வடக்கு கேப்
வடக்கு கேப் (Northern Cape) தென்னாப்பிரிக்காவின் ஒன்பது மாகாணங்களில் பரப்பளவில் மிகப் பெரியதும் மிகக் குறைந்த மக்கள்தொகை உடையதுமான மாகாணம் ஆகும். 1994ஆம் ஆண்டில் மாகாணங்கள் சீரமைக்கப்பட்டபோது பழைய கேப் மாகாணம் பிரிக்கப்பட்டு இது உருவானது. இந்த மாகாணத்தின் தலைநகரமாக கிம்பர்லி உள்ளது. இந்த மாகாணத்தில் கலகாரிப் பாலைவனப் பகுதியிலுள்ள கலகாரி ஜெம்சுபொக் தேசியப் பூங்கா அமைந்துள்ளது; எல்லை கடந்த உய்வகப் பூங்காவான இதனை போட்சுவானாவுடன் பகிர்கின்றது. மேலும் இங்கு ஆக்ராபிசு அருவியும் கிம்பர்லி வைரச் சுரங்கங்களும் அலெக்சாண்டர் விரிகுடாவும் உள்ளன. இதன் மேற்குப் பகுதியான நமாக்குவாலாந்து சிறுமலர்களுக்கு புகழ்பெற்றது. தெற்கில் கிரேட் காரூவிலுள்ள டெ ஆர், கோல்சுபெர்கு நகரங்கள், ஜோகானஸ்பேர்க், கேப் டவுன், எலிசபெத் துறைமுகம் நகரங்களுக்கு செல்வதற்கான போக்குவரத்து மையங்களாக உள்ளன. வடகிழக்கில், குருமன் நகரமும் அங்குள்ள "குருமன் கண்" எனப்படும் இயற்கை நீருற்றும் இயற்கை எழில்மிக்க இடங்களாகும்; இங்குதான் 1821இல் முதல் சமயப் பரப்புரை நிலையம் நிறுவப்பட்டது. இம்மாகாணத்தில் ஆரஞ்சு ஆறு ஓடுகின்றது; இது தென்கிழக்கில் விடுதலை இராச்சியத்திற்கும் வடகிழக்கில் நமீபியாவிற்கும் எல்லையாக விளங்குகின்றது. இந்த ஆற்றுப் பாசனத்தால் உப்பிங்டன் அருகே திராட்சைத் தோட்டங்கள் வளர்க்கப்படுகின்றன.
வடக்கு கேப்
| |
---|---|
குறிக்கோளுரை: Sa //a !aĩsi 'uĩsi (Strive for a better life) | |
தென்னாப்பிரிக்காவில் வடக்கு கேப் மாகாணத்தின் அமைவிடம் | |
நாடு | தென்னாப்பிரிக்கா |
நிறுவனம் | 27 ஏப்ரல் 1994 |
தலைநகரம் | கிம்பர்லி |
மாவட்டங்கள் | பட்டியல்
|
அரசு | |
• வகை | நாடாளுமன்ற முறை |
• பிரதமர் | சில்வியா லூகாசு (ஆ.தே.கா) |
பரப்பளவு [1]:9 | |
• மொத்தம் | 3,72,889 km2 (1,43,973 sq mi) |
• பரப்பளவு தரவரிசை | தென்னாப்பிரிக்காவில் முதலாவது |
உயர் புள்ளி | 2,156 m (7,073 ft) |
தாழ் புள்ளி | 0 m (0 ft) |
மக்கள்தொகை | |
• மொத்தம் | 11,45,861 |
• மதிப்பீடு (2015) | 11,85,600 |
• தரவரிசை | தென்னாப்பிரிக்காவில் 9வது |
• அடர்த்தி | 3.1/km2 (8.0/sq mi) |
அடர்த்தி தரவரிசை | தென்னாப்பிரிக்காவில் 9வது |
மக்களினக் குழுக்கள் [1]:21 | |
• கறுப்பர் | 50.4% |
• மாநிறத்தவர் | 40.3% |
• வெள்ளையர் | 7.1% |
• இந்தியர் (அ) ஆசியர் | 0.7% |
மொழிகள் [1]:25 | |
• ஆபிரிக்கானா | 53.8% |
• சுவானா | 33.1% |
• சோசா | 5.3% |
• ஆங்கிலம் | 3.4% |
• சோத்தோ | 1.3% |
நேர வலயம் | ஒசநே+2 (தென்னாப்பிரிக்க சீர்தர நேரம்) |
ஐஎசுஓ 3166 குறியீடு | ZA-NC |
இணையதளம் | www.northern-cape.gov.za |
மற்றெந்த மாகாணத்தை விட இங்கு ஆபிரிக்கான மொழி பேசுவோர் பெரும்பான்மையினராக உள்ளனர். இந்த மாகாணத்தின் நான்கு அலுவல் மொழிகளாக ஆபிரிகானா, சுவானா, சோசா, மற்றும் தென்னாப்பிரிக்க ஆங்கிலம் உள்ளது. சில பழங்குடியினர் நாமா, இக்வே போன்ற உள்ளூர் மொழிகளைப் பயன்படுத்துகின்றனர்.
மேற்சான்றுகள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 Census 2011: Census in brief. Pretoria: Statistics South Africa. 2012. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780621413885. Archived from the original (PDF) on 2018-12-25. பார்க்கப்பட்ட நாள் 2016-02-20.
- ↑ Mid-year population estimates, 2015 (PDF) (Report). Statistics South Africa. 31 July 2015. p. 3. பார்க்கப்பட்ட நாள் 11 August 2015.