விக்கிப்பீடியா:உங்களுக்குத் தெரியுமா/பிற தொகுப்புகள்

  • முள்ளம்பன்றிகள் நீரில் மிதக்கக் கூடியவை
  • பூனைகளின் சிறுநீர் இருளில் மினுங்கக்கூடியது
  • கரப்பான்பூச்சி தலை துண்டிக்கப்பட்ட பின்னரும் பல வாரங்களுக்கு உயிர் வாழக்கூடியது
  • இறுதியில் பட்டினி காரணமாகவே கரப்பான்பூச்சி மரணமடையும்.
  • டொல்பின்கள் தூங்கும் போது ஒரு கண்ணை திறந்தவாறு தான் தூங்கும்
உசாத்துணை, முக்கிய கட்டுரை சுட்டிக்காட்டல் தேவை.--Anton·٠•●♥Talk♥●•٠· 15:22, 20 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
  • இந்தியாவில் புலிகள் கணக்கெடுப்பு, 2014: இந்தியாவில் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் புலிகள் கணக்கெடுப்பு தற்போது நடைபெற்று வருகிறது. - கட்டுரையில் தகவல் இல்லை.
  • தடுமாற்றம் என்பது முறைமையொன்றில் ஏற்படும் குறுகிய காலத்திற்கு நீடிக்கும் தவறு ஆகும்.
  • கணினியிலிருந்து ஓர் அந்துப்பூச்சி எடுக்கப்படுவதைக் கண்ட கிரேசு ஹாப்பர் அதனையொட்டி கணினி நிரல்களில் வழு நீக்கப்படுவதற்கு இன்று பரவலாக பயன்படுத்தப்படும் பூச்சி நீக்கம் எனப் பொருள்படும் டிபக்கிங் என்ற சொல்லை உருவாக்கினார். - உசாத்துணை?
  • தாத்தா முரணிலை (Grandfather Paradox) என்பது, ஒரு காலப் பயணி காலத்தில் பின்னோக்கி சென்று அவருடைய தாத்தாவின் திருமணத்திற்கு முன்பாகவே தாத்தாவைக் கொலைசெய்ய முயற்சித்தல் என்ற அனுமான சூழ்நிலையாகும் - உசாத்துணை?
  • பூமியின் தாழ் வட்டப்பாதை என்பது பூமியிலிருந்து மேலே 160 கிலோமீட்டர்கள் முதல் 2,000 கிலோமீட்டர்கள் வரை உள்ள வெளி ஆகும். - உசாத்துணை?
  • ஒரியன் (விண்மீன் குழாம்) ஆனது வான் மத்திய ரேகையில் அமைந்துள்ளதும் கண்ணால் பார்க்கக்கூடியதுமான ஒரு உடுத்தொகுதி ஆகும். கிரேக்கப் புராணங்களில் கூறப்படும் வேட்டைக்காரனான ஒரியன் என்பவனின் பெயரில் இருந்தே இப்பெயர் இவ்வுடுத்தொகுதிக்கு இடப்பட்டது. - உசாத்துணை?
  • செயற்கைக் கோள் தகர்ப்பு ஏவுகணைச் சோதனையை 2007 சனவரி 11 ஆம் நாள் சீனா நடத்தியது. - உசாத்துணை?
  • தமிழ்த் திரையுலகின் முதல் பெண் பாடலாசிரியர் கவிஞர் தாமரை. - உசாத்துணை?
  • முதன் முறையாக தமிழ் சினிமாவில் ஸ்டீரியோ முறையில் “ப்ரியா” திரைப்படத்திற்கு இசையமைத்தார் இசைஞானி இளையராஜா. - உசாத்துணை?
  • இசைஞானி இளையராஜா, இந்திய அரசின் இசைக்கான தேசிய விருதினை நான்கு முறை பெற்றுள்ளார். அதில் சிந்து பைரவி மட்டுமே தமிழ் திரைப்படம். - உசாத்துணை?
  • பிலிம்பேரின் சிறந்த நடிகருக்கான விருது பெற்ற முதல் நடிகர் திலிப் குமார் ஆவார். - உசாத்துணை?
  • நவ பாசாணத்தினால் கட்டி உருவாக்கப்படும் தெய்வச்சிலைகள் நவக்கிரகத்தின் சக்திகளைப் பெற்றுவிடுகின்றன என்று சித்தர்கள் நம்பினார்கள். - உசாத்துணை?
  • சதுரங்கம் (Chess) 1500 ஆண்டுகள் வரலாற்றைக் கொண்ட விளையாட்டு ஆகும். இவ்விளையாட்டு ஆறாம் நூற்றாண்டிற்கு முன்னரே இந்தியாவில் விளையாடப்பட்டு வந்த சதுரங்கம் என்னும் விளையாட்டிலிருந்தே வளர்ச்சியடைந்தது என்பது பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்ட கருத்து. - உசாத்துணை?
  • சில நாடுகளின் சுதந்திர தினம், தேசிய தினம், விடுதலை தினம் போன்ற பெயரிலும் கொண்டாடப்படுகிறது. - ஒற்றைக் கருத்துள்ள சொல்?
  • மால்ட்டாவில் உள்ள கண்டிஜா என்ற பெருங்கற்த்தூண் கோவில் உலகின் மிகப்பழைய தனித்து நிற்கும் அமைப்பும், மிகப்பழைய சமயம் சார்ந்த அமைப்பும் ஆகும். - உசாத்துணை?
  • இலங்கையின் முதலாவது பெண் அரசியல்வாதி அடிலைன் மொலமுறே ஆவார். - உசாத்துணை?