விக்கிப்பீடியா:ஆலமரத்தடி/தொகுப்பு29
தானியங்கி முறையில் ஆங்கில விக்கியிலிருந்து தமிழாக்கம்
தொகுநான் கடந்த இரு நாட்களாக இவ்வாறு தானியங்கியாக மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட மும்பை பக்கத்தை சீராக்க முயன்று வருகிறேன். மிகுந்த மனித முயற்சியை வேண்டுவதாக உணர்கிறேன். இம்முறையினால்:
- ஏராளமான சிவப்பு இணைப்புகள் உருவாக்கப்படுகின்றன: அவை தமிழ் விக்கியில் உடனடியாக தேவைப்படாதவை..ஆங்கில விக்கிபோல ஒவ்வொரு ஊரிலிருந்தும் பயனர்கள் எழுத வரும்போதே அவற்றை சமாளிக்க இயலும்..
- பல படிமங்கள் மேலேற்றப்பட வேண்டியுள்ளன.இவற்றில் சில காப்புரிமை அற்றவை..
- பல வார்ப்புருக்கள் தமிழ்விக்கியில் உருவாக்கப்பட வேண்டியுள்ளது..தமிழ்விக்கியில் இருந்தாலும் இங்கு வரையறுக்கப்பட்ட வடிவத்தில் உள்ளீடு இல்லாது சிவப்பு இணைப்புகள் உருவாகின்றன..காட்டாக {{convert|km2|sqmi|lk=out|abbr=on}} என தமிழில் format இருந்தால் மொழிபெயர்ப்பில் {{convert|km2|mi2|abbr=on}}என வந்து சிவப்பு வார்ப்புரு தோற்றங்கள் வருகின்றன. வார்ப்புருவின் மூலத்தை நோக்காது புதிய வார்ப்புரு உண்டாக்கும் வாய்ப்பும் உள்ளது.
- தமிழ்விக்கியில் ஏற்கெனவே உள்ள நகரங்கள்/ஊர்கள்/அமைப்புகள் பெயர்கள் வேறாக மொழிபெயர்க்கப்பட்டு சிவப்பு தொடுப்புகள் காட்டப்படுகின்றன. இதனால் தமிழ் விக்கியில் சிறந்த தேடல் மற்றும் பட்டறிவு உள்ளவர்கள் மட்டுமே சீர் செய்யவியலும்.
மேற்கூறியவற்றால் இது மிகுந்த நேர விரயத்தையும் சலிப்பையும் உண்டாக்குகிறது. தவிர இத்திருத்தங்கள் இல்லாது இப்பக்கங்கள் பயனுள்ளவையாக இராது.
முழு ஆங்கில விக்கிப்பக்கத்தையும் ஒரே வீச்சில் இக்கருவியைக்கொண்டு மொழிபெயர்ப்பதை விட இதனை விக்கி பயனர்களுக்கு அறிமுகப்படுத்தி வேண்டும் ஆங்கில உரையை மட்டும் விரைவாக தமிழாக்கம் செய்ய கொடுத்தால் தமிழ்விக்கியில் தமிழாக்கக் கட்டுரைகளுக்கு பயனளிக்கும்.
முதன்மையாக விக்கிபீடியா பெயர்வெளி பக்கங்களை இவ்வாறு விரைவாக தமிழாக்கம் செய்யலாம்.
--மணியன் 08:29, 21 ஆகஸ்ட் 2009 (UTC)
- இந்த மென்பொருள் கருவிகளைக் கொண்டு அறிவியல் தத்துவங்களை மொழிபெயர்ப்பு செய்திட சாத்தியம் உண்டா ? ---இராஜ்குமார்
- கட்டாயம் அறிவியல்/பொறியியல், ஏன் எத்துறைக் கருத்துகளையும், மொழிபெயர்க்க இயலும்.--செல்வா 14:19, 21 ஆகஸ்ட் 2009 (UTC)
மணியன் நீங்கள் கூறியவை உண்மை. ஆனால் இம் மென்கலத்தின் பெரும் நன்மை என்னவென்றால் ஒரு 20 பேர், ஆளுக்கு 2-3 வரிகள் வீதம் கூட்டாக மொழிபெயர்க்க இயலும். எனக்கு 10 மணித்துளிகள் மட்டும்தான் கிடைக்கின்றதாக வைத்துக்கொள்வோம், சரி அப்பொழுது கூட்டாக 20 பேர் மொழிபெயர்க்கும் கட்டுரையில் நானும் ஒரு 2-3 வரிகளை மொழி பெயர்க்கலாம். இதில் பெரிய நன்மை கூகுள் நிறுவனத்துக்குத்தான். ஏனெனில் அவர்கள் இம்மொழிபெயர்ப்புகளைக் கொண்டு எந்த எந்த சூழல்களில் எந்த எந்த சொற்கள் தேர்வு பெறுகின்றன என்று அவர்களின் மென்கலம் பின்புலத்தில், படிமுறை பகுப்பாய்வுகள் செய்து பிற்காலத்தில் ஏறத்தாழ தானியங்கியாய் 90% மொழிபெயர்க்க உதவக்கூடிய மென்கலங்கள் உருவாக்குவார்கள். தனியொருவராய் மொழி பெயர்த்தாலும், காலம் போகப் போக சொற்கள் தானியங்கியாய் முன்னுந்தப்பெற்று எளிதாகலாம், ஆனால் இப்போதைக்கு ஒரு 10-20 பேராக கூட்டாக செய்தால் மிகக் குறைந்த ஆற்றலில் ஒரு நல்ல கட்டுரை கிட்டும். இப்படிப் பல கட்டுரைகள் செய்ய நல்வாய்ப்பு உள்ளது. நான் தனியாகவும், பயனர் சிவக்குமாருடனும் சேர்ந்து மிகச் சிறிதளவு முயன்று பார்த்தேன். கட்டாயம் நற்பயன் விளைய வாய்ப்புள்ளது என உணர்கிறேன். விக்கிட்டிரான்சு என்னும் குழு (ஒருவரா, பலரா?) எப்படி செய்தார்கள், எவ்வளவு நேரம் உழைப்பு செலவிட்டார்கள் என்னும் செய்தியைப் பகிர்ந்தால் பயனுடையதாக இருக்கும். --செல்வா 14:19, 21 ஆகஸ்ட் 2009 (UTC)
- நான் அந்த கருவியை பயன் படுத்திபார்த்தேன் . நானும் இந்த கூட்டத்தோடு இணைந்து செயல்பட விரும்புகிறேன். ---இராஜ்குமார்
- நான் இதை பயன்படுத்தி பார்த்தேன். மொழிபெயர்ப்பு ஆகவில்லை. காட்டாக budget என்ற கட்டுரையை மொழிபெயர்க்க கொடுத்தேன். ஆனால் ஆங்கிலத்திலேயேதான் வருகிறது. --Ragunathan 08:07, 28 ஆகஸ்ட் 2009 (UTC)
கூகுள் மென்பொருளை பயன்படுத்தி நான் ஏற்கனவே சில கட்டுரைகளை வரைந்துள்ளேன். எவ்வளவு அதிகமாக நாம் பயன்படுத்துகிறோமோ, அவ்வளவு வேகமாக இம்மென்பொருள் புதிய வாக்கியங்களையும் , புதிய சொற்களையும் கற்றுக் கொள்ளும். இம்மென்பொருள் பயன்படுத்தும் Translation memory தொழில்நுட்பத்தின் நியதி இதுவே. காலப்போக்கில் நாம் ஒரு நல்ல மொழி பெயர்ப்பு கருவியை பெற வாய்ப்புள்ளது.
நான் எனது ஒய்வு நேரத்தில் உருவாகிய ஒரு சிறிய மென்பொருளையும் அவ்வப்போது பயன்படுத்திகிறேன். இது ஒரு ஆங்கில வாக்கியத்தில் உள்ள ஆங்கில வார்த்தைகளுக்கு நிகரான தமிழ் சொல்லை தன அகராதியில் கண்டால், அவ்வார்த்தையை தமிழில் பெயர்க்கும். முழு வாக்கியத்தையும் உணர்ந்து தமிழ் வாக்கியத்தை பெயர்க்கும் அறிவு இல்லாதது. அகராதியில் இல்லாத வார்த்தைகள் ஆங்கித்திலேயே விட்டுவிடும். பெரிய பயன் இல்லையென்றாலும், மீண்டும் மீண்டும் தட்டெச்சு செய்ய வேண்டிய வார்த்தைகள், நாடுகள், அறிவியல் சொற்கள் ஆகியவற்றை நேரடியாக பெயர்க்க பயன்படுத்துகிறேன்.
இது யாருக்கும் பயன் படலாம் என்று எண்ணினால் தர சித்தமாயுள்ளேன். அகராதியில் சுமார் 3500௦௦ வார்த்தைகளை சேர்த்துள்ளேன் . இது போன்ற எதாகிலும் open source மென்பொருள் இருக்குமானால் தயவு கூர்ந்து தெரிய படுத்துங்க்ள. நன்றி --Daniel pandian 19:29, 1 செப்டெம்பர் 2009 (UTC)
- தானியல், உங்கள் கருவியை ravidreams at gmail dot com என்ற முகவரிக்கு அனுப்பி வைத்தால் மிகவும் உதவியாக இருக்கும். நன்றி--ரவி 17:10, 5 செப்டெம்பர் 2009 (UTC)
விக்கி சந்திப்பு
தொகு
இன்று நடந்த விக்கி கூட்டத்தில் கலந்து கொண்டு இந்திய மொழி விக்கிக்களைப் பற்றி உரையாடினேன். கூகிள் நிறுவனத்தில் இருந்து வந்து பேசினர். தானியங்கி மொழிபெயர்ப்புக் கருவியைப் பற்றி விளக்கினார்கள். தமிழுக்கு நிரல்வழி மொழிபெயர்ப்பு இன்னும் இல்லையென்றும், அக்கருவியைப் பயன்படுத்துவதன் மூலம் அது 'நினைவில் வைத்துக் கொண்டு' அடுத்தமுறை மொழிபெயர்க்கும் என்றும் கூறினார். ஒரு தொடக்கத்துக்காக பலருக்குப் பணம் கொடுத்து ஆங்கில விக்கி கட்டுரைகளை மொழிபெயர்த்து தமிழ் விக்கியில் இடுகின்றனராம். வங்காள விக்கியில் இதற்குப் பலத்த எதிர்ப்பு உள்ளதால் இத்திட்ட அலுவலர் 'வெறுப்பில்' உள்ளார். நான், கொள்கை அளவில் இதை தமிழ் விக்கியில் எதிர்க்கவில்லை. விக்கி பங்களிப்பாளர்களிடம் நீங்களும் கலந்து பேசி செயல்படுங்கள் என அறிவுறுத்தினேன். கணேசின் தானியங்கி தொடர்பிலான நம் கருத்துகளையும் எடுத்துக் காட்டினேன். நம் விக்கிக்குப் பயன் கிடைக்குமானால் பயன்படுத்திக் கொள்ளலாம்.
கூகிள் தமிழ் விக்சனரியின் சொற்களை எடுத்து எவ்வித இணைப்பும் இன்றி பயன்படுத்துவதைச் சுட்டிக் காட்டினேன். தனிமடல் எழுதுங்கள், சரி செய்துவிடுவோம் என்றார். பார்க்கலாம். -- சுந்தர் \பேச்சு 17:12, 20 டிசம்பர் 2009 (UTC)
- த.வி தலைப்புக் கொடுக்கலாம் அல்லவா. அமெரிக்க பாடகர்களைப் பற்றி மொழி பெயர்த்து என்ன பயன். கருதுச் செறுவு, முக்கியத்துவம் வாய்ந்த கட்டுரைகளை அல்லவா மொழி பெயர்க்க வேண்டும். இதை விட மோசம், இருக்கும் கட்டுரைகளை மொழி பெயர்ப்பது. அத்தோடு மொழி பெயர்ப்புக்கள் மேலும் நன்றாக அமைய வேண்டும். நிறைய ஆங்கில சொற்களைப் பயன்படுத்துகிறார்கள். கலைக்களஞ்சிய நடை வேண்டும். --Natkeeran 17:17, 20 டிசம்பர் 2009 (UTC)
- சுந்தர்! நீண்ட நாட்களாக உறுத்திக்கொண்டிருந்த கூகுள் மொழிபெயர்ப்பி பக்கங்களின் மூலத்தை (எங்கிருந்து வருகிறது என்பது பற்றி) துப்பு துலங்கியதற்கு நன்றி. இது ஒரு வணிகச் செயல்பாடு தான் என்று எனக்குத் தோன்றியது -- ரவியும் அவ்வாறே கூறினார். வந்தாரை வாழ வைப்பதில் எந்த சங்கடமும் இல்லை என்றாலும் நற்கீரன் கூறியுள்ளது போல் பொருத்தமான தலைப்புகளை எடுத்து எழுதினால் நன்றாக இருக்கும் என்று கூகுளை அறிவுறுத்துவோம்; சர்க்கரையைப் போல பாலுக்குச் சுவையைக் கூட்டினார்களானால் நல்லது -- (மிகப்பெரிய உள்ளடக்கங்களை இட்டு) வெற்றுத்தண்ணீரால் நிரப்பினால் பால் (த.வி.) நீர்த்து விடும். மேலும் தமிழ் விக்சனரியிலிருந்து சொற்களை எடுப்பதும் நடக்கிறது; இதையும் உடன் எழுதி கூகுளுக்கு அறிவுறுத்துங்கள். -- பரிதிமதி 23:39, 20 டிசம்பர் 2009 (இந்திய நேரம்)
"மேலும் தமிழ் விக்சனரியிலிருந்து சொற்களை எடுப்பதும் நடக்கிறது" விளங்கவில்லை. இது கூகிளா, விக்கிமீடியாவா? --Natkeeran 18:39, 20 டிசம்பர் 2009 (UTC)
- கூகுள் டிக்சனரியில் சில சொற்களைப் பார்த்ததில் விக்சனரியை அப்படியே எடுத்தாண்டிருப்பது தெரிந்தது; எந்த சொற்கள் என்பது இப்போது நினைவில் இல்லை. கூகுள் டிக்சனரியின் இணைப்பு இதோ:[1]
தமிழ் விக்கியில் கூகிள் வழி மொழிபெயர்ப்பின் பின்னணியைப் புரிந்து கொண்டோம். அடிப்படையில் இதனை எதிர்க்கவேண்டியது இல்லை என்பது எனது கருத்து. ஆனால், இந்த முயற்சியை விக்கியின் வளர்ச்சிக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள முயலலாம். நற்கீரன் கூறியிருப்பதுபோல், மிகவும் தேவையான கட்டுரைகளின் பட்டியல் ஒன்றைக் கொடுத்து மொழிபெயர்க்கும்படி கேட்டுக்கொள்ளலாம். இருக்கும் கட்டுரைகளை மொழிபெயர்க்காமல் இருப்பதை உறுதிசெய்யுமாறு கேட்கலாம். இவ்வாறு மொழி பெயர்க்கப்படும் கட்டுரைகளில் இருக்கக்கூடிய பிரச்சினைகளை எடுத்துக்கூறி அப்பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கூறலாம். முக்கியமாக, கூகிளில் இச் செயற்பாடுகளுக்குப் பொறுப்பான ஒருவர் பயனர்களுடன் தொடர்புகொள்ளும் வகையிலும், பயனர்கள் அவருடன் தொடர்புகொள்வதற்கு வசதியாகவும் ஒரு பயனர் கணக்கொன்றைத் தொடங்கும்படி பரிந்துரைக்கலாம். இதன்மூலம் எல்லாத் தரப்பினரும் பயன்பெற முடியும் என்பது எனது நம்பிக்கை. மயூரநாதன் 11:04, 21 டிசம்பர் 2009 (UTC)
- உங்கள் கருத்துக்களுடன் உடன்படுகிறேன். கட்டாயம் எதிர்க்க வேண்டியதில்லை, நீங்கள் கூறியது போல் பொறுப்பாளர் ஒருவர் பயனராக இணைந்து செயல்பட்டால் நன்றாக இருக்கும். -- சுந்தர் \பேச்சு 17:58, 21 டிசம்பர் 2009 (UTC)
சுந்தர் இரவிக்கு துப்பு துலங்கும் வேலையை மிச்சப்படுத்திட்டீங்க :). கூகுள் நிறுவன தமிழ் திட்ட பொருப்பாளர் தமிழ் விக்கியுடன் தொடர்பு கொண்டு செயலாற்றினால் சிறப்பாக இருக்கும். இப்ப அவங்க பல கட்டுரைகளை எழுதுராங்க. இதுல இருக்குற குறைகளை எப்படி அவங்க தெரிஞ்சுக்குவாங்க? மேலும் ஏற்கனவே இருக்கும் கட்டுரைகளை எழுதினால் முதலில் எழுதினவங்க உழைப்பு வீண். இவர்கள் காசுக்காக எழுதுவதில்லை, இவங்க (பெரும்பாலோர்) சிறுக சிறுக தான் எழுதுவார்கள் . நற்கீரன் சொன்னது போல் தேவையான கட்டுரைகளை கொடுத்து அவர்களை மொழிபெயர்க்க சொல்லலாம். நியூயார்க், லாஸ் ஏஞ்சலஸ் போன்ற நகரங்களை பற்றி எழுதலாம் என்றால் நம் உழைப்பு வீணாக போயிடுமோ என்று தயக்கம் வருகிறது. என்ன கட்டுரைகளை அவங்க எழுத போறாங்க என்று தெரிந்தால் அதை தவிர்த்து மற்ற கட்டுரைகளை நாம் எழுதலாம். இப்போதைய அவர்களின் தவியுடன் இணைந்து செயல்படாத போக்கு தவிக்கு நல்லதல்ல. முடிந்தால் இதை அவர்களிடம் தெரிவியுங்கள். அவர்கள் திட்ட அலுவலர் தவியுடன் இணைந்து செயல் படவேண்டும். coordination வேண்டாமா? கூகுள் காரங்களுக்கு இது தெரிய வேண்டாமா? --குறும்பன் 22:06, 22 டிசம்பர் 2009 (UTC)
சுந்தர், தக்க நேரத்தில் வந்த பயனுள்ள தகவல். தமிழ் விக்கி மட்டும் தனியே இதனை அணுகுவதைக் காட்டிலும் இந்திய விக்கிப் பிரிவு மூலம் அனைத்து இந்திய விக்கி நண்பர்கள் ஒரு பொது தீர்மானத்தை கூகுளுக்கு அனுப்பி வைக்கலாம். அதில் பின்வருமாறு குறிப்பிடலாம்:
- ஒவ்வொரு மொழி விக்கிக்கும் ஒரு ஒருங்கிணைப்பாளராவது இருக்க வேண்டும். அவர் நமது கருத்தை அறிந்து தொழில் முறை மொழிபெயர்ப்பாளர்களுக்கும் நமக்கும் இடையில் செயல்படுவார். எல்லா தொழில்முறை மொழிபெயர்ப்பாளர்களும் விக்கியில் கலந்துரையாடிச் செயல்படுவார்கள் என எதிர்பார்க்க முடியாது.
- ஏற்கனவே எழுதியுள்ள கட்டுரைகளை மொழிபெயர்க்க வேண்டாம்.
- நாம் தருகிற கட்டுரைகளுக்கு முன்னுரிமை தந்து மொழிபெயர்க்க வேண்டலாம். எனினும், ஆய்வுக் காரணங்களுக்காக அவ்வளவு முக்கியம் இல்லாத பல்வேறு வகையான கட்டுரைகளையும் மொழிபெயர்க்க முயல்வார்கள் என்று புரிந்து கொள்ளலாம்.
- அவர்கள் மொழி பெயர்த்திருக்க நினைத்திருக்க கட்டுரைகளின் தலைப்புகளை முன்கூட்டி தந்தால் நாம் அதை எழுதாமல் ஒத்திப் போடலாம்.
- மொழிபெயர்ப்பாளர்கள் பின்பற்ற வேண்டிய அடிப்படை விக்கி நடை பற்றிய சிறு கையேட்டை அளிக்கலாம்.
- கூகுள் கொள்கைகள் அனுமதித்தால், இந்தச் சோதனைப் பணியின் காலம், அளவு ஆகியவற்றை அறியத் தர கேட்கலாம்.
கூகுளின் செயல்பாட்டு மாற்றங்களைக் கவனித்து தேவைப்பட்டால் அடுத்த கட்ட வழிகாட்டல்களைத் தரலாம். --ரவி 04:09, 23 டிசம்பர் 2009 (UTC)
- நல்ல பரிந்துரைகள். நானும் கூட்டத்தின் போது ஒரு பரிந்துரையை முன்வைத்தேன் (வங்காள விக்கி எதிர்ப்பைப் பற்றி அவர்கள் தெரிவிக்கையில்). அப்பரிந்துரை 'இந்தத் தொகுப்புகளைத் தனிப் பெயர்வெளியில் இட்டு, பங்களிப்பாளர் ஒருவர் பார்த்த பின்னர் கட்டுரையாக்கலாம்' என்பது. ஆனால், மேலே நீங்கள் குறிப்பிட்டுள்ள பரிந்துரைகளைச் செயல்படுத்தினால் போதுமானது. கூகிள் நிறுவனத்தார் பேசிய தொனி சரியில்லை, அதனால் தான் இவ்வளவு எதிர்ப்பு இருந்தது. எதிர்ப்பாளர்களைத் தான் நினைத்தால் விக்கி 'மேலிடத்தில்' சொல்லி தடை செய்திருக்க முடியும் என்றும், கட்டுரைகள் இல்லாமல் இருக்கும் நிலையில் கிடைத்ததை வைத்துக் கொள்ள வேண்டியது தானே என்றும் சொன்னது எரிச்சலூட்டியது. மற்றபடி, பயன் நோக்கில் இதை அணுக வேண்டுமென்பதால் சற்று பொறுமையாக விக்கி முறையைச் சிறிது விளக்கினேன். சரியான முறையில் செயல்படுத்தினால் குறைந்தது தமிழ் விக்கியில் வரவேற்போம் என்றேன். அதன்பின் அவரும், வங்காள விக்கி பங்களிப்பாளர்கள் நேரடியாகக் கணக்குகளைத் தடை செய்யாமல் பேச்சுவார்த்தைக்கு இணங்கியிருந்தால் நாங்களும் கருத்துக்களை அறிந்திருக்க முடியும் என்றார். -- சுந்தர் \பேச்சு 07:51, 23 டிசம்பர் 2009 (UTC)
கூகிள் நிறுவனத்தினர் அவ்வாறு பேசியிருந்தால் அது தீவிரமாகக் கவனிக்க வேண்டிய ஒரு விடயம்தான். இது குறித்து விக்கி மேலிடத்தின் கருத்தை அறிய வேண்டும். இந்திய விக்கிப் பிரிவின் மூலம் விக்கி மேலிடத்தை அணுகினால் கூடிய பயனுள்ளதாக இருக்கும். வணிக நிறுவனங்களின் கட்டுப்பாட்டுக்குள் விக்கி வந்துவிடாமல் பார்த்துக்கொள்வது முக்கியம். ஆங்கில விக்கியின் "Village Pump" பகுதியிலும் இது குறித்து விவாதித்தால் ஒரு பொது விழிப்புணர்வை ஏற்படுத்தலாம். "கிடைத்ததை வைத்துக்கொள்ளுங்கள்" என்ற நிலைப்பாடு நிச்சயமாக ஏற்றுக்கொள்ள முடியாதது. "புதிய குடியேற்றவாதம்" நமது மொழி விடயத்திலும் நேரடியாகத் தலையிட முயல்வதுபோலத் தெரிகிறது. மயூரநாதன் 18:48, 24 டிசம்பர் 2009 (UTC)
- ஒரு சில விளக்கங்கள். அவர்கள் பேசியது பெரும்பாலும் தங்கள் கணக்கு (விவாதமின்றி?) முடக்கப்பட்டதனாலேயே. அதிலும் அவர்கள் ஆங்கிலத்தில் பேசியதால் சில கருத்துகள் அவர்களுக்கு இவ்வளவு மோசமாகத் தென்பட்டிருக்காது. நான் தமிழில் மொழிபெயர்த்தபோது மிக மோசமாகத் தெரிகிறது. இருந்தாலும் அடிப்படையில் ஒரு மிதப்பில் இருப்பது மட்டும் உறுதி. இதை இப்போதைக்குப் பெரிது படுத்த வேண்டாம். ஒரு சிலர் சில சூழல்களில் இவ்வாறு நடந்து கொண்டுள்ளனர். முதலில் அவர்களை அணுகிப் பார்க்கிறேன். இப்போதைக்கு இதை மேலும் விவாதிக்காமல் விட்டு விடுவோம். பயன் நோக்கில் அணுகுவோம். தொடர்ந்து இதே நிலை இருந்தால் விக்கிமீடியா இந்தியப் பிரிவில் பேசி விக்கிமீடியா நிருவாகத்திடம் எடுத்துச் சொல்லலாம். -- சுந்தர் \பேச்சு 04:21, 25 டிசம்பர் 2009 (UTC)
Don't be evil
தொகுகூகிளின் அணுகுமுறை மிகவும் பயமாக இருக்கிறது. "கிடைத்ததை வைத்துக் கொள்ள வேண்டியது தானே". "'மேலிடத்தில்' சொல்லி தடை செய்திருக்க முடியும்." இது மைக்ரோசோப்டை விட மோசம். உதவுகிறோம் என்று கூறு கழுத்தறுப்பது. --Natkeeran 23:17, 24 டிசம்பர் 2009 (UTC)
- இப்போதைக்கு இதை மேலும் விவாதிக்காமல் விட்டு விடுவோம். -- சுந்தர் \பேச்சு 04:21, 25 டிசம்பர் 2009 (UTC)
- சரி சுந்தர், நீங்கள் நேரடியாக அங்கிருந்ததால் நடப்புச் சூழல் உங்களுக்குச் சரியாகப் புரிந்திருக்கும். எனவே உங்கள் அணுகுமுறையை நான் ஏற்றுக்கொள்கிறேன். மயூரநாதன் 04:53, 25 டிசம்பர் 2009 (UTC)
Q&A The Death of Languages
தொகு--Natkeeran 02:39, 22 டிசம்பர் 2009 (UTC)
- முழுவதும் படித்தேன், நற்கீரன். நல்ல விளக்கங்கள். கண்கெட்ட பிறகு ஞாயிற்றை வழிபடுவதைக் காட்டிலும் நாம் இப்போதே விழித்துக் கொள்ள வேண்டும். -- சுந்தர் \பேச்சு 07:34, 22 டிசம்பர் 2009 (UTC)
நற்கீரன், அடிக்கடி இது போல் பயனுள்ள தொடுப்புகளைப் பகிர்கிறீர்கள். இது போன்ற தொடுப்புகளைச் சேமித்து வைப்பதற்கென்று தனியாக ஒரு பக்கம் தொடங்குவோமா? விக்கிக்கு நேரடியாகத் தொடர்பில்லாத ஆனால் விக்கியருக்கு ஆர்வமூட்டக்கூடிய தகவல், தொடுப்புகள், நூல்கள் பற்றிய விவரங்களை இந்தப் பக்கத்தில் சேமித்து வைக்கலாம். சுந்தர், இந்தப் பக்கத்துக்கு ஒரு நல்ல பேர் சொல்லுங்க :)--ரவி 04:13, 23 டிசம்பர் 2009 (UTC)
பயிற்சிப் பட்டறை அறிக்கைகளும் விளக்க நூல்களும்
தொகுஅண்மையில் http://outreach.wikimedia.org/wiki/Bookshelf_Project திட்டத்தின் நெறியாளர் பயிற்சிப் பயிலரங்குகள் விளக்க நூல்கள் போன்றவற்றை அமைக்கும் பணியில் எனது உள்ளீடுகளைக் கேட்டுள்ளார். அப்பணியில் நம்மில் சிலரேனும் தாமாக இணைத்துக் கொண்டால் நல்லது. தமிழ் விக்கியின் துய்ப்பில் நாம் அறிந்தவற்றைப் பகிர்ந்து கொள்ளவும் இத்திட்டத்தின்வழி நமது தேவைகள் சிலவற்றையாவது நிறைவு செய்யவும் உதவும். இணைய விரும்புபவர்கள் http://outreach.wikimedia.org/wiki/Opportunities என்ற பக்கத்துக்குச் செல்லவும். -- சுந்தர் \பேச்சு 07:41, 22 டிசம்பர் 2009 (UTC)
---
நத்தார், விடுமுறை வாழ்த்துக்கள்
தொகுஅனைவருக்கும் நத்தார், மற்றும் விடுமுறை வாழ்த்துக்கள். --Natkeeran 16:31, 25 டிசம்பர் 2009 (UTC)
மேலுள்ள விக்கி அறவிப்புவார்ப்புரு குறித்து..
தொகு- தயவுசெய்துபடியுங்களேன்.. என்ற அறிவிப்புருவில் (show/ஒளி) என்று உள்ளது. அவ்விரண்டையும் காண்க/மறைஅல்லதுஒழி என்று இருக்குமாறு அமைக்க வேண்டும்.
விக்சனரி = ஒலிXஒளிXஒழித* உழவன் 12:15, 1 ஜனவரி 2010 (UTC)
கனடா தமிழ் சொற்கோவைக் குழுவோடான சந்திப்பும், சாத்தியக்கூறுகளும்
தொகுகனடா சொற்கோவைக் குழு கடந்த ஆறு ஆண்டுகளாக இயங்குகிறது. இதில் அனுபவம் மிக்க ஆசிரியர்கள், மொழிபெயர்ப்பாளர்கள், பேராசிரியர்கள், துறைசார் வல்லுனர்கள் உள்ளார்கள். இவர்கள் கலைச்சொற்களை தொகுப்பதில், உருவாக்குவதில் ஈடுபட்டுள்ளார்கள்.
இவர்களுக்கு தமிழ் விக்கிப்பீடியா, விக்சனரி, மற்றும் நூலகத் திட்டம் ஆகியவற்றைப் பற்றி அறிமுகம் ஒன்றை நேற்று வழங்கினேன். பலர் மிகுந்த ஈடுபாட்டோடு உசாவினார்கள்.
இவர்கள் விக்சனரித் திட்டத்தை மேலும் சிறப்பாக வளர்க்க உதவக் கூடியவர்கள். இவர்களுடைய மாணவர்களுக்கு நிகழ்த்துதல் செய்வதற்கும் ஒழுங்கு செய்து தருவதாக கூறினார்கள். இவை நல்ல வாய்ப்புக்கள். தமிழின் ஒரு கூரிய முனையான இவர்களைப் போன்றவர்கள் எமக்கு உதவியாக அமைவது சிறப்பு. --Natkeeran 03:23, 6 ஜனவரி 2010 (UTC)
- உங்களது முயற்சிகளால், தமிழ்-செருமன் அகரமுதலியைப் போல, தமிழ்-கனடமொழி அடிப்படைச்சொற்கள் உருவாகுமென நம்புகிறேன். மிக்க மகிழ்ச்சி. த* உழவன் 04:52, 6 ஜனவரி 2010 (UTC)
Punjabi: story of a script’s decline
தொகுPunjabi: story of a script’s decline
---
விக்கி வாசகர்கள்
தொகு- http://infodisiac.com/blog/2010/01/wikipedia-page-views-a-global-perspective-2/
- நாடு வாரியாக
- மொழி வாரியாக
இலங்கையில் ஆங்கிலத்துக்கு அடுத்தபடியாகவும் இந்தியாவில் ஆங்கிலம், இந்திக்கு, அடுத்தபடியாகவும் தமிழ் விக்கி கட்டுரைகளே மிகுதியாகப் படிக்கப்படுகின்றன. இந்தியா, அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக கனடாவிலிருந்தே நம் தளத்துக்கு மிகுதியான வாசகர்கள் வருகின்றனர். -- சுந்தர் \பேச்சு 08:11, 14 ஜனவரி 2010 (UTC)
- Saint Kitts and Nevis (Tamil - 3)
- Reunion - (Tamil - 7)
- Quarter - (Tamil - 3)
- Bhutan - (Tamil - 7)
- Seychelles - (Tamil - 3)
- ta wiki has a higer global viewer share than hindi.
விக்கிப்பீடியா நாள்
தொகுஇன்று (16 சனவரி 2009) பெங்களூரில் நடந்த விக்கிப்பீடியா நாள் சந்திப்பில், தமிழ் விக்கியை அறிமுகப்படுத்தி தொலைப்பேசி மூலம் ஓர் அறிக்கை அளித்தேன். (படிமம் காண்க). பொங்கல் வார இறுதியை முன்னிட்டு சுந்தர், கார்த்திக் போன்ற வழமையான பெங்களூர் பங்களிப்பாளர்களால் கலந்து கொள்ள இயலாத நிலை. அறிமுக உரைக்குப் பின் கேட்கப்பட்ட கேள்விகள்:
- தரக் கண்காணிப்பை எப்படிச் செயற்படுத்துகிறீர்கள்?
- தமிழக அரசு தமிழ் வளர்ச்சி, தமிழ்க் கணிமை வளர்ச்சிக்கு ஆதரவு அளிக்கிறதே.. ஏன் தமிழ் விக்கிக்கு ஆதரவைப் பெற முடியவில்லை?
- மதுரைத் திட்டம் போன்ற பிற திட்டங்களுடன் செயல்படும் வாய்ப்பு என்ன? (விக்கி மூலம் போன்ற இடங்களில்)--ரவி 14:22, 16 ஜனவரி 2010 (UTC)
கோவை குமரகுரு கல்லூரியில் தமிழ் விக்கி அறிமுகம்
தொகுநவம்பர் 7, 2009 அன்று கோவை குமரகுரு பொறியியல் கல்லூரியில் கூடிய முதலாம் ஆண்டு MCA மாணவர்கள், வலைப்பதிவர்கள் ஆகியோருக்கு தமிழ் விக்கி உள்ளிட்ட தமிழ் இணைய அறிமுகம் செய்தேன். தமிழ் விக்கியில் எப்படி தொகுப்புகள் செய்யலாம் என்று 20 நிமிட நேரம் விளக்க முடிந்தது. தமிழ் விக்கி தமிழ் வழிய மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என்பதைத் தமிழ் வழியம் மூலம் பயின்று வந்த மாணவர்கள் உணர்ந்து உள்வாங்கினார்கள். கிட்டத்தட்ட அனைத்து மாணவர்கள், பங்கேற்பாளர்களுமே ஆங்கில விக்கி பயன்படுத்தி உள்ளார்கள். ஆனால், தமிழ் விக்கி என்று ஒன்று இருப்பதை அறிந்திருக்கவில்லை. (மிகத் தாமதமான நிகழ்ச்சிக் குறிப்பு. நற்கீரன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, ஒரு குறிப்புக்காக இடுகிறேன்)--ரவி 14:42, 16 ஜனவரி 2010 (UTC)
விக்கி விழிப்புணர்வு
தொகுபுதிய தலைமுறையில் விக்கி அறிமுகக் கட்டுரைக்குப் பிறகு வரும் அழைப்புகளில் சில. ஒரு குறிப்புக்காக:
- விக்கியில் கதை, கவிதை, சமூக விமர்சனக் கட்டுரை, பரப்புரைக் கட்டுரை எழுதலாமா? (நிறைய பேரின் கேள்வி. விக்கி என்பதை ஒரு வெகுமக்கள் இதழ் போலே புரிந்து கொள்கிறார்கள்)
- கட்டுரை எழுதி அஞ்சலில் அனுப்பினால் நீங்களே தட்டச்சு செய்து வெளியிடுவீர்களா?
- விக்கிப்பீடியாவில் வேலை கிடைக்குமா?
- விக்கியில் கட்டுரை எழுதுவதால் எனக்கு என்ன இலாபம்? (இது இலவச சமூக சேவை தான் என்று சொன்னவுடன் கேட்பவரின் சுரத்து குறைந்து விடும்)
- தமிழ் விக்கியை ஏன் செல்பேசியில் பார்க்க முடியவில்லை ? (நிறைய பேர் கேட்ட கேள்வி. இதற்கான நுட்பத் தீர்வுகளை ஓரிடத்தில் ஆவணப்படுத்த வேண்டும்)
- விக்கியில் விளம்பரம் வெளியிடலாமா?
- விக்கிக்கு நீங்கள் தான் உரிமையாளரா ?
- எப்படி தமிழில் தட்டச்சு செய்வது ? என்ன மென்பொருள் பயன்படுத்துவது?
- திரைப்படத்துறையில் வாய்ப்பு வாங்கித் தருகிறீர்களா? உங்களுக்கு இவரைத் தெரியுமா? அவரைத் தெரியுமா? என்பது போல் தொடர்பே இல்லாத கேள்விகள்..--ரவி 14:50, 16 ஜனவரி 2010 (UTC)
Can Wikipedia fuel growth of vernacular content online?
தொகுCan Wikipedia fuel growth of vernacular content online?
--66.46.200.242 04:43, 19 ஜனவரி 2010 (UTC)
ஈழம் - தமிழக வேறுபாட்டைச் சுட்டிக்காட்டித் தான் இந்த இந்து நாளிதழ்க் கட்டுரை தொடங்க வேண்டுமா? :)--ரவி 10:53, 19 ஜனவரி 2010 (UTC)
Linguistic Purism and Language Planning in a Multilingual Context Tamil in Pondicherry
தொகு- Linguistic Purism and Language Planning in a Multilingual Context Tamil in Pondicherry
- UW student builds library of local languages
From the Tamil development programs adopted by the Government and suggested in the writings of the Tamil scholars, we could notice that the emphasis is on the literature, and literary aspects of Tamil. This reveals the fact that they equate literary development with the language development. In fact, literary development is only one aspect of languages development.
Linguistic Purism and Language Planning in a Multilingual Context: Tamil in Pondicherry The real language development lays greater emphasis on the development of language (usually the non-literary styles) in practical domains. Creation of encyclopedias, compilation of dictionaries, translation of materials from diverse sources, creation of textbooks for all subjects, form major part of the language development process. These aspects are not highly emphasized in the idiom of these scholars. They give importance to Tamil, its tradition, grammar, music, and purism.
In this era of globalization and free trade explosion, Tamil has a vital role to play. Tamil should be developed in such a way as to suit this global need. Development of Tamil should not be a unidirectional as the scholars seem to emphasize, but it should be a multifaceted.
கூகிள்வழி மொழிபெயர்ப்பு
தொகுகூகிள் வழியாக மொழிபெயர்ப்பவர்கள் கட்டுரைகள் பலவற்றில் ஆங்கிலச் சொற்களை அப்படியே தமிழில் ஒலிபெயர்ப்புச் செய்கிறார்கள். தமிழ்ச் சொற்கள் பரவலாகப் புழக்கத்தில் இருக்கும் சொற்களைக்கூட முறையாக மொழிபெயர்க்காமல் இவ்வாறு செய்கிறார்கள். மெடிக்கல் டிராஸ்கிரிப்ஷன் என்ற தலைப்பிட்டு மொழிபெயர்க்கப்பட்ட கட்டுரையில் காணப்படும் ஒரு பத்தியைக் கீழே பாருங்கள்:
- ஆயினும், கையாலடிக்கும் டைப்ரைட்டர்களில் இருந்து மின் டைப்ரைட்டர்களாகவும் பின் வேர்டு பிராசசர்களாகவும் பின் கம்ப்யூட்டர்களாகவும், பிளாஸ்டிக் டிஸ்குகள் மற்றும் மேக்னடிக் பெல்டுகளில் இருந்து கேசட்டுகள் மற்றும் என்ட்லெஸ் லூப்கள் மற்றும் டிஜிட்டல் ரெக்கார்டுகளாகவும் டிரான்ஸ்கிரிப்ஷன் சாதனங்கள் மாற்றம் கண்டுள்ளன. இன்று, ஸ்பீச் ரெகக்னிஷன் (SR), இது கன்டினியஸ் ஸ்பீச் ரெகக்னிஷன் (CSR) என்றும் அழைக்கப்படுகிறது, அதிகமான அளவில் பயன்படுத்தப்படுகிறது; மெடிக்கல் டிரான்ஸ்கிரிப்ஷனிஸ்டுகள் அல்லது “எடிட்டர்கள்” மேம்படுத்தும் துணைவேலையாக எடிட்டோரியல் சேவைகளை வழங்குகிறார்கள், ஆயினும் சில சந்தர்ப்பங்களில் SR முழுமையாக MT ஐ இடம்பெயர்ப்பதும் உண்டு. நேச்சுரல்-லாங்வேஜ் பிராசசிங் “ஆட்டோமேடிக்” டிரான்ஸ்கிரிப்ஷனை இன்னுமொரு படி முன்னே எடுத்துச் செல்கிறது, இது ஸ்பீச் ரெகக்னிஷன் மட்டும் வழங்க முடியாத (MTக்கள் வழங்குகின்றனர் எனினும்) பொருள்விளக்கமளித்தல் செயல்பாட்டையும் வழங்குகிறது.
இவ்வாறான கட்டுரைகள் எப்படித் தமிழ் விக்கிப்பீடியாவின் தரத்துக்குப் பங்களிக்கும் என்று தெரியவில்லை. பணத்துக்காக மொழிபெயர்ப்புச் செய்வதால் எதையாவது விரைவாகச் செய்து கூடிய பணம் சம்பாதிப்பதையே நோக்கமாகக் கொண்டிருப்பதுபோல் தெரிகிறது. இத்தகைய கட்டுரைகளைத் திருத்துவதற்கும் முறைப்படுத்துவதற்கும் பிற பயனர்கள் பெருமளவு நேரத்தைச் செலவு செய்ய வேண்டியுள்ளது. இத்தகைய விடயங்கள் குறித்து விக்கிப்பீடியா மேலிடத்துக்கும், கூகிள் நிறுவனத்துக்கும் அறிவித்து ஆவன செய்யவேண்டும். மயூரநாதன் 20:04, 28 ஜனவரி 2010 (UTC)
நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை. கூகுளிடம் எப்படி முறையிடுவது என அறிந்தவர்கள் தெரீக்கவும். சில கட்டுரைகளில் நீங்கள் மேலே எடுத்துக்காட்டிய அளவுக்கு மோசம் இல்லை எனினும், அவையும் திருத்துவதற்குக் கடினமானவையே. எனினும், திருத்த முயலலாம். இவற்றைத் தனிப் பகுப்பில் வைத்து முன்னேற்ற வேண்டுவது மிகவும் தேவை. விக்கிப்பீடியாவின் தரத்தை இவை மாசுபடுத்திவிடுமோ என்னும் கவலையும் உள்ளது. ஆனால் இன்னும் கூடுதலான பயனர்கள் வந்து திருத்தித் தந்தால் தேறுமோ என்றும் நினைக்கத் தோன்றுகின்றது.--செல்வா 02:10, 29 ஜனவரி 2010 (UTC)
- எல்லாக் கட்டுரைகளும் இவ்வளவு மோசமில்லை என்பது உண்மையே. சில கட்டுரைகள் சிறப்பாகவும் உள்ளன. இந்த முயற்சி பயனுள்ளது என்பதுதான் எனது கருத்தும். ஆனால், சில மொழிபெயர்ப்பாளர்கள், நல்ல முறையில் மொழிபெயர்ப்புச் செய்வதில் அக்கறை எடுக்கவில்லையோ என்று எண்ணவேண்டியிருக்கிறது. இவர்கள் இவ்வேலையைத் தன்னார்வத்தோடு செய்யாமல் வியாபாரமாகச் செய்வது தான் இதற்குக் காரணமாக இருக்கலாம். சில கட்டுரைகளைச் சரி செய்வதில் பெருமளவு நேரத்தை நானும் செலவு செய்திருக்கிறேன். இதனால் புதிய கட்டுரைகள் எழுதுவதற்கு நேரம் போதிய அளவு ஒதுக்கமுடியாமல் போனதும் உண்டு. சில மொழிபெயர்ப்பாளர்கள் தலைப்புக்களைக்கூட ஆங்கிலத்திலேயே விட்டுவிடுகிறார்கள். இத்தகைய குறைபாடுகள் இவற்றை ஒழுங்கு செய்யும் கூகிள் நிறுவனத்தினருக்கே தெரியாமல் இருக்கக்கூடும். சுந்தர், இதோடு தொடர்புடைய ஒருவரை முன்பே சந்தித்து இருப்பதனால், அவரால் ஏதாவது செய்ய முடியலாம். மயூரநாதன் 02:57, 29 ஜனவரி 2010 (UTC)
கூகிள் நிறுவனத்தினர் தமது தானியங்கி மொழிபெயர்ப்புச் சோதனைக்காக நிதி பயன்படுத்தி ஆட்களை மொழிபெயர்க்கச் செய்கின்றனர். அவ்வாறு மொழிபெயர்ப்போருக்குக் கலைக்களஞ்சிய உருவாக்கம் தொடர்பில் அக்கறை இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. ஆனால் அவர்களது முயற்சியை நமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டியது விக்கிப்பீடியர்களின் முன்னுள்ள பணியாகும்.
பிரிட்னி ஸ்பியர்ஸ் போன்ற கட்டுரைகள் என்றென்றைக்கும் திருத்தப்படாமல், இற்றைப்படுத்தப்படாமல் குப்பையாகக் கிடக்கப் போகின்றன. அத்தகைய கட்டுரைகளை வந்தடையும் வாசகர்களுக்குக் கிடைக்கும் அதிருப்தியும் நம்பிக்கையீனமும் த.வி.யை நிச்சயம் பாதிக்கும்.
ஆனால் இலகு ஆங்கில விக்கியிலிருந்து பிரிட்னி ஸ்பியர்ஸ் கட்டுரை மொழிபெயர்க்கப்பட்டிருந்தால் அதனைத் திருத்துவது சாத்தியமாயிருந்திருக்கும். இத்தகைய தலைப்புக்கள் இலகு ஆங்கில விக்கியிலிருக்கும் அளவு சிறிதாயிருப்பதேகூட நமக்குப் போதுமானது.
இவ்வாறாக எங்கிருந்து எவற்றை மொழிபெயர்க்க வேண்டும் என்பது தொடர்பான அறிவுறுத்தல்களைக் குறித்த மொழிபெயர்ப்பாளர்களுக்கு ஆலோசனையாக வழங்குவதாகவேனும் ஓர் ஒழுங்கு வேண்டும். அவ்வாறில்லையேல் குப்பைப் பக்கங்கள் அதிகமாகித் த.வி.யின் தரம் குறைவதே கூகிள் முயற்சியின் விளைவாகும்.
கோபி 11:58, 29 ஜனவரி 2010 (UTC)
இந்த முறையில், ஆங்கில நடையில் உள்ள கட்டுரையை அப்படியே தமிழில் மொழிபெயர்த்து எழுதுகின்றனர். அநேக கட்டுரைகளில் இந்த நடை சலிப்பையே ஏற்படுத்துகின்றது. கண்டிப்பாக இவை புதிய பார்வையாளர்களை எரிச்சலூட்டும். மேலும் அநேக விக்கிகளில் இவ்வகை தானியங்கி மொழிபெயப்புகள் தடுக்கப்பட்டுள்ளன. நாமும் அதையே பின்பற்றலாம்.--Arafat 15:02, 29 ஜனவரி 2010 (UTC)
தேவையானவற்றை மட்டும் வைத்துக்கொண்டு மற்றவற்றைப் பேச்சுப் பக்கத்தில் வெட்டி ஒட்டி சேமித்து வைக்கலாம். பிறகு தேவைக்கு ஏற்றார்போல ஆங்கிருந்து சிறிது சிறிதாக திருத்தி சேர்த்துக்கொள்ளலாம். த.வியின் தரம் குறையாமல் இருப்பது மிக முக்கியம். மற்ற பயனர்களும் ஒப்புவார்கள் எனில் இதனைச் செயல்படுத்தலாம். --செல்வா 15:12, 29 ஜனவரி 2010 (UTC)
- இந்த தானியங்கி மொழிபெயர்ப்பு எரிச்சலூட்டுவதாகவே உள்ளது. இது புது பங்களிப்பாளர்களையும் தவறான வழிமுறைகளுக்கு இட்டுச்செல்ல வாய்ப்புண்டு.நிச்சயமாக கூகிள் நிறுவனத்தார் த.வி குழுவினருடன் ஓர் ஒருங்கிணைப்பாளரைக் கொண்டு செயலாற்றுவது இருபாலருக்கும் நன்று.அதுவரை செல்வா கூறுவது போல் பக்கத்தை வெட்டி பேச்சுப் பக்கத்தில் இடுவது நல்ல செயலாகப் படுகிறது.--மணியன் 16:28, 29 ஜனவரி 2010 (UTC)சில நேரங்களில் கூகிள் நிறுவன கவனத்தை ஈர்க்க ஒரு வாரத்திற்கு புதிய கூகிள்வழி கட்டுரைகளை நீக்கலாம் என்றும் பரிந்துரைக்கிறேன்.இவற்றை கூகிள் சேமித்து வைத்திருக்கும்.தேவையானால் அவர்களிடமிருந்து ஓர் புரிந்துணர்வு ஏற்பட்டபிறகு மீட்கலாம் --மணியன் 16:32, 29 ஜனவரி 2010 (UTC)
கூகிள் நிறுவனத்தாரின் செயல் தவறாகவே எனக்கு தோன்றுகிறது. அவர்கள் த.வி குழுவினருடன் ஒருங்கிணைக்கினைந்து செயலாற்றினால் ஒழிய நன்மைகளை விட தீமைகளே அதிகமாக இருக்கும். மிக அதிக அளவிலான சிவப்பு இணைப்புகளுக்கு காரணம் அவர்களின் கட்டுரைகளுக்கு சென்றுபார்ப்பவர்களுக்கு புரியும். எ.கா இந்தியாவில் என்பதை [[ இந்தியா|இந்தியாவில் ]] என்று இணைப்பு கொடுக்காமல் [[ இந்தியாவில் ]] என்றே கொடுத்திருப்பார்கள். மேலும் எந்த கட்டுரைகளை மொழிபெயர்கப்போகிறார்கள் என்பதையும் தெரிவிக்கலாம். ஒருங்கிணைப்பாளருடன் இணைந்து செயல்பட்டால் நம் எண்ணங்களை அவர்களுக்கு தெரியப்படுத்தலாம். தானியங்களின் கட்டுரையை திருத்தவே பலர் முழு நேரம் செயல் படவேண்டும் போல் தெரிகிறது. தானியங்களின் கட்டுரைகளின் தொடக்கத்தில் புதிய வார்ப்பருவை இட்டால் என்ன? " இது தானியங்கியை கொண்டு எழுதப்பட்டது. இதை தமிழ் விக்கிப்பீடியா நடைக்கு ஏற்றார் போல் மாற்றி எழுதவேண்டும். இந்த கட்டுரை பல ஆங்கில சொற்களை அப்படியே தமிழ் எழுத்துக்கள் கொண்டு எழுதப்பட்டிருக்கலாம்...." இப்படி. செல்வாவின் கருத்தும் ஏற்புடையதே. --குறும்பன் 17:29, 29 ஜனவரி 2010 (UTC)
- குறும்பனின் கருத்தை ஏற்றுக் கொள்கிறேன். இப்போதைக்கு ஒவ்வொரு கூகிள் மொழிபெயர்ப்புக் கட்டுரையின் ஆரம்பத்திலும் தகுந்த வார்ப்புரு ஒன்றை இணைப்பதே நல்லது. அத்துடன் தகுந்த ஒரு பகுப்புக்குள்ளும் இட வேண்டும். (ஏற்கனவே இத்தகைய கட்டுரைகளுக்கு பகுப்பு ஒன்று உள்ளது என ஞாபகம். தேடினேன் கிடைக்கவில்லை.)--Kanags \பேச்சு 02:03, 30 ஜனவரி 2010 (UTC)
- இது பற்றிய நமது முந்தைய உரையாடலை அடுத்து ரவி இது பற்றி சில வழிகாட்டல் நெறிமுறைகளை இந்திய விக்கிப் பயனர் குழுமத்துக்கு எழுதினார். அதை மேற்கொண்டு கூகிள் திட்ட மேலாளருக்கு மடல் எழுத வேண்டும். அதுவரை நீக்கல் போன்ற பெரிய நடவடிக்கைகள் எதையும் மேற்கொள்ள வேண்டாமெனக் கேட்டுக் கொள்கிறேன். தற்போதைக்கு வேண்டுமானால் வார்ப்புரு இடுதல், தனிப் பெயர்வெளிக்கு நகர்த்துதல் போன்ற நடவடிக்கைகளை மட்டும் மேற்கொள்ளலாம். -- சுந்தர் \பேச்சு 09:00, 30 ஜனவரி 2010 (UTC)
சுந்தர், தகவலுக்கு நன்றி. தமிழ் விக்கிப்பீடியாவையோ வேறெந்த விக்கிப்பீடியாவையோ தரமற்ற கட்டுரைகளால் நிரப்புவது கூகிள் நிறுவனத்தினரின் நோக்கமாக இருக்காது என்றே நான் நம்புகிறேன். ஏனெனில், அதன் மூலம் அவர்களுக்கு இலாபம் எதுவும் இல்லை. அவர்கள் மொழிபெயர்ப்புக்காக அமர்த்தியவர்களில் சிலர் தமது வேலையை முறையாகச் செய்யவில்லை என்பதுதான் பிரச்சினை. இது கூகிளின் நலனுக்கும் உகந்தது அல்ல என்பதால், நாம் முறையாக எடுத்துச் சொன்னால் அதை அவர்கள் கவனியாமல் விடுவதற்கு நியாயம் எதுவும் இல்லை. நல்ல நீளமான கட்டுரைகளை நாங்களே முழுமையாக மொழிபெயர்ப்பதானால் நீண்ட நேரம் தேவைப்படும். கூகிள் நிறுவனத்தினர் நல்ல முறையில் கட்டுரைகளை மொழிபெயர்க்க உதவுவார்களானால் அது எமக்கு நன்மை தான். எனவே சுந்தர் கூறியது போல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ளாது இணக்கமான முடிவை எட்ட முயலுவது நல்லது. அதே வேளை இத்தகைய கட்டுரைகள் மீது ஒரு கண் வைத்துக்கொள்வதும் தேவையானது தான். பிரச்சினைக்குரிய கட்டுரைகளுக்கு உரிய வார்ப்புரு இடுவதும் அவற்றைத் தனியானதொரு பகுப்பில் இட்டு மேம்படுத்த வசதி செய்வதும் பயனுள்ள நடைமுறைகளே. மயூரநாதன் 15:05, 30 ஜனவரி 2010 (UTC)
- கூகுள் தமிழாக்கக் கட்டுரை என்ற வார்ப்புருவை கட்டுரைகளின் மேல் பகுதியில் சேர்த்து விடுங்கள். இவை பகுப்பு:கூகுள் தமிழாக்கக் கட்டுரைகள் என்ற பகுப்புக்குள் உள்ளன.--Kanags \பேச்சு 04:02, 1 பெப்ரவரி 2010 (UTC)
W. Davis: Why Ancient Wisdom Matters in the Modern World
தொகுNoted Polish scholar on Tamil literature dies
தொகுNoted Polish scholar on Tamil literature dies
- வருத்தமான செய்தி :( --செல்வா 22:05, 6 பெப்ரவரி 2010 (UTC)
இந்திய மொழிகள் விக்கி ஒப்பீடு எங்கே?
தொகுஇந்திய மொழிகள் விக்கிகளை ஒப்பிட்டு பதிவு செய்திருந்த பக்கம் எங்கே? யாரோ நீக்கிவிட்டார்கள்போலத் தெரிகின்றதே (அல்லது என் கண்களுக்குச் சிக்கவில்லையா?)!--செல்வா 22:05, 6 பெப்ரவரி 2010 (UTC)
- இங்கிருப்பதைக் கண்டேன்.--செல்வா 22:45, 6 பெப்ரவரி 2010 (UTC)