வள்ளிமலை சமண குகைகள்

வள்ளிமலை சமண குகைகள் என்பவை தமிழ்நாட்டின், வேலூர் மாவட்டத்தின் காட்பாடி வட்டத்தில் உள்ள வள்ளிமலை கிராமத்தில் அமைந்துள்ளன.

வள்ளிமலை சமணப் படுக்கை
வள்ளிமலை சமண குகைகள்
வள்ளிமலை சமண குகைகள்
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்வள்ளிமலை, வேலூர் மாவட்டம், தமிழ்நாடு
புவியியல் ஆள்கூறுகள்13°04′24.6″N 79°15′50.9″E / 13.073500°N 79.264139°E / 13.073500; 79.264139
சமயம்சமணம்

வரலாறு

தொகு
 
குகையில் இருக்கும் சமண சிற்பங்களுக்கு கீழே உள்ள கல்வெட்டுகள்.

வள்ளிமலை சமண குகைகள் என்பது இயற்கையாக அமைந்த குகையாகும். இதில் முந்தைய காலத்தில் திகம்பர துறவிகள் வசித்து வந்தனர். [1] [2] மெளரியப் பேரரசின் பிற்காலத்தில் பீகாரில் இருந்து இங்கு துறவிகள் வந்தனர். இக்குகைகளில் காணப்படும் வழவழப்பான கற்படுக்கைகள் சாதவாகனர் ஆட்சி காலத்தில் செதுக்கப்பட்டன. [3] இக்குகையில் மொத்தம் ஐந்து கல்வெட்டுகள் காணப்படுகின்றன.[4] அதில் ஒன்று 8ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[5] பொ.ச. 870 சோழ மன்னர்களிடமிருந்து இந்த பகுதியைக் கைப்பற்றிய கங்க மன்னன் இரண்டாம் இராசமல்லனின் ஆட்சிக் காலத்தில் சமண சிற்பங்கள் உருவாக்கப்பட்டன. [6] [7] [8] சிற்பங்களுக்கு கீழே உள்ள ஒரு கல்வெட்டில், பாண இராச்சியத்தின் தேவசேனா மற்றும் அவரது சமண துறவிகளான பவானந்தின் மற்றும் ஆரியநந்தின் ஆகியோரின் பெயரைக் குறிப்பிடுகிறது.[9]

வள்ளிமலை 8 மற்றும் 9ஆம் நூற்றாண்டில் முக்கியமான சமண மையமாக இருந்தது. [7]

கட்டிடக்கலை

தொகு
 
சமண தீர்த்தங்கர்களின் சிற்பம்

வள்ளிமலையில் தீர்த்தங்கரரின் பல சிற்பங்களைக் கொண்ட முக்கிய சமண தளமாகும். குகைகள் 40க்கு 20 அடி (12.2 மீ × 6.1 மீ) உயரம் 7–10 அடி (2.1–3.0 மீ) வரை என அளவுகள் மாறுபடும். இப்பகுதியில் உள்ள ஒரு சமணக் கோயில் இந்து கோயிலாக மாற்றப்பட்டுள்ளது. [10] இந்த குகைகள் மூன்று அறைகள் உள்ளன. அவற்றில் இரண்டு அறைகளில் சமண தீர்த்தங்கர்களின் சிற்பங்கள் உள்ளன. இந்த குகைகளுக்கு மேலே, சமணர்களால் பயன்படுத்தபட்ட ஒரு சிறிய கோட்டையாக நம்பப்படும் ஒரு சுவரின் எச்சங்கள் உள்ளன. [11] பாதாமி குகைக் கோயில்களின் செதுக்கல்களைப் போன்ற ஒரு தோரணம் சைன உருவங்களுக்கு மேலே காணப்படுகின்றன. [12]

சைன சிற்பங்கள் இரண்டு இடங்களில் பொறிக்கப்பட்டுள்ளன. ஒன்று முருகன் கோவிலின் வடக்குப் பக்கத்திலும், இரண்டாவது தெற்குப் பக்கத்திலும், ஒரு சிற்பம் அமானுஷ்ய பரிமாணங்களுடன் உள்ளது.[11] அம்பிகையின் உருவம் கழுத்தணி, கவசங்கள், கிரீடம் அணிந்த சுகாசன நிலையில் காணப்படுகிறது.[13] அம்பிகை ஒரு சிங்கத்தின் மீது அமர்ந்து இருப்பது போலவும், அவளது பீடத்தின் கீழே இரண்டு மகன்களின் சிற்பங்களும் உள்ளன.[14] பத்மாவதியின் உருவமும் நான்கு கைகளுடன், மேல் வலது மற்றும் இடது கைகளில் உழவுகோல் மற்றும் சுருக்கை ஏந்தியபடி உள்ளன.[14]

பாதுகாப்பு

தொகு

இந்த குகைகள் இந்தியத் தொல்பொருள் ஆய்வு மையத்தால் பாதுகாக்கப்படுகின்றன. [15] 2014 ஆம் ஆண்டில், இந்த இடத்தை விளம்பரப்படுத்துவதற்காக இப்பகுதியில் "அகிம்சை நடை" ஏற்பாடு செய்யப்பட்டது. [8]

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு

ஆதாரங்கள்

தொகு
  • Subramanian, K. R. (2002), Origin of Saivism and Its History in the Tamil Land, Asian Educational Services, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788120601444Subramanian, K. R. (2002), Origin of Saivism and Its History in the Tamil Land, Asian Educational Services, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788120601444
"https://ta.wikipedia.org/w/index.php?title=வள்ளிமலை_சமண_குகைகள்&oldid=3740000" இலிருந்து மீள்விக்கப்பட்டது