வட்டிலப்பம்

வட்டிலப்பம் அல்லது வட்லப்பம் என்பது இலங்கை முஸ்லிம்களின் விசேட உணவாகும். இலங்கை முஸ்லிம்களின் திருமண வைபவங்களில் வலீமா திருமான விருந்துகளில் பிரதான உணவுக்குப் பின் வழங்கப்படுவதுண்டு. கோழி முட்டையால் தயாரிக்கப்படுகிறது. அசைவம் சாப்பிடக்கூடிய தமிழர்களும், சிங்களவரும் கூட இதை உண்பதுண்டு. சைவர்கள் இதை தவிர்த்துக்கொள்கின்றனர். இது மதியுணவுக்குப் பின்னரோ, அல்லது இரவு உணவுக்குப் பின்னரோ சுவைக்காக உண்ணும் ஒரு உணவு.

பெயர் வரக்காரணம்: வட்டில் (நீருக்குள் நீர் கொண்ட மற்றொரு பாத்திரத்தை வைத்து அவிக்கும் முறை) அவித்த அப்பம். வெளிர் கபில நிறம் தொடக்கம் கருங்கபில நிறம் வரை வேறுபட்டு காணப்படும்.

வட்டிலப்பம் செய்வதற்குத் தேவையான பொருட்கள் தொகு

செய்யும் முறை தொகு

  • முட்டை, தேங்காய்ப் பால், சர்க்கரை, சீனி ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து நன்றாக அடித்துக் கலக்க வேண்டும்.
  • தேசிக்காயினை நன்றாகச் சுத்தம் செய்து அதன் தோலை தூளாகத் துருவி எடுத்துக் கலவையுடன் கலந்து கொள்ள வேண்டும்.
  • முந்திரிப்பருப்பையும், ஏலத்தையும் வாசனைக்காக வறுக்க வேண்டும்.
  • வறுத்த ஏலத்தினை தோல் நீக்கி, அரைத்து எடுக்க வேண்டும்.
  • இறுதியில் வனிலா, வறுத்த முந்திரிப்பருப்பு, அரைத்த ஏலம் ஆகியவற்றை கலவையில் சேர்த்துக் கலந்து விட வேண்டும்.
  • கலந்த கலவையை விருப்பத்திற்கேற்ப சிறு சிறு பாத்திரங்களில் விட்டு, நீர் நிரப்பிய வெதுப்பகத்தட்டில் (Baking Tray இல்) வைத்து 150c யில் 45 நிமிடங்கள் சூடாக்க வேண்டும்.

தற்காலச் செய்முறை தொகு

தற்காலத்தில் இக்கலவையை பிட்டு அவிப்பது போல ஆவியிலும் அவிக்கிறார்கள். மின்னடுப்பிலும் தயாரிக்கிறார்கள். இந்த முறைக்கு வெண்ணெய் அல்லது மாயரின் சேர்க்கப்பட வேண்டும். தண்ணீர் நிரப்பிய பாத்திரத்தினுள் கலவை நிரப்பிய பாத்திரங்களை வைத்துச் சூடாக்கிச் செய்யப்படும் வட்டிலப்பத்துக்கு எந்தவிதமான எண்ணெயோ, வெண்ணெயோ சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை. சுவையும் வேறாக இருக்கும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வட்டிலப்பம்&oldid=2747930" இலிருந்து மீள்விக்கப்பட்டது