விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/பெப்பிரவரி 29
(விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/பெப்ரவரி 29 இலிருந்து வழிமாற்றப்பட்டது)
- 1704 – பிரெஞ்சுப் படைகளும் அமெரிக்கப் பழங்குடிகளும் இணைந்து மாசச்சூசெட்சு விரிகுடாக் குடியேற்றத்தில் டியர்பீல்ட் என்ற இடத்தில் ஆங்கிலக் குடியேறிகளைத் தாக்கியதில் பெண்கள், குழந்தைகள் உட்பட நூற்றிற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.
- 1960 – மொரொக்கோவில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 12,000 பேர் வரையில் உயிரிழந்தனர்..
- 1988 – தென்னாபிரிக்காவின் ஆயர் டெசுமான்ட் டுட்டு உட்பட 100 மதகுருமார் இனவொதுக்கலுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களின் போது கேப் டவுன் நகரில் கைது செய்யப்பட்டனர்.
- 1996 – பெரு விமானம் ஒன்று அந்தீசு மலையில் மோதியதில் அதில் பயணம் செய்த அனைத்து 123 பேரும் உயிரிழந்தனர்.
- 2000 – செச்சினியாவில் 83 உருசிய படையினர் தீவிரவாதிகளின் தாக்குதலில் கொல்லப்பட்டனர்.
- 2012 – உலகின் மிகப்பெரிய கோபுரம் டோக்கியோ ஸ்கைட்ரீ (படம்) கட்டி முடிக்கப்பட்டது. இதன் உயரம் 634 மீட்டர்கள் ஆகும்.
ருக்மிணி தேவி அருண்டேல் (பி. 1904) · மா. இளையபெருமாள் (பி. 1924) · குமரிமுத்து (இ. 2016)
அண்மைய நாட்கள்: பெப்பிரவரி 28 – மார்ச்சு 1 – மார்ச்சு 2