உத்தர தினஜ்பூர் மாவட்டம்

மேற்கு வங்காளத்தில் உள்ள மாவட்டம்
(வடக்கு தினஜ்பூர் மாவட்டம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

உத்தர தினஜ்பூர் அல்லது வடக்கு தினஜ்பூர் (Uttar Dinajpur அல்லது North Dinajpur) மாவட்டம் இந்தியாவின் மேற்கு வங்காளம் மாநிலத்தில் அமைந்துள்ளது. இம்மாவட்டம் 1992 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1 ஆம் நாள் உருவாக்கப்பட்டது. இம்மாவட்டம் ராய்காஞ்ச் மற்றும் இஸ்லாம்பூர் என இரு உட்கோட்டங்களாக (subdivisions) பிரிக்கப்பட்டுள்ளது. இவை இரண்டும் 10 கிலோமீட்டர்கள் தொலைவில் அமைந்துள்ளன.

மேற்கு வங்காளத்தின் வடக்கில் உத்தர தினஜ்பூர் மாவட்டம், எண் 4
உத்தர தினஜ்பூர் மாவட்டம்
উত্তর দিনাজপুর জেলা
உத்தர தினஜ்பூர்மாவட்டத்தின் இடஅமைவு மேற்கு வங்காளம்
மாநிலம்மேற்கு வங்காளம், இந்தியா
நிர்வாக பிரிவுகள்ஜல்பைகுரி கோட்டம்
தலைமையகம்ராய்காஞ்ச்
பரப்பு3,142 km2 (1,213 sq mi)
மக்கட்தொகை3,000,849 (2011)
படிப்பறிவு60.13%
பாலின விகிதம்936
அதிகாரப்பூர்வ இணையத்தளம்

புவியியல் அமைவு

தொகு

இம்மாவட்டத்தின் மொத்தப் பரப்பளவு 3142 சதுர கிலோமீட்டர்கள் ஆகும். நிலப்பரப்பு சமதளமாக இருந்தாலும் தென் திசையை நோக்கி சாய்வாகவே உள்ளது. தென்திசையில் குலிக், நாகர், மஹாநந்தா ஆகிய ஆறுகள் ஓடுகின்றன. இம்மாவட்டத்தின் அமைவு 25°22′N 88°04′E / 25.37°N 88.07°E / 25.37; 88.07 ஆகும். ஆசியாவின் இரண்டாவது பெரிய சரணாலயாமான ராய்காஞ்ச் பறவைகள் சரணாலயம் இம்மாவட்டத்தில் அமைந்துள்ளது.[1]

நிர்வாகப் பிரிவுகள்

தொகு

1577 கிராமங்களைக் கொண்ட இம்மாவட்டம்,

  • 4 நகராட்சிகள்
  • 9 வட்டங்கள்
  • 99 பஞ்சாயத்துகள்

என பிரிக்கப்பட்டுள்ளது.

மக்கட்தொகை

தொகு

2011 ஆம் ஆண்டின் மக்கட்தொகைக் கணக்கெடுப்பின்படி இம்மாவட்டத்தில் 30,00,849 பேர் வசிக்கின்றனர்.[2] இது அல்பேனியா நாட்டின் மக்கட்தொகைக்குச் சமமாகும்.[3] மக்கட்தொகைப் பெருக்க சதவீதம் 22.9 ஆகும். [2]1000 ஆண்களுக்கு 936 பெண்கள் என்ற வீதத்தில் உள்ளனர்.[2] கல்வியறிவு 60.13% ஆகும்.[2]

சமயம்

தொகு

இம்மாவட்டத்தில் இந்து மற்றும் இஸ்லாமியர் பெரும்பான்மையாக உள்ளனர்.[4]

  • இந்து - 51.47%
  • முஸ்லீம் - 47.36%

மொழி

தொகு

இம்மாவட்டத்தில் வங்காள மொழி முக்கிய மொழியாகும். இந்தி மற்றும் உருது மொழி பேசுவோர் இஸ்லாம்பூர் பகுதியில் உள்ளனர்.

மேற்கோள்கள்

தொகு
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-09-24. பார்க்கப்பட்ட நாள் 2013-12-22.
  2. 2.0 2.1 2.2 2.3 "District Census 2011". Census2011.co.in. 2011. பார்க்கப்பட்ட நாள் 2011-09-30.
  3. US Directorate of Intelligence. "Country Comparison:Population". Archived from the original on 2011-09-27. பார்க்கப்பட்ட நாள் 2011-10-01. Albania 2,994,667 July 2011 est. {{cite web}}: line feed character in |quote= at position 8 (help)
  4. http://www.censusindia.gov.in/Tables_Published/Basic_Data_Sheet.aspx