விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/மே 6
மே 6:
- 1527 – எசுப்பானிய, செருமனியப் படைகள் ரோம் நகரைச் சூறையாடினர். சுவீடனின் 147 படையினர் புனித ரோமப் பேரரசர் ஐந்தாம் சார்ல்சிற்கு எதிராகப் போரிட்டு இறந்தனர். இது ஐரோப்பாவின் மறுமலர்ச்சிக் கால முடிவு என சிலர் கருதுகின்றனர்.
- 1536 – இங்கிலாந்தின் அனைத்துக் கிறித்தவ ஆலயங்களிலும் ஆங்கில மொழியில் திருவிவிலியம் கட்டாயமாக வைத்திருக்கப்பட வேண்டும் என எட்டாம் என்றி மன்னர் கட்டளையிட்டார்.
- 1542 – பிரான்சிஸ் சவேரியார் போர்த்துகேய இந்தியாவின் அக்காலத்தையத் தலைநகரான பழைய கோவாவை அடைந்தார்.
- 1782 – சியாம் மன்னர் முதலாம் இராமாவின் அறிவுறுத்தலின் பேரில் பெரிய அரண்மனையின் (படம்) கட்டுமானப் பணிகள் பேங்காக் நகரில் ஆரம்பமாயின.
- 1882 – சீனத் தொழிலாளர்கள் அமெரிக்காவுக்கு வரத் தடை விதிக்கும் சட்டம் அமெரிக்க சட்டமன்றத்தில் நிறைவேறியது.
- 1889 – ஈபெல் கோபுரம் பாரிசில் பொதுமக்களுக்காக அதிகாரபூர்வமாகத் திறந்துவிடப்பட்டது.
- 1960 – வெஸ்ட்மின்ஸ்டர் மடத்தில் இருந்து முதல் தடவையாக அரச திருமணம் ஒன்று தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. இளவரசி மார்கரெட், அந்தனி ஆர்ம்ஸ்ட்ரோங்-யோன்சு ஆகியோரின் திருமணத்தை 20 மில்லியன் பேர் கண்டுகளித்தனர்.
லட்சுமி ஹோம்ஸ்ட்ராம் (இ. 2016)
அண்மைய நாட்கள்: மே 5 – மே 7 – மே 8