விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/சூன் 6, 2012
- ஒருநிலக் கொள்கை என்பது உலகில் தற்போதுள்ள எல்லாக் கண்டங்களும் ஒரு காலத்தில் பாஞ்சியா என்னும் ஒரே தீவாக (படம்) இருந்தது எனக்கூறும் கொள்கை.
- இந்திய வேட்டை நாய் வகையில் ஒன்றான இராஜபாளையம் நாய் மற்ற வேட்டை நாய்களைக் காட்டிலும் மிகவும் வலுவான எலும்புகளைக் கொண்டது.
- பொருளும் அதன் எதிர்ப் பொருளும் மோதுவதன் மூலம் ஒன்றையொன்று அழித்துக்கொண்டு பேராற்றலை உருவாக்க வல்லவை.
- ஒரு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பை அதன் மக்கள் தொகை எண்ணிக்கையால் வகுத்தால் கிடைக்கும் பொருளாதார அளவீடு அந்நாட்டின் தனி நபர் வருமானம் எனப்படும்.
- பல்கலைக்கழகப் பட்டப்படிப்பு வழங்கும் நிறுவனங்களில் உலகில் பழைமையானது மொரோக்கோவின் அல்-கரவிய்யீன் பல்கலைக்கழகம்.