விக்கிப்பீடியா:தமிழ் விக்கியூடகக் கையேடு/மேற்கோள் சுட்டுதல்
மேற்கோள் சுட்டுதல் என்பது அறிவுசார் படைப்புக்களில் இடம்பெறும் தகவல்களுக்குச் சான்றாக நம்பத்தகுந்த நூல், கட்டுரை, வலைத்தளம் முதலிய வெளி ஆக்கங்களைச் சுட்டுதலைக் குறிக்கும்.
“ | எத்தகு சான்றுகோள் எப்போ(து) எதற்காக
ஏனென் றறிந்துசேர் சுட்டு |
” |
— செல்வா |
ஏன் மேற்கோள் காட்ட வேண்டும்
தொகுபொதுவாகக் கலைக்களஞ்சியம் போன்ற எந்த ஒரு படைப்பிற்கும் பின்வரும் காரணங்கள் பொருந்தும். அதிலும் விக்கிப்பீடியா என்பது எவர் வேண்டுமானாலும் தொகுக்கலாம் என்ற அனுமதியுடன் உருவாக்கப்படும் கலைக்களஞ்சியம் ஆகும். அதனால் சான்றளிக்க வேண்டிய பொறுப்பு கூடிவிடுகிறது. வெளிச்சான்றுகளுக்கு மேற்கோள் காட்டுதலின் குறிக்கோள்கள் பின்வருவன:
- விக்கிப்பீடியாவின் நம்பகத்தன்மை மற்றும் தகவல் பயன்பாட்டை மேம்படுத்துதல்
- ஒரு பயனுள்ள தகவலை அளித்த படைப்பிற்குத் தகுந்த மதிப்பளித்தல்; இதன்வழி தகவல்களை அனுமதியின்றி படியெடுத்துள்ளோம் என்ற குற்றச்சாட்டிற்கு வாய்ப்பில்லாமல் போய்விடுகிறது.
- நாம் சேர்க்கும் தகவல் நம் சொந்தக் கருத்தல்ல, மாறாக வெளிச்சான்றுகளின் பின்புலம் பெற்றது என உணர்த்துதல்.
- இங்கு காணப்படும் தகவல் சரியா என கட்டுரையைப் படிப்பவர்களும் உடன் பணிபுரியும் பங்களிப்பாளர்களும் சரிபார்க்க உதவுதல்.
- தொடர்புடைய பிற தகவல்களை கண்டுபிடிக்க வழிசெய்தல்.
- எழுத்துக் குறியீடுகள், இணைப்புக்கள்வழி அணுக்கமில்லாமை போன்ற காரணங்களால் தரமான தமிழ் ஆக்கங்கள் இணையத் தேடுபொறிகளில் சிக்காமையை அவற்றை மேற்கோள்களாகப் பயன்படுத்துவதன் மூலம் குறைக்கலாம்.
- பங்களிப்பாளர்களிடையே தகவலைச் சேர்ப்பது தொடர்பான கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதைத் தவிர்த்தல்.
- வாழும் மாந்தர் அல்லது நிறுவனங்களைப் பற்றி எழுதுகையில் அவதூறுக் குற்றச்சாட்டு எழாமல் தடுத்தல்.
எப்போது
தொகுஎந்த ஒரு தகவலுக்கும் மேற்கோள் வலுச் சேர்க்கும். இருப்பினும் கருத்து வேறுபாடு ஏற்படக்கூடிய தகவல்கள், வாழும் நபர்களைப் பற்றிய செய்திகள், இலக்கங்களில் தரப்படும் தகவல்கள், நடை பொருட்டு சுருக்கமாக எழுதி ஆனால் படிப்பவர்கள் மேலே ஆய்வு செய்யத்தக்க தகவல்கள் மற்றும் வேறொருவரின் கூற்றைக் குறிப்பிடும்பொழுது வெளிச் சான்றுகளை மேற்கோள்களாகக் காட்டுதல் இன்றியமையாதது. தவிர, கட்டுரையைப் படிக்கும் எவரேனும் {{சான்றுதேவை}} என வார்ப்புரு மூலம் கேட்கும்போது இயன்றவரை 30 நாட்களில் தகுந்த சான்றை இணைக்க வேண்டும். அவ்வாறு சான்று தேவைப்படும் கட்டுரைகளை இங்கு காணலாம்.
எத்தகு சான்றுகள்
தொகுசான்றுகளில் பல தர நிலைகள் உண்டு. என்ன மாதிரியான ஆக்கம், யார் ஆக்குனர், யார் பதிப்பித்தார்கள் ஆகிய மூன்றும் ஒரு மூலத்தின் தரத்தைப் பாதிக்கும். எடுத்துக்காட்டாக நேச்சர் (Nature Journal) என்ற ஆய்வேடு அறிவியல் சமூகத்தில் மிகவும் மதிப்புப் பெற்ற ஒரு பல்துறை ஆய்வேடு ஆகும். இதில் துறையில் இயங்கும் அறிவியலாளர்கள் தமது சக ஆய்வாளார்களால் மதிப்பீடு (peer-reviewed) செய்யப்பட்ட ஆய்வுகளை வெளியிடுகிறார்கள். அதே வேளை பல்வேறு போலி அறிவியல்களை (Pseudoscience) எடுத்துரைக்கும் பல நூல்களும் உண்டு. அறிவியல் கூறுகளுக்கு நேச்சர் ஆய்வேடு தரமான சான்றாக அமையும்.
சான்றுகள் தமிழ்ப் படைப்புக்களாகத்தான் இருக்க வேண்டுமென்பதில்லையெனினும் தரமான நம்பிக்கைக்குகந்த தமிழ் ஆக்கங்களுக்கு முன்னுரிமை தரலாம்.
- பொது உசாத்துணைகள்: எ.கா கலைக்களஞ்சியங்கள், அகராதிகள், நிகண்டுகள், நூற்பட்டியகள்
- பாட நூல்கள்: எ.கா தமிழ்நாடு/இலங்கை அரசு பாடநூகள்
- மூல நூற்கள்: எ.கா தொல்காப்பியம், திருக்குறள், நன்னூல், திவாகர நிகண்டு
- மதிப்புப்பெற்ற பதிப்பகங்களால் வெளியிடப்பட்ட நூல்கள்: எ.கா உலகத் தமிழாராய்ச்சி நிறுவன நூல்கள், தமிழ் வளர்ச்சிக் கழக வெளியீடுகள்
- ஆய்வேடுகள்: எ.கா ஆராய்ச்சி, த புரோசிடிங்சு ஆஃவ் த நேசனல் அக்காடமி ஆஃவ் சயன்சு
- நம்பிக்கை வாய்ந்த ஊடகங்கள்: பிபிசி, தினமணி
- மதிப்புபெற்ற ஆசிரியர்கள் எழுதிய நூற்கள்: யாழ் நூல்
- பல்லூடகங்கள்
சான்றுகளைப் பெற
தொகுசான்றுகளை நீங்கள் பல்வேறு வகைகளில் பெறலாம்:
- உங்கள் வீட்டிலுள்ள நூல்கள், படைப்புகள், பொருட்கள்
- பொது/கல்லூரி நூலகங்கள்
- இணையத்தில்: எண்ணிம நூலகங்கள், வலைத்தளங்கள், ஆழ வலை (Deep web), தரவுத்தளங்கள்
- அருங்காட்சிக் கூடம், ஆவகணங்கள் (Archives), காட்சிக்கூடங்கள்
- நேரடி: நேர்காணல்கள், படம் எடுத்தல்
எங்ஙனம்
தொகுஇவற்றில் ஒன்றை பின்வருமாறு கட்டுரையில் இணைக்க வேண்டும்:
“ | எம்.ஆர்.இராதாவும் அனைவரும் மதிக்கும் [[நாடகம்|மேடை நாடக]] மற்றும் திரைப்பட நடிகராக விளங்கினார்.<ref>{{cite news | first=கோபாலன் | last=டி என் | coauthors= | title=காயாத கானகத்தே | date= | publisher=[[பிபிசி]] | url =http://www.bbc.co.uk/tamil/news/story/2006/10/061031_streetplay.shtml | work =நினைவில் நின்றவை | pages =எட்டாவது பாகம் | accessdate = 2007-11-03 | language = }}</ref> | ” |
கட்டுரையின் இறுதியில் பின்வரும் நிரல்துண்டை இணைக்க வேண்டும்:
==குறிப்புகளும் மேற்கோள்களும்== <references />
கீழுள்ள குறுக்கு வழியையும் பயன்படுத்தலாம்.
{{^}}
- அல்லது
{{மேற்கோள்}}
எடுத்துக்காட்டுகள்
தொகு| year = 1992 | month = | title = The Ecology of Seed Dispersal (விதைப் பரவுதலின் சூழலியல்) | journal = Seeds: The ecology of regeneration in plant communities | volume = இரண்டாம் பதிப்பு | issue = | pages = 85-110
- பரிதிமாற் கலைஞர்: "தமிழ்மாமலை பரிதிமாற் கலைஞர்" (pdf). தமிழரசு. தமிழ்நாடு அரசு. 2006. பார்க்கப்பட்ட நாள் 2006-09-12.
{{cite web}}
: Text "pages-64-67" ignored (help)
- எம்.ஜி.ஆர். கொலை முயற்சி வழக்கு, 1967: டி என், கோபாலன். "காயாத கானகத்தே". நினைவில் நின்றவை (பிபிசி): pp. எட்டாவது பாகம். http://www.bbc.co.uk/tamil/news/story/2006/10/061031_streetplay.shtml. பார்த்த நாள்: 2007-11-03.
- மௌ டம்: வில்சன், மேரி; டிராவசெட், அன்னா (PDF). http://www.imedea.uib.es/natural/terrestrial_ecology/publications/seed_dispersal.pdf. பார்த்த நாள்: ஜூன் 15, 2006.(ஆங்கில மொழியில்)
துணை செய்யும் கருவிகள்
தொகு- விக்கிப்பீடியா:புரூவ் இட், (ProveIt!) - விக்கிப்பீடியா கட்டுரைகளில் மேற்கோள்களைச் சேர்க்கப் பயன்படும் ஒரு மேம்படுத்தப்பட்ட கருவி.
- மேற்கோள் வடிக்கும் கருவி − ஆய்விதழ்கள், செய்தி ஊடகங்கள், முதலிய பொதுவாக சுட்டப்படும் மேற்கோள்களை வடிவமைத்துத் தருவது
- மற்றொரு பயனுடைய கருவி − ISBN போன்ற குறியெண் இருந்தால் முழு சான்றுகோள் தரவுகளையும், விக்கிப்பீடியாவில் இடத்தகுந்த வடிவில் தருகின்றது. உள்ளிடக்கூடிய குறியெண்கள் DrugBank ID, HGNC ID, ISBN, PubMed ID, PubMed Central ID, PubChem ID, அல்லது URL ஆகியவை. தேவையான விக்கிப்பீடியா சான்றுகோள் வடிவையும் தேர்ந்தெடுக்கலாம்.
- en:WebCite - சுட்டப்படும் இணைப்புக்கள்வழி சென்று அங்குள்ள பக்கங்களைச் சேமிக்கிறது; இதனால் தளங்கள் செயலற்றுப் போனாலும் மேற்கோள் சுட்டப்பட்ட பக்கங்களின் உள்ளடக்கம் காக்கப்படும்.
- விக்கி நிரல் தருவி − புத்தகங்களை அடையாளம் காட்டும் ஐஎஸ்பிஎன் முதலியவற்றைக் கொண்டு மேற்கோள் சுட்டப் பயன்படும் விக்கி நிரலைத் தருவது
- வெர்சிமிலஸின் விக்கி நிரல் தருவி கூகிள் ஸ்காலரில் தேடுவதற்கு ஒரு இடைமுகம் தருகிறது. தேடல் முடிவுகளில் ஒவ்வொன்றிலும் {{wikify}} என்ற இணைப்பு இருக்கும். அதை அழுத்தியவுடன் அந்தத் தரவை மேற்கோள் காட்டுவதற்குத் தேவையான விக்கிநிரல் கிடைத்துவிடும். பிப்டெக்கிலிருந்து (BibTex) {{cite}} வார்ப்புருக்களுக்கு மாற்றம் செய்யும் வசதியும் இதில் உண்டு.
- WPCITE - ஒரே சொடுக்கில்{{cite news}} தகவல்களில் பகுதியை அடிக்குறிப்பு வடிவில் சேர்க்க உதவும் பயர் பாக்சு சேர்க்கை. உருவாக்கியவரின் பக்கத்தை மேல்விவரங்களுக்குப் பார்க்கவும்.
- Wikicite ஓர் இலவச மென்பொருள். இதன்மூலம் தொகுப்பாளர்கள் தங்கள் விக்கி பங்களிப்புகளை மேற்கோள் வார்ப்புருக்கள்கொண்டு மேற்கோளிட உதவுகிறது. இது விசுவல் பேசிக் .நெட்கொண்டு எழுதப்பட்டுள்ளது.ஆகவே விண்டோஸ் இயங்குதளத்தில் .நெட் சூழலில் அல்லது பிற இயங்குதளங்களில், மோனோ) சூழலில் பங்காற்றுபவர்களுக்கே பயனாகும். இந்த மென்பொருளின் மூல நிரலிகள் இலவசமாக கிடைக்கின்றன.உருவாக்கியவரின் பக்கத்தை மேல்விவரங்களுக்குப் பார்க்கவும்.
- en:OttoBib.com ஐஎசுபிஎன் எண்களை உள்ளீடாகக் கொடுத்தால், புத்தகங்களின் பட்டியலை அகரவரிசையில் எம்எல்ஏ நடை, ஏபிஏ நடை, சிகாகோ நடை கையேடு/துராபியான், பிப்டெக்ஸ், அல்லது விக்கிப்பீடியா வடிவமைப்பில் (நிரந்த இணைப்புகளுடன்) உருவாக்கிடும் ஓர் இலவச கருவி.
- en:Zotero மொசில்லா பயர் பாக்சு கட்டுரைகளைத் தேடி அவற்றை எளிதாக விக்கிப்பீடியாவில் மேற்கோள் வார்ப்புருக்களாக Ctrl-Alt-C மூலம் ஒட்ட துணை புரிகிறது.
- en:User:CitationTool - மேற்கோள்களில் உள்ள பிழைகளைக் களைய உதவுகிறது.
- en:User:Fictional tool - இணைய மேற்கோள்களை சரிசெய்ய உதவும் கருவி