இழான் பவுல் சார்த்ர

(ழான் பால் சாத்ரே இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பொதுவாக இழான் பவுல் சார்த்ர எனப்படும் இழான் பவுல் சார்லசு அய்மார்ட் சார்த்ர (Jean-Paul Charles Aymard Sartre 21 சூன் 1905 – 15 ஏப்ரல் 1980) ஒரு இருப்பியல்வாத மெய்யியலாளரும், நாடகாசிரியரும், புதின எழுத்தாளரும், திரைக்கதை எழுத்தாளரும், அரசியலாளரும், இலக்கியத் திறனாய்வாளரும் ஆவார். 20 ஆம் நூற்றாண்டின் பிரான்சிய மெய்யியல் துறையில் முதன்மையான இடத்தில் உள்ளோர்களில் ஒருவர்.

இழான் பவுல் சார்த்ர
காலம்20ஆம்-நூற்றாண்டு மெய்யியல்
பகுதிமேலைநாட்டு மெய்யியல்
பள்ளிஇருப்பியல்வதம், மார்க்சியம்
முக்கிய ஆர்வங்கள்
மீவியற்பியல், அறிவாய்வியல், நெறிமுறை, அரசியல், தோற்றப்பாட்டியல், உள்ளியம்
குறிப்பிடத்தக்க
எண்ணக்கருக்கள்
"Existence precedes essence"
"Bad faith"
"Nothingness"

1964 ஆம் ஆண்டில் இவருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது ஆனாலும் இவர் அதை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார். இழான் பவுல் சார்த்ர என்று கையெழுத்து இடுவதும், இழான் பவுல் சார்த்ர, நோபல் பரிசு வெற்றியாளர் என்று கையொப்பமிடுவதும் ஒன்றல்ல. ஒரு எழுத்தாளர் தான் ஒரு நிறுவனமாக மாற்றப்படுவதை அனுமதிக்கக்கூடாது என்றார் அவர்.

கூற்றுக்கள் தொகு

  • "எனக்காக தெரிவுகளை மேற்கொள்கையில், முழு மனித இனத்துக்காக தெரிவு செய்கிறோம்."
  • "மனிதன் விடுதலையாய் இருக்கக் கட்டாயப் படுத்தப்பட்டிருக்கிறான். ஏன் என்றால், அவன் உலகினுள் தூக்கி வீசப்பட்ட பின்பு அவனது செயற்பாடுகள் எல்லாவற்றுக்கும் பொறுப்பாளியாகிறான்."
  • "தீயவை மனிதன் நெருக்கமான, நேரடியான ஒன்றை நுண்புலமாக ஆக்குவதால் விளைந்தவை."

மேற்கோள்கள் தொகு

  1. "Sartre's Debt to Rousseau" (PDF). பார்க்கப்பட்ட நாள் 2 March 2010.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இழான்_பவுல்_சார்த்ர&oldid=2225586" இலிருந்து மீள்விக்கப்பட்டது