்படுகிறது. இது விசிறிவால் குடும்பமான ரைபிதுரிடேயில் ஒரு சிறிய பறவைச் சிற்றினம் ஆகும். இது அழிந்துபோன நியூசிலாந்து விசிறிவாலின் (ரைபிதுரா புலிகினோசா) துணையினமாகும். இது ஆத்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸின் ஒரு பகுதியான தாஸ்மான் கடலில் உள்ள லோர்ட் ஹாவ் தீவுகளில் காணப்பட்ட அகணிய உயிரி.

Lord Howe fantail
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வரிசை:
குடும்பம்:
ரைபிதுரிடே
பேரினம்:
ரைபிதுரா
இனம்:
துணையினம்:
R. f. cervina
முச்சொற் பெயரீடு
Rhipidura fuliginosa cervina
Ramsay, 1879
வேறு பெயர்கள்
  • Rhipidura cervina

விளக்கம்

தொகு
 
கூடு

லோர்ட் ஹாவ் விசிறிவால் சில நேரங்களில் தனிசிற்றினமாகக் கருதப்படுகிறது. இது மற்ற துணையினங்களிலிருந்து வேறுபட்டது. இதன் அடிப்பகுதி முழுவதும் வெளிர் இலவங்கப்பட்டை-பழுப்பு நிறமாகவும், வெளிறிய தொண்டைப் பகுதியுடன், வெள்ளை தொண்டை இல்லாததால், இருண்ட பட்டை மார்பகத்திலிருந்து தொண்டியினைப் பிரிக்கிறது.[1][2]

பரவல்

தொகு

லோர்ட் ஹாவ் விசிறிவால், லோர்ட் ஹாவ் தீவில் மட்டுமே காணப்பட்டது. இங்கு இது மிதவெப்பமண்டல மழைக்காடுகளில் வசித்து வந்தது.

நடத்தை

தொகு

பறவைகள் மிகவும் அமைதியானவை. இவை பொதுவாகக் கட்டிடங்களைச் சுற்றிக் காணப்பட்டன. இவை பூச்சிகளைத் தேடி அடிக்கடி இப்பகுதிகளுக்குள் நுழைந்தன.[1]

இனப்பெருக்கம்

தொகு

லோர்ட் ஹாவ் விசிறிவால் கிண்ண வடிவ கூடு கட்டும். அடிப்படை வால், அழுகிய மர நார் மற்றும் புல், சிலந்தி வலைகளால் பிணைக்கப்பட்டு, கிடைமட்ட கிளையில் மெல்லிய புல்லால் வரிசையாகக் கூடு அமைக்கப்படும். கூடுகளில் பொதுவாக மூன்று, சில நேரங்களில் இரண்டு முட்டைகள் வரை இடுகின்றன.[3]

அழிவு

தொகு

லோர்ட் ஹாவ் விசிறிவால் 1909-ல் பொதுவான பறவையாக அறிவிக்கப்பட்டது. ஆனால் சூன் 1918-ல் எஸ். எஸ். மாகம்போ என்ற கப்பலைத் தரையிறக்கியதன் மூலம் கருப்பு எலிகள் தற்செயலாக இத்தீவுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் பின்னர் சிறிது காலத்தில் லோர்ட் ஹாவ் விசிறிவால் காணாமல் போனது. லோர்ட் ஹாவ் விசிறிவால் "நடைமுறையில் அழிந்துவிட்டதாக" 1924-ல் தெரிவிக்கப்பட்டது. மேலும் அடுத்தடுத்த ஆண்டுகளில் எந்த இந்த பறவைகள் குறித்த எந்த பதிவுகளும் இல்லை.[4] எலி வேட்டையாடலால் அழிக்கப்பட்ட லோர்ட் ஹாவ் உள்ளூர் பறவைகள் மற்றும் பிற விலங்கினங்களுள் லோர்ட் ஹாவ் விசிறிவால் ஒன்றாகக் கருதப்படுகிறது.[5]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Hindwood, p.68.
  2. Schodde & Mason, p.484.
  3. Hindwood, pp.68-69.
  4. Hindwood, p.68
  5. Garnett & Crowley, pp.567 and 633.

கூடுதல் மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=லோர்ட்_ஹாவ்_விசிறிவால்&oldid=3501190" இலிருந்து மீள்விக்கப்பட்டது