வவுனியா தேர்தல் தொகுதி
வவுனியா தேர்தல் தொகுதி (Vavuniya Electorate) என்பது ஆகத்து 1947 முதல் பெப்ரவரி 1989 வரை இலங்கையில் நடைமுறையில் இருந்த ஒரு அங்கத்தவர் தேர்தல் தொகுதியாகும். இத்தேர்தல் தொகுதி இலங்கையின் வட மாகாணத்தில், வவுனியா மாவட்டத்தில் வவுனியா நகரையும் அதன் சுற்றவுள்ள பகுதிகளையும் உள்ளடக்கியதாகும்.
1978 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய அரசியலமைப்பின் படி, இலங்கையில் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து, நடைமுறையில் இருந்த 160 தேர்தல் தொகுதிகள் கலைக்கப்பட்டு பதிலாக 22 பல-அங்கத்தவர்களைக் கொண்ட தேர்தல் மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன[1]. 1989 தேர்தலில் வவுனியா தேர்தல் தொகுதி வன்னித் தேர்தல் மாவட்டத்தில் உள்ளடக்கப்பட்டது.
நாடாளுமன்ற உறுப்பினர்கள்
தொகுதேர்தல் | உறுப்பினர் | கட்சி | காலம் | |
---|---|---|---|---|
1947 | செ. சுந்தரலிங்கம் | சுயேட்சை | 1947-1952 | |
1952 | 1952-1956 | |||
1956 | 1956-1960 | |||
1960 (மார்ச்) | 1960-1960 | |||
1960 (சூலை) | தா. சிவசிதம்பரம் | 1960-1965 | ||
1965 | அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் | 1965-1970 | ||
1970 | எக்ஸ். எம். செல்லத்தம்பு | இலங்கைத் தமிழரசுக் கட்சி | 1970-1977 | |
1977 | தா. சிவசிதம்பரம் | தமிழர் விடுதலைக் கூட்டணி | 1977-1989 |
1947 தேர்தல்கள்
தொகு1வது நாடாளுமன்றத் தேர்தல் 1947 ஆகத்து 23 முதல் செப்டம்பர் 20 வரை நடைபெற்றது. முடிவுகள் வருமாறு[2]:
வேட்பாளர் | கட்சி | சின்னம் | வாக்குகள் | % | |
---|---|---|---|---|---|
செ. சுந்தரலிங்கம் | சுயேட்சை | மரம் | 4,026 | 66.61% | |
த. மு. சபாரத்தினம் | அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் | கரண்டி | 2,018 | 33.39% | |
தகுதியான வாக்குகள் | 6,044 | 100.00% | |||
நிராகரிக்கப்பட்டவை | 132 | ||||
மொத்த வாக்குகள் | 6,176 | ||||
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் | 11,099 | ||||
வாக்கு வீதம் | 55.64% |
1952 தேர்தல்கள்
தொகு24 மே 1952 முதல் 30 மே 1952 வரை நடைபெற்ற 2வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்[3]:
வேட்பாளர் | கட்சி | சின்னம் | வாக்குகள் | % | |
---|---|---|---|---|---|
செ. சுந்தரலிங்கம் | சுயேட்சை | விண்மீன் | 6,019 | 66.83% | |
யு. பி. தசநாயக்கா | சுயேட்சை | சாவி | 1,497 | 16.62% | |
த. மு. சபாரத்தினம் | அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் | குடை | 1,398 | 15.52% | |
கே. வேலுப்பிள்ளை | சுயேட்சை | கதிரை | 93 | 1.03% | |
தகுதியான வாக்குகள் | 9,007 | 100.00% | |||
நிராகரிக்கப்பட்டவை | 104 | ||||
மொத்த வாக்குகள் | 9,111 | ||||
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் | 13,093 | ||||
வாக்கு வீதம் | 69.59% |
1956 தேர்தல்கள்
தொகு5 ஏப்ரல் 1956 முதல் 10 ஏப்ரல் 1956 வரை நடந்த 3வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்[4]:
வேட்பாளர் | கட்சி | சின்னம் | வாக்குகள் | % | |
---|---|---|---|---|---|
செ. சுந்தரலிங்கம் | சுயேட்சை (தமிழ் எதிர்ப்பு முன்னணி) | மரம் | 6,853 | 78.69% | |
பி. தர்மலிங்கம் | சுயேட்சை | சக்கரம் | 1,856 | 21.31% | |
தகுதியான வாக்குகள் | 8,709 | 100.00% | |||
நிராகரிக்கப்பட்டவை | 69 | ||||
மொத்த வாக்குகள் | 8,778 | ||||
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் | 15,946 | ||||
வாக்கு வீதம் | 55.05% |
1960 (மார்ச்) தேர்தல்கள்
தொகு19 மார்ச் 1960 இல் நடைபெற்ற 4வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்[5]:
வேட்பாளர் | கட்சி | சின்னம் | வாக்குகள் | % | |
---|---|---|---|---|---|
தா. சிவசிதம்பரம் | சுயேட்சை | சூரியன் | 5,370 | 43.28% | |
செ. சுந்தரலிங்கம் | சுயேட்சை | கப்பல் | 4,231 | 34.10% | |
பி. முத்தையா | தோடம்பழம் | 1,469 | 11.84% | ||
எஸ். சுப்பிரமணியம் | இலங்கைத் தமிழரசுக் கட்சி[6] | வீடு | 1,338 | 10.78% | |
தகுதியான வாக்குகள் | 12,408 | 100.00% | |||
நிராகரிக்கப்பட்டவை | 107 | ||||
மொத்த வாக்குகள் | 12,515 | ||||
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் | 18,469 | ||||
வாக்கு வீதம் | 67.76% |
1960 (சூலை) தேர்தல்கள்
தொகு20 சூலை 1960 இல் நடைபெற்ற 5வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்[7]:
வேட்பாளர் | கட்சி | சின்னம் | வாக்குகள் | % | |
---|---|---|---|---|---|
தா. சிவசிதம்பரம் | சுயேட்சை | ஈருருளி | 7,393 | 57.71% | |
ஜி. பி. வின்சன்ட் | இலங்கைத் தமிழரசுக் கட்சி[6] | வீடு | 5,418 | 42.29% | |
தகுதியான வாக்குகள் | 12,811 | 100.00% | |||
நிராகரிக்கப்பட்டவை | 56 | ||||
மொத்த வாக்குகள் | 12,867 | ||||
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் | 18,469 | ||||
வாக்கு வீதம் | 69.67% |
1965 தேர்தல்கள்
தொகு22 மார்ச் 1965 இல் நடைபெற்ற 6வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்[8]:
வேட்பாளர் | கட்சி | சின்னம் | வாக்குகள் | % | |
---|---|---|---|---|---|
தா. சிவசிதம்பரம் | அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் | ஈருருளி | 7,265 | 40.33% | |
ஜி. பி. வின்சன்ட் | இலங்கைத் தமிழரசுக் கட்சி[6] | வீடு | 4,512 | 25.05% | |
செ. சுந்தரலிங்கம் | மரம் | 3,952 | 21.94% | ||
வி. சிறிவர்தன | கதிரை | 872 | 4.84% | ||
ஆரியவன்ச குணசேகரா | குடை | 744 | 4.13% | ||
டபிள்யூ. எஸ். பெரேரா | மகாஜன எக்சத் பெரமுன | சக்கரம் | 436 | 2.42% | |
எஸ், சிறினிவாசன் | சுயேட்சை | தராசு | 231 | 1.28% | |
தகுதியான வாக்குகள் | 18,012 | 100.00% | |||
நிராகரிக்கப்பட்டவை | 130 | ||||
மொத்த வாக்குகள் | 18,142 | ||||
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் | 24,701 | ||||
வாக்கு வீதம் | 73.45% |
1970 தேர்தல்கள்
தொகு27 மே 1970 இல் நடைபெற்ற 7வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்[9]:
வேட்பாளர் | கட்சி | சின்னம் | வாக்குகள் | % | |
---|---|---|---|---|---|
எக்ஸ். எம். செல்லத்தம்பு | இலங்கைத் தமிழரசுக் கட்சி[6] | வீடு | 10,947 | 42.99% | |
தா. சிவசிதம்பரம் | அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் | ஈருருளி | 10,674 | 41.92% | |
எஸ். பத்மநாதன் | இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி | விண்மீன் | 3,120 | 12.25% | |
எஸ். எம். கே. சுபசிங்க | தராசு | 584 | 2.29% | ||
ஏ. டி. ஏ. செனிவிரத்தின | மரம் | 137 | 0.54% | ||
தகுதியான வாக்குகள் | 25,462 | 100.00% | |||
நிராகரிக்கப்பட்டவை | 116 | ||||
மொத்த வாக்குகள் | 25,578 | ||||
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் | 31,650 | ||||
வாக்கு வீதம் | 80.82% |
1977 தேர்தல்கள்
தொகு21 சூலை 1977 இல் நடைபெற்ற 8வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்[10]:
வேட்பாளர் | கட்சி | சின்னம் | வாக்குகள் | % | |
---|---|---|---|---|---|
தா. சிவசிதம்பரம் | தமிழர் விடுதலைக் கூட்டணி | சூரியன் | 13,821 | 59.02% | |
கே. ரி. புலேந்திரன் | ஐக்கிய தேசியக் கட்சி | யானை | 9,444 | 40.33% | |
யு. சுபசிங்க | கண் | 151 | 0.64% | ||
தகுதியான வாக்குகள் | 23,416 | 100.00% | |||
நிராகரிக்கப்பட்டவை | 80 | ||||
மொத்த வாக்குகள் | 23,496 | ||||
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் | 28,450 | ||||
வாக்கு வீதம் | 82.59% |
இலங்கைத் தமிழ்ப் போராளிகளின் அழுத்தத்தாலும், தமிழ் ஈழத்துக்கு ஆதரவளிப்பதில்லை என நாடாளுமன்றத்தில் சத்தியப்பிரமாணம் எடுப்பதற்கான ஆறாம் திருத்தச் சட்டமூலத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், கருப்பு சூலை வன்முறைகளில் சிங்கள காடையர்களினால் 3,000 தமிழ் மக்கள் கொல்லப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், தா. சிவசிதம்பரம் உட்பட அனைத்து தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர்களும் 1983 முதல் நாடாளுமன்றத்தை ஒன்றியொதுக்கல் செய்தார்கள். மூன்று மாதங்கள் நாடாளுமன்றத்துக்குச் சமூகமளிக்காத நிலையில், 1983 அக்டோபர் 22 இல் அவர்கள் அனைவரும் நாடாளுமன்ற இருக்கைகளை இழந்தார்கள்[11].
இவற்றையும் பார்க்க
தொகுமேற்கோள்களும் குறிப்புகளும்
தொகு- ↑ "The Electoral System". இலங்கை நாடாளுமன்றம். Archived from the original on 2010-11-27. பார்க்கப்பட்ட நாள் 2012-12-07.
- ↑ "Result of Parliamentary General Election 1947" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2015-09-24. பார்க்கப்பட்ட நாள் 2012-12-07.
- ↑ "Result of Parliamentary General Election 1952" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2015-09-24. பார்க்கப்பட்ட நாள் 2012-12-07.
- ↑ "Result of Parliamentary General Election 1956" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2015-09-24. பார்க்கப்பட்ட நாள் 2012-12-07.
- ↑ "Result of Parliamentary General Election 1960-03-19" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2009-12-09. பார்க்கப்பட்ட நாள் 2012-12-07.
- ↑ 6.0 6.1 6.2 6.3 சமஷ்டிக் கட்சி எனவும் அழைக்கப்பட்டது
- ↑ "Result of Parliamentary General Election 1960-07-20" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2015-09-24. பார்க்கப்பட்ட நாள் 2012-12-07.
- ↑ "Result of Parliamentary General Election 1965" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2015-07-13. பார்க்கப்பட்ட நாள் 2012-12-07.
- ↑ "Result of Parliamentary General Election 1970" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2009-12-09. பார்க்கப்பட்ட நாள் 2012-12-07.
- ↑ "Result of Parliamentary General Election 1977" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2011-07-17. பார்க்கப்பட்ட நாள் 2012-12-07.
- ↑ Wickramasinghe, Wimal (18 சனவரி 2008). "Saga of crossovers, expulsions and resignations etc. Referendum for extention of Parliament". தி ஐலண்டு இம் மூலத்தில் இருந்து 2011-06-17 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110617063609/http://www.island.lk/2008/01/18/features11.html.