வயல் கதிர்க்குருவி

வயல் கதிர்க்குருவி அல்லது நெல்லுக் கதிர்க்குருவி [Paddyfield warbler (Acrocephalus agricola)] என்பது தென்கிழக்கு ஐரோப்பாவிலும் மைய யுரேசியாவிலும் இனப்பெருக்கம் செய்து தெற்காசியப் பகுதிகளுக்கு வலசை போகும்[2] கதிர்க்குருவி ஆகும்.

வயல் கதிர்க்குருவி
கொல்கத்தாவில்
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வரிசை:
குடும்பம்:
அக்ரோசெபாலிடே
பேரினம்:
அக்ரோசெபாலசு
இனம்:
A. agricola
இருசொற் பெயரீடு
Acrocephalus agricola
ஜெர்டான், 1845
Subspecies
  • A. a. agricola - (Jerdon, 1845)
  • A. a. septimus - Gavrilenko, 1954

உடலமைப்பும் கள அடையாளங்களும் தொகு

அளவில் சிட்டுக்குருவியை விடச் சிறியது (12 முதல் 14 cm நீளம்). தெளிவான வெண்புருவம் கண்ணிற்குப் பின் வரை செல்லும்; புருவத்தின் இருமருங்கிலும், அதாவது, புருவத்திற்கு மேலே தெளிவற்ற கருங்கோடும் கீழே அடர் கருங்கீற்றும் காணப்படும். கழுத்துப் பகுதி வெண்மையாகவும் மேல்பகுதி செம்பழுப்பாகவும் (வலசை வரும் காலங்களில் சற்று பசுமை கலந்த நிறமுடனும்) இருக்கும்.

வலசை தொகு

இந்தியாவிற்கு வலசை வரும் வயல் கதிர்குருவிகள் அதன் பல பகுதிகளிலும் பரவலாக, ஆனால் அரிதாகவே தென்படுகின்றன. தமிழ்நாட்டில் சென்னை, திருச்சி, தஞ்சாவூரை ஒட்டிய பகுதிகளிலும் பதிவு செய்யப்பட்டுள்ளன[3].

மேற்கோள்கள் தொகு

  1. BirdLife International (2017). "Acrocephalus agricola (amended version of 2016 assessment)". IUCN Red List of Threatened Species 2017: e.T22714714A111077678. https://www.iucnredlist.org/species/22714714/111077678. பார்த்த நாள்: 4 March 2020. 
  2. Shirihai, H. & Svensson, L. (2018). Handbook of Western Palearctic Birds – Vol I. p. 443
  3. "ebird - distribution map". பார்க்கப்பட்ட நாள் 04 July 2021. {{cite web}}: Check date values in: |access-date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=வயல்_கதிர்க்குருவி&oldid=3816714" இலிருந்து மீள்விக்கப்பட்டது