விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/2021

செந்நாய் நாய்க்குடும்பத்தைச் சேர்ந்த ஓர் உள்ளினம் ஆகும். இது ஆசியக் காட்டு நாய், இந்தியக் காட்டு நாய், காட்டு நாய் என பல பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. ஜவ்வாது மலை வாழ் மக்கள் இந்த விலங்கை வேட்டைக்காரன் என்று குறிப்பிடுகிறார்கள்.

படம்: Davidvraju
தொகுப்பு · சிறப்புப் படங்கள்

செந்தார்ப் பைங்கிளிகளின் வால் நீண்டு கூர்மையாக முடிகிறது. பச்சை நிறத்துடன், வளைந்து சிவந்த அலகும், கருப்பு இளஞ்சிவப்பு கலந்த கழுத்து வளையம் போன்ற ஆரம் உடையது. இவ்வின பெண்கிளி எல்லா வகையிலும் ஆண் கிளி போல இருந்தாலும் இந்த ஆர வளையம் இல்லாமல் இருக்கும்.

படம்: Andreas Eichler
தொகுப்பு · சிறப்புப் படங்கள்

நிகழ்த்து கலைகளில் ஒன்றான பரதநாட்டியம் ஆடும் ஒரு பெண். இந்த நடனத்தை ஆடுபவர்கள் மிகப்பெரும்பான்மையோர் பெண்களாகும். சைவ சமயத்தவர்களின் முழுமுதற் கடவுளான சிவன் கூட, நடராஜர் வடிவத்தில் இந்த நடனத்தை ஆடியபடி சித்தரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

படம்: Augustus Binu
தொகுப்பு · சிறப்புப் படங்கள்

ஒரு நேபாள இந்து மணப்பெண், திருமண வீட்டின் விருந்தினர்களுக்கும் மணமகனுக்கும் வணக்கம் தெரிவிக்கிறார். இடம்: உடுலால்தொக்கு, காப்ரேபலாஞ்சோக் மாவட்டம், நேபாளம்.

படம்: Nirmal Dulal
தொகுப்பு · சிறப்புப் படங்கள்

குசராத்து நெல் வயலில் வேலை செய்யும் பெண்கள். நெற்பயிர் ஆசியாவின் பெரும்பான்மையான பகுதிகளில் பயிர் செய்யப்படுகிறது.

படம்: Bernard Gagnon
தொகுப்பு · சிறப்புப் படங்கள்

கொட்டாவி தன்னியல்பாக வாயைப் பெரிதாகத் திறந்து மூச்சுக் காற்றை வாய் வழியாகவும் மூக்கு வழியாகவும் உள்ளிழுப்பதும், அதே வேளையில் செவிப்பறை விரிவடைவதும், பின்னர் நுரையீரலில் இருந்து பெருமூச்சாக வாய்வழியே காற்றை வெளிவிடுவிடுவதுமான செயலைக் குறிக்கும்.

படம்: Basile Morin
தொகுப்பு · சிறப்புப் படங்கள்

நொட்ரே-டேம் டி மொன்ரியல் பசிலிக்கா கனடாவின் கியூபெக் மாகாணத்தின் மொன்றியால் நகரின் வரலாற்று முக்கியத்துவப் பகுதியில் அமைந்துள்ள ஒரு பசிலிக்கா ஆகும். இக்கட்டிடம் கவனத்தை ஈர்க்கும் உலகின் சிறந்த கட்டிடக்கலைகளுள் ஒன்று எனலாம்.

படம்: Poco a poco
தொகுப்பு · சிறப்புப் படங்கள்