வார்ப்புரு பேச்சு:இலங்கைத் தமிழ் நூல்கள்
இலங்கை எழுத்தாளர்களின் நூல் விபரப்பட்டியல்
தொகுஇலங்கை எழுத்தாளர்களின் நூல் விபரப்பட்டியல் தொடர்பாக என்னால் ஆரம்பிக்கப்பட்ட கட்டுரைகள் குறித்தும் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டிருந்த கட்டுரைகள் குறித்தும் சில கருத்துக்களைக் குறிப்பிடுவதுடன், ஆலோசனைகளையும் உதவிகளையும் பெற்றுக் கொள்ளுமுகமாகவே இதனை எழுதுகின்றேன்.
- 19ம் நூற்றாண்டின் மத்திய பகுதியிலிருந்து இதுவரை ஆயிரக்கணக்கான தமிழ்மொழி நூல்கள் இலங்கையில் வெளிவந்துள்ளன. ஆனால், துர்ப்பாக்கியமான நிலையென்னவெனில் எந்தவொரு இடத்திலும் இவை பற்றி விபரங்களோ பட்டியலோ முழுமையாகக் காணப்படாமையாகும்.
- எமக்குத் தெரிந்த விடயங்களை வைத்து விக்கியில் இதனை ஆரம்பிக்கும்போது இத்துறையில் ஈடுபாடுமிக்க பலரும் பங்களிப்பு நல்குவார்கள் என்ற நம்பிக்கையிலும் இதன் மூலமாக ஓரளவுக்காவது ஒரு நிறைவான பட்டியலை விக்கி தயாரித்துள்ளது என்ற பெயர் விக்கிக்கிக்கு ஏற்பட வேண்டும் என்ற நோக்கிலும் இப்பகுதியை ஆரம்பித்தேன். இதில் பலர் பங்களிப்பு செய்து வருவது உண்மையிலேயே மகிழ்ச்சியைத் தருகின்றது.
- இந்நிலையில் இலங்கையின் நூலகவியலாளரும், நூல்தேட்டம் ஆசிரியருமான என். செல்வராஜா தனது நூல்தேட்டம் 07 தொகுதிகளிலும் பதவாகியுள்ள 7000 நூல்களையும் இத்தொகுப்பில் சேர்ப்பதற்கான அனுமதியினை எனக்குத் தந்துள்ளார். மேலும், பேராதனைப்பல்கலைக்கழக நூலக மற்றும் இலங்கை ஆவணவாக்கல் சபை ஆகியவற்றின் பதிவுகளையும் பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளேன். எனது பருமட்டான கணிப்பீட்டின்படி 20000க்கு மேற்பட்ட தமிழ் நூல்களின் பட்டியலை வெளிவந்த ஆண்டு, எழுத்தாளரின் பெயர், நூல்களின் பெயர் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு திரட்டக்கூடியதாக இருக்குமென எதிர்பார்க்கின்றேன். இவை தவிர இன்னும் சில பொது நூலகங்களும் இம்முயற்சிக்கு ஒத்துழைக்க விருப்பம் தெரிவித்துள்ளன.
- எனவே இம்முயற்சி நீண்ட காலங்களுக்கு தொடரலாம். நேரம் கிடைக்கும்போது படிப்படியாக அவற்றை பதிவேற்றம் செய்யலாம் என எண்ணுகின்றேன்.
- இப்படிப்பட்ட நிலையில் விக்கியில் இது குறித்து தெளிவான பகுப்பினையும் குறிப்பாக அனைவருக்கும் பங்களிப்பு செய்யக்கூடிய வகையில் செய்துகொண்டால் இலகுவாக இருக்குமென கருதுகின்றேன். தற்போதுள்ள தலைப்புகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு மாதிரியாகவுள்ளது. மேலும், தமிழ் புதினங்களில் இரண்டு கட்டுரைகள் காணப்படுகின்றன.
- இவற்றை கருத்திற்கொண்டு இந்த நூல் பட்டியலை எந்த முறையில் பகுப்புக்கு உட்படுத்தலாம் என்ற ஆலோசனையை அன்புடன் வேண்டிநிற்கின்றேன்.
- சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தூவியின் வகுப்புப் பிரிவுகளுக்கமைய
- பொதுப் பிரிவு
- மெய்யியல் துறை
- சமயங்கள்
- சமூக விஞ்ஞானங்கள்
- மொழியியல்
- தூய விஞ்ஞானங்கள்
- பிரயோக விஞ்ஞானம் தொழில்நுட்பம்
- கலைகள், நுண்கலைகள்
- இலக்கியம்
- புவியியல், வரலாறு
எனும் வகுப்பு முறையைப் பிரதானப்படுத்தி கூடிய நூல்கள் வெளிவந்துள்ள பகுப்பில் உப தலைப்புகளையும் சேர்த்து வகைப்படுத்தக்கூடிய ஒழுங்கினை செய்தால் சிறப்பாக இருக்கும் என்பது என்னுடைய தாழ்மையான அபிப்பிராயம்.
- எந்தப் பயனருக்கும் இலகுவான முறையில் தேடி கண்டுகொள்ளக்கூடிய வகையில் அனைத்து பகுப்புகளிலும் ஒரு பொதுத்தன்மையைப் பேணினால் மேலும் சிறப்பாக இருக்கும் என கருதுகின்றேன். உதாரணமாக
- இலங்கை தமிழ் புதினங்களின் பட்டியல்
- இலங்கை தமிழ் சிறுகதை நூல்களின் பட்டியல்
- இலங்கை தமிழ் கவிதை நூல்களின் பட்டியல்
இவ்வாறமைந்தால் சிறப்பாக இருக்கும் தானே. இது குறித்து மேலும் ஆலோசனைகளை அனைவரிடமிருந்தும் பெற்றுக்கொள்ள விரும்பும் அதேநேரத்தில் இதுவொரு பயனுள்ளதும், அவசியமுமான முயற்சி என்பதால் பயனர்களுக்கு இலகுவில் இனம்கண்டுகொள்ளக்கூடிய வகையில் ஒரு இலகுவான வழியை தெரிவித்தால் சிறப்பானதாக இருக்கும். --P.M.Puniyameen 04:28, 31 சனவரி 2011 (UTC)
- தமிழ் நூல்களை தொகுக்கும் முயற்சி ஒரு மிகப் பெரும் அரிய பணி என்பதில் சந்தேகம் இல்லை. இலங்கைத் தமிழ் நூல்கள் என்று வரையறைய நாம் செய்து கொண்டால், இது முடிந்த ஒரு காரியமே. நூலகத் திட்டம் (www.noolaham.org, noolahamfoundation.org) பற்றி அறிந்திருப்பீர்கள் என்று கருதுகிறேன். அதன் ஒரு பாகமாக இதைச் செய்வது கூடிய பொருத்தமாக இருக்கும். அவர்களிடம் இருந்தும் நாம் கூடிய ஒத்துளைப்பைப் பெற முடியும். வெறும் பட்டியலாக இல்லாமல், கூடிய தகவல்களுடன் ஒரு படைப்பைப் பற்றிய meta data சேகரிக்க முடிந்தால் சிறப்பாக இருக்கும். மேலும் ஒரு படி சென்று, பழைய நூல்களை எல்லாம் பெற முடிந்தால் நூலகத் திட்டத்தினரால் எண்ணி வடிவமாக்கி உலகெங்கும் பகிர முடியும். நூலகத் திட்டத்தோடு உங்கள் தொடர்புகளை ஏற்படுத்தித் தர முடியும். --Natkeeran 04:39, 31 சனவரி 2011 (UTC)
புன்னியாமீன், உங்கள் முயற்சி பாரட்டத்தக்கது. நூல்களின் பட்டியலின் பெயர்களை மட்டும் இணைப்பதானால், அவற்றை ஒவ்வொரு துறைவாரியாக பட்டியல் இடல் நன்றாக இருக்கும். அதேவேளை அனைத்து துறைகளையும் ஒருங்கிணக்கும் வகையில் ஒரு வார்ப்புருவை உருவாக்கிக்கொள்ளலாம். அந்த வார்ப்புருவை ஒவ்வொரு துறைப் பட்டியலின் கீழும் இட்டுக்கொள்ளலாம். முதலில் என்னென்ன துறையென்று பிரித்துக்கொள்ளுங்கள். வாருப்புரு தேவைப்படுமானால் நான் செய்து தருகிறேன். --HK Arun 04:54, 31 சனவரி 2011 (UTC)
- Natkeeran, HK Arun தங்கள் கருத்துகளுக்கு நன்றி. நூலகத் திட்டத்துடன் எனக்குத் தொடர்புண்டு. அவர்களினதும் உதவிகளைப் பெற்றுக்கொள்ளலாம். Natkeeran கருத்துப்படி இலங்கைத் தமிழ் நூல்கள் என்று பிரதான பகுப்பை அமைத்துக் கொள்ளலாம். ஆனால் துணைப் பகுப்புகளை வரையறை செய்வதில் தான் சிரமமுண்டு. இதற்கு உங்கள் உதவிகள் தேவை. HK Arun அனைத்து துறைகளையும் ஒருங்கிணைக்கும் வகையில் ஒரு வார்ப்புருவை உருவாக்கித் தருவதாக தெரிவித்தமைக்கு நன்றி. பிரதான பகுப்பு, உப பகுப்புகள் ஆகியவற்றை இதே பொதுக்களத்தில் முடிவெடுத்த பின்பு வார்ப்புருவை உருவாக்கித் தாருங்கள். --P.M.Puniyameen 08:14, 31 சனவரி 2011 (UTC)
- ஆங்கில விக்கியில் உள்ள en:Lists of books என்ற பட்டியலும் உதவலாம்.--Kanags \உரையாடுக 10:51, 2 பெப்ரவரி 2011 (UTC).
அருண், வார்ப்புருவில் உள்ள இலங்கை சிங்கச் சின்னத்தை எடுத்து விடுங்கள். ஈழத்துத் தமிழ் நூல்களுக்குத் தகுந்தவாறு ஒரு படம் இடுங்கள்.--Kanags \உரையாடுக 11:14, 2 பெப்ரவரி 2011 (UTC)
எனக்கும் அது பிடிக்கவில்லை தான். மாற்றிவிடுகின்றேன். --HK Arun 11:27, 2 பெப்ரவரி 2011 (UTC)
- நன்றி அருண். இலங்கைத் தமிழ் நூல்கள் வார்ப்புரு மிகச் சிறப்பாக உள்ளது. மாற்றங்களை படிப்படியாகச் செய்து கொள்வோம். பேச்சுப்பக்கத்தில் கடைசியாக உள்ள எனது குறிப்பின் படி மாற்றத்தைச் செய்தால் கூடிய பயன் மிக்கதாக இருக்கும் எனக் கருதுகின்றேன். அவசரமில்லை படிப்படியாக செய்து கொளவோம். மீண்டும் என் நன்றிகள்--P.M.Puniyameen 13:15, 2 பெப்ரவரி 2011 (UTC)
- புன்னியாமீன், கீழே நீங்கள் தந்திருக்கும் ஒரு சீரான விக்கித் தலைப்புகள் மிக நன்று. அதன் படியே தலைப்புகளையும் அமைக்க வேண்டுகிறேன். இருக்கும் கட்டுரைகளிலும் அதில் உள்ளபடியே தலைப்பை மாற்றலாம்.--Kanags \உரையாடுக 20:10, 2 பெப்ரவரி 2011 (UTC)
தற்போதுள்ள தலைப்புகள்
தொகு- இலங்கை தமிழ் சிறுவர் இலக்கிய நூல்களின் பட்டியல்
- இலங்கை தமிழ் நாடக நூல்களின் பட்டியல்
- ஈழத்து இலக்கிய ஆய்வு நூல்கள்
- ஈழத்துச் சிறுகதை நூல்களின் பட்டியல்
- ஈழத்துப் புதின நூல்களின் பட்டியல்
- இலங்கை தமிழ்ப் புதினங்களின் பட்டியல்
- இலங்கை தமிழ்க் கவிதை நூல்களின் பட்டியல்
- இலங்கை தொடர்பான பன்னாட்டவரின் தமிழ் நூல்களின் பட்டியல்
- புலம்பெயர் ஈழத்து எழுத்தாளர்களின் தமிழ் சிறுகதை நூல்களின் பட்டியல்
- புலம்பெயர் ஈழத்து எழுத்தாளர்களின் தமிழ் கவிதை நூல்களின் பட்டியல்
- புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்களின் பல்துறை நூல்களின் பட்டியல்
- இலங்கையில் தமிழில் வெளிவந்த பிறமொழி இலக்கிய நூல்கள்
- 19ம் நூற்றாண்டு இலங்கை எழுத்தாளர்களின் தமிழ் நூல்கள்
- புலம்பெயர் ஈழத்து எழுத்தாளர்களின் தமிழ்ப் புதினங்கள் (பட்டியல்)
- இலங்கை பல்துறைசார் தமிழ் நூல்களின் பட்டியல்
- இலங்கை இனப்பிரச்சினை வரலாற்று நூல் பட்டியல்
தலைப்புகள் ஒரே ஒலி ஓசைக்கு அமைய வந்தால் சிறப்பாக இருக்குமல்லவா? --P.M.Puniyameen 08:28, 31 சனவரி 2011 (UTC)
இலங்கைத் தமிழ் நூல்களின் பட்டியல்
தொகுசர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தூவியின் வகுப்புப் பிரிவுகளுக்கமையவும், ஆங்கில விக்கியின் வகுப்புப் பிரிவுகளுக்கமையவும், இப்பகுப்பினை தயாரித்துள்ளேன். இப்பட்டியலை தற்போதுள்ள வார்ப்புருவில் சேர்க்க முடியுமா? இதில் திருத்தங்கள், நீக்கங்கள், ஆலோசனைகள் போன்றவற்றை எதிர்பார்க்கின்றேன். ஒரு நீண்ட கால அடிப்படையிலேயே இத் திட்டம்
இலங்கைத் தமிழ் நூல்களின் பட்டியல்
பொதுப் பிரிவு
தொகு- பொதுஅறிவு தமிழ் நூல்களின் பட்டியல் (இலங்கை) | பொது அறிவு
- கணனியியல் தமிழ் நூல்களின் பட்டியல் (இலங்கை) | கணனியியல்
- நூலியல் தமிழ் நூல்களின் பட்டியல் (இலங்கை) | நூலியல்
- நூலகவியல் தமிழ் நூல்களின் பட்டியல் (இலங்கை) | நூலகவியல்
- பொதுத் தமிழ் நூல்களின் பட்டியல் (இலங்கை) | பொது
மெய்யியல் துறை
தொகு- தத்துவவியல் தமிழ் நூல்களின் பட்டியல் (இலங்கை) | தத்துவவியல்
- உளவியல் தமிழ் நூல்களின் பட்டியல் (இலங்கை) | உளவியல்
- ஒழுக்கவியல் தமிழ் நூல்களின் பட்டியல் (இலங்கை) | ஒழுக்கவியல்
- சோதிடம், வானசாஸ்திரம் தமிழ் நூல்களின் பட்டியல் (இலங்கை) | சோதிடம், வானசாஸ்திரம்
சமயங்கள்
தொகு- பொதுச் சமய தமிழ் நூல்களின் பட்டியல் (இலங்கை) | பொதுச் சமயம்
- கிறித்தவ சமய தமிழ் நூல்களின் பட்டியல் (இலங்கை) | கிறித்தவம்
- பௌத்த சமய தமிழ் நூல்களின் பட்டியல் (இலங்கை) | பௌத்தம்
- இந்து சமய தமிழ் நூல்களின் பட்டியல் (இலங்கை) | இந்து
- இசுலாமிய சமய தமிழ் நூல்களின் பட்டியல் (இலங்கை) | இசுலாம்
சமூக விஞ்ஞானங்கள்
தொகு- சமூகவியல் - தமிழ் நூல்களின் பட்டியல் (இலங்கை) | சமூகவியல்
- பெண்ணியம் - தமிழ் நூல்களின் பட்டியல் (இலங்கை) | பெண்ணியம்
- அரசறிவியல் - தமிழ் நூல்களின் பட்டியல் (இலங்கை) | அரசறிவியல்
- பொருளியல் - தமிழ் நூல்களின் பட்டியல் (இலங்கை) | பொருளியல்
- சட்டவியல் - தமிழ் நூல்களின் பட்டியல் (இலங்கை) | சட்டவியல்
- கல்வியியல் - தமிழ் நூல்களின் பட்டியல் (இலங்கை) | கல்வியியல்
- வர்த்தகம் - தமிழ் நூல்களின் பட்டியல் (இலங்கை) | வர்த்தகம்
- நாட்டாரியல் - தமிழ் நூல்களின் பட்டியல் (இலங்கை) | நாட்டாரியல்
- கிராமிய இலக்கிய தமிழ் நூல்களின் பட்டியல் (இலங்கை) | கிராமியம்
மொழியியல்
தொகு- தமிழ் மொழியியல் நூல்களின் பட்டியல் (இலங்கை) | தமிழ்
- சிங்களம் மொழியியல் தமிழ் நூல்களின் பட்டியல் (இலங்கை) | சிங்களம்
- ஐரோப்பிய மொழியியல் தமிழ் நூல்களின் பட்டியல் (இலங்கை) | ஐரோப்பா
தூய விஞ்ஞானங்கள்
தொகு- தமிழ் விஞ்ஞான நூல்களின் பட்டியல் (இலங்கை) | விஞ்ஞானம்
- தமிழ் கணித நூல்களின் பட்டியல் (இலங்கை) | கணிதம்
- தமிழ் வானியல் நூல்களின் பட்டியல் (இலங்கை) | வானியல்
- தமிழ் தொழில் நுட்ப நூல்களின் பட்டியல் (இலங்கை) | தொழில் நுட்பம்
- தமிழ் பொதுச்சுகாதார நூல்களின் பட்டியல் (இலங்கை)| பொதுச்சுகாதாரம்
- தமிழ் மருத்துவ நூல்களின் பட்டியல் (இலங்கை) | மருத்துவம்
- தமிழ்ப் பொது நூல்களின் பட்டியல் (இலங்கை) | பொது
முகாமைத்துவம்
தொகு- தமிழ் முகாமைத்துவ நூல்களின் பட்டியல் (இலங்கை) | முகாமைத்துவம்
- தமிழ் கணக்கியல் நூல்களின் பட்டியல் (இலங்கை) | கணக்கியல் ;
- பொது முகாமைத்துவ தமிழ் நூல்களின் பட்டியல் (இலங்கை) | பொது
கலைகள், நுண்கலைகள்
தொகு- தமிழ் பொதுக்கலை நூல்களின் பட்டியல் (இலங்கை) | பொதுக்கலை
- தமிழ் இசையியல் நூல்களின் பட்டியல் (இலங்கை) | இசை
- தமிழ் அரங்கியல் நூல்களின் பட்டியல் (இலங்கை) | அரங்கியல்
- தமிழ்த் திரைப்பட நூல்களின் பட்டியல் (இலங்கை) | திரைப்படம்
- தமிழ் விளையாட்டு நூல்களின் பட்டியல் (இலங்கை) | விளையாட்டு
இலக்கியங்கள்
தொகு- சிங்கள இலக்கியம் தொடர்பான தமிழ் நூல்களின் பட்டியல் | சிங்களம் இலக்கியம்
- ஈழத்து தமிழ் இலக்கிய ஆய்வு நூல்கள் | தமிழ்
- தமிழில் வெளிவந்த பிறமொழி இலக்கிய நூல்கள் (இலங்கை) | பிறமொழி
- இலங்கை தமிழ்க் கவிதை நூல்களின் பட்டியல் | கவிதை
- இலங்கை தமிழ் நாடக நூல்களின் பட்டியல் | நாடகம்
- இலங்கை தமிழ்க் காவியங்களின் பட்டியல் | காவியம்
- ஈழத்துச் சிறுகதை நூல்களின் பட்டியல் | சிறுகதை
- இலங்கை தமிழ்ப் புதினங்களின் பட்டியல் | புதினங்கள்
- இலங்கை இலக்கியத் திறனாய்வு, கட்டுரை நூல்களின் பட்டியல் | திறனாய்வு, கட்டுரை
- இலங்கை பல்துறைசார் தமிழ் நூல்களின் பட்டியல் | பலவினத்தொகுப்பு
- 19ம் நூற்றாண்டு இலங்கை எழுத்தாளர்களின் தமிழ் நூல்கள் | 19ம் நூற்றாண்டு
சிறுவர் இலக்கியங்கள்
தொகு- இலங்கை தமிழ் சிறுவர் பாடல், கவிதை நூல்களின் பட்டியல் | பாடல்,
- இலங்கை தமிழ் சிறுவர் நாடக நூல்களின் பட்டியல் | நாடகம்
- இலங்கை தமிழ் சிறுவர் சிறுகதை நூல்களின் பட்டியல் | சிறுகதை
- இலங்கை தமிழ் சிறுவர் இலக்கிய நூல்களின் பட்டியல் | பொது
புவியியல், வரலாறு
தொகு- பொதுப்புவியியல் - இலங்கைத் தமிழ் நூல் பட்டியல் | புவியியல்
- வாழ்க்கை வரலாறு - இலங்கைத் தமிழ் நூல் பட்டியல் வாழ்க்கை | வரலாறு
- விடுதலைப் போராளிகள் - இலங்கைத் தமிழ் நூல் பட்டியல் | போராளி
- துறைசார்ந்த பிரமுகர்கள் - இலங்கைத் தமிழ் நூல் பட்டியல் | பிரமுகர்
- விஞ்ஞானிகள் - இலங்கைத் தமிழ் நூல் பட்டியல் | விஞ்ஞானி
- கலைஞர்கள் - இலங்கைத் தமிழ் நூல் பட்டியல் | கலைஞர்
- இலக்கிய அறிஞர்கள் - இலங்கைத் தமிழ் நூல் பட்டியல் | இலக்கிய அறிஞர்
- ஆசிய வரலாற்று இலங்கை தமிழ் நூல் பட்டியல் | ஆசிய வரலாறு
- இலங்கை வரலாற்று தமிழ் நூல் பட்டியல் | இலங்கை வரலாறு
- இலங்கை இனப்பிரச்சினை வரலாற்று நூல் பட்டியல் | இனப்பிரச்சினை
- இலங்கை இனஉறவுகள் தமிழ் நூல் பட்டியல் | இனஉறவுகள்
- இலங்கை தொடர்பான பன்னாட்டவரின் தமிழ் நூல்களின் பட்டியல் | பன்னாட்டவர்
புலம்பெயர் இலக்கியங்கள்
தொகு- புலம்பெயர் ஈழத்து எழுத்தாளர்களின் தமிழ் சிறுகதை நூல்களின் பட்டியல் | சிறுகதை
- புலம்பெயர் ஈழத்து எழுத்தாளர்களின் தமிழ் கவிதை நூல்களின் பட்டியல் | கவிதை
- புலம்பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்களின் பல்துறை நூல்களின் பட்டியல் | பல்துறை
- புலம்பெயர் ஈழத்து எழுத்தாளர்களின் தமிழ்ப் புதினங்கள் (பட்டியல்) | புதினம்
வகைப்படுத்தல்
தொகுநூல்களை முதன்மையாக துறை வாரியாக வகைப்படுத்துவதே சிறந்தது. பின்னர் கால வரிசைப்படு, எழுத்தாளர் அல்லது வெளியீட்டாளர்கள் வாரியாகவும் வகைப்படுத்தலாம். தற்போது உள்ள வகைப்படுத்தல் நன்று. சில சொற்கள் தற்போது பொதுப் பயன்பாட்டில் வேறுபடும். அறிவியல், சமூக அறிவியல், மேலாண்மை போன்ற சொற்கள். எனினும் இலங்கைப் பயன்பாட்டை இங்கு தரலாம். பினவரும் துறைகள் தேவை என்று நினைக்கிறன்:
- தொழில்நுட்பமும் (கைத்தொழில்கள் உட்பட)
- அரசியல்
- நூலகவியல்
--Natkeeran 04:03, 3 பெப்ரவரி 2011 (UTC)
- தங்கள் ஆலோசனைகளுக்கு நன்றி Natkeeran. முதலில் துறை ரீதியாக வகைப்படுத்துவோம். இம்முயற்சி ஓரளவு நிறைவு பெற்றுவரும்போது தாங்கள் குறிப்பிட்டது போல வருடம், எழுத்தாளர் பெயர் கொண்டு வகைப்படுத்த முயற்சிப்போம். மேலும், தாங்கள் குறிப்பிட்ட பகுப்புகள் புதிய பட்டியலில் உள்வாங்கப்பட்டுள்ளது. இலங்கையில் பொதுவாக பயன்படுத்தப்படும் வார்த்தைப் பிரயோகங்களேயே நான் பயன்படுத்தியுள்ளேன். பின்பு அவற்றை விக்கி நடைக்கேற்ற முறையில் மாற்றிக் கொள்வோம்.
--P.M.Puniyameen 06:18, 3 பெப்ரவரி 2011 (UTC)
ஆரம்பிப்பதற்கான அனுமதி
தொகுKanags புதிய வார்ப்புருவின்படி பல பக்கங்களை ஆரம்பிக்க வேண்டியுள்ளது. எதிர்வரும் இரண்டொரு தினங்களில் என்னிடமுள்ள தகவல்களைக் கொண்டு இப்பக்கங்களை ஆரம்பிக்க எண்ணியுள்ளேன். இதுவொரு நீண்டகால செயற்பாடு என்ற வகையில் நிறைவுபெற கூடிய காலம் எடுக்கலாம். வார்ப்புருவில் காணப்படக்கூடிய தலைப்புகளுக்கிணங்க ஒவ்வொரு தலைப்பிலும் முதலில் சில புத்தகங்களையே பதிவிடலாம் என கருதுகின்றேன். அவ்வாறு பதிவிடப்படும்போது இம்முயற்சியில் பங்கேற்க விரும்பும் ஏனைய பயனர்களுக்கும் எமது பகுப்புகளை புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்குமென நினைக்கின்றேன். இது குறித்து தங்கள் கருத்தினை அறிய விரும்புகின்றேன். --P.M.Puniyameen 06:23, 3 பெப்ரவரி 2011 (UTC)
கால வரிசை
தொகுகால வரிசையை அண்மையில் இருந்து தொன்மைக்கு (மேலே இருந்து கீழே) வைப்பதுவே நன்று. எமக்கு அண்மையில் வெளிவந்த நூல்கள் பற்றிய தகவல்களே முதன்மையாகப் பயன்படும் என்ற நினைக்கிறன். --Natkeeran 16:21, 6 பெப்ரவரி 2011 (UTC)
பயன்படுமா? (விஞ்ஞானம் - அறிவியல்)
தொகுஇங்கே இந்த வார்ப்புருவும், ஆவணப்படுத்தும் நூல்களின் விபரப்பட்டியல்களும் இலங்கை நூல்கள் தொடர்பானவை. இலங்கையில் தமிழ் வழி கல்வி கற்போர் உட்பட பேச்சு வழக்கிலும் "விஞ்ஞானம்" என்றே பயன்படுகிறது. இதனை "அறிவியல்" என்று மாற்றி தூய தமிழ் (எனும் கொள்கைக்கொண்டோர்) மாற்றியமைப்பதால், இலங்கையில் கல்வி கற்கும் ஒரு மாணவர் "விஞ்ஞான நூல்" என தேடினால் எவ்வாறு கிடைக்கக்கூடியதாக இருக்கும்? ஒரு நாட்டில் வாழும் மக்கள், மாணவர்களின் தேவையின் கருதி தேடலின் போது கிடைக்கப்படாமல் போகும் வகையில் மாற்றுவதில் என்ன பயன்?
இந்தியாவில் "அறிவியல்" எனும் சொல் வழக்கில் நன்கு அறியப்பட்ட ஒரு சொல்லானாலும், அறிவியல் என்பதே (சிலரின் கொள்கையின் படி) தூயச் சொல்லாக கருதினாலும், இலங்கையைப் பொருத்தமட்டில் "விஞ்ஞானம்" என்றுதான் அழைக்கிறோம். தமிழ்வழி உயர்கல்வி கற்போரும் இலங்கையில் விஞ்ஞானம் என்று தானே கற்கின்றனர்? --HK Arun 15:15, 11 பெப்ரவரி 2011 (UTC)
ஏற்கெனவே "இரசாயனவியல்" என்பதையும் மாற்றப்பட்டு இருந்தது? முதலில் தமிழ் வாழ்வதற்கு தமிழர் வாழவேண்டும். தமிழருக்கு பயன்பட வேண்டும். --HK Arun 15:18, 11 பெப்ரவரி 2011 (UTC)
- விஞ்ஞானம், இரசாயனம், பௌதிகம் போன்ற சொற்கள் தமிழகத்திலும் முன்னர் புழக்கத்தில் இருந்த சொற்களே. இவற்றை அவர்கள் தமிழ்ப்படுத்தி, பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. நாம் ஏன் இன்னமும் இச்சொற்களைத் தூக்கி வைத்திருக்க வேண்டும். அங்கு மாற்றம் தேவை. இந்தக் கட்டுரையைப் படித்துப் பாருங்கள். இலங்கையில் தமிழ் எந்த நிலையில் உள்ளது என்பதைப் புரிந்து கொள்ளலாம். கட்டுரையில் முதல் வரியில் அந்தத்ந்த இலங்கை வழக்குகளைச் சேர்த்தால் தேடுதலில் இக்கட்டுரைகள் கிடைக்கும்.--Kanags \உரையாடுக 21:59, 11 பெப்ரவரி 2011 (UTC)
சிறிதரன், இலங்கை பாடசாலைகளில் பாடங்களை "விஞ்ஞானம்", "இரசாயனம்" என்றுதான் கற்பிக்கப்படுகின்றன. இலங்கை கல்வி திணைக்களத்தின் ஊடாக வழங்கப்படும் நூல்களிலும் அவ்வாறு தான் பெயரிடப்பட்டுள்ளன. பாடசாலைக் கல்விக்கு உசாதுணை நூல்களை எழுதுவோரும் அவ்வாறுதான் எழுதி வருகின்றனர். அவைதான் இலங்கையில் கல்வி கற்கும் மாணவர்களின் மனங்களில் பதிந்துப்போயுள்ளன. எனவே இலங்கை நூல்களை பட்டியல் விபரங்களிலும் அவ்வாறுதான் இடம்பெறவேண்டும். குறிப்பாக விஞ்ஞானம், இரசாயனம் போன்ற நூல்களின் தேவை மாணவர்களுக்கே அதிகமானதாகும். அவர்கள் அப்பெயர்கள் கொண்டு தேடும் போது, அவை கிடைக்காவிட்டால் அவற்றால் எந்த பயனுமில்லை.
//நாம் ஏன் இன்னமும் இச்சொற்களைத் தூக்கி வைத்திருக்க வேண்டும்.// தமிழகத்தில் எல்லோரும் "அறிவியல்" எனும் சொல்லை ஏற்றுக்கொண்டதாக எனக்குத் தெரியவில்லை. (அது ஒரு கருத்தியல் மட்டுமே) எதிர்வாதங்களும் நிறையவே உள்ளன. தமிழ் அல்ல என்று சில அரைகுறை தமிழறிஞர்களால்/ஆய்வாளர்களால் புறந்தள்ளப்பட்ட பல சொற்கள், நல்ல தமிழ் சொற்கள் என இராம்கி ஐயா நிறுவியவைகளும் பல உள்ளன. இருப்பினும் இலங்கையில் கல்வி திணைக்களத்தில் தமிழகத்தின் சொற்களை அப்படியே உள்வாங்கிக்கொண்டு, பாடசாலை மட்டங்களிலும், பொது மக்கள் பயன்பாட்டிலும் மேற்கூறிய சொற்கள் பயன்பாட்டிற்கு வந்தால் நாம் நிச்சயம் அதேமாதிரி தலைப்பிடுவது சரியாக இருக்கலாம். ஆனால் தற்போதைக்கு பொருத்தமற்றது. மொத்தத்தில் பயன்பாடே முதன்மையானது என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். --HK Arun 07:48, 12 பெப்ரவரி 2011 (UTC)
- Production of Scientific Technical Terms in Tamil as a Cultural Reconfiguration and Domestication of Modern Science படித்துப் பாருங்கள். "அரைகுறை தமிழறிஞர்கள்" என்ற சொல்லாடல் தேவையற்று இந்த உரையாடலை தீவர்மாக்குகிறது. ஒரு சில இடங்களில்தான் இப்படிச் சிக்கல் வருகிறது. விக்கி போன்ற பன்னாட்டு ஊடகங்கள் அல்லது தளங்கள் ஊடாக நாம் கூடிய ஒரு தரப்படுத்தப்பட்ட ஒரு கலைச்சொல் பயன்பாட்டை நோக்கி பயனிக்க முடியும். --Natkeeran 05:47, 13 பெப்ரவரி 2011 (UTC)
- மேலே சொல்லப்பட்டது போல் இலங்கையில் உள்ள மாணவர்கள் தேடும்போது விஞ்ஞானம், இரசாயனம், பௌதிகம் ஆகிய சொற்களையே பயன்படுத்துவர்.அது மட்டுமன்றி நூல் தலைப்புகள் கூட மேற்படி சொற்களாக இருக்கிறது.எனவே மாற்றுவதிலுள்ள உடனடி சாத்தியப்பாடு கடினமே.
விஞ்சுதல்,ஞானம் என்பன தமிழ் சொற்களில்லையா?--சஞ்சீவி சிவகுமார் / உரையாடுக 23:25, 11 பெப்ரவரி 2011 (UTC)
இலங்கையில் விஞ்ஞானம், இரசாயனம், பௌதீகம் போன்ற வார்த்தை பதங்களே இதுகாலம்வரை பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அரசாங்கத்தால் வெளியிடப்படும் பாடப் புத்தகங்களிலும், பாட வழிகாட்டிகளிலும், தேசிய பத்திரிகையில் இடம்பெறும் பாடவழிகாட்டிகளிலும் மேலும், கா.பொ.சாதாரண தரம் முதல் பட்டப்படிப்புப் பரீட்சை வரையிலான சகல வினாப்பத்திரங்களிலும், பல்கலைக்கழக மட்டத்திலும் விஞ்ஞானம், இரசாயனம், பௌதீகம் போன்ற வார்த்தைகளே உபயோகிக்கப்படுகின்றன.
தமிழ் சீராக்கத்திற்கமைய அறிவியல், வேதியல் போன்ற பதங்கள் தமிழ் நாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்டாலும்கூட, இலங்கையில் இதுவரை இவை ஏற்றுக்கொள்ளப்படாமலே இருக்கின்றன.
அருண் குறிப்பிட்டதைப் போல இலங்கையைச் சேர்ந்த ஒரு மாணவன் தேடுதல் மேற்கொள்ளும்போது இந்த வார்த்தைப் பதங்கள் பிரச்சினையாக அமையலாம். புதிய நடைமுறை வார்த்தைப் பிரயோகங்களை எம்மால் நிராகரித்துவிட முடியாது. இலங்கையில் பல்கலைக்கழக உயர்மட்டத்திலுள்ள தமிழ் பேராசிரியர்கள், தமிழ் கல்விமான்கள், தமிழ் அரசியல் தலைவர்கள் இது விடயத்தில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போதே ஆக்கபூர்வமான முறையில் மாற்றங்களை செய்யலாம். அவ்வாறில்லாமல் அரசாங்கப் பாடப்புத்தகங்களிலோ அரசாங்க வினாப்பத்திரங்களிலோ மாற்றகளை செய்யக்கூடிய சக்தி எமக்குக் குறைவு.
இதனால் என் கருத்து குறிப்பிட்ட நூல் பட்டியல் இலங்கை நூல்களை மையமாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளமையினாலும் நூல்களில் இடம்பெறும் பெயர்களை நேரடியாக நாங்கள் சேர்ப்பதினாலும் அறிவியல் வேதியல் போன்ற பதங்களுக்குப் பதிலாக விஞ்ஞானம், இரசாயனம் போன்ற பதங்களை சேர்ப்பதே தற்போதைக்கு சிறப்பாக இருக்கலாம். அதேநேரம், இத்தலைப்புகளுடன் அறிவியல் வேதியல் போன்ற பதங்களை தலைப்பிலன்றி ஆரம்ப அறிமுகத்தில் வழங்கினால் எதிர்கால மாற்றங்களுக்கு ஏதுவாக அமையலாம் அல்லவா?
--P.M.Puniyameen 07:34, 12 பெப்ரவரி 2011 (UTC)
- உங்கள் கருத்துடன் நான் முழுமையாக உடன்படுகிறேன். (வேண்டுமானால் பட்டியல் விபரங்களின் போது; அறிவியல், வேதியியல் போன்ற சொற்களை அடைப்புக்குறிக்குள் இடலாம்) --HK Arun 07:48, 12 பெப்ரவரி 2011 (UTC)
>>தமிழகத்தில் எல்லோரும் "அறிவியல்" எனும் சொல்லை ஏற்றுக்கொண்டதாக எனக்குத் தெரியவில்லை. (அது ஒரு கருத்தியல் மட்டுமே) தமிழகத்தில் 1950களுக்கு முன்பு கல்வி கற்றோர் தவிர அனைவரும் அறிவியல்/வேதியல்/இயற்பியலுக்கு மாறியாயிற்று. “விஞ்ஞானம்” என்ற சொல்லை 80களுக்குப்பின் வந்த தமிழ்நாட்டு திரைப்படங்களில் கூட காண்பது குறைவு. (பாடத்திட்டங்களில் “அறிவியல்” என்று படிக்கும் மாணவர் தலைமுறை அதிகரிக்க அதிகரிகக பயன்பாடு கிரிட்டிகல் மாசினை அடைந்து விட்டது). விஞ்ஞானம்/ரசாயனம் என்று பயன்படுத்துவோம் என்று அடம்பிடிப்போர் 1940களில் நடந்த சமஸ்கிரத/தமிழ் கலைச்சொல்லாக்க விவாதத்தில் தோற்றவர்களின் வழித்தோன்றல்களே. இன்னும் அவற்றைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கிறார்கள். இல்லையெனில் பிசிக்ஸ், கெமிஸ்டிரி என்று சொல்லுவேன் என்று அடம்பிடிப்பார்கள். தமிழ் மேலே அப்படியொரு பற்று --சோடாபாட்டில்உரையாடுக 20:09, 12 பெப்ரவரி 2011 (UTC)
- இதுவரை இலங்கையில் வழக்கில் இருக்கும் விஞ்ஞானம், இரசாயனம், பெளதீகம் என்று இலங்கை நூல்களைக் குறிக்கப் பயன்படுத்தலாம் என்றே நினைக்கிறேன். அறிவியல், வேதியியல், இயற்பியல் என்ற சொற்களை அடைப்புக்குறிக்குள் தரலாம். --Natkeeran 01:44, 13 பெப்ரவரி 2011 (UTC)
திசைமாறும் பேச்சு
தொகு- இங்கே இந்த உரையாடல் எதற்கானது என்பதை கருத்தில் கொண்டு பேசுதல் நலம். மேலே எனது பேச்சில் என்னால் வைக்கப்பட்ட கருத்துக்கள்: இந்தியாவில் அறிவியல், வேதியியல் என்று பயன்படுத்தப்பட்டாலும், இலங்கையில் விஞ்ஞானம், இரசாயனவியல் என்றே தொடர்ந்தும் அடிப்படை கல்வி முதல் பல்கலைக்கழகம் வரை பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும் தென்னிந்தியாவில் பயன்படும் சொற்கள் அப்படியே உள்வாங்கப்பட்டு இலங்கையிலும் அறிவியல், வேதியியல் என்று பயன்படும் நிலை தோற்றம் பெற்றால் அப்போது அவ்வாறு பயன்படுத்தலாம் என்பதையும் தெளிவாகக் கூறியுள்ளேன். மேலும் இங்கே இடப்படுவது இலங்கையில் எழுதப்பட்ட நூல்களின் பட்டியல். அந்த நூல்களின் பெயர்களும் தலைப்புகளும் கூட விஞ்ஞானம், இரசாயனவியல் என்று எழுதப்பட்டிருக்கும் போது, இடப்படும் பட்டியலின் தலைப்புகளும் அவ்வாறு தான் இடப்படவேண்டும் என வழியுறுத்தியுள்ளேன். வழியுறுத்துவதற்கான காரணம்:
- இலங்கை மாணவர்களின் தமக்கு தேவையான நூல் அல்லது பாடம் தொடர்பாக தேடும் போது, தமது பயன்பாட்டில் இருக்கும் சொற்கள் கொண்டுத்தான் தேடுவார்கள்.
- அவ்வாறு தேடும் போது, அவர்களுக்கு அவை கிடைக்காவிட்டால் ஆவணப்படுத்துவதன் பலன் அற்றுப்போகலாம்.
- தற்போது இலங்கையில் பயன்படுத்தப்படும் சொற்களான விஞ்ஞானம், இரசாயனவியல் போன்றச் சொற்களுக்கு அறிவியல், வேதியியல் போன்ற சொற்கள் பயன்படுவதும், அதுவே சரியான தமிழ் சொற்கள் என்பதும் கூட பலருக்கு தெரியாமல் இருக்கலாம்.
- கல்வி கற்கும் மாணவர் எல்லோரும் தமிழ் ஆராய்ச்சியில் ஈடுபடுவதில்லை.
- தென்னிந்தியாவில் பயன்படும் சொற்கள் அனைத்தையும் அப்படியே உள்வாங்கிக்கொள்ளும் வழக்கும் இலங்கையில் இல்லை.
எனவே இலங்கை தொடர்பான நூல்களின் பட்டியல், நிச்சயம் இலங்கை வழக்குக்கு அமைவாகத்தான் இருக்க வேண்டும் என்பததுதான் எனது கருத்து.
இங்கே சோடாப்பாட்டிலின் கூற்று என்னால் கூறப்பட்ட எந்த கருத்தினதும் நியாயப்பாட்டைப் பார்க்காமல் திசைமாறும் பேச்சாக உள்ளது. --HK Arun 05:29, 13 பெப்ரவரி 2011 (UTC)
//தமிழகத்தில் 1950களுக்கு முன்பு கல்வி கற்றோர் தவிர அனைவரும் அறிவியல்/வேதியல்/இயற்பியலுக்கு மாறியாயிற்று. “விஞ்ஞானம்” என்ற சொல்லை 80களுக்குப்பின் வந்த தமிழ்நாட்டு திரைப்படங்களில் கூட காண்பது குறைவு. (பாடத்திட்டங்களில் “அறிவியல்” என்று படிக்கும் மாணவர் தலைமுறை அதிகரிக்க அதிகரிகக பயன்பாடு கிரிட்டிகல் மாசினை அடைந்து விட்டது).// இது ஒரு நல்ல மாற்றம். வரவேற்கத்தக்கதும் ஆகும். ஆனால் அவை இன்னும் இலங்கையில் இல்லை. எனவே இலங்கை நூல்களின் பட்டியில் இலங்கையின் தற்போதைய நடைமுறைக்கு ஏற்றவகையில் தான் அமையவேண்டும்.
//தமிழகத்தில் எல்லோரும் "அறிவியல்" எனும் சொல்லை ஏற்றுக்கொண்டதாக எனக்குத் தெரியவில்லை. (அது ஒரு கருத்தியல் மட்டுமே)// இக்கருத்தை நான் கூறுவதற்கு காரணம். கடந்த ஆண்டுகளாக தமிழகத்தின் தலைச்சிறந்த விஞ்ஞானியான சி.ஜெயபரதன் அவர்களே அறிவியல் எனும் சொல்லை ஏற்கவில்லை. தமிழகத்தைச் சேர்ந்த ஒரு தலைச்சிறந்த விஞ்ஞானியே விஞ்ஞானம் என பயன்படுத்தும் போது, எம்மால் எப்படி தென்னிந்தியாவில் ஒருமித்த கருத்து நிகழ்வதாக கொள்ள முடியும்?
//இல்லையெனில் பிசிக்ஸ், கெமிஸ்டிரி என்று சொல்லுவேன் என்று அடம்பிடிப்பார்கள்.// அவ்வாறு அடம்பிடிப்பவர்கள் தென்னிந்தியாவிலேயே அதிகம். இலங்கையில் அப்படி யாரும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை.
//1940களில் நடந்த சமஸ்கிரத/தமிழ் கலைச்சொல்லாக்க விவாதத்தில் தோற்றவர்களின் வழித்தோன்றல்களே.// நிச்சயமாக நாம் நீங்கள் கூறும் வழித்தோன்றல்கள் அல்ல. நாங்கள் எந்த வகையிலும் தென்னிந்தியர்களாகவோ, இந்தியர்களாகவே ஆகப்போவதில்லை. மொழியால மட்டுமே ஒன்றுப்பட்டவர்களாக உள்ளோம். நாங்கள் உலகில் எந்த நாட்டில், எந்த தகுதரத்துடன் வாழ்ந்தாலும் எமது மூச்சு எமது தாயகத்தில் தான் இருக்கும். எமது உழைப்பும் எந்த பாகுப்பாடும் அற்ற நிலையில் அனைத்து தமிழரும் பயன்பட வேண்டும் நோக்கில் தான் உள்ளது. அதேவேளை எமது சமுதாயத்திற்கு (இலங்கை) கிட்டாதவகையில் எந்த செயல்பாடுகளையும் எனது தனிப்பட்ட வகையிலும் ஏற்கமுடியாது. நாளை எனது தாயகத்தவர்கள் வேறு ஒரு மொழியை பேச விளைந்தார்களானால் நான் நிச்சயம் அந்த மொழியில் தான் எழுதுவேன். --HK Arun 05:50, 13 பெப்ரவரி 2011 (UTC)
- நான் சொன்னது உங்களைப் பற்றியோ இலங்கையில் “விஞ்ஞானம்” போன்ற சொல்லாக்காங்களைப் பயன்படுத்துவோர் பற்றியோ அல்ல. தமிழ் நாட்டில் நிலை குறித்து மட்டுமே. (இந்த கட்டுரைத் தலைப்பைப் பற்றி நான் ஒன்றுமே சொல்லவர வில்லை). நீங்கள் தமிழ்நாட்டில் பலர் ஒத்துக்கொள்வதில்லை என்று எழுதியிருந்தீர்கள். எதிர்ப்பது யார், சூழல் என்ன, தற்கால நிலை என்ன என்பதை விளக்கவே நான் இதனை எழுதினேன். (கட்டுரையில் தலைப்பிடுவது பற்றியான என் மதிப்பீடு அல்ல, தமிழ் நாட்டில் இச்சொற்களின் பயன்பாடு குறித்தான மேலதிகத் தகவல்கள் மட்டுமே). நான் கொடுத்த மணி மு மணிவண்ணனின் வலைப்பதிவு சுட்டியில் ஜெயபாரதனின் நிலைப்பாடு குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளது. மீண்டும் சொல்கிறேன் - ஜெயபாரதன் வயதையொத்தவர்கள் தான் “விஞ்ஞானம்” பயன்படுத்துபவர்கள். அவர் 1940களில் பள்ளிக்கல்வி கற்றவர். 1940களில் தான் தமிழ்நாட்டில் பாடத்திட்டத்தில் தனித்தமிழாக்கம் நிகழ்ந்தது. அதன் பின் வந்தவர்கள் அனைவரும் “அறிவியல்” என்று பயன்படுத்தத் தொடங்கினர். கடந்த ஆண்டுகளாக தமிழகத்தின் தலைச்சிறந்த விஞ்ஞானியான சி.ஜெயபரதன் அவர்களே ஜெயபாரதன் தமிழ்நாட்டை விட்டுப் போய் 30 ஆண்டுகள் ஆகிவிட்டன. தற்கால தமிழ்நாட்டு கல்விச் சூழலிருந்து அவர் பல ஆண்டுகள் விலகி விட்டார். தமிழ் நாட்டு பள்ளிக் குழந்தைகளுக்கு “பெளதிகம்”, “இரசாயனம்” எனபன புரியாச் சொற்கள் என்பதை அவர் அறியவில்லை என்பதே மணி மணிவண்ணன் போன்றவர்களின் வாதம். (ஜெயபாரதனின் அறிவியல் ஆளுமையை அவர்கள் கேள்விக்குறியாக்கவில்லை, தமிழ்நாட்டின் கல்விச் சூழல் யதார்த்ததிலிருந்து அவர் விலகி விட்டார் என்பது அவர்களது கருத்து) ஜெயபாரதன் போன்று அக்காலகட்டத்தில் கல்வி கற்றோரும், இப்போது ஆங்கில வழிக் கல்வி கற்று தமிழில் கலைச்சொற்கள் தேவையில்லை என்ற நிலைப்பாடு கொண்டிருப்போரும் தான் “விஞ்ஞானம்”/”பெள்திகம்”/ பிசிக்ஸ் போன்ற சொற்களை பயன்படுத்துவர்கள். --சோடாபாட்டில்உரையாடுக 06:01, 13 பெப்ரவரி 2011 (UTC)
- மேற்சொன்ன அனைத்தும், தமிழ்நாட்டில் இன்றை நிலை குறித்த மேலதிகத் தகவல்கள் மட்டுமே (இக்கட்டுரைத் தலைப்பு மாற்ற விவாதம் குறித்தவை அல்ல)--சோடாபாட்டில்உரையாடுக 06:06, 13 பெப்ரவரி 2011 (UTC)
வருந்துகிறேன்!
தொகுயாருடைய கருத்தையும் கேட்காமல் வார்ப்புருவில் சொல் திருத்தம் மேற்கொண்டமைக்கு வருந்துகிறேன். ஆனால் நீங்கள் (அருண், புண்ணியாமீன்) உரைக்குமாறு, தற்போது பெயர் மாற்றப்பட்டுள்ள கட்டுரைகள் மாணாக்கர்க்குக் கிடைக்காமல் போய்விடாது.(நான் கூகுளில் பழைய தலைப்பில் தேடிய போது அனைத்தும் அகப்பட்டன!) ஏனெனில் அவை அனைத்துக்கும் வழிமாற்றுகள் உள்ளன. மேலும், கட்டுரைக்குள்ளும் இரு சொற்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன. எனவே, இதில் தவறு ஏதும் இருப்பதாக நான் உணரவில்லை.
நானும் மாணவன் தான் என்பதால், மாணவர் நலனைக் கருதாது எதையும் செய்ய மாட்டேன்!
--சூர்ய பிரகாசு.ச.அ. 10:07, 12 பெப்ரவரி 2011 (UTC)