விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா தரக் கண்காணிப்பு/2007
நவம்பர் 2007க்கான விக்கித் தர அளவீடுகள்
தொகுமொழி | Off count | > 200 Char | Mean edits | Mean bytes | Length 0.5K | Length 2K | Size | Word | image |
---|---|---|---|---|---|---|---|---|---|
தமிழ் | 12.0 k | 11.0 k | 10.4 | 1404 | 77% | 15% | 48 MB | 1.9 M | 4.8 k |
வங்காளி | 17.0 k | 09.3 k | 09.0 | 893 | 42% | 7% | 44 MB | 2.2 M | 4.6 k |
மராத்தி | 14.0 k | 04.4 k | 09.3 | 542 | 19% | 5% | 25 MB | 1.1 | 3.2 k |
தெலுங்கு | 38.0 k | 09.3 k | 03.9 | 387 | 11% | 3% | 38 MB | 1.8 M | 0.760 |
இந்தி | 15.0 k | 06.0 k | 07.1 | 556 | 18% | 5% | 29 MB | 1.5 M | 1.6 k |
மலையாளம் | 04.9 k | 04.4 k | 14.5 | 2087 | 70% | 26% | 30 MB | 1.0M | 2.9 k |
கன்னடா | 04.8 k | 04.1 k | 07.4 | 1135 | 49% | 11% | 16 MB | 0.683 | 1.5 k |
அக்டோபர், நவம்பர் மாதங்களுக்கான விக்கி-தர அளவீடுகள் வெளியாகியுள்ளன. ஒப்பீட்டு அட்டவணையை கொடுத்துள்ளேன்.--சிவகுமார் \பேச்சு 13:06, 14 பெப்ரவரி 2008 (UTC)
நன்றி சிவா, நவம்பர் ஒப்பீட்டில் (http://stats.wikimedia.org/EN/TablesWikipediaTA.htm) 20 recently absent wikipedians, ordered by number of contributions கீழ் கூடுதல் பங்களித்தவர்களின் பெயர் வருகின்றது கூடுதல் பங்களித்த அண்மையில் காணல்போனவர்களின் பட்டியலில் காண்வில்லையே? ஏதோ வழு இருப்பது போல் தோன்றுகின்றது. --உமாபதி \பேச்சு 02:15, 15 பெப்ரவரி 2008 (UTC)
- அண்மையில் பங்களிக்காதவர்களின் பட்டியல் தமிழில் மட்டுமே இல்லை. ஏனைய மொழிகளில் உள்ளது. மயூரநாதன் 12:51, 16 பெப்ரவரி 2008 (UTC)
தற்போது கிடைத்துள்ள புள்ளி விவரங்களை வைத்துப் பார்க்கும்போது நாம் ஓரளவுக்கு நிலைமையைத் தக்கவைத்துக் கொண்டிருக்கிறோம் என்று சொல்லலாம். ஆனாலும் வளர்ச்சி வீதம் போதாது. >200 எண்ணிக்கையும், அதிகாரபூர்வ கட்டுரை எண்ணிக்கையும் தமிழில் மட்டுமே ஏறத்தாழச் சமமாக உள்ளது இது ஒரு நல்ல விடயம். தவிர 2 கிபைட்டுகளுக்கு மேற்பட்ட கட்டுரைகளும் 1% கூடியுள்ளன. இதுவும் முன்னேற்றமே. ஒரு கட்டுரைக்கான சராசரி பைட்டளவும் மிகச்சிறிய அளவில் அதிகரித்து வருகிறது. இது போதுமானதாக இல்லாவிட்டாலும் குறையவில்லை என மகிழ்ச்சி அடையலாம். இந்த நிலைமைகளைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டு கட்டுரைகளின் எண்ணிக்கையையும் வேகமாகக் கூட்ட முயலவேண்டும். இதற்காகத் தானியங்கிகளைப் பயன்படுத்தும்போது கட்டுரைகளின் அளவு சுமார் 5கிபை இருக்குமாறு செய்தால் நல்லது. ஒரே துறையில் ஆயிரக்கணக்கில் கட்டுரைகளைத் தானியங்கிகள் மூலம் உருவாக்காமல் 250, 300 என்ற அளவில் பல்வேறு துறைகளிலும் கட்டுரைகளை உருவாக்கினால் சமநிலையைப் பேண முடியும். மயூரநாதன் 12:51, 16 பெப்ரவரி 2008 (UTC)
- மயூரநாதன் சொல்வது போல் தானியங்கிகளைப் பயன்படுத்தி வெவ்வேறு துறைகளில் இருநூறு அல்லது முந்நூறு கட்டுரைகளை ஆக்குவதன் மூலம் கட்டுரை எண்ணிக்கை, பரவல், புதுப் பயனர்களைப் பங்களிப்பு போன்றவற்றைக் கூட்ட முடியும். சுந்தர், உமாபதி, டெரன்ஸ், வினோத் ஆகியோரால் செய்ய இயலும் என்று நினைக்கிறேன். தானியங்கிக் கட்டுரைகளை உருவாக்க என்னுடைய பரிந்துரைகள்: தமிழ்நாட்டில் உள்ள கல்லூரிகள், இந்திய ஆறுகள். --சிவகுமார் \பேச்சு 05:05, 17 பெப்ரவரி 2008 (UTC)
- மிக்க மகிழ்ச்சி சுந்தர். தமிழகக் கல்லூரிகள் குறித்து இத்தளங்களில் தரவுகள் உள்ளன. (1) http://www.collegesintamilnadu.com/Engineering/Eng_index.htm (2) http://www.tamilnadueducation.net/educationprofile/colleges/engineering/ இந்த இரு தளங்களில் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுத்து, புதுக்கட்டுரைகளை உருவாக்க இயலுமா? கல்லூரி,மாவட்டம், வழங்கப்படும் பாடப்பிரிவுகள், சுயநிதிக் கல்லூரியா, இருபாலரா, சிறுபான்மையினருக்கானதா முதலிய தரவுகள் உள்ளன. ஆறுகள் பற்றி பின்வரும் இணைப்புகளில் தரவுகள் உள்ளது. (1) http://waterresources.kar.nic.in/river_systems.htm (2) http://ces.iisc.ernet.in/biodiversity/documents/rivers.htm இத்தளத்தில் ஒவ்வொரு மாநிலத்தில் உள்ள ஆறுகளைப் பற்றி கொடுத்துள்ளனர். எனினும் கட்டுரைகளாக உள்ளன. (3) http://www.indiainfoweb.com/maharashtra/rivers/ எக்சல் கோப்பில் வேண்டுமானால் இயலும் போது நாம் உருவாக்கிக் கொள்ளலாம்.--சிவகுமார் \பேச்சு 10:24, 18 பெப்ரவரி 2008 (UTC)
m:List of Wikipedias by speakers per article - இதையும் பார்க்கவும். -- சுந்தர் \பேச்சு 04:44, 19 பெப்ரவரி 2008 (UTC)
- நன்றி சிவா. இன்றுதான் பார்த்தேன் நவம்பருக்கான புள்ளிக்குறிப்புகளை! சீராக முன்னேறி வருகிறோம். இன்னும் கூடுதலாக பயனர்கள் முன் வரவேண்டும். வளர்முகமாகச் செய்ய இன்னும் பல உள்ளன! இங்கு உழைப்பவர்கள் அனைவரும் பெருமை கொள்ள வேண்டியவர்களே! வாழ்த்துகள்!--செல்வா 22:59, 28 பெப்ரவரி 2008 (UTC)
செப்டம்பர் 2007க்கான விக்கித் தர அளவீடுகள்
தொகுமொழி | Off count | > 200 Char | Mean edits | Mean bytes | Length 0.5K | Length 2K | Size | Word | image |
---|---|---|---|---|---|---|---|---|---|
தமிழ் | 12.0 k | 11.0 k | 9.6 | 1369 | 76% | 14% | 45 MB | 1.8 M | 4.5 k |
வங்காளி | 16.0 k | 08.9 k | 07.8 | 840 | 40% | 7% | 40 MB | 2.0 M | 4.3 k |
மராத்தி | 13.0 k | 03.9 k | 08.1 | 463 | 19% | 4% | 20 MB | 0.871 | 2.4 k |
தெலுங்கு | 37.0 k | 08.7 k | 03.6 | 363 | 10% | 3% | 35 MB | 1.6 M | 0.595 |
இந்தி | 14.0 k | 05.6 k | 06.5 | 534 | 18% | 5% | 26 MB | 1.3 M | 1.5 k |
மலையாளம் | 04.3 k | 03.9 k | 13.0 | 2103 | 71% | 27% | 26 MB | 0.916M | 2.7 k |
கன்னடா | 04.8 k | 04.0 k | 06.7 | 1093 | 47% | 10% | 15 MB | 0.648 | 1.4 k |
2007 செப்டம்பர் மாதத்திற்கான தொகுப்பை அளித்தவர் சிவகுமார் ---செல்வா 20:54, 2 நவம்பர் 2007 (UTC)
- j:அண்மையில் தெலுங்கு விக்கிப்பீடியாவிற்கு விக்கியிடை இணைப்புத் தரும் தானியங்கியைப் பிந்தொடர்ந்து பார்த்தேன். 1. வெறும் கட்டுரை எண்ணிக்கையை உணர்த்துவதற்காக மட்டுமே பெரும்பான்மை கட்டுரைகள் உருவாக்கப்பட்டுள்ளன. 2. தமிழில் என்னென்ன கட்டுரைகள் உருவாக்கியுள்ளோம் என்பதைக் கண்காணித்து செயல்படுவதுபோல் தெரிகிறது. காட்டாக, இரத்தச் சிவப்பணுவைப் பற்றிய தெலுங்கு கட்டுரையில் விக்கியிடை இணைப்புகள் ஆங்கிலம், தமிழ், ஆகியவற்றிற்கு முதலிலும் பின்னரே மற்ற மொழிகளுக்கும் இருந்தன.
- தரத்தில் நாம் ஒரு முன்மாதிரியாக இருக்க வேண்டும். விரைவில் விக்கிப்பீடியா:மேற்கோள் சுட்டுதல் என்ற வழிகாட்டல் பக்கத்தை எழுத உள்ளேன். இந்தக் கருவிகொண்டு விரைவாக மேற்கோள்களை அவற்றிற்குறிய நடையில் சேர்க்க இயலும். அவ்வாறு கூடிய அளவு மேற்கோள்களைச் சேர்த்து வந்தால் நமது நம்பகத் தன்மை மிகும். அதன்பின் ஆ.விக்கியில் சைன்போஸ்டில் நம் தளத்தைப் பற்றிய இதுபோன்ற தகவல்களைத் தொகுத்தளிக்கும் திட்டமும் உள்ளது. -- Sundar \பேச்சு 14:22, 3 நவம்பர் 2007 (UTC)
- உண்மைதான் சுந்தர். தரத்தில் இந்திய மொழிகளுக்கு முன்மாதிரியாக மட்டுமன்றி வேறெந்த மொழிக்கும் சளைக்காத வகையில் தமிழ் விக்கிப்பீடியாவை வளர்த்தெடுக்க வேண்டும். இதுவரை அதிக முக்கியத்துவம் கொடுக்காத பல விடயங்களிலும் நாம் கவனம் செலுத்த வேண்டும். கட்டுரைகளுக்கு மேற்கோள்களைச் சேர்த்தலும் அவற்றுள் முக்கியமான ஒன்று.
- செப்டெம்பர் மாதப் புள்ளி விபரங்களின்படி 0.5 கி.பைட்ஸ், 2.0 கி. பைட்ஸ் ஆகியவற்றுக்கு மேற்பட்ட அளவு கொண்ட கட்டுரைகளின் விழுக்காடு சிறிதளவு கூடியுள்ளது. கட்டுரையின் சராசரி அளவும் கூடிச் செல்லும் போக்குக் காணப்படுகிறது. இந்தப் போக்குகளைத் தக்கவைத்துக் கொள்வது மட்டுமன்றி இவற்றை மேலும் வலுவாக வளர்த்தெடுக்க முயலவேண்டும். Mayooranathan 18:06, 3 நவம்பர் 2007 (UTC)
தர அளவீடுகளில் மலையாளம் முந்தத் தொடங்கி இருக்கிறது !! கவனம் !!--Ravishankar 20:39, 4 நவம்பர் 2007 (UTC)
ஆகஸ்ட்டு 2007க்கான விக்கித் தர அளவீடுகள்
தொகுஎந்த ஒரு நெடுங்குழுவின் அடிப்படையிலும் ஏறுவரிசை இறங்குவரிசையாக வரிசைப்படுத்திப் பார்க்க வசதியுள்ள அட்டவணை. தமிழே முன் நிற்பதைக் காணலாம் (கட்டுரை எண்ணிக்கையைத் தவிரவும், சொற்கள் எண்ணிக்கையில் வங்காளிக்கு அடுத்து நிற்பதும் தவிர). தமிழ் 43 மெகா 'பைட். வங்காளி 38 மெகா 'பைட். கன்னடமும், மலையாளமும் நல்ல முறையில் முன்னேறி வருகின்றன.--செல்வா 13:40, 5 அக்டோபர் 2007 (UTC) இப்பொழுது மலையாளமும், கன்னடமும் பட்டியலில் சேர்ந்துள்ளன. நன்றாக வளர்ச்சி பெறும் இந்திய விக்கிகளில் வரிசைப்படி முதலில் தமிழ், அடுத்தாற்போல மலையாளம், கன்னடம், வங்காளி என்பது என் கணிப்பு. நேபாள, மணிப்புரி மொழிகளையும், மராட்டி, இந்தி, தெலுங்கு மொழிகளையும் நான் தரமான வளர்ச்சியாக நினைக்கவில்லை (கட்டுரை எண்ணிக்கையைப் பார்த்து மயங்காலாகாது). என் கணிப்பு தவறாக இருக்கலாம், ஆனால் ஓரளவிற்கு அவர்கள் ஆக்கியிருக்கும் "கட்டுரை"களைக் பார்த்து புரிந்துகொண்டதைக் கணக்கில் கொண்டே என் "கணி"ப்பைப் பற்றிய முன்கருத்தை வைக்கின்றேன். இது பற்றி சற்று விரித்தும் எழுத இயலும்.--செல்வா 15:38, 5 அக்டோபர் 2007 (UTC)
தர அளவீட்டுப் புள்ளிக்குறிப்புகளை, விக்கிப்பீடியா நிறுவனம் தருகின்றது. இங்கே பார்க்கவும் --செல்வா 14:01, 5 அக்டோபர் 2007 (UTC)
மொழி | Off count | > 200 Char | Mean edits | Mean bytes | Length 0.5K | Length 2K | Size | Word | image |
---|---|---|---|---|---|---|---|---|---|
தமிழ் | 11 k | 11 k | 10 | 1328 | 75% | 13% | 43 MB | 1.7 M | 4.3 k |
வங்காளி | 16 k | 8.7 k | 7.4 | 810 | 39% | 6% | 38 MB | 1.9 M | 4.2 k |
மராத்தி | 12 k | 3.8 k | 7.8 | 480 | 20% | 4% | 19 MB | 0.838 | 2.3 k |
தெலுங்கு | 36 k | 8.3 k | 3.4 | 341 | 9% | 2% | 32 MB | 1.5 M | 0.384 |
இந்தி | 13 k | 5.4 k | 6.1 | 514 | 17% | 4% | 24 MB | 1.2 M | 1.4 k |
மலையாளம் | 3.7 k | 3.4 k | 12.6 | 2223 | 73% | 28% | 24 MB | 0.844M | 2.4 k |
கன்னடா | 4.6 k | 3.9 k | 6.6 | 1083 | 48% | 9% | 14 MB | 0.618 | 1.4 k |
இந்திய மொழிகளுள் தமிழே முன் நின்றாலும், நாம் இன்னும் விரைவாகவும் தரமாகவும் வளர வேண்டும்.--செல்வா 13:37, 5 அக்டோபர் 2007 (UTC)
இந்திய மொழிகளுள் தரத்தைப் பொறுத்தவரையில் தமிழ் தொடர்ந்தும் முன்னணியில் இருந்து வருவதையிட்டு மகிழ்ச்சி. இந்நிலையை நாம் மேலும் வலுப்படுத்திச் செல்லலாம் என்பதில் எனக்கு நம்பிக்கை உண்டு. பிற இந்திய மொழி விக்கிப்பீடியாக்கள் பற்றிய செல்வாவின் கணிப்புச் சரியானதுதான். கட்டுரை எண்ணிக்கையில் முன்னணியில் இருப்பவற்றின் ஏனைய முக்கிய புள்ளிவிபரங்கள் இதனைத் தெளிவாகக் காட்டுகின்றன. மலையாள விக்கி சரியான திசையில் வளர்கிறது எனத் தோன்றுகிறது. ஒப்பீட்டளவில் தமிழ் நல்ல நிலையில் இருந்தாலும், இதன் வளர்ச்சியின் அண்மைக் காலப் போக்குக் குறித்துப் பயனர்கள் கவனத்துக்கு எடுத்துக் கொள்ள வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். கீழேயுள்ள அட்டவணை சில ஆகஸ்ட் 2007 வரையான புள்ளிவிபரங்களின் பகுப்பாய்வுத் தகவல்களைத் தருகிறது.
- | ஓராண்டுக்கான மாதச் சராசரி (ஜூன்06-மே07) |
சராசரி (ஜூன்06 -ஆக06) |
ஜூன் 2007 |
ஜூலை 2007 |
ஆக 2007 |
புதிய விக்கிபீடியர் |
5.8 | 6.7 | 3 | 2 | 2 |
செயல்படும் விக்கிபீடியர் |
31.1 | 26.3 | 34 | 25 | 37 |
தீவிர பங்களிப்பாளர் |
12.2 | 10.7 | 13 | 9 | 9 |
புதிய கட்டுரைகள் /நாள் |
21.8 | 14.7 | 7 | 6 | 10 |
ஒரு கட்டுரைக்கான தொகுப்பு |
8.8 | 8.8 | 8.8 | 9.0 | 9.2 |
தரவுத்தள வளர்ச்சிவீதம் |
10.1% | 14.5% | 2.6% | 5.1% | 4.9% |
இதன்படி செயல்படும் விக்கிபீடியர் எண்ணிக்கை, ஒரு கட்டுரைக்கான தொகுப்புக்களின் எண்ணிக்கை என்பன ஓரளவு வளர்ச்சியைக் காட்டினாலும், புதிய விக்கிபீடியர் சேர்க்கை, தீவிரமாகப் பங்களிப்பவர் எண்ணிக்கை, புதிய கட்டுரைகளின் எண்ணிக்கை, தரவுத்தள வளர்ச்சி வீதம் என்பவற்றில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி காணப்படுகிறது. இவை கடந்த 15 மாதங்களில் காணப்படும் மிகக் குறைந்த அளவுகளாகும். செல்வா கொடுத்துள்ள அட்டவணையிலிருந்து 0.5 கி.பைட்டுகளுக்கு மேற்பட்ட கட்டுரைகள் 1% மட்டுமே அதிகரித்து 75% த்தை எட்டியுள்ளன என அறிய முடிகிறது. ஆனால், 2.0 கி.பைட்டுகளுக்கு மேற்பட்டவை எவ்வித அதிகரிப்பும் இல்லாமல் 13% இலேயே உள்ளது. இத் தகவல்கள், தமிழ் விக்கிப்பீடியாவில் செயற்பாடுகளின் வேகம் சிறிது குறைவடைந்து உள்ளதையே காட்டுகின்றன. வரும் மாதங்களில் இந்நிலை மாறும் என எதிர்பார்ப்போம். Mayooranathan 20:37, 5 அக்டோபர் 2007 (UTC)
ஜூன் 2007க்கான விக்கித் தர அளவீடுகள்
தொகுஎந்த ஒரு நெடுங்குழுவின் அடிப்படையிலும் ஏறுவரிசை இறங்குவரிசையாக வரிசைப்படுத்திப் பார்க்க வசதியுள்ள அட்டவணை. தமிழே முன் நிற்பதைக் காணலாம் (கட்டுரை எண்ணிக்கையைத் தவிரவும், சொற்கள் எண்ணிக்கையில் வங்காஅளிக்கு அடுத்து நிற்பதும் தவிர). --செல்வா 16:11, 5 ஜூன் 2007 (UTC)
மொழி | Off count | > 200 Char | Mean edits | Mean bytes | Length 0.5K | Length 2K | Size | Word | image |
---|---|---|---|---|---|---|---|---|---|
தமிழ் | 11 k | 11 k | 8.8 | 1278 | 73% | 13% | 39 MB | 1.6 M | 4.0 k |
வங்காளி | 16 k | 8.4 k | 6.9 | 763 | 38% | 6% | 36 MB | 1.8 M | 3.8 k |
மராத்தி | 10 k | 3.5 k | 7,6 | 515 | 21% | 4% | 17 MB | 786 k | 0.621க் |
தெலுங்கு | 32 k | 7.4 k | 3.3 | 337 | 9% | 2% | 28 MB | 1.3 M | 55 |
இந்தி | 12 k | 4.7 k | 5.7 | 484 | 16% | 4% | 21 MB | 1.1 M | 1.2 k |
--செல்வா 16:01, 1 ஆகஸ்ட் 2007 (UTC)
- செல்வா, உங்கள் தொகுப்புக்கு நன்றி. பல அளவீடுகளில் தமிழ் ஏனைய இந்திய மொழிகளிலும் பார்க்க அதிக அளவில் முன்னணியில் இருப்பது தெரிகிறது. 2K இலும் கூடிய அளவுள்ள கட்டுரைகளின் விகிதம் 1% அதிகரித்துள்ளது எனினும், 0.5K இலும் கூடிய அளவுள்ள கட்டுரைகளின் விகிதம் குறைவு அடைந்துள்ளது. குறுங்கட்டுரைகளை மேம்படுத்துவதன் மூலம் இவ் விகிதங்களை முறையே 50%, 90% அளவுகளுக்குக் கொண்டுவர முயல வேண்டும். Mayooranathan 17:47, 1 ஆகஸ்ட் 2007 (UTC)
- உண்மை, மயூரநாதன். 2 கிலோ 'பைட் அளவை எட்டுவது மிக எளிது. 2-3 வரிகள் சேர்த்தாலே 2 கி.'பைட் அளவைத்தாண்டிவிடலாம். முனைப்பாக, குறுங்கட்டுரைகள, ஒரு சிறிதாவது வளர்த்தெடுக்கலாம். சராசரி 'பைட் அளவும் குறைந்துள்ளது. நாம் விடாது முயல்வோம். --செல்வா 17:32, 8 ஆகஸ்ட் 2007 (UTC)
மே 15, 2007க்கான விக்கித் தர அளவீடுகள்
தொகுஎந்த ஒரு நெடுங்குழுவின் அடிப்படையிலும் ஏறுவரிசை இறங்குவரிசையாக வரிசைப்படுத்திப் பார்க்க வசதியுள்ள அட்டவணை. தமிழே முன் நிற்பதைக் காணலாம் (கட்டுரை எண்ணிக்கையைத் தவிரவும், சொற்கள் எண்ணிக்கையில் வங்காஅளிக்கு அடுத்து நிற்பதும் தவிர). --செல்வா 16:11, 5 ஜூன் 2007 (UTC)
மொழி | Off count | > 200 Char | Mean edits | Mean bytes | Length 0.5K | Length 2K | Size | Word | image | |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
தமிழ் | 11 k | 10 k | 8.7 | 8.8 | 1288 | 75% | 12% | 39 M | 1.5 M | 4.0 k |
வங்காளி | 16 k | 8.0 k | 6.4 | 698 | 6.9 | 37% | 5% | 33 M | 1.7 M | 3.6 k |
மராத்தி | 10 k | 3.6 k | 6.8 | 510 | 7.6 | 22% | 4% | 16 M | 0.763 M | 0.594 k |
தெலுங்கு | 27 k | 6.1 k | 2.6 | 370 | 3.3 | 10% | 3% | 26 M | 1.3 M | 2.3 k |
இந்தி | 12 k | 4.3 k | 5.3 | 459 | 5.7 | 14% | 4% | 20 M | 1.0 M | 1.2 k |
--செல்வா 16:11, 5 ஜூன் 2007 (UTC) ______________________
சில அவதானங்கள்
தொகு- 75% கட்டுரைகள் அரை கிலோபைட் அளவை விடப் பெரியவை. இதனை ஓராண்டின் முன் (2700 கட்டுரைகள் இருந்தபோது) 59% ஆக இருந்தமையுடன் ஒப்பிடுகையில் புதிய கட்டுரைகளில் கிட்டத்தட்ட 80% ஆனவை 0.5kBயை விடப் பெரியனவாகவே உருவாக்கப்படுகின்றமை புலப்படுகிறது.
- ஆனால் இரண்டு கிலோபைட் அளவை விடப் பெரியவை 12% மட்டும்தான். இது தொடர்ச்சியாகக் குறைந்து வருகிறது. ஆக புதிய கட்டுரைகள் பெரும்பாலும் சிறு அறிமுகங்களாக மட்டுமே அமைகின்றன. விரிவான கட்டுரைகள் அரிதாகவே உள்ளன.
- கட்டுரைகளின் சராசரி அளவு 1288 பைட். முன்னைய புள்ளிவிபரங்களில் தரப்பட்ட அளவுகளிலிருந்து இப்போதைய அளவுகள் மாறுபடுகின்றன. (எடுத்துக்காட்டாக பழைய பட்டியலில் சனவரி 2007 க்கான சராசரி 4148. இப்பட்டியலில் சனவரிச் சராசரி 1415.) ஆனால் இப்போதுள்ள முறையே சரியானதாகப் படுகிறது.
- சிலகாலங்களின் முன்னர் ஆர்வமாகப் பங்களிக்கத் தொடங்கிய சில பயனர்கள் பங்களிப்பதை நிறுத்தியுள்ளார்கள். விஜயசண்முகம், பாலாஜி, Nmadhubala, அகத்தியன், viruba, மேமன்கவி போன்றோர் அவர்களிற் சிலர்.
- TrengarasuBOT மிக வேகமாக இயங்கி வருகிறது. பாராட்டுக்கள் டெரன்ஸ்.
கோபி 17:53, 5 ஜூன் 2007 (UTC)
மார்ச் 2007க்கான விக்கித் தர அளவீடுகள்
தொகுஎந்த ஒரு நெடுங்குழுவின் அடிப்படையிலும் ஏறுவரிசை இறங்குவரிசையாக வரிசைப்படுத்திப் பார்க்க வசதியுள்ள அட்டவணை. டெரன்ஸ் துடுப்பாட்டப் போட்டிக் கட்டுரையில் இருந்ததைத் தழுவி ஆக்கப்பட்டது. நன்றி டெரன்ஸ்! --செல்வா 17:34, 2 மே 2007 (UTC)
மொழி | Off count | > 200 Char | Mean edits | Mean bytes | Length 0.5K | Length 2K | Size | Word | image |
---|---|---|---|---|---|---|---|---|---|
தமிழ் | 8.9K | 8.5K | 8.2 | 3850 | 72% | 13% | 33M | 1.3M | 3.6K |
வங்காளி | 15K | 7.7K | 5.8 | 2012 | 36% | 4% | 30M | 1.5M | 3.3K |
மராத்தி | 8.4K | 2.7K | 6.0 | 1699 | 20% | 5% | 14M | 644K | 555 |
தெலுங்கு | 27K | 5.9K | 2.5 | 914 | 10% | 2% | 24M | 833K | 2.1K |
இந்தி | 10K | 3.2k | 4.9 | 1635 | 13% | 4% | 17M | 833K | 895 |
சனவரி 2007 க்கான த.வி யின் தர அளவீடுகள்
தொகுடிசம்பர், சனவரிக்கான புள்ளியியல் குறிப்புகள் வெளியிட்டுள்ளனர். கட்டுரை எண்ணிக்கையில் தமிழ் 5 ஆவது இடத்தில் இருந்தாலும், எல்லாத் தர அளவீட்டு நிலைகளிலும் முதலிடம் வகிப்பது மகிழ்ச்சியை அளிக்கின்றது. என் கணிப்பில் தர அளவீட்டின் படி தமிழ் முதல் இடம், கன்னடம் இரண்டாவது இடம். மற்ற இந்திய மொழிகள் எல்லாம் மூன்றாவது நான்காவது, ஐதாவது நிலைகள் தாம். பிற இந்திய மொழிகளைக் காட்டிலும், 2 kb அளவான கட்டுரைகளில் 2-3 மடங்காவது அதிமான கட்டுரகளுடன் முன் நிலையில் இருக்கின்றோம். இப்பொழுது நம் கலைக் களஞ்சியம் ஒரு மில்லியன் சொற்கள் கொண்டுள்ளது. இன்னும் விரைவாகவும், சிறப்பாகவும் நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.
Lang | official | >200ch | new/day | edits | bytes | >0.5K | >2.0K | edits | size | words | internal | interwiki | image | external | redirects |
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
Te | 26 k | 5.5 k | 11 | 2.3 | 826 | 9% | 2% | 3.9 k | 21 MB | 976 k | 114 k | 58 k | 2.0 k | 3.4 k | 1.2 k |
Bn | 13 k | 5.2 k | 3 | 5.5 | 1755 | 24% | 4% | 6.6 k | 22 MB | 982 k | 61 k | 230 k | 3.0 k | 3.7 k | 9.1 k |
Ta | 6.2 k | 5.8 k | 8 | 9.4 | 4238 | 66% | 16% | 5.4 k | 25 MB | 1.0 M | 76 k | 101 k | 3.1 k | 7.7 k | 1.3 k |
Hi | 6.0 k | 2.6 k | 48 | 5.5 | 1927 | 18% | 6% | 5.1 k | 12 MB | 637 k | 28 k | 76 k | 599 | 2.0 k | 1.1 k |
Mr | 7.4 k | 2.5 k | 10 | 4.9 | 1527 | 20% | 5% | 3.5 k | 11 MB | 577 k | 21 k | 28 k | 481 | 1.9 k | 1.5 k |
Ka | 4.4 k | 3.5 k | 2 | 5.4 | 2757 | 42% | 8% | 1.7 k | 12 MB | 528 k | 41 k | 34 k | 1.2 k | 1.9 k | 1.2 k |
--செல்வா 19:37, 19 பெப்ரவரி 2007 (UTC)
செல்வா, தொடர்ந்து தர அளவுகளை சிறப்பாகத் தொகுத்து தருவதற்கு நன்றி. உண்மையில், இந்திய மொழிகள் என்ற எல்லையைத் தாண்டிலும் பல உலக மொழி விக்கிப்பீடியாக்களுடனும் தரம் / கட்டுரை எண்ணிக்கை அளவில் சிறப்பாகவே விளங்குகிறோம் என்பது நல்ல செய்தி. இந்த விவரங்கள் தமிழ் விக்கிப்பீடியா பரப்புரைகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்--Ravidreams 20:10, 19 பெப்ரவரி 2007 (UTC)