வலையப்பூக்குளம்
வலையப்பூக்குளம் (Valayapookulam) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் கமுதிக்கு அருகில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும்.[1] இந்த கிராமம் இராமநாதபுரம் மாவட்டத்தில் முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்டது.
வலையப்பூக்குளம் கிராம மக்களின் முக்கிய தொழில் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு ஆகும். கிராமத்தில் இருந்து ஏராளமானோர் நகர்ப்புறங்களுக்கு இடம்பெயர்ந்து சென்னை, மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், காஞ்சிபுரம் ஆகிய இடங்களில் வசித்து வருகின்றனர்.
நாடார்களால் நிர்வகிக்கப்படும் மேல்நிலைப் பள்ளி ஒன்று இக்கிராமத்தில் உள்ளது. பெரிய முத்தம்மன், பத்திரகாளி அம்மன், மாடசாமி, முனீஸ்வரர், அய்யனார், பெரியாண்டவர் கோயில்கள் இக்கிராமத்தின் முக்கியமான கோயில்களாகும். வைகாசி பொங்கல் கிராமத்தின் முக்கிய திருவிழாவாகும். இந்த கிராமத்தில் நாடார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அதிகமாக உள்ளனர்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Integrated Management Information System (IMIS) பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம், Ministry of Drinking Water and Sanitation, Government of India