லோலேட்டா ஹாலோவே
லோலேட்டா ஹாலோவே (நவம்பர் 5, 1946 - மார்ச் 21, 2011) "ஹிட் அண்ட் ரன்" மற்றும் " லவ் சென்சேஷன் " போன்ற டிஸ்கோ பாடல்களுக்கு பெயர் பெற்ற ஒரு அமெரிக்கப் பாடகர் ஆவார். டிசம்பர் 2016 இல், பில்போர்டு அவரை 95 வது வெற்றிகரமான நடனக் கலைஞர் என்று பெயரிட்டது. [1] இன்டிபென்டன்ட் இதழின் படி, ஹாலோவேவின் பிரபலமான இசை 1989 பிளாக் பாக்ஸ் தனிப்பாடல் "ரைடு ஆன் டைம் " போன்ற மின்னணுசார் மற்றும் ஆட்ட இசைகளில் பயன்படுத்தப்பட்டது. இதனால் ஹாலோவே மிகவும் பிரலமான பெண் பாடகராகக் கருதப்படுகிறார்.
லோலேட்டா ஹாலோவே | |
---|---|
பிறப்பு | நவம்பர் 5, 1946 சிகாகோ இல்லினாய்ஸ், அமெரிக்கா |
இறப்பு | மார்ச்சு 21, 2011 சிகாகோ இல்லினாய்ஸ், அமெரிக்கா | (அகவை 64)
இசை வடிவங்கள் |
|
தொழில்(கள்) | பாடகர் - பாடலாசிரியர் |
இசைத்துறையில் | 1967–2003 |
தொழில்
தொகுஹாலோவே தனது தாயுடன் சிகாகோவில் உள்ள ஹாலோவே பாடகர் சமூகத்தில் இறைப் பாடல்களைப் பாடத் தொடங்கினார். மேலும் 1967 மற்றும் 1971 க்கு இடையில் கேரவன்ஸ்பாடல் குழுவில் ஆல்பர்டினா வாக்கருடன் இவ்வைப் பாடல்களைப் பதிவு செய்தார் . [2][3][4][5] ஹாலோவே டோன்ட் டதர் மீ, ஐ கேன்ட் காப் என்ற சிகாகோ குழுவில் ஒரு நடிகராகவும் இருந்தார். இந்த நேரத்தில்தான், அவர் தனது வருங்கால தயாரிப்பாளர், மேலாளர் மற்றும் கணவர் ஃபிலாய்ட் ஸ்மித்தை சந்தித்தார். மேலும் 1971 இல் " ரெயின்போ '71 " ஐப் பதிவு செய்தார்.இது கர்டிஸ் மேஃபீல்ட் பாடலை ஜீன் சாண்ட்லர் 1963 இல் பதிவு செய்யப்பட்ட பாடலாகும். இது ஆரம்பத்தில் அப்பாச்சி தயாரிப்பு நிறுவனத்தில் வெளியிடப்பட்டது. ஆனால் கேலக்ஸி ரெக்கார்ட்ஸால் தேசிய விநியோகத்திற்காக எடுக்கப்பட்டது.
1970 களின் முற்பகுதியில், மைக்கேல் தெவிஸுக்குச் சொந்தமான ஜெனரல் ரெக்கார்டிங் நிருவனத்தின் (ஜிஆர்சி) ஒரு பகுதியான அட்லாண்டாவை தளமாகக் கொண்ட சோல் மியூசிக் நிருவனத்துடன் ஹாலோவே ஒரு பதிவு ஒப்பந்தத்தைக் கையெழுத்திட்டார். [6] ஹாலோவே அந்நிருவனத்திற்காக இரண்டு த்குப்புகளாஈப்ப் பதிவு செய்தார். அவை இரண்டும் ஃபிலாய்ட் ஸ்மித்தால் தயாரிக்கப்பட்டவை - லோலெட்டா (1973) மற்றும் க்ரை டு மீ (1975). இரண்டாவது தொகுப்பான "க்ரை டு மீ" என்ற பால் பில்போர்டில், 100 சிறந்த பாடல்களில் 68வது இடத்தைப் பிடித்தது.
சிறந்த பிலடெல்பியா ஏற்பாட்டாளரும் தயாரிப்பாளருமான நார்மன் ஹாரிஸ் 1976 ஆம் ஆண்டில் நியூயார்க்கின் சல்சோல் ரெக்கார்ட்ஸின் துணை நிறுவனமான கோல்ட் மைண்ட் என்ற புதிய தயாரிப்பு நிறுவனத்திற்காக ஹலோவேயுடன் ஒப்பந்தமிட்டார். லோலேட்டா பாடல் தொகுப்பின் முதல் வெளியீடான "வேர்ன் அவுட் ப்ரோக்கன் ஹார்ட்",25 வது இடத்தையும் "ட்ரீமிங்", பாப் தரவரிசையில் 72வது இடத்தையும் பிடித்தது. [7] [8]
டான் ஹார்ட்மேனுக்காக " ரிலைட் மை ஃபயர் " பாடலுக்கு அவர் குரல் கொடுத்தார். பின்னர் அவர் கோல்ட் மைண்டிற்காக லவ் சென்சேஷன் (1980) என்ற நான்காவது மற்றும் இறுதி பாடல்தொகுப்பை எழுதி தயாரித்தார். அவரது 18 பாடல்கள் ஹாட் டான்ஸ் மியூசிக்/கிளப் ப்ளே தரவரிசையில் பட்டியலிடப்பட்டுள்ளன.
1980களின் முற்பகுதியில், ஹாலோவே "க்ராஷ் கோஸ் லவ்" ( அமெரிக்க ஆடல் பாடல்களின் தரவரிசையில் 5வது இடத்தைப் பிடித்தது. [6] டிஜே இன்டர்நேஷனல் ரெக்கார்ட்ஸ் என்ற புதிய இசை வெளியீட்டு நிறுவனத்திற்காக "சோ ஸ்வீட்" என்ற ஒரு தனிப்பாடலையும் அவர் பதிவு செய்தார்.
இத்தாலிய மின்னணுசார் இசைக் குழுவான பிளாக் பாக்ஸ் அவர்களின் 1989 ஆம் ஆண்டு " ரைட் ஆன் டைம் " என்ற தனிப்பாடலுக்காக ஹாலோவேயின் "லவ் சென்சேஷன்" பாடலை மாதிரியாக எடுத்துக்கொண்டது. [9] இங்கிலாந்தில், இது ஆறு வாரங்களுக்கு தனிப்பாடல் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்தது. மேலும் இப்பாடல் அவ்வாண்டின் சிறந்த விற்பனையான தனிப்பாடலாக மாறியது. [10] In the UK, it topped the singles chart for six weeks and became the year's bestselling single.[11]பல ஆதாரங்களின்படி, இம்மாதிரி அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டதாக எழுந்த சர்ச்சையால் ஹாலோவேவிற்கு நஷ்டஈடு வழங்கப்பட்டது. [12] [13] [14] இருப்பினும், "ரைட் ஆன் டைம்" தயாரிப்பாளர்களில் ஒருவர், 2018 இல் ஹாலோவே "ஒரு பைசா கூட பெறவில்லை" என்றும், மாஸ்டர் நிறுவனத்தின் உரிமையாளரான சல்சோல் மட்டுமே பணம் பெற்றதாகவும் கூறினார். [15]
"ரைட் ஆன் டைம்" அத்தியாயத்தை ஹோலோவே வெருத்தார். "இந்த ஒரு வெற்றிப் பதிவைப் பெறுவதற்கு நான் பல வருடங்களாக முயற்சித்து வருகிறேன். பிளாக் பாக்ஸ் முதலிடத்தில் இருப்பதை அறிந்ததும், அதற்கான எந்தக் நற்பெயரையும் நான் பெறவில்லை என்பதும் என்னை எரிச்சலூட்டியது" என்று கூறினார். [16] அவர் "ப்ளாக் பாக்ஸின் குரல்" என்று அழைக்கப்பட்ட பிறகும், தன்னை விட பிளாக் பாக்ஸுக்கு நிகழ்ச்சிகளுக்கு அதிக சம்பளம் கொடுக்கப்பட்டதாக விரக்தியை வெளிப்படுத்தினார். [17] 2011 இல் ஹாலோவே இறப்பதற்கு முன்பு அவரைச் சந்திக்காததற்கு வருந்துவதாகவும், "எவ்வளவு குழப்பமான விஷயங்கள் நடந்தன" என்று மன்னிப்பு கேட்க விரும்புவதாகவும் டவோலி கூறினார். [18]
1992 ஆம் ஆண்டில், ஹாலோவே கப்பெல்லா என்ற நடன இசைக்குழுவுடன் இணந்து உச்சத்தை அடைந்தார். அங்கு, "டேக் மீ அவே" என்ற தனிப்பாடலை கேப்பெல்லாவுடன் சேர்ந்து பாடினார்.[19]
2000 ஆம் ஆண்டில் வெளியான "ஷேர் மை ஜாய்" , "வாட் கோஸ் அராண்ட் கம்ஸ் அரௌண்ட்" மற்றும் "ரீலைட் மை ஃபயர்" ஆகியவை சமீபத்திய நடன உள்ளீடுகளில் அடங்கும். "ரீலைட் மை ஃபயர்" என்ற பாடல் 2003 இல் 5வது இடத்தைப் பிடித்தது. "லைக் எ பிரேயர்" என்ற மடோனாவின் பாடலை சிறப்பித்துப் பாடைனார், ஹாலோவே. "லவ் சென்சேஷன் '06" என்ற பாடல் இங்கிலாந்தில் தனிப்பாடல் தரவரிசையில் 37வது இடத்தைப் பிடித்தது. [20]
இறப்பு
தொகுமார்ச் 21, 2011 அன்று 64 வயதில் ஹலோவே இதய செயலிழப்பால் இறந்தார். அவர் நான்கு குழந்தைகளைப் பெற்றார்.
குறிப்புகள்
தொகு- ↑ "Greatest of All Time Top Dance Club Artists". Billboard.
- ↑ name="Larkin">Colin Larkin, ed. (1997). The Virgin Encyclopedia of Popular Music (Concise ed.). Virgin Books. p. 612. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-85227-745-9.
- ↑ Simmonds, Jeremy (2012). The Encyclopedia of Dead Rock Stars: Heroin, Handguns, and Ham Sandwiches (in ஆங்கிலம்). Chicago Review Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-61374-478-9.
- ↑ Arena, James (சூன் 1, 2013). First Ladies of Disco: 32 Stars Discuss the Era and Their Singing Careers (in ஆங்கிலம்). McFarland. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7864-7581-0.
- ↑ Bronson, Fred (2003). The Billboard Book of Number One Hits (in ஆங்கிலம்). Billboard Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8230-7677-2.
- ↑ 6.0 6.1 . 1997.
{{cite book}}
: Missing or empty|title=
(help)Colin Larkin, ed. (1997). The Virgin Encyclopedia of Popular Music (Concise ed.). Virgin Books. p. 612. ISBN 1-85227-745-9. - ↑ name="Larkin">The Virgin Encyclopedia of Popular Music.Colin Larkin, ed. (1997). The Virgin Encyclopedia of Popular Music (Concise ed.). Virgin Books. p. 612. ISBN 1-85227-745-9.
- ↑ Singles.
- ↑ . 2011-03-25.
- ↑ Perrone, Pierre (2011-03-25). "Loleatta Holloway: Much-sampled disco diva who sued Black Box over their worldwide hit 'Ride on Time'" (in en) இம் மூலத்தில் இருந்து 8 July 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190708052439/https://www.independent.co.uk/news/obituaries/loleatta-holloway-much-sampled-disco-diva-who-sued-black-box-over-their-worldwide-hit-lsquoride-on-2252360.html.
- ↑ Osborne, Ben (சூன் 26, 2018). "Game Changer: Black Box 'Ride On Time'". DJ Mag. பார்க்கப்பட்ட நாள் ஆகத்து 8, 2019.
- ↑ name="Masterton2">. மார்ச்சு 24, 2011.
{{cite web}}
: Missing or empty|title=
(help); Missing or empty|url=
(help) - ↑ . மார்ச்சு 25, 2011.
{{cite web}}
: Missing or empty|title=
(help); Missing or empty|url=
(help) - ↑ name=":0">. 2011-03-24.
- ↑ name="DJ Mag2">Osborne, Ben (சூன் 26, 2018). "Game Changer: Black Box 'Ride On Time'". DJ Mag. பார்க்கப்பட்ட நாள் ஆகத்து 8, 2019.
- ↑ "Numero Uno Was Better". Archived from the original on ஆகஸ்ட் 10, 2018. பார்க்கப்பட்ட நாள் பிப்ரவரி 11, 2024.
{{cite web}}
: Check date values in:|access-date=
and|archive-date=
(help)Masterton, James (March 24, 2011). . Masterton.co.uk. Archived from the original பரணிடப்பட்டது 2018-08-10 at the வந்தவழி இயந்திரம் on August 10, 2018. - ↑ "Loleatta Holloway obituary". https://www.theguardian.com/music/2011/mar/24/loleatta-holloway-obituary.Laing, Dave (March 24, 2011). "Loleatta Holloway obituary". The Guardian. ISSN 0261-3077. Retrieved April 11, 2023.
- ↑ Osborne, Ben (சூன் 26, 2018). "Game Changer: Black Box 'Ride On Time'". DJ Mag. பார்க்கப்பட்ட நாள் ஆகத்து 8, 2019.Osborne, Ben (June 26, 2018). "Game Changer: Black Box 'Ride On Time'". DJ Mag. Retrieved August 8, 2019.
- ↑ Barker, Andrew (March 22, 2011). "Loleatta Holloway, soul singer, dies". Variety. https://variety.com/2011/music/news/loleatta-holloway-soul-singer-dies-1118034245/.
- ↑ "UK Charts > Loleatta Holloway". பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 19, 2015.