கிழக்கு வர்த்தமான் மக்களவைத் தொகுதி

மக்களவைத் தொகுதி (மேற்கு வங்காளம்)

கிழக்கு வர்த்தமான் அல்லது பர்தமான் புர்பா மக்களவைத் தொகுதி (Bardhaman Purba Lok Sabha constituency) என்பது இந்தியாவின் 543 நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும். இந்தத் தொகுதி மேற்கு வங்காளத்தின் புர்பா பர்தமான் மாவட்டத்தை அடிப்படையாகக் கொண்டது. இதன் எண் 38. பர்தமான் புர்பா மக்களவைத் தொகுதியின் ஏழு சட்டமன்றத் தொகுதிகளும் புர்பா பர்தமான் மாவட்டத்தில் உள்ளன. இந்தத் தொகுதி பட்டியல் சாதியினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

கிழக்கு வர்த்தமான்
WB-38
மக்களவைத் தொகுதி
Map
கிழக்கு வர்த்தமான் மக்களவைத் தொகுதி நிலப்படம்
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்கிழக்கு இந்தியா
மாநிலம்மேற்கு வங்காளம்
நிறுவப்பட்டது2009
மொத்த வாக்காளர்கள்18,01,333 (2024)[1]
ஒதுக்கீடுபட்டியல் சாதியினர்
மக்களவை உறுப்பினர்
18வது மக்களவை
தற்போதைய உறுப்பினர்
கட்சிஅகில இந்திய திரிணாமுல் காங்கிரசு
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

எல்லை நிர்ணய ஆணையத்தின் உத்தரவின் படி, மேற்கு வங்கத்தில் உள்ள தொகுதிகளின் எல்லை நிர்ணயம் தொடர்பாக, பர்த்வான் மக்களவைத் தொகுதி, கட்வா மக்களவைத் தொகுதி மற்றும் துர்க்காபூர் மக்களவைத் தொகுதி ஆகியவை 2009 முதல் நீக்கப்பட்டு புதிய தொகுதிகளாக பர்தமான் புர்பா மக்களவைத் தொகுதியும் பர்தமான் துர்க்காபூர் மக்களவைத் தொகுதியும் உருவாக்கப்பட்டன.[2]

சட்டமன்றப் பிரிவுகள்

தொகு
 
மேற்கு வங்காளத்தில் உள்ள நாடாளுமன்றத் தொகுதிகள்-1. கூச் பெஹார், 2. அலிபூர்துவார்ஸ், 3. ஜல்பைகுரி, 4. டார்ஜிலிங், 5. ராய்கஞ்ச், 6. பாலூர்காட், 7. மால்டஹா வடக்கு, 8. மால்தஹா தெற்கு, 9. ஜான்கிப்பூர், 10. பஹ்ராம்பூர், 11. முர்சிதாபாத், 12. கிருஷ்ணநகர், 13. ரணகட், 14. பங்கவன், 15. பராக்பூர், 16. டம் டம், 17. பராசாத், 18. பஷீர்ஹாட், 19. ஜெயநகர், 20. மதுரபூர், 21. டயமண்ட் ஹார்பர், 22. ஜாதவ்பூர், 23. கொல்கத்தா தெற்கு, 24. கொல்கத்தா வடக்கு, 25. ஹவுரா, 26. உலுபேரியா, 27. சேரம்பூர், 28. ஹூக்லி, 29. அரம்பாக், 30. தம்லுக், 31, காந்தி, 32. கதல், 33. ஜார்கிராம், 34. மெடினிபூர், 35. புருலியா, 36. பாங்குரா, 37. பிஷ்ணுபூர், 38. பர்தமான் புர்பா, 39. பர்தமான் துர்காபூர், 40. அசன்சோல், 41. போல்பூர், 42. பிர்பும்

பர்தமான் புர்பா மக்களவைத் தொகுதி (நாடாளுமன்றத் தொகுதி எண் 38) பின்வரும் சட்டமன்றப் பிரிவுகளைக் கொண்டுள்ளது.[2]

தொகுதி எண் பெயர் மாவட்டம் கட்சி
261 ரெய்னா (ப.இ.) கிழக்கு வர்த்தமான் அஇதிகா
262 ஜமால்பூர் (ப.இ.) அஇதிகா
264 கல்னா (ப.இ.) அஇதிகா
265 மெமாரி அஇதிகா
268 புர்பாசுடாலி தெற்கு அஇதிகா
269 புர்பாசுடாலி வடக்கு அஇதிகா
270 கட்வா அஇதிகா

நாடாளுமன்ற உறுப்பினர்கள்

தொகு
மக்களவை பதவிக் காலம் மக்களவை உறுப்பினர் கட்சி
பதினைந்தாம் 2009-14 அனுப் குமார் சாகா இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)[3]
பதினாறாவது[4] 2014-2019 சுனில் குமார் மண்டல் அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு
பதினேழாவது 2019-2024
பதினெட்டாவது 2024-முதல் சர்மிளா சர்க்கார்

முந்தைய ஆண்டுகளில் இந்தப் பகுதியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பர்த்வான் மக்களவைத் தொகுதியினையும் கட்வா மக்களவைத் தொகுதியினையும் பார்க்கவும்.

தேர்தல் முடிவுகள்

தொகு
2024 இந்தியப் பொதுத் தேர்தல்: கிழக்கு வர்த்தமான்[5]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திரிணாமுல் காங்கிரசு சர்மிளா சர்க்கார் 730,302 48.11  3.59
பா.ஜ.க அசிம் குமார் சர்க்கார் 5,59,730 37.38  0.94
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நிராப் கான் 1,76,899 11.81 0.41
நோட்டா நோட்டா (இந்தியா) 12,697 0.85  0.10
வாக்கு வித்தியாசம் 1,60,572 10.72  2.06
பதிவான வாக்குகள் 14,97,310 83.12 1.66
திரிணாமுல் காங்கிரசு கைப்பற்றியது மாற்றம்
2019 இந்தியப் பொதுத் தேர்தல்: கிழக்கு வர்த்தமான்[6]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திரிணாமுல் காங்கிரசு சுனில் குமார் மோண்டல் 6,40,834 44.52 +1.02
பா.ஜ.க பரேஷ் சந்திராDas 551,523 38.32 +25.39
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஈசுவர சந்திர தாசு 175,920 12.22 -22.61
காங்கிரசு சித்தார்த்த மஜூம்தார் 38,472 2.67 -3.54
நோட்டா நோட்டா (இந்தியா) 10,747 0.75 N/A
வாக்கு வித்தியாசம் 89,311 8.66 +3.38
பதிவான வாக்குகள் 14,39,603 84.78
திரிணாமுல் காங்கிரசு கைப்பற்றியது மாற்றம்

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. https://elections24.eci.gov.in/docs/WYKXFehhEH.pdf
  2. 2.0 2.1 "Delimitation Commission Order No. 18" (PDF). Table B – Extent of Parliamentary Constituencies. Government of West Bengal. பார்க்கப்பட்ட நாள் 2009-05-27.
  3. "General Elections, 2009 - Constituency Wise Detailed Result" (PDF). West Bengal. Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 10 June 2014.
  4. "General Elections 2014 - Constituency Wise Detailed Results" (PDF). West Bengal. Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 19 June 2016.
  5. https://results.eci.gov.in/PcResultGenJune2024/ConstituencywiseS2538.htm
  6. "General Elections 2019 - Constituency Wise Detailed Results". West Bengal. Election commission of India. Archived from the original on 22 June 2019. பார்க்கப்பட்ட நாள் 24 June 2019.

வார்ப்புரு:Purba Bardhaman topics