விக்கிப்பீடியா:ஆலமரத்தடி/தொகுப்பு37

நினைவில் நிற்கும் நேர்காணல்கள்

தொகு
 
நூல் முகப்பு

அண்ணா கண்ணன் தொகுத்த அவரது நேர்காணல்கள் அடங்கிய நூல் ஒன்றை "நினைவில் நிற்கும் நேர்காணல்கள்" என்னும் தலைப்பில் திரிசக்தி பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இதில் முன்னர் நான் "சென்னை ஆன்லைன்" இணைய இதழுக்குத் தமிழ் விக்கிப்பீடியா தொடர்பாக வழங்கிய நேர்காணலும் இடம்பெற்றுள்ளது.--மயூரநாதன் 13:39, 18 ஜூன் 2010 (UTC)

நீங்கள் அளித்த நேர்காணல் இப்படி நிலையாக பதிவானது கண்டு மிக மிக மகிழ்ச்சி. அண்ணா கண்ணனுக்கும், திரிசக்தி பதிப்பகத்துக்கும் பாராட்டுகள். --செல்வா 17:11, 18 ஜூன் 2010 (UTC)
மிக்க மகிழ்ச்சி மயூரநாதன். அண்ணாகண்ணன் அவர்களுக்கும் எனது பாராட்டுகள்--Kanags \உரையாடுக 05:11, 19 ஜூன் 2010 (UTC)

விக்கிப்பீடியா தகவல் பக்கங்கள் போட்டி முடிவு அறிவிக்கப்பட்டது

தொகு

அனைவருக்கும் வணக்கம்!

 
  • இன்று ( 18-6-10) மதியம் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா பள்ளி, கல்லூரி மாணவருக்கான போட்டி முடிவுகளை வெளியிட்ட நிகழ்வில் கலந்து கொண்டோம். கல்லூரி மாணவர்களுக்கான விக்கிப்பீடியா தகவல் பக்கங்கள் போட்டியில் முதல் பரிசு வென்றவர்களின் பெயர்களைப் படித்தார் அமைச்சர். தகவல் தொழில்நுட்பவியல் துறைச் செயலாளர் தாவிதார், அண்டோ பீட்டர், வெங்கடரங்கன், மதன் குமார் (அண்ணா பல்கலைக்கழகம்), யுவராசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். (யுவராசுக்கு வலைத்தள ஆக்கத்திற்காக சிறப்புப்பரிசு அளிக்கப்படுகிறது)
  • பத்திரிகையாளர் சந்திப்பிற்குப் பின்னர் நடைபெற்ற சில நிமிடக் கலந்துரையாடலில், “விக்கிப்பீடியா குழு வருகின்றீர்கள் அல்லவா?” என்று வினவினார் அமைச்சர்; த. தொ.நு. செயலர் தாவிதாரிடம் “அழைப்பிதழ் இருந்தால் கொடுங்கள், இங்கேயே விக்கியர்களுக்கு அளித்து விடலாம்” என்றார் (அவை ஏற்கனவே கோவைக்கு அனுப்பப்பட்டு விட்டதால் அழைப்பிதழைப் பெற முடியவில்லை); “அங்கே சந்திக்கலாம்” என்று கூறிவிட்டுச் சென்றார்.
  • பின்னர், நாம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, அடையாள அட்டை வழங்க ஏற்பாடு செய்வதாகக் கூறினார் செயலாளர்.
  • மேலும், விக்சனரியைப் பற்றியும் செயலாளரின் காதில் போட்டு வைத்தோம். விக்கிப்பீடியா போட்டியை தொடர்ந்து நடத்தத் திட்டம் உள்ளது என்று கூறினார்.--பரிதிமதி 17:00, 18 ஜூன் 2010 (UTC)
நல்லது பரிதிமதி, தமிழ் விக்கிப்பீடியாவின் மக்கள் தொடர்புப் பணி ஒன்று வெற்றியாக நிறைவேறி உள்ளது. இதில் பங்கு கொண்ட எல்லோருக்கும் பாராட்டுக்கள்--மயூரநாதன் 19:01, 18 ஜூன் 2010 (UTC)

வாழ்த்துகள் பரிதிமதி --குறும்பன் 20:39, 18 ஜூன் 2010 (UTC)

தமிழ் விக்கி சார்பில் நிகழ்வில் கலந்து கொண்டதற்கு நன்றி, பரிதிமதி. --கலை 23:23, 18 ஜூன் 2010 (UTC)

உலகத் தமிழ் இணைய மாநாட்டில் தமிழ் விக்கிப்பீடியா

தொகு

கோயம்புத்தூரில் வருகிற சூன் 23 முதல் சூன் 27 வரை நடைபெறவுள்ள உலகத் தமிழ் இணைய மாநாட்டிற்கான நிகழ்ச்சி நிரல் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் விக்கிப்பீடியா குறித்த எனது பங்களிப்புகள் இரண்டு நாட்கள் இடம் பெற்றுள்ளன.

  • 24-06-2010 அன்று உமர் தம்பி அரங்கில் நடைபெற உள்ள தமிழ் மின் தரவு மற்றும் மின்னகராதிகள் எனும் தலைப்பிலான மூன்றாவது அமர்வில் மாலை 5.30 மணி முதல் 6.00 மணி வரை "தமிழ் விக்கிப்பீடியா எனும் தமிழ்க் கலைக்களஞ்சியம்" என்கிற தலைப்பில் எனது கட்டுரை வாசிக்கப்படவுள்ளது.
  • 26-06-2010 அன்று யாழன் சண்முகலிங்கம் அரங்கில் நடைபெற உள்ள கணினி மொழியியல் எனும் தலைப்பிலான நான்காவது அமர்வில் மாலை 5.00 மணி முதல் 6.00 மணி வரை "வலைப்பூக்கள், விக்கிப்பீடியா" கலந்துரையாடல் நிகழ்வு ஒன்றும் இடம் பெற்றுள்ளது. இந்தக் கலந்துரையாடல் நிகழ்விற்கு பாரதிதாசன் பல்கலைக்கழகப் பேராசிரியர் இராதா செல்லப்பன் தலைமை வகிக்கிறார். கிழக்குப் பதிப்பகம், பத்ரி சேஷாத்ரி முன்னிலை வகிக்கிறார். இந்நிகழ்வில் புதுச்சேரி இளங்கோவன், அ.ரவிசங்கர் (கோயம்புத்தூர்), காசி ஆறுமுகம் ஆகியோருடன் நானும் (தேனி எம்.சுப்பிரமணி) கலந்து கொள்ள உள்ளேன். --Theni.M.Subramani 18:25, 18 ஜூன் 2010 (UTC)
மகிழ்ச்சி சுப்பிரமணி, உங்கள் முயற்சி தமிழ் விக்கிப்பீடியாவை உயர்ந்த மட்டத்தில் அறிமுகப்படுத்த உதவும். உங்கள் பங்களிப்புகள் வெற்றிகரமாக நிறைவேற வாழ்த்துக்கள். ---மயூரநாதன் 19:11, 18 ஜூன் 2010 (UTC)

வாழ்த்துகள் தேனி சுப்பரமணி --குறும்பன் 20:39, 18 ஜூன் 2010 (UTC)

கட்டுரைப் போட்டி முடிவுகள்

தொகு

  வணக்கம். நடந்து முடிந்த கட்டுரைப் போட்டி முடிவுகளை இணைத்துள்ளேன். பரிசு பெற்றவர்களுக்கு நமது வாழ்த்துகளைத் தெரிவிப்போம். மதிப்பீட்டுப் பணியில் திருச்சி பெரியண்ணன் மிகவும் உதவினார். குறும்பன், சிறீதரன், மயூரநாதன், அராப்பத், இபாயத்துல்லா, சுந்தர், இரவி, பரிதிமதி, நற்கீரன், செல்வா உள்ளிட்ட பலரும் வெளியாள் நடுவர்களும் அரும்பணியாற்றினார்கள். நான் தற்போது வெளியூர் பயண ஏற்பாடுகளில் இருப்பதால் விரிவாக எழுத இயலவில்லை. பிறகு, இப்போட்டிக்குப் பின்பற்றிய வழிமுறைகள் குறித்து ஆவணப்படுத்த வேண்டும். --கலை 23:21, 18 ஜூன் 2010 (UTC)


மிகுந்த பணிச்சுமைக்கு மத்தியில் இந்த போட்டி மதிப்பீட்டை ஒருங்கிணைத்த கலைக்கு நன்றிகள். அடுத்து வரும் போட்டிகளில் இதை ஒரு இருவரில் சுமத்தாமால் செய்ய வேண்டும். --Natkeeran 02:10, 19 ஜூன் 2010 (UTC)

விக்கிப் பயனர்களுக்கும் நடுவர்களுக்கும், அரசினருக்கும் நன்றியும் பாராட்டுகளும்

தொகு

இரவுபகல் எனப் பாராது அயராது உழைத்து, போட்டிக்கான ஒருங்கிணைப்பு வேலைகளை மிகச் சிறப்பாக செய்த கலையரசி, இரவி ஆகிய இருவருக்கும் அவர்களுக்கு உற்ற துணையாக நின்று மிக உதவிய பெரியண்ணன், குறும்பன், சிறீதரன், மயூரநாதன், அராபத், இபயத்துல்லா, சுந்தர், பரிதிமதி, நற்கீரன் ஆகியோருக்கும், குறுகிய காலத்தில் மதிப்பீடு செய்து பேருதவி புரிந்த வெளி நடுவர்களுக்கும் தமிழ் விக்கிப்பீடியாவின் சார்பிலும் என் சார்பிலும் நெஞ்சார்ந்த நன்றி, உளமார்ந்த பாராட்டுகள். விக்கிப்பீடியாவுக்கு எல்லா வகைகளிலும் உதவி செய்து ஊக்கம் அளித்த தமிழ்நாடு அரசின் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மாண்புமிகு திருவாட்டி பூங்கோதை ஆலடி அருணா அவர்களுக்கும், தகவல் தொழில்நுட்பவியல் துறைச் செயலாளர் பி.டபிள்யூ.சி டேவிடார் இ.ஆ.ப அவர்களுக்கும், முனைவர் அருள் நடராசன் அவர்களுக்கும், திரு மதன் குமார் (அண்ணா பல்கலைக்கழகம்), போட்டிக்கட்டுரைகளைப் பதிவு செய்து வலைத்தளத்தைப் பராமரித்த திரு. யுவராசுக்கும் நம் நெஞ்சார்ந்த நன்றி உரித்தாகுக. --செல்வா 05:34, 19 ஜூன் 2010 (UTC

  • செல்வா, கட்டுரைப் போட்டி சிறப்பாக நடந்து நிறைவேறியது குறித்து மிக்க மகிழ்ச்சி. விக்கியரும் பிறரும் கூட்டாக இணைந்து செயல்பட்டது போற்றற்குரியது. நூற்றுக் கணக்கான கட்டுரைகள் பெறப்பட்டதாக அறிகிறேன். அவற்றைத் தமிழ் விக்கியில் ஏற்றுவது குறித்து வழிமுறைகள் உளவா? கட்டுரைகளை மதிப்பீடு செய்தவர் தாமே தாம் கண்ட குறைகளைச் சீர்செய்து, நடைக்கும் பொருளுக்கும் மெருகூட்டி, விக்கியில் ஏற்ற வழிவகுக்கலாமா? உரிமை மீறல் நிகழும் கெடுபாடு (risk) உண்டா? வணக்கம்!--George46 13:13, 19 ஜூன் 2010 (UTC)
பவுல், நீங்கள் அடுத்த கட்டத்தைப் பற்றி எண்ணத் தொடங்கியது நல்லது. என்னுடைய பரிந்துரை பின்வருமாறு:
  1. கட்டுரைகளை அனுப்பிய வடிவலேயே ஒருங்குறி மாற்றம் மட்டும் செய்து கோப்புகளில் இடுதல்
  2. கட்டுரைப்போட்டிக்கென தனிக்கணக்கு ஒன்றைத் தொடங்குதல்
  3. அதன்வழியாக தானியங்கி துணையுடன் கட்டுரைகளை உள்ளபடிய பதிவேற்றுதல். கூடவே ஆக்குனர் பெயரைப் பேச்சுப் பக்கத்தில் சிறப்பு வார்ப்புருவின் துணையுடன் இடுதல்.
  4. மதிப்பீட்டாளர்களும் வேறு எவரும் வழமை போலவே கட்டுரைகளைத் திருத்துதல். கட்டுரை ஆக்குனரே விக்கியில் சேர்ந்திருந்தாலும் அவரும் அந்தத் தொடக்கநிலையிலிருந்தே வளர்த்தெடுத்தல் நல்லது.
இவற்றில் முதல் பணி மதிப்பீட்டின் போது ஓரளவு நிறைவாகி விட்டது. இருந்தாலும் pdf கோப்புகளாக இல்லாமல் வெறும் உரைக் கோப்புகளாக, பயனர் பெயருடன் சேர்த்துப் பதியும் பொறுப்பை யாராவது எடுத்துக் கொண்டால் நல்லது. தானியங்கிப் பணி எளிது. நானோ வேறு எவருமோ மேற்கொள்ள முடியும். ஏற்கனவே இத்திட்டத்தில் பங்களிக்க இயலாத சூழலில் இருந்த விக்கியர் எவரேனும் இப்பொறுப்பை (அதாவது முதல் பணியை) எடுத்துச் செய்தால் நன்றாக இருக்கும். விக்கித் தேரின் ஒரு சிறப்பியல்பு, ஊரார் அனைவரும் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் கூடித் தேரை இழுக்க வேண்டியதில்லை. :) -- சுந்தர் \பேச்சு 13:42, 19 ஜூன் 2010 (UTC)

பவுல் வறுவேல் (George46) ஐயா, உரிமை மீறல் ஏதும் இராது, ஏனெனில், விக்கிப்பீடியாவுக்கான கிரியேட்டிவ் காமன்சு பகிர்வுரிமத்தின் கீழேயே பதிவாகும்; நாம் அனைவரும் கட்டாயம் கூட்டாக திருத்தியும், மேலும் சேர்த்து வளர்த்தெடுக்கவும் இயலும். மேலே சுந்தர் சொன்னது யாவும் செய்ய வேண்டியனவே. சுந்தரின் விக்கித்தேர் குறிப்பு (ஊரார் அனைவரும் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் கூடித் தேரை இழுக்க வேண்டியதில்லை) களிப்பூட்டிய சிறப்பான ஓர் உண்மை! வறுவேல், நீங்கள் வெளி நடுவராக இருந்து உதவியதும் அல்லாமல், மிகச் சிறந்த முறையில் வழிகாட்டுமுகமாக நேர்த்தியாக விக்கியில் ஆக்கங்கள் செய்துவருவது காண மகிழ்ச்சியாக உள்ளது. நன்றி.--செல்வா 16:33, 19 ஜூன் 2010 (UTC)

பயிற்சி நிகழ்படங்கள்

தொகு

வணக்கம். சூன் 23 - 27 தமிழ் இணைய மாநாட்டுக் கண்காட்சியில் விக்கிப்பீடியா, விக்சனரி பற்றி விளக்குவதற்காக கடைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் பயன்படுத்தத் தக்க வகையில் பயிற்சி நிகழ்படங்கள், powerpoint கோப்புகள் தேவை. நேர நெருக்கடியாக இருப்பதால் யாராவது இவற்றைத் தயாரித்து அளித்தால் உதவும். எடுத்துக்காட்டுக்கு, http://ravidreams.net/tamil-wikipedia-intro-flash.zip . camtasia studio மென்பொருள் கொண்டு இதனைச் செய்யலாம். கடவுச் சொல் விவரம் தேவைப்பட்டால் தனிமடலில் தொடர்பு கொள்ளவும். நன்றி--ரவி 14:43, 21 ஜூன் 2010 (UTC)


முயற்சிக்குப் பாராட்டு

தொகு

"தனிமங்களின் தமிழ்ப் பெயர்கள்" என்ற கட்டுரையை எழுதியுள்ள பயனரின் முயற்சியைப் பாராட்டுகிறேன். இதையவர் எழுதியுள்ள விதம் நன்று! உலகத் தமிழர் அனைவர்க்கும் புரியும் வகையில் பெயர்கள் இருக்கவேண்டியது அவசியம்! அவர்க் குறிப்பிட்டுள்ள பல்பெயர்களை என்னால் புரிந்துகொள்ள இயலவில்லை! அரசு இச்செம்மொழி மாநாட்டின் இறுதியில் வெளியிடப்போகும் தீர்மாணங்களிலொன்றாக இதுவுமிருக்க விக்கியிலுள்ளோர் ஆவண செய்ய வேண்டுகிறேன்!
இயலவில்லை எனில் நாம் (விக்கியர்) அனைவரும் இணைந்து திட்டமான, தரமான பெயர்களைத் தயாரித்து அரசுக்களிப்போம்! தமிழ் விக்கியில் கிட்டத்தட்ட 10000 பயனர்கள் பதிந்துள்ளதாக அறிந்தேன். இருப்பதோ 118 தனிமங்கள் (அடையாளம் காணப்பட்டவை) மட்டுமே! 84 பேருக்கு ஒரு தனிமம் மட்டுமே! அவ்வெண்பத்துநால்வரும் (முடிந்தால்) அல்லது குறைந்தபட்சம் 10 பேராவது இணையம் மூலம் குழுவாகச் செயல்பட்டு குறிப்பிட்ட தனிமங்குறித்து விரிவாக ஆய்ந்து ஒரு தூய்தமிழ்ப் பெயரிட முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும்.
இது குறித்து நிர்வாகி அவர்கள் கட்டுரைப்போட்டி வலைவாசல் பக்கத்திற்குச் செல்ல ஓர் அறிவிப்பை முகப்புப் பக்கத்தில் வெளியிட்டது போல, இக்குழுவாக்கத்திற்கு ஓர் அறிவிப்பு தேவை!
--சூர்ய பிரகாசு.ச.அ. 15:15, 25 ஜூன் 2010 (UTC)

தமிழ் இணையப் பயிலரங்கு

தொகு

தமிழ் இணையப் பயிலரங்கு - http://tamil-internet-workshop.blogspot.com/--ரவி 20:35, 25 ஜூன் 2010 (UTC)

TVU Donated Dictionary to Wiki

தொகு

In the Tamil Internet conference validictory function, IT Minister Poongathai Aladi aruna handed over Tamil Virtual University's Kalaichol agarathi CD to Tamil Wikipedia teams for Tamil Wiktionary (http://ta.wiktionary.org/). IAS officers Davidar, Soman Babu(Elcot), Prof Anandakrishnan and Infitt Chair, ED were present. Initially they called for Prof Selva, he was not present so me and Mauran Received on behalf of Tamil Wikipedia. I thanked Prof. Nakeeran on behalf of Wikipedia. He told he will give another 6 chapters too in future. This is for your kind info - மாஹிர் 10:18, 27 ஜூன் 2010 (UTC)

அந்தச் செய்திக்கு நன்றிகள் மாகிர். மாநாட்டில் தமிழ் விக்கி சார்பில் கலந்து கொண்ட அனைவருக்கும் எனது வாழ்த்துகள். மயூரன் இலங்கையில் இருந்து வந்திருந்தாரா?--Kanags \உரையாடுக 11:02, 27 ஜூன் 2010 (UTC)

செய்திக்கு நன்றி, மாகிர். இது குறித்து முன்பே அறிந்திருந்தால் அனைவரும் அங்கு இருந்திருக்கலாம். தமிழ் இணையப் பயிலரங்கு களைப்பு காரணமாக பலரும் இன்று அரங்குக்கு வராமல் இருந்து விட்டோம். நீங்கள் இருவரும் இணைந்து பெற்றுக் கொண்டது மகிழ்ச்சி. (மு. மயூரன் இலங்கையில் இருந்து வந்திருந்தார்)

மற்ற விவரங்கள்

இது வரை நான்கு பேருக்கு மேல் தமிழ் விக்கிப்பீடியர்கள் ஒரே இடத்தில் கூடியது இல்லை :) இந்த முறை மாகிர், மு. மயூரன், செல்வா, சுந்தர், த. உழவன், அருநாடன், பரிதிமதி, பழ. கந்தசாமி, சோடா பாட்டில், சிவக்குமார், நான், தேனி எம். சுப்பிரமணி, பாலாசி கணேசன் ஆகியோர் கண்டு மகிழ்ந்தோம்.கிட்டத்தட்ட ஒரு நாளைக்கு 25 தன்னார்வலர்கள் முன்னின்று இரண்டரை நாட்கள் நடத்திய தமிழ் இணையப் பயிலரங்கு மிகுந்த பயன் தந்தது. இதில் கணினியில் தமிழ்99 விசைப்பலகை வழி தமிழ்த் தட்டச்சு, செல்பேசியில் தமிழ் பயன்பாடு, விக்கித்திட்டங்கள், வலைப்பதிவுகள், கட்டற்ற மென்பொருள்கள், உபுண்டு பற்றிச் சொல்லிக் கொடுத்தோம். ஆங்கில விக்கிப்பீடியா பயன்படுத்தும் பலருக்குக் கூட தமிழ் விக்கிப்பீடியா என்று ஒன்று இருப்பது தெரியாமல் இருந்தது. ஆர்வத்துடன் தமிழ் விக்கிப்பீடியா பற்றி கேட்டுக் கொண்டார்கள். தமிழ் இணையப் பயிலரங்கு பற்றி இந்து நாளிதழில் வந்த செய்தியைக் காணலாம்

இணைய மாநாட்டில் வலைப்பதிவுகள், விக்கிப்பீடியா பற்றிய கலந்துரையாடல் ஒன்றும் நடந்தது. இதில் தேனி எம். சுப்பிரமணி, சுந்தர், நான் கலந்து கொண்டோம்.

தமிழ் விக்கிப்பீடியா கட்டுரைப் போட்டியில் பரிசு பெற ஆறு பேர் வந்திருந்தார்கள். அவர்களிடம் ஒரு நிகழ்பட உரையாடலும் நிகழ்த்தினோம்.

மிகுந்த களைப்பாக இருப்பதால் பிற விவரங்கள், படங்களைப் பிறகு தரவேற்றுகிறேன். --ரவி 11:16, 27 ஜூன் 2010 (UTC)

விக்கிமீடியா நிர்வாகிகள் பேச்சில் இரண்டு தமிழ் விக்கிப்பீடியர்கள்

தொகு
 
சிம்மி வேல்சின் பேச்சின் போது நற்கீரன்

விக்கிமேனியா 2010 மாநாட்டின் முதல் நாள் தொடக்கத்தில் விக்கிமீடியாவின் சூ கார்டினர் விக்கிமீடியா திட்டங்களை முன்வைத்துப் பேசினார். அப்போது, தனது பயணங்களின்போது சந்தித்த சிலரது படங்களையும் திரையில் காட்டினார் அதில் ஒருவர் நமது சுந்தர்.

இறுதி நாளில் சிறிய விக்கிப்பீடியாக்கள் தொடர்பாக விக்கிமீடியா நிறுவனர் சிம்மி வேல்சு பேசினார். அப்போது ஆறு விக்கிப்பீடியா ஆர்வலர்களுடன் இசுக்கைப்பு வழியாக அவர் நடத்திய பேட்டிகளின் நிகழ் படங்களின் பகுதிகளையும் போட்டுக் காட்டினார். அதில் நமது நற்கீரன் இரண்டு முறை வந்தார்.

நற்கீரன் இடம்பெற்ற படத்தை அருகில் பாருங்கள் படம் தெளிவாக வரவில்லை. சுந்தருடைய படம் எதிர்பாராமல் வந்ததால் எடுக்கமுடியவில்லை.

இ. மயூரநாதன்.

தகவலுக்கும் படத்துக்கும் நன்றி, மயூரநாதன். சூவுக்கும் சிம்மிக்கும் நமது விக்கி மீது நல்ல மதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதி. இதைத் தொடர்ந்து தக்க வைத்து, நமது தளத்தின் வளர்ச்சிக்குப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். -- சுந்தர் \பேச்சு 08:48, 13 ஜூலை 2010 (UTC)

மகிழ்ச்சியான செய்தி. தலைமறைவாக இருந்த நற்கீரன் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறார் ;)நம்மில் பலரும் பல்வேறு களங்களில் தமிழ் விக்கியின் சார்பாளர்களாகச் செயல்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது. இது நமது திட்டத்துக்கு கிடைத்த நற்பேறு. --ரவி 11:32, 13 ஜூலை 2010 (UTC)

செருமனியின் முன்னணி இதழான Spiegel லும் http://www.spiegel.de/netzwelt/web/0,1518,706001,00.html தமிழ் விக்கி பற்றிய சிறிய குறிப்பு வருகிறது. tamil wikipedia என்று கூகுள் செய்திகளில் தேடிக் கொண்டிருக்கிறேன் :) சிறிய விக்கிகளில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடியதாக நமது விக்கி மனதில் பதிந்து வருகிறது என்பது மட்டும் புலப்படுகிறது! --ரவி 11:44, 13 ஜூலை 2010 (UTC)

எனக்கு செருமன் மொழி தெரியாவிட்டாலும் சூழலை வைத்துப் பார்க்கும்போது சிம்மி வேல்சின் பேச்சு தொடர்பான செய்தியே இது என்று தோன்றுகிறது. அவருடைய பேச்சிலேயே அவர் எடுத்துக்கொண்ட ஆறு மொழி விக்கிப்பீடியாக்களின் மக்கள்தொகை, கட்டுரை எண்ணிக்கை என்பவற்றைப் பட்டியல் இட்டிருந்தார். ஆறு மொழிகளினதும் விபரங்களை அவர் தந்திருந்தும் செய்தியில் தமிழ் விபரங்களே தரப்பட்டுள்ளன. தவிரவும் பில் கேட்சு பற்றி அவர் குறிப்பிட்டது சிங்கள விக்கிப்பீடியா தொடர்பில் ஆகும். சிங்கள விக்கிப்பீடியர் பேட்டி அளிக்கும்போது வின்டோசில் சிங்கள மொழிக்கு ஆதரவு இல்லாதது பற்றிக் குறிப்பிட்டிருந்தார் அது தொடர்பில் பேசும்போதே அடுத்த மாதமளவில் தான் பில்கேட்சைச் சந்திக்க இருப்பதாகவும் வசதிப்பட்டால் இது குறித்து அவருடன் பேசுவதாகவும் குறிப்பிட்டிருந்தார். ஆனால் செய்தி அதையும் தமிழ் விக்கி மீது ஏற்றிக் கூறுவதாகவே தெரிகிறது. ஒட்டு மொத்தமாகப் பார்க்கும்போது தமிழ் பற்றியே பலருக்கும் கூடுதலாகத் தெரிந்திருக்கிறது என்று கொள்ளலாம். -- மயூரநாதன் 13:51, 13 ஜூலை 2010 (UTC)
தமிழ் இணைய மாநாடும் விக்கிமேனியா மாநாடும் சிறப்பாக நடந்தேறி தமிழ் விக்கிப்பீடியாவும் விக்கிப்பீடியரும் முன்னணியில் இருப்பது கண்டு பூரிக்கிறேன். இதனில் பங்காற்றிய அனைவருக்கும் எனது வந்தனங்களும் வாழ்த்துகளும். குறிப்பாக இரவி,மயூரநாதன்,சுந்தர் மற்றும் நற்கீரன் இவர்களின் முனைப்பு த.விக்கிக்கு வலு சேர்ப்பது கண்டு அகமகிழ்கிறேன். வளர்க அவர்தம் பணி!--மணியன் 15:23, 13 ஜூலை 2010 (UTC)

மிக இனிப்பான செய்திகள் :) முன்பினும் ஊக்கத்துடன் உழைப்போம். அண்மையில் கோவையில் நடந்த செம்மொழி மாநாட்டில் பல கட்டுரைகளில் தமிழ் விக்கிப்பீடியாவைப்ப் பற்றி உயர்வாகப் பேசினர். இது தவிர பல மிகச் சிறந்த எழுத்தாளர்கள் ஆய்வாளர்கள் தமிழ் விக்கியில் பங்களிப்பதாக வாக்களைத்துள்ளனர். பேரா. தெய்வசுந்தரம், முனைவர் உலோ செந்தமிழ்க்கோதை, முனைவர் இராசுகுமார், பல கல்வெட்டாய்வாளர்கள், பற்பல அறிஞர்கள் உதவ முன்வருவதாகக் கூறினர். இந்த எழுச்சியுந்தத்தை தக்க முறையில் வளர்த்தெடுப்போம். தமிழ் விக்சனரிக்கு தமிழக அரசின் தொழில்நுட்பச் செயலர் திரு டேவிதாரும் முனைவர் நக்கீரனும் (தமிழ் இணைய பல்கலைக்கழக இயக்குனர்)ஆறு தொகுதிகளில் உள்ள அத்தனை சொற்களையும் கொடையாக தந்துள்ளார்கள் (மென்படிவத்திலும் தந்துள்ளார்கள்). இன்னும் பல நன்மைகள் வர உள்ளன. தரத்தைத் தளர்த்தாது, சீரான முறையில் வளர்ந்த்தெடுத்தால் பெரும் பயன் விளையும். --செல்வா 22:54, 13 ஜூலை 2010 (UTC)

பல வழிகளிலும் தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சியும், அதில் தமிழ் விக்கிப்பீடியர்களின் பங்களிப்பையும் கண்டு மகிழ்ச்சி. முன்னேற்றத்திற்காக உழைக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்களும், நன்றிகளும்.--கலை 06:01, 16 ஜூலை 2010 (UTC)