வடுகப்பட்டி மாப்பிள்ளை

வி. சி. குகநாதன் இயக்கத்தில் 2001 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

வடுகப்பட்டி மாப்பிள்ளை (Vadagupatti Maapillai) என்பது 2001ஆம் ஆண்டய தமிழ் காதல் நகைச்சுவைத் திரைப்படம் ஆகும். வி. சி. குகநாதன் இணைந்து எழுதி இயக்கி, தயாரித்த இப்படத்தில் அம்சவர்தன், ரேஷ்மா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விவேக், வடிவேலு ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். சிற்பி இசையமைத்த இந்தப் படம் 21 திசம்பர் 2001 அன்று வெளியானது.[1][2]

வடுகப்பட்டி மாப்பிள்ளை
இயக்கம்வி. சி. குகநாதன்
தயாரிப்புவி. சி. குகநாதன்
கதைவி. சி. குகநாதன்
ஜெயா குகநாதன்
பிரசன்னகுமார்
இசைசிற்பி
நடிப்புஅம்சவர்தன்
ரேஷ்மா
அனுஷா
விவேக்
வடிவேலு (நடிகர்)
ஒளிப்பதிவுமாதவன்
படத்தொகுப்புபாபு
கலையகம்பிரதாப் ஆர்ட் கிரியேசன்ஸ்
வெளியீடு21 திசம்பர் 2001
நாடு இந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள் தொகு

தயாரிப்பு தொகு

இந்த படத்திற்கு முன்னதாக ஆனந்தம் ஆனந்தம் என்று பெயரிடப்பட்டிருந்தது. 1998 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் படத்தின் தயாரிப்பு பணிகள் தொடங்கின.[3]

இசை தொகு

படத்திற்கான இசையை சிற்பி மேற்கோண்டார். பாடல் வரிகள் பழனி பாரதி எழுதினார்.

  • "யாரு இந்த பிகரு"
  • "அல்வா கொடுக்குறான்"
  • "அடி மாம்பழ நிறத்தழகி"
  • "சொல்லாமல் காதல் அழைக்கிறதே"

குறிப்புகள் தொகு