விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/டிசம்பர் 14, 2010
- கடம்பினி கங்கூலி (படம்) பிரித்தானியப் பேரரசின் முதல் இரு பெண் பட்டதாரிகளில் ஒருவர். தெற்காசியாவிலேயே ஐரோப்பிய மருத்துவத்தில் பயிற்சிபெற்ற முதல் பெண் மருத்துவர்களிலும் ஒருவர் இவராவார்.
- கூகுள் நிறுவனம் தனது ஜிமெயில் மின்னஞ்சல் சேவையை ஏப்ரல் 1, 2004ல் அறிமுகப்படுத்திய போது, அதனை கூகுளின் வழக்கமான ஏப்ரல் முட்டாள்கள் நாள் குறும்புச் செயலாகவே பலரும் அதை நினைத்தனர்.
- கிணறுகளில் இருந்து ஏற்றமுறை மூலம் நீர் இறைக்கும் போது விவசாயத் தொழிலாளர்கள் பாடும் பாடல் ஏற்றப்பாட்டு எனப்படுகிறது.
- சீன அரசு எதிர்ப்பாளரும் மனித உரிமை செயற்பாட்டாளருமான லியூ சியாபோவுக்கு 2010க்கான அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டதால் ஆத்திரமடைந்த சீன அரசு கன்பூசியசு அமைதிப் பரிசு என்ற புதிய பரிசை ஏற்படுத்தியுள்ளது.