விக்கிப்பீடியா:ஒழுங்கமைத்தல் பணிக்கான சிறப்பு மாதம் - நவம்பர் 2022

சிறப்பு மாதம் வரிசையில், இரண்டாவது மாதமானது பகுப்புகளை ஒழுங்கமைத்தல் பணிக்கென அறிவிக்கப்பட்டுள்ளது.

நோக்கம்

தொகு

சிறப்பு மாதம் முழுவதும் 'பகுப்புகள்’ தொடர்பான துப்புரவு, ஒழுங்கமைவு மற்றும் மேம்பாட்டுப் பணிகளைச் செய்தல்.

நாட்கள்

தொகு

நவம்பர் 1, 2022 முதல் நவம்பர் 30, 2022 வரை

செய்யவேண்டிய பணிகள்

தொகு
  1. பகுப்பில்லாதவை - பகுப்பு இல்லாத கட்டுரைகளில் துப்புரவு
  2. வேண்டிய பகுப்புகள் - சிவப்பு நிற பகுப்புகளை துப்புரவு செய்தல்
  3. பகுப்பின் பெயரிலுள்ள எழுத்துப் பிழைகளை திருத்துதல். எடுத்துக்காட்டு: பகுப்பு:கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் என இருந்தது, - பகுப்பு:கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுகள் என திருத்தப்பட்டது.
  4. விக்கித்தரவில் இணைக்கப்படாத பகுப்புகளை விக்கித்தரவில் இணைத்தல்.
  5. முதல் 3 பணிகளின்போது ஏதும் புதிய பகுப்புகள் தேவைப்பட்டால், அவற்றை உருவாக்குதல்.

முதன்மைத் திட்டம்: விக்கிப்பீடியா:பகுப்பாக்கம்/பகுப்புகள் ஒழுங்கமைவு/2022

பகுப்பில்லாத கட்டுரைகளை துப்புரவு செய்தல்

தொகு

வழிகாட்டல்கள் / நெறிமுறைகள்

தொகு
  1. கலைக்களஞ்சியம் அல்லாத கட்டுரையை நீக்க வேண்டும்.
  2. தேவைப்படும் கட்டுரைகளில் உரிய பகுப்பை சேர்க்க வேண்டும்.
  3. உரிய பகுப்பை சேர்த்தபின், சான்றில்லாத கட்டுரைகள் / விரிவாக்கம் தேவைப்படும் கட்டுரைகள் ஆகியன உரிய துப்புரவு பகுப்பில் சேர்க்கப்பட வேண்டும்.

செயலாக்கம்

தொகு

பகுப்பு:பகுப்பில்லாதவை

கட்டுரைகளின் எண்ணிக்கை (01-நவம்பர்-2022) கட்டுரைகளின் எண்ணிக்கை (இப்போது)
582 0

திறன்

தொகு
  • 08-நவம்பர்-2022: 198 (திறன் 65.98%)
  • 12-நவம்பர்-2022: 0 (திறன் 100%)

பலன்கள்

தொகு
  • பெரும்பாலான கட்டுரைகள் கலைக்களஞ்சியத்திற்கு உரியவை அன்று அல்லது முக்கியத்துவம் இல்லாதவை. எடுத்துக்காட்டாக, 2013 ஆம் ஆண்டு நேரத்தில் எழுதப்பட்ட 'கலைக்களஞ்சியம் அல்லாத' கட்டுரைகளை இனங்காண இயன்றது.
  • முன்னெடுப்பு ஒன்றின் வாயிலாக 2017 ஆம் ஆண்டு பெரும் எண்ணிக்கையில் கட்டுரைகள் உருவாக்கப்பட்டன. அவற்றில் 'தானியங்கித் தமிழாக்க முறையில் உருவாக்கப்பட்ட' கட்டுரைகளை இனங்காண இயன்றது.

இயற்ற வேண்டிய பகுப்புகளை உருவாக்குதல் / முறைப்படுத்துதல்

தொகு

வழிகாட்டல்கள் / நெறிமுறைகள்

தொகு
  1. கட்டுரைகளில் duplicate பகுப்புகளை நீக்குதல். உதாரணம்: மாவட்டத்திலுள்ள எனும் பெயரில் ஒரு பகுப்பு ஏற்கனவே இருக்கும். அவற்றுள் 40 கட்டுரைகள் அடங்கியிருக்கும். மாவட்டத்தில் உள்ள எனும் பெயரில் பகுப்பு ஒன்று, சுமார் 10 கட்டுரைகளில் சேர்க்கப்பட்டிருக்கும். ஆனால் பகுப்பு உருவாக்காததால், கட்டுரைகளில் அப்பகுப்பு சிவப்பு நிறத்தில் தோன்றும். இந்தச் சூழலில், சிவப்பு நிற பகுப்புகளை நீக்கிவிட்டு, இக்கட்டுரைகளில் சரியான பகுப்பினை சேர்க்கவேண்டும்.
  2. வார்ப்புருக்களில் அறிந்தோ / அறியாமலோ செய்யப்படும் சில மாற்றங்களால், தேவையற்ற பகுப்புகள் கட்டுரைகளில் சேர்ந்துவிடுகின்றன. இந்த வார்ப்புருக்களை மீளமைப்பதன் மூலமாக இந்தப் பகுப்புகளை நீக்கிவிடலாம். எடுத்துக்காட்டு: விக்கிப்பீடியா:ஒத்தாசைப் பக்கம்#பகுப்புகள் சேர்வது தொடர்பான கேள்வியும், உதவி கோரலும்

புதிய பகுப்புகளை உருவாக்குதல்

தொகு

வழிகாட்டல்கள் / நெறிமுறைகள்

தொகு
  1. புதிய பகுப்புக்களை உருவாக்கும்போது, விக்கித்தரவில் இணைக்க வேண்டும்.

கவனிக்க வேண்டியவை

தொகு
  1. பகுப்பு:இந்திய விரைவுவண்டிகள் - தலைப்புகள் சீராக இல்லை. சிலவற்றில் விரைவுவண்டி, சிலவற்றில் தொடர்வண்டி, சிலவற்றில் எக்ஸ்பிரஸ்
  2. பகுப்பு:இந்திய இரயில்வே - ஒழுங்கமைப்புப் பணி நடக்கிறது
  3. பகுப்பு:தமிழ்நாட்டில் உள்ள அணைகள் - மாவட்டம் வாரியாக பிரிக்கலாம்
  4. பகுப்பு:உணவுகள் - இன்னமும் வகைப்பிரித்தல் செய்யலாம்
  5. பகுப்பு:தமிழ்நாட்டிலுள்ள அரசுப் பள்ளிகள் - மாவட்டம் வாரியாக பிரிக்கலாம்
  6. பகுப்பு:கணினிகள்

பலன்கள்

தொகு

பகுப்பு:இந்திய விரைவுவண்டிகள், பகுப்பு:இந்திய இரயில்வே ஆகியவற்றில் ஒழுங்கமைத்தல் பணி ஓரளவு நடந்தது. எனினும் முழுமையடையவில்லை.

உதவி

தொகு

விக்கிப்பீடியா:பகுப்பாக்கம்

பங்குபெற ஆர்வமுள்ள பயனர்கள்

தொகு

ஒருங்கிணைப்பாளர்கள்

தொகு

பெற்ற பலன்கள்

தொகு
  1. பகுப்பு:பகுப்பில்லாதவை எனும் பகுப்பில் அடங்கும் கட்டுரைகளின் எண்ணிக்கையானது 'சுழியம்' என்பதாக ஆக்கப்பட்டது.
  2. பெரிய பகுப்புகள் சிலவற்றில் ஒழுங்கமைத்தல் பணி ஓரளவு நடந்தது.
  3. 2013இல் விக்கித்தரவில் இணைக்கப்படாத பல பக்கங்களுக்கு புதிய விக்கித்தரவு பக்கம் உருவாக்கப்பட்டது. அதனால் பல பகுப்புகள் வேறு மொழிகளில் இருந்தாலும் அவைகளுடன் தமிழ் விக்கிப்பகுப்புகள் இணைக்கப்படவில்லை. இந்த மாதத்தில் அப்படிப்பட்ட பகுப்புகள் கிட்டதட்ட 300 பகுப்புகள் விக்கித்தரவில் ஒன்றிணைக்கப்பட்டுள்ளது. இதனால் மொழி மாற்றம் செய்யும் பொழுது பகுப்புகளைக் காண்பது எளிதானது. மற்றும் நகல் பகுப்புகளை கண்டுபிடிப்பது எளிது.
  4. 20 இணைக்கப்படவேண்டிய பகுப்புகள் கண்டுபிடிக்கப்பட்டு {{merge}} என்னும் பகுப்பு இடப்பட்டுள்ளது. அதனை இங்கு பார்க்கலாம்.
  5. எழுத்துப்பிழையுள்ள பகுப்புகள், தேவையில்லாத பகுப்புகள் நீக்கப்பட்டுள்ளது.