வார்ப்புரு:ஈழப்போர்ச் செய்திகள் ஜனவரி 2009
- ஜனவரி 31: முல்லைத்தீவு, சுதந்திரபுரம் "மக்கள் பாதுகாப்பு வலய" பகுதியில் படையினர் நடத்திய பீரங்கி மற்றும் வான் தாக்குதல்களிலும், உடையார்கட்டு மீது நடத்தப்பட்ட எறிகணைத் தாக்குதலிலும் 12 சிறுவர்கள் உட்பட 50 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 169 பேர் படுகாயமடைந்தள்ளனர். (தமிழ்வின்)
- ஜனவரி 29: இலங்கையில் ஈழத்தமிழர் பிரச்சனை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்பதை வலியுறுத்தி தூத்துக்குடியைச் சேர்ந்த வாலிபர் கு. முத்துக்குமார் சென்னையில தீக்குளித்து இறந்தார். (தமிழ்வின்)
- ஜனவரி 28: வன்னியில் இருந்து பொதுமக்களை வெளியேற்ற 48 மணி நேர காலக்கெடு அளித்திருப்பதாக அரசாங்கம் அறிவித்தது. (தமிழ்வின்)
- ஜனவரி 27: இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி பேச்சுவார்த்தைகளுக்கென இலங்கை வந்தார். (தமிழ்வின்)
- ஜனவரி 26: முல்லைத்தீவு மாவட்டத்தில் அரசாங்கம் அறிவித்த "மக்கள் பாதுகாப்பு வலய"மான - புதுக்குடியிருப்பு - சுதந்திரபுரம் சந்தி மற்றும் விசுவமடு - உடையார்கட்டு, வள்ளிபுனம், ஆகிய பகுதிகளை நோக்கி படையினர் நடத்திய அகோர பீரங்கி தாக்குதலில் ஆகக்குறைந்தது 300 பேர் வரையில் கொல்லப்பட்டுள்ளதுடன் பல நூறு பேர் படுகாயமடைந்தனர். (தமிழ்வின்)
- ஜனவரி 25: முல்லைத்தீவு நகரைக் கைப்பற்றியுள்ளதாக இலங்கை இராணுவம் அறிவித்தது. (தமிழ்வின்)
- ஜனவரி 24: முல்லைத்தீவு கல்மடுக்குள அணைக்கட்டு வெடிகுண்டு வைத்து தகர்க்கப்பட்டது. (தமிழ்வின்)
- ஜனவரி 23: தேராவில் மற்றும் மயில்வாகனபுரம் பகுதிகள் மீது படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதல்களில் சிறுமி உட்பட 5 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 83 பேர் படுகாயமடைந்தனர். (தமிழ்வின்)
- ஜனவரி 22:
- தர்மபுரம் நெத்தலியாறுப் பகுதியிலிருந்து விசுவமடு நோக்கி படையினர் மேற்கொண்ட முன்னகர்வு நடவடிக்கையின் போது 40 படையினர் கொல்லப்பட்டு மேலும் 70 படையினர் காயமடைந்தனர். (தமிழ்வின்)
- அரசாங்கம் அறிவித்த "புதுக்குடியிருப்பு மக்கள் பாதுகாப்பு வலயம்" மற்றும் முல்லைத்தீவு மருத்துவமனை ஆகியனவற்றின் மீது படையினர் நடத்திய நடத்திய எறிகணைத் தாக்குதல்களில் 22 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 106 பேர் படுகாயமடைந்தனர். (தமிழ்வின்)
- ஜனவரி 21: மட்டக்களப்பில் குண்டு ஒன்று வெடித்ததில் காவற்துறை அதிகாரி உட்பட இருவர் கொல்லப்பட்டனர். (தமிழ்வின்)
- ஜனவரி 20:
- வன்னிப் பகுதியில் படையினரால் நடத்தப்பட்ட எறிகணைத் தாக்குதல்களில் 5 சிறுவர்கள் உட்பட 17 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 51 பேர் படுகாயமடைந்தனர். (தமிழ்வின்)
- இயக்குநர் சீமான் உட்பட தமிழ்தேசியவாதிகள் மூவரும் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர். (தமிழ்வின்)
- ஜனவரி 18: விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் தனது காலவரையற்ற உண்ணாநிலைப் போராட்டத்தை நான்காவது நாள் நிறுத்திக் கொண்டார். (புதினம்)
- ஜனவரி 15: இலங்கையில் தமிழர் படுகொலையை நிறுத்த நடவடிக்கை எடுக்கக் கோரி விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் காலவரையற்ற உண்ணாநிலைப் போராட்டத்தை தொடங்கினார். (தினமணி)
- ஜனவரி 8:
- கிளிநொச்சி மாவட்டம், வட்டக்கச்சியில் இலங்கைப் படைகளின் எறிகணை வீச்சில் சிக்கி ஒரு குழந்தை உட்பட மூன்று பொதுமக்கள் கொல்லப்பட்டனர். (தமிழ்நெட்)
- த சண்டே லீடர் பத்திரிகை ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க கொழும்பில் இனந்தெரியாதோரால் சுடப்பட்டுக் கொல்லப்பட்டார். (தமிழ்நெட்)
- ஜனவரி 7: இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு தடை செய்யப்பட்ட அமைப்பாக்க அறிவிக்கப்பட்டது. (தமிழ்நெட்)
- ஜனவரி 4: பரந்தன்-முல்லைத்தீவு வீதியில் இடம்பெற்ற சமரில் 53 இராணுவத்தினர் கொல்லப்பட்டு 80 பேர் படுகாயமடைந்ததாக விடுதலைப் புலிகள் அறிவித்தனர். (தமிழ்நெட்)
- ஜனவரி 2:
- கொழும்பு வான்படைத் தலைமை அலுவலகத்தின் முன்னால் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 2 வான்படையினர் கொல்லப்பட்டு குறைந்தது 30 பேர் காயமடைந்தனர். (டெய்லிமிரர்)
- கிளிநொச்சி நகரை இலங்கை இராணுவம் கைப்பற்றியிருப்பதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நாட்டு மக்களுக்கு அறிவித்தார். (டெய்லிமிரர்)
- ஜனவரி 1:
- கிளிநொச்சியில் ஆங்கிலப் புத்தாண்டு நாளன்று இலங்கை வான்படை மூன்று தடவைகள் நடத்திய குண்டுத் தாக்குதலில் 6 பொதுமக்கள் கொல்லப்பட்டு 28 பேர் காயமடைந்தனர். (புதினம்)
- கிளிநொச்சி மாவட்டம், பரந்தன் சந்தியைத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாக இராணுவம் அறிவித்தது. (பிபிசி)