வர்த்தமான் துர்க்காபூர் மக்களவைத் தொகுதி
வர்த்தமான் துர்க்காபூர் மக்களவைத் தொகுதி (Bardhaman–Durgapur Lok Sabha constituency) என்பது இந்தியாவின் 543 நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும். இந்தத் தொகுதி மேற்கு வங்காளத்தின் மேற்கு வர்த்தமான் மாவட்டத்திலும் பர்தமான் மாவட்டத்தில் பரவியுள்ளது. வர்த்தமான் துர்க்காபூர் மக்களவைத் தொகுதியின் ஐந்து சட்டமன்றத் தொகுதிகள் கிழக்கு வர்த்தமான் மாவட்டத்தில் உள்ளன. இரண்டு சட்டமன்றத் தொகுதிகள் மேற்கு வர்த்தமான் மாவட்டத்திலும் உள்ளன.
வர்த்தமான் துர்க்காபூர் WB-39 | |
---|---|
மக்களவைத் தொகுதி | |
வர்த்தமான் துர்க்காபூர் மக்களவைத் தொகுதி நிலப்படம் | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | கிழக்கு இந்தியா |
மாநிலம் | மேற்கு வங்காளம் |
மாவட்டம் | Purba Bardhaman & Pashim Bardhaman |
நிறுவப்பட்டது | 2009-முதல் |
மொத்த வாக்காளர்கள் | 18,51,780 (2024)[1] |
ஒதுக்கீடு | பொது |
மக்களவை உறுப்பினர் | |
18வது மக்களவை | |
தற்போதைய உறுப்பினர் | |
கட்சி | அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
எல்லை நிர்ணய ஆணையத்தின் உத்தரவின் படி, மேற்கு வங்கத்தில் உள்ள தொகுதிகளின் எல்லை நிர்ணயம் தொடர்பாக, பர்த்வான் மக்களவைத் தொகுதி, கட்வா மக்களவைத் தொகுதி மற்றும் துர்காபூர் மக்களவைத் தொகுதி ஆகியவை 2009 முதல் நீக்கப்பட்டு புதிய தொகுதிகளாக கிழக்கு வர்த்தமான் மக்களவைத் தொகுதி மற்றும் வர்த்தமான் துர்க்காப்பூர் மக்களவை தொகுதி உருவாக்கப்பட்டன.[2]
கண்ணோட்டம்
தொகுவர்த்தமான் துர்க்காபூர் மக்களவைத் தொகுதி ஒரு புதிய மக்களவைத் தொகுதியாகும். இதில் வர்த்தமான் மற்றும் துர்காபூர் நகரங்களும் இடைநிலை கிராமங்கள் இரண்டும் அடங்கும்.[3]
இந்த மக்களவை தொகுதியில் 15.81 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 72 சதவீதம் பேர் கிராமப்புற வாக்காளர்களும் 7.61 லட்சம் பெண் வாக்காளர்களும் உள்ளனர்.[3]
சட்டமன்றத் தொகுதிகள்
தொகுவர்த்தமான் துர்க்காபூர் மக்களவைத் தொகுதி (நாடாளுமன்றத் தொகுதி எண். 39) பின்வரும் சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது.[2]
தொகுதி எண் | சட்டமன்றத் தொகுதி | மாவட்டம் | கட்சி | |
---|---|---|---|---|
260 | வர்த்தமான் தெற்கு | கிழக்கு வர்த்தமான் | அஇதிகா | |
263 | மாண்டேசுவர் | அஇதிகா | ||
266 | வர்த்தமான் வடக்கு (ப.இ.) | அஇதிகா | ||
267 | பதர் | அஇதிகா | ||
274 | கல்சி (ப.இ.) | அஇதிகா | ||
276 | துர்க்காபூர் கிழக்கு | அஇதிகா | ||
277 | துர்க்காபூர் மேற்கு | பாஜக |
நாடாளுமன்ற உறுப்பினர்கள்
தொகுஆண்டு | உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|
2009 | சைதுல் ஹக்[4] | இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) | |
2014 | மம்தாசு சங்கமிதா[5] | அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு | |
2019 | எஸ். எஸ். அலுவாலியா[6] | பாரதிய ஜனதா கட்சி | |
2024 | கீர்த்தி ஆசாத் | அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு |
முந்தைய ஆண்டுகளில் இந்தப் பகுதியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு துர்காபூர் மக்களவைத் தொகுதி, வர்த்தமான் மக்களவைத் தொகுதி, கட்வா மக்களவைத் தொகுதியினைப் பார்க்கவும்.
தேர்தல் முடிவுகள்
தொகு2024
தொகுகட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
திரிணாமுல் காங்கிரசு | கீர்த்தி ஆசாத் | 720,667 | 47.99 | 6.41 | |
பா.ஜ.க | திலிப் கோசு | 582,686 | 38.80 | ▼ 2.95 | |
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி | சுக்ரிதி கோசால் | 153,829 | 10.24 | ▼1.02 | |
நோட்டா | நோட்டா | 21,595 | 1.44 | 0.15 | |
வாக்கு வித்தியாசம் | 1,37,981 | 9.19 | 9.02 | ||
பதிவான வாக்குகள் | 15,01,773 | 81.10 | ▼1.56 | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | 18,51,780 | ||||
திரிணாமுல் காங்கிரசு gain from பா.ஜ.க | மாற்றம் | 4.68 |
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ https://elections24.eci.gov.in/docs/WYKXFehhEH.pdf [bare URL PDF]
- ↑ 2.0 2.1 "Delimitation Commission Order No. 18" (PDF). Table B – Extent of Parliamentary Constituencies. Government of West Bengal. பார்க்கப்பட்ட நாள் 2009-05-27.
- ↑ 3.0 3.1 Sidiqui, Kanchan (29 April 2014). "People complain of ailing industries, retrenchments and closed CPSUs". Archived from the original on 30 April 2014. பார்க்கப்பட்ட நாள் 17 June 2014.
- ↑ "General Elections, 2009 - Constituency Wise Detailed Results" (PDF). West Bengal. Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 25 May 2014.
- ↑ "General Elections 2014 - Constituency Wise Detailed Results" (PDF). West Bengal. Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 19 June 2016.
- ↑ "Bardhaman Durgapur". West Bengal. News 18. 23 May 2019. பார்க்கப்பட்ட நாள் 23 May 2019.
- ↑ https://results.eci.gov.in/PcResultGenJune2024/ConstituencywiseS2539.htm வார்ப்புரு:Bare URL inline