விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/அக்டோபர் 3, 2010
[[Image:|385px|{{{texttitle}}}]] | |
இரண்டாம் நிக்கலாசு (1868 - 1918) இரசியப் பேரரசின் கடைசி மன்னன். இவன் 1894 முதல் 1917 இல் பதவியில் இருந்து அகற்றப்படும் வரையில் இரசியாவின் மன்னனாக இருந்தான். முதலாம் உலகப் போரில் இரசிய இராணுவத்தைக் கொண்டு நடத்தியவன். ஆனாலும் நாட்டில் இடம்பெற்ற அரசியல் மாற்றங்களால் அவனுக்கு ஈடு கொடுக்க முடியவில்லை. இவனது ஆட்சி இரசியப் புரட்சியை அடுத்து முடிவுக்கு வந்தது. இவனும் இவனது குடும்பமும் கைது செய்யப்பட்டனர். 1918 சூலை 16-17களில் நிக்கலாசு, மனைவி, மற்றும் ஐந்து பிள்ளைகள், ஒல்கா (பி. 1895), தத்தியானா (பி. 1897), மரீயா (பி. 1899), அனஸ்தாசியா (பி. 1901), அலெக்சி (பி. 1904) உட்பட முழுக் குடும்பமும் போல்செவிக்குகளால் கொல்லப்பட்டனர். இரண்டாம் நிக்கலாசின் எச்சங்கள் 1991 இல் கண்டுபிடிக்கப்பட்டு, அரச மரியாதைகளுடன் 1998 இல் சென் பீட்டர்சுபேர்க்கில் அடக்கம் செய்யப்பட்டது. |