விக்கிப்பீடியா:ஆலமரத்தடி/தொகுப்பு28

வார்ப்புரு மொழிபெயர்ப்பு உதவிதொகு

வார்ப்புரு:Infobox Indian Jurisdiction/Translation needed என்பதில் சில தமிழாக்கப்படாமல் உள்ளது. எனக்கு சரியான சொல் தெரியவில்லை. உதவவும். --குறும்பன் 02:03, 18 நவம்பர் 2009 (UTC)

இந்த வார்ப்புரு ஆரம்பத்திலேயே தவறான முறையில் வடிவமைக்கப்பட்டு விட்டது என்பது எனது அபிப்பிராயம். பல கட்டுரைகளில் இந்த வார்ப்புரு இணைக்கப்பட்டுள்ளதால் இனி இதனை மாற்றுவது மிகக் கடினம். எனினும் சொற்களை மொழிபெயர்ப்பதில் யாரும் உதவலாம். இந்திய ஆட்சிக்குட்பட்ட அமைப்புகள் தகவல்பெட்டி என்ற வார்ப்புருவையும் பாருங்கள்.--Kanags \பேச்சு 02:34, 18 நவம்பர் 2009 (UTC)
வார்ப்புரு:Infobox Indian Jurisdiction இல் சில பிரச்சினைகள் இருந்ததால் முன்னர் வார்ப்புரு:Infobox Indian Jurisdiction-2 என்பதை உருவாக்கினேன். அதையும் பார்க்கவும். எடுத்துக்காட்டுக்கு எர்ணாகுளம் மாவட்டம் கட்டுரையைப் பார்க்கவும். ஒரே விடயத்துக்குப் பல வார்புருக்கள் இருப்பது நல்லதல்ல. இந்திய ஆட்சிக்குட்பட்ட அமைப்புகள் தகவல்பெட்டி நல்லது போல் தெரிகிறது. எனவே அதையே பயன்படுத்துவது நல்லது.மயூரநாதன் 19:36, 19 நவம்பர் 2009 (UTC)

இந்திய ஆட்சிக்குட்பட்ட அமைப்புகள் தகவல்பெட்டி தமிழ் நாடு, கேரளம், கர்நாடகம், ஆந்திரப் பிரதேசம், குஜராத், பஞ்சாப், ஜம்மு காஷ்மீர், மேற்கு வங்காளம், அஸ்ஸாம், மேகாலயா, மணிப்பூர் ஆகிய மாநிலங்களை ஆதரிக்கிறது. மற்ற மாநிலங்களையும் ஆதரிக்க என்ன செய்வது? நான் சோதனை செய்தபொழுது ஏதாவது எழுத்துப்பிழை இருந்தனவா என்று தெரியவில்லை. எனக்கு தெரிந்த அளவு எழுத்துக்களை மாற்றி முயன்றேன். வார்ப்புரு:Infobox Indian Jurisdiction-2 என்பதற்கு பதில் வார்ப்புரு:இந்திய ஆட்சிக்குட்பட்ட அமைப்புகள் தகவல்பெட்டி பயன்படுத்தலாம். மயூரநாதன் கூறியது போல் ஒரே வார்ப்புருவை அனைத்து இந்திய மாநிலங்களுக்கு பயன்படுத்துவது நல்லது என்பதை ஏற்கிறேன். -குறும்பன் 00:13, 20 நவம்பர் 2009 (UTC)

USM's 12-year Tamil language sagaதொகு

USM's 12-year Tamil language saga --Natkeeran 05:55, 20 நவம்பர் 2009 (UTC)

மிக முக்கியமான தகவல், நற்கீரன். உங்கள் கண்ணுக்கு மட்டும் எப்படித் தான் இது போன்ற விசயங்கள் அகப்படுகின்றனவோ :) --ரவி 06:02, 21 நவம்பர் 2009 (UTC)
மலேசியாவில் மட்டுமல்ல, இன்றைய தமிழ்ச் சமுதாயத்தில் இம்மாதிரியான வேலைகள்தான் அதிகம் தேவைப்படுகின்றன. அமைதியாகக் கீழ் மட்டத்திலிருந்து செயலாற்றுவதுதான் பயனுள்ளது. நிறுவனப்படுத்திச் செய்யும் வேலைகள் எதையுமே குழப்பிவிடுவது இலகு.மயூரநாதன் 10:26, 21 நவம்பர் 2009 (UTC)
இப்படி 12 ஆண்டுகள் உழைப்பது எளிதல்ல. அந்த மாணவர்-ஆசிரியர் குழுக்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். மயூரநாதன் சொல்வது முற்றிலும் உண்மை. மிகுந்த ஊக்கம் தரும் செய்தி. மிக்க நன்றி நற்கீரன்.--செல்வா 06:10, 22 நவம்பர் 2009 (UTC)

//இன்றைய தமிழ்ச் சமுதாயத்தில் இம்மாதிரியான வேலைகள்தான் அதிகம் தேவைப்படுகின்றன. அமைதியாகக் கீழ் மட்டத்திலிருந்து செயலாற்றுவதுதான் பயனுள்ளது. நிறுவனப்படுத்திச் செய்யும் வேலைகள் எதையுமே குழப்பிவிடுவது இலகு.//

மிகச் சரியாகச் சொன்னீர்கள் மயூரனாதன். நிறுவனப்படுத்தலால் வரும் குழப்படிகள், அரசியலை நானும் நண்பர்களும் வேறு ஒரு களத்தில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறோம் :)--ரவி 12:20, 22 நவம்பர் 2009 (UTC)

இன்னுமொரு வேரடி அமைப்பு: துபாய் - அமீரகத் தமிழ் மன்றம் நடத்திய கணினிப் பயிலரங்கம்..தொகு

Crown colony என்பதற்கு பொருத்தமான தமிழ் சொல் என்ன?தொகு

--HK Arun 02:35, 22 நவம்பர் 2009 (UTC)

அரச குடியிருப்பு ! --Natkeeran 03:03, 22 நவம்பர் 2009 (UTC)

மறுமொழிக்கு நன்றி நக்கீரன். ஆனால் குடியிருப்பு என்பதையும் விட "குடியாட்சி" என்பது கூடுதல் பொருத்தம் போல் தோன்றுகின்றது. எனவே "British Crown Colony" என்பதை "பிரித்தானிய அரச குடியாட்சி" என தமிழாக்கியுள்ளேன். மாற்றம் தேவையெனில் குறிப்பிடவும். நன்றி --HK Arun 09:04, 22 நவம்பர் 2009 (UTC)

குடியரசு என்றால் Republic. colony என்பதைத் தமிழில் குடியேற்றநாடு எனலாம் "British Crown Colony" என்பதை "பிரித்தானிய முடிக்குரிய குடியேற்றநாடு" என்பது இலங்கை வழக்கு. மயூரநாதன் 15:18, 22 நவம்பர் 2009 (UTC)


ஓம்! அது மிகவும் பொருத்தமாக இருக்கிறது. அப்படியே தலைப்பிடுகின்றேன். நன்றி மயூரநாதன் --HK Arun 03:58, 23 நவம்பர் 2009 (UTC)

20,000 கட்டுரைகள் எட்டியுள்ளது தமிழ் விக்கிப்பீடியாதொகு

 
20,000 கட்டுரைகள் எட்டியுள்ளது தமிழ் விக்கிப்பீடியா!!

நவம்பர் 22, 2009 அன்று தமிழ் விக்கிப்பீடியா 20,000 கட்டுரைகளை எட்டியுள்ளது. இதற்காக இடைவிடாது உழைத்த விக்கிப் பங்களிப்பாளர்களை எவ்வளவு போற்றினும் தகும். வாழ்க வாழ்க நல்கூட்டுழைப்பு! நாம் இன்னும் ஐம்பதாயிரம், நூறாயிரம் என்று உயரவேண்டியவர்களாய் இருப்பினும் இது ஒரு கொண்டாடத்தக்க ஒரு மைல் கல்! --செல்வா 15:05, 22 நவம்பர் 2009 (UTC)

தமிழ் விக்கிப்பீடியா 20,000 கட்டுரை எண்ணிக்கையை எட்டியது மகிழ்ச்சிக்குரியதே. அண்மைக் காலங்களில் கட்டுரை எண்ணிக்கையைக் கூட்டுவதில் புதிய பயனர்கள் பெரும்பங்கு வகித்திருக்கிறார்கள். இதுவும் நமக்கு உற்சாகம் தரக்கூடிய விடயம். புதிய பயனர்கள் பலர் சேர்வதற்கு இணையத்திலும், அதற்கு வெளியிலும் முன்னெடுக்கப்பட்ட பரப்புரைகளும், பயிற்சிப்பட்டறைகள் முதலியனவும் மிகவும் உதவியுள்ளன. இதற்காக உழைத்த பயனர்கள் போற்றத்தக்கவர்கள். பொதுவாக 20,000 கட்டுரை எண்ணிக்கையை எட்டுவதற்குப் பங்களிப்புச் செய்த எல்லாப் பயனர்களுக்கும் வாழ்த்துக்கள். மயூரநாதன் 15:33, 22 நவம்பர் 2009 (UTC)
http://tamilwikipedia.blogspot.com/2009/11/20-000.html --Natkeeran 15:39, 22 நவம்பர் 2009 (UTC)

விக்கிமூலம், விக்சனரி நிருவாகிகள் தேர்தல்தொகு

விக்கிநூல்கள், விக்சனரி திட்டங்களுக்கான நிருவாகிகள் தேர்தல் நடைபெறுகிறது. அங்கு வந்து வாக்களிக்க வேண்டுகிறேன். நன்றி--ரவி 05:54, 29 நவம்பர் 2009 (UTC) --ரவி 20:20, 5 டிசம்பர் 2009 (UTC)

சிறீதரனும், த. உழவனும் இத்திட்டங்களில் புதிய நிருவாகிகளாகத் தேர்ந்தெடுப்பட்டுள்ளார்கள். அவர்களின் சிறப்பான பணி மூலம் இத்திட்டங்கள் சிறக்க வாழ்த்துகள்--ரவி 20:20, 5 டிசம்பர் 2009 (UTC)

தமிழ் உங்களின் தெரிவுதொகு

தமிழ் உங்களின் தெரிவு --Natkeeran 17:41, 29 நவம்பர் 2009 (UTC)


--

விக்கி செய்திகள், விக்கி மேற்கோள்கள் தொடர்ந்து இருக்கும்தொகு

I was bold and closed the closure discussion for Tamil Wikinews and Tamil Wikiquote. I would love it if someone was able to remove the site notices on each of these wikis that say they are under discussion.

Thanks in advance Jamesofur 02:52, 29 November 2009 (UTC)

FYI: I removed the notice on Wikiquote since it was just a main page notice instead of a site notice so the only one remaining is the wikinews site notice. I left a note on their main talk page to notify the community but the site notice itself is still up. If its still up when I get home in 12 hours I'll poke someone on IRC :P Jamesofur 17:16, 29 November 2009 (UTC)
Nevermind, I appear to be blind (or stewardy lied to me, we'll go with that) and the sysop that I thought was inactive is indeed quite active on wikinews. So I left a note on the admins talk page and I don't actually need any of you to do anything! :) Jamesofur 07:21, 30 November 2009 (UTC)
Glad we were able to (not) help. ++Lar: t/c 21:27, 30 November 2009 (UTC)
Thank you all. We made the right decision. --Natkeeran 01:44, 3 December 2009 (UTC)
அக்கறை எடுத்து நடவடிக்கை எடுத்த ரவி, கனகு மற்றும் எல்லா நண்பர்களுக்கு நன்றி. --Natkeeran 01:46, 3 டிசம்பர் 2009 (UTC)
நல்ல செய்தி. மயூரநாதன் 18:54, 3 டிசம்பர் 2009 (UTC)
Thanks Jamesofur! Thanks to all those who made it possible for us to continue. It is certainly a step in the right direction. Special Thanks to Kanags and Ravi. --செல்வா 03:12, 4 டிசம்பர் 2009 (UTC)
Thank a lot. Hope for a better media freedom :)--உமாபதி \பேச்சு 04:22, 4 டிசம்பர் 2009 (UTC)

இத்திட்டங்கள் தொடர்வதில் மகிழ்ச்சி. ஆனா, எனக்கு ஏன் நன்றி சொல்றாங்கன்னு புரியல :) விக்கி செய்திகளில் முழு ஈடுபாடு காட்டி மேல் மட்டத்தில் நம்பிக்கையைப் பெற்றுத் தந்த சிறீதரன் முழு பாராட்டுக்கும் உரியவர். இதே போல் விக்கி மேற்கோள்களிலும் நாம் சில வேலைகளைச் செய்யத் தொடங்க வேண்டும். அதே வேளை, இருக்கிற வளங்களைச் சிதறடிக்கக் கூடாது என்று கோபி, வினோத் கூறிய கருத்துகளும் மிக முக்கியமானவை. இதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். --ரவி 09:30, 4 டிசம்பர் 2009 (UTC)

மாதிரிக் கட்டுரைகளின் அடிப்படையில் விக்கிப்பீடியாக்களின் பட்டியல்தொகு

இந்தப் பட்டியல் எல்லா விக்கிப்பீடியாக்களிலும் இருக்கவேண்டிய ஏறத்தாழ ஆயிரம் கட்டுரைத் தலைப்புக்களை எடுத்து அவற்றின் சொற்களின் எண்ணிக்கை முதலியவற்றையும் கருத்தில் கொண்டு புள்ளிகள் வழங்கி உருவாக்கப்பட்டதாகும். இத் தரவரிசையில் தமிழ் விக்கிப்பீடியா இந்திய மொழிகளுள் முன்னிலையில் உள்ளது. எனினும், நீளமான கட்டுரைகளின் எண்ணிக்கை பிற இந்திய மொழிகள் சிலவற்றோடு ஒப்பிடும்போது மிகக் குறைவாகவே இருக்கிறது. மயூரநாதன் 05:58, 4 டிசம்பர் 2009 (UTC)

விடப்பட்ட கட்டுரையாக en:game குறிப்பிடப்பட்டுள்ளது.ஆனால் தமிழ் விக்கிப்பீடியாவில் அது விளையாட்டு என்று எழுதப்பட்டு en:sports உடன் இணைக்கப்பட்டுள்ளது. sports என்பதற்கு போட்டிவிளையாட்டு என விக்சனரியில் உள்ளது. தற்போதுள்ள கட்டுரையின் பிறவிக்கி இணைப்புகள் game உடன் மாற்றப்பட்டு புதிய பக்கம் போட்டி விளையாட்டு எழுதப்பட வேண்டும்.
எவ்வாறு செய்ய வேண்டும் என வழிகாட்டலை எதிர்நோக்குகிறேன்.--மணியன் 07:35, 4 டிசம்பர் 2009 (UTC)
சுமார் ஆறு மாதங்களுக்கு முன்னர் 300 கட்டுரைகளுக்கு மேல் தமிழில் இல்லாமல் இருந்தது. இப்பொழுது ஒன்று தவிர ஏனையவற்றைக் குறுங் கட்டுரைகளாகவும், ஓரளவு நடுத்தர அளவுக் கட்டுரைகளாகவும் எழுதி முடித்துவிட்டோம். Game என்பதற்குச் சரியான தமிழ்ச் சொல் தேடும் முயற்சியில் அந்த ஒன்று விட்டுப் போய்விட்டது. Game என்பதிலும் போட்டி விளையாட்டுக்கள் உள்ளன. இதனால் போட்டி விளையாட்டு என்பது சரியாக இருக்குமா என்பது ஐயமாக உள்ளது. அத்துடன் இனி, நாம் தரவரிசையில் முன்னேறுவதற்குக் குறுங் கட்டுரைகளைப் பெரிய கட்டுரைகள் ஆக்கவேண்டும். இந்தப் பட்டியலில் தரப்படுத்தும்போது 10,000 சொற்களுக்குக் குறைவான கட்டுரைகள் குறுங் கட்டுரைகளாகக் கருதப்படுகின்றன. தமிழில் கட்டுரையின் அளவு 30 கிலோபைட் அளவு இருந்தால்தால் 10,000 சொற்களை எட்டமுடியும். 30,000 சொற்களுக்கு மேலுள்ள கட்டுரைகள் நீளமான கட்டுரைகள் என வகைப்படுத்துகின்றனர். இதனை எட்டுவதற்குக் கட்டுரை 90 கிலோபைட் அளவுக்கு இருக்க வேண்டும்.
இங்கே மாதிரியாகக் கொள்ளப்பட்ட கட்டுரைகளின் பட்டியல் இங்கே உள்ளது. விக்கிப்பீடியா:எல்லா மொழி விக்கிப்பீடியாக்களிலும் இருக்கவேண்டிய கட்டுரைகள் என்னும் தலைப்பில் தமிழ்ப் பக்கமும் உண்டு. ஆனால் இது இன்னும் இற்றைப்படுத்தப் படவில்லை. இதிலிருந்து சிறிய கட்டுரைகளைத் தெரிவு செய்து விரிவாக்கலாம். மயூரநாதன் 09:20, 4 டிசம்பர் 2009 (UTC)
இந்த பட்டியலை ஏதேனும் நிரல் மூலம் கட்டுரையின் அளவுடன் வெளியிட முடிந்தால் விளிம்பு கட்டுரைகளை முன்னுரிமை கொடுத்து அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லலாம்.--மணியன் 10:53, 4 டிசம்பர் 2009 (UTC)

இந்த அடிப்படையில் தரப்படுத்துவார்கள் என்று எதிர்பார்த்திருக்கவில்லை. இதன் முக்கியத்துவம் உணர்ந்து முன்கூட்டியே இக்கட்டுரைகளை உருவாக்குவதில் முனைப்பு காட்டிய மயூரநாதன் உள்ளிட்ட அனைவரும் மிகுந்த பாராட்டுக்குரியவர்கள். பல்வேறு அடிப்படைகளிலான தர வரிசைகளிலும் தமிழ் முந்துவது மகிழ்ச்சி அளிக்கிறது. --ரவி 09:34, 4 டிசம்பர் 2009 (UTC)

மணியன் கூறியதுபோல இந்தப் பட்டியலில் உள்ள கட்டுரையின் பைட் அளவுகளுடன் ஒரு பட்டியல் தயாரிப்பதற்கு ஒரு நிரல் எழுதினால் பயனுடையதாக இருக்கும். நிரல் எழுதுவதில் அனுபவம் உள்ள பயனர்கள் யாராவது இது குறித்து முயற்சி செய்தால் நல்லது. மயூரநாதன் 13:49, 4 டிசம்பர் 2009 (UTC)

தமிழ் மின்னூடகங்களும் அச்சு ஊடகங்களும்: இன்றைய நிலையும் அறைகூவல்களும் - பேரா. ரெ. கார்த்திகேதொகு

தமிழ் மின்னூடகங்களும் அச்சு ஊடகங்களும்: இன்றைய நிலையும் அறைகூவல்களும்

-- முனைவர்.கார்த்திகேசு நன்றாக எழுதியுள்ளார். இதுபோன்ற ஆய்வுக் கட்டுரைகளை எழுதுவதற்கு தமிழ் விக்கிப்பீடியா பயன்பட்டுள்ளதைக் காண மகிழ்ச்சியாய் உள்ளது. -- சுந்தர் \பேச்சு 09:51, 10 டிசம்பர் 2009 (UTC)

மீளமைதொகு

கோயம்புத்தூர் கலவரமும் குண்டுவெடிப்புகளும் என்ற கட்டுரையை இபயத்துல்லா செய்த மாற்றத்துக்கு முன்பிருந்தவாறு (மலையாள விக்கி இணைப்பு வரை)மீளமைக்க வேண்டும். என்னால் இயலவில்லை. மீளமைக்க முடியாது என்று செய்தி வருகிறது. உதவவும். கட்டுரையின் தலைப்பையும் முன்பிருந்தது போல் மாற்றவேண்டும். --குறும்பன் 18:58, 8 டிசம்பர் 2009 (UTC)

குறும்பன், கட்டுரையின் உள்ளடக்கத்தைப் பற்றிய சிக்கலென்றால் முதலில் தகுந்த வார்ப்புருவை ({{நடுநிலை}} போன்ற) இணைத்து விடுங்கள். உங்கள் கருத்து வேறுபாடுகளைப் பேச்சுப் பக்கத்தில் இடுங்கள். அதன்பின் தேவையான நடவடிக்கையை எடுப்போம். -- சுந்தர் \பேச்சு 10:00, 10 டிசம்பர் 2009 (UTC)

நன்றி சுந்தர். நடுநிலை வார்ப்புருவை இணைத்து விட்டேன். எனது கருத்தை பேச்சு பக்கத்தில் முன்பே பதிவு செய்துவிட்டேன். இதற்கு இதுவரை யாரும் கருத்து சொல்லக்காணோம். --குறும்பன் 14:35, 10 டிசம்பர் 2009 (UTC)

தமிழ்ப் தாவரப் பெயர்கள்தொகு

தமிழ்ப் தாவரப் பெயர்

--Natkeeran 19:58, 19 டிசம்பர் 2009 (UTC)

மிகவும் பயனுள்ள இணைப்பு, நற்கீரன். -- சுந்தர் \பேச்சு 17:14, 20 டிசம்பர் 2009 (UTC)