விக்கிப்பீடியா பேச்சு:தமிழ் இலக்கண முறைகள் குறித்த தமிழ் விக்கிப்பீடியா நிலைப்பாடு
ஆய்த எழுத்துப் பயன்பாடு
தொகு(ஆலமரத்தடியில் தொடங்கிய உரையாடல்) எனக்குத் தெரிந்தவரையில் ஆய்த எழுத்து எழுத்தின் முதலிலும், இறுதியிலும், தனித்தும் வராது. நான் அறிந்து கொண்ட காரணங்கள்.
- ஆய்தம் என்ற முப்பாற்புள்ளியும் எழுத்து ஓரன்ன. (தொல்காப்பியம்)
- எழுத் தெனப் படுப அகர முதல் னகர இறுவாய் முப்பஃதென்ப சார்ந்து வரல் மரபின் மூன்றலங்கடையே (தொல்காப்பியம்)
முதலாவது ஆய்த எழுத்து தனக்கு முன்னர் ஒரு குறிலையும், பின்னர் ஒரு வல்லின உயிர்மெய் எழுத்தையும் பெற்றே வரவேண்டும் எனக் கூறுகின்றது.
இரண்டாவது சார்பெழுத்து மொழிக்கு முதலிலும், இறுதியிலும், தனித்தும் வராது எனக் கூறுகின்றது. ஆய்த எழுத்து ஒரு சார்பெழுத்து என்பதால் இவ்விதி அதற்கும் பொருந்துகின்றது.
பல கட்டுரைகளில் ஆய்த எழுத்து முதலிலும் இறுதியிலும் காணப்படுகின்றது. எனவே இது குறித்த தெளிவான முடிவை எடுப்பது தேவையெனக் கருதுகின்றேன். இதற்கு விதிவிலக்கு இருப்பின் தெரிவிக்கவும். --Anton (பேச்சு) 02:02, 9 சூலை 2012 (UTC)
- //In recent times, three combinations of Tamil basic letters are generally used to depict sounds of English letters 'f', 'z', and 'x'. This is for writing English and Arabic names and words in Tamil. The combinations are ஃப for f, ஃஜ for z and ஃஸ் for x. For example: asif = அசிஃப், aZaarudheen = அஃஜாருதீன், rex = ரெஃஸ்.//
- இப்படியே போனால் ஆய்த எழுத்துக்கான ஒலிப்பும் பயன்பாடும் முற்றிலும் சிதைந்து போய் விடும். ஆய்த எழுத்துப் பயன்பாட்டைப் பொறுத்தமட்டிலும் முன்னர் ஒரு குறிலையும், பின்னர் ஒரு வல்லின உயிர்மெய் எழுத்தையும் பெற்றே வரவேண்டும் என்னும் தொல்காப்பிய விதியை முற்றுமுழுதாக தமிழ் விக்கிப்பீடியா கட்டுரைகளில் நடைமுறைக்குக் கொண்டு வர ஆதரவு தெரிவிக்கிறேன்--இரவி (பேச்சு) 15:14, 9 சூலை 2012 (UTC)
அப்படி எனின் ஃபாக்சு பீ2 ஃபோன், போன்றவற்றுக்கு என்ன செய்வது..?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 16:16, 9 சூலை 2012 (UTC)
- என்னைக் கேட்டால் மாற்றத்தான் வேண்டும் என்பேன். --Anton (பேச்சு) 17:24, 9 சூலை 2012 (UTC)
- பொது வழக்கிலிருந்து மாறுவதால் "ஆய்த எழுத்து சீர்மையை" எதிர்க்கிறேன்.மொழி சீர்மையை விக்கிக்கு வெளியே தொடர்வதே உகங்தது என்னும் என் கருத்தை மீண்டும் பதிவு செய்கிறேன். ஸ்ரீகாந்த் (பேச்சு) 16:43, 9 சூலை 2012 (UTC)
- மொழியை நிர்ணயிப்பது இலக்கண விதிகளா அல்லது பொது வழக்கா? எசுப்பானியா பொது வழக்கின்படி ஸ்பெயின் ஆக இருந்திருக்கலாமே? இன்னும் எத்தனையோ எடுத்துக்காட்டுகள் உள்ளன. இங்கும் அங்குமாக பயணிக்கக் கூடாது. --Anton (பேச்சு) 17:24, 9 சூலை 2012 (UTC)
- தப்பான உதாரணம். பொது வழக்குக்கும் உலக வழக்குக்கும் வித்தியாசம் இருக்கு. நான் கூறுவது தமிழ் மொழி பொது வழக்கு. ஸ்ரீகாந்த் (பேச்சு) 19:41, 9 சூலை 2012 (UTC)
//என்னைக் கேட்டால் மாற்றத்தான் வேண்டும் என்பேன்.//
அண்டன் நீங்கள் கூறியபடி மாற்றினால் Box p2, Fox p2 எப்படி வித்தியாசம் கண்டுபிடிப்பீர்கள்?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 18:32, 9 சூலை 2012 (UTC)
பால் என்று எழுதினால் கூடத் தான் ball, paul, பால் ஆகியவை இடையே வேறுபாடு அறிய முடியாது. b ஒலி வரை முதலில் இ சேர்த்து எழுதலாம். இபால், இபாக்சு என்று. இல்லாவிட்டால் b ஒலிக்கான கிரந்த எழுத்தைச் சேர்க்கலாம் ;) ஃபோன், ஃபிரான்சு போன்றவை பிரச்சினை இல்லை. இவற்றில் முதலில் உள்ள ஃ எழுத்த்தை விட்டு எழுதும் வழக்கமும் உண்டு.
பொதுவழக்கு குறித்த சிரீக்காந்தின் கருத்துக்கு: முற்று முழுதாக தொல்காப்பியத்தை நடைமுறைக்குக் கொண்டு வர முடியாது. ஆனால், தகுந்த இடங்களில் அதனைப் பின்பற்றுவதில் தவறில்லை. எடுத்துக்காட்டுக்கு, மெய்யெழுத்து சொல்லின் முதலில் வராது என்ற விதி. இதைக் கூடத்தான் பொது வழக்கு பின்பற்றுவதில்லை. அதற்காக, நாம் பின்பற்றுவது தவறு என்று சொல்ல முடியுமா? common misspellingஐ முறையான spellingஆக ஏற்றுக் கொள்ள முடியுமா? f ஒலிக்கு ஈடாகப் பயன்படுத்தத் தொடங்கி இன்று h, x, z என்று எல்லா இடங்களுக்கும் பயன்படுத்தும் ஒரு குறியீடாக ஆய்த எழுத்தை மாற்றி வருகிறார்கள். இதற்குத் தமிழறிஞர்கள் ஒப்புதல் அளித்துள்ளார்களா? அரசு ஒப்புதல் உண்டா? இலக்கணத்தைப் பின்பற்றுவது எப்படிச் சீர்திருத்தம் ஆகும்?--இரவி (பேச்சு) 18:56, 9 சூலை 2012 (UTC)
- தொல்காப்பியர் 123 னு அரபி முறையில் எண்களை எழுதச்சொன்னாறா? ஏன் ௧௨௩ னு எழுதரதில்ல? அரசு ஃபா பயன்படுத்துவதே இல்லைனு சொல்றீங்களா? கற்பனை உலகில் இது எல்லாமே சரி தான். நீங்க கண் மூடினா உலகமே இருட்டாயிடுமா? தமிழக அரசு 12 வகுப்பு வேதியல் பாட புத்தகம் பக்கம் 149 பென்சைல் ஆல்கஹால்(கிரந்த தவிர்ப்பும் தமிழ் மக்களின் பொது வழக்கை ஒட்டாமல் இருப்பதால்) / ஃபினைல் மெத்தனால் தான். //முற்று முழுதாக தொல்காப்பியத்தை நடைமுறைக்குக் கொண்டு வர முடியாது. ஆனால், தகுந்த இடங்களில்// தகுந்த னு முடிவு செய்யறது யார்? கோடிக்கணக்கான தமிழ் மக்களுக்கு 40 பேர் இருக்ககூடிய விக்கிப்பீடியா போன்று ஒரு சிறிய தளம் எப்படி செய்யமுடியும்? நியாமா? சிலருக்கு இங்க பேசும்பொது மட்டும் கூகிள் பயன்பாட்டை எண்ணிக்கையை கணக்கெடுக்க கூடாது, வேறெங்கோ ஃபேஸ்புக் ஐ முகநூல் என்று சொல்வது சரி என்று சொல்லுவதற்கு மட்டும் பயன்படுத்தலாம். அப்போ மட்டும் பொதுவழக்கு தேவைப்படுகிறது. சபாஷ்! நன்றி வணக்கம். ஸ்ரீகாந்த் (பேச்சு) 19:41, 9 சூலை 2012 (UTC)
சிரீக்காந்த், 123, &%?! முதலியவை பன்மொழிக்கும் பொதுவான குறியீடுகள். நாம் பேசுவது ஒரு மொழியின் எழுத்து குறித்து. fக்கு ஈடாகப் பொதுவழக்கில் ஃப் பயன்படுவதை யாரும் மறுக்க முடியாது. நானும் இல்லை என்று சொல்லவில்லை. f ஒலிக்கு ஈடாகப் பயன்படுத்தத் தொடங்கி இன்று h, x, z என்று எல்லா இடங்களுக்கும் பயன்படுத்தும் ஒரு குறியீடாக ஆய்த எழுத்தை மாற்றி வருவதற்குத் தான் அரசு ஒப்புதல் உண்டா, தமிழறிஞர் ஒப்புதல் உண்டா என்று கேட்டேன். அரசு ஆவணங்களில் ஒரு பயன்பாடு இருப்பது வேறு முறையான சட்டம் / அறிவிப்பு மூலம் ஏற்பைத் தெரிவிப்பது வேறு. (எடுத்துக்காட்டு: பெரியார் அரசு சீர்திருத்தத்துக்கு அரசு தந்த ஏற்பு) இங்கு கேள்வி என்பது இலக்கணம் பொதுவழக்குக்கு முரணாக இருக்கும் போது என்ன நிலைப்பாடு எடுக்க வேண்டும் என்பதே.
//கோடிக்கணக்கான தமிழ் மக்களுக்கு 40 பேர் இருக்ககூடிய விக்கிப்பீடியா போன்று ஒரு சிறிய தளம் எப்படி செய்யமுடியும்? நியாமா? //
பொது வழக்கை உருவாக்கும் ஊடகங்களின் ஆசிரியர் குழுக்களில் எத்தனை பேர் இருக்கிறார்கள்? விக்கிப்பீடியா போல் மறுப்பைத் தெரிவித்து மாற்றத்தை உருவாக்கும் நடைமுறை உண்டா? மற்ற ஊடகங்களை விட விக்கிப்பீடியா போன்ற ஒரு தளத்தில் எடுக்கும் எந்த முடிவும் கூடுதல் மக்கள் சார்புத் தன்மை உடையதே--இரவி (பேச்சு) 20:16, 9 சூலை 2012 (UTC)
//f ஒலிக்கு ஈடாகப் பயன்படுத்தத் தொடங்கி இன்று h, x, z என்று எல்லா இடங்களுக்கும் பயன்படுத்தும் ஒரு குறியீடாக ஆய்த எழுத்தை மாற்றி வருவதற்குத் தான் அரசு ஒப்புதல் உண்டா, தமிழறிஞர் ஒப்புதல் உண்டா என்று கேட்டேன்.//
அப்படி என்றால் fக்கு ஃப் என்று போடலாம் என்கிறீர்களா? நீங்கள் கூறிய h, x, z எப்படி எழுதுகிறார்கள் என்று தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 04:37, 10 சூலை 2012 (UTC)
- சொல்லொன்றின் ஆரம்பத்தில் f எழுத்து வராதவிடத்து (அவசியமானால் மட்டும்) f இற்கு பதிலாக ஃப் என எழுதலாம். ஆரம்ப எழுத்தாக f வருமிடத்து ப என எழுதுவதே சிறந்தது. ஃபெடரரை பிபிசி நேற்று பெடரர் என எழுதியிருக்கிறது பார்த்தீர்களோ தெரியாது. இவையெல்லாம் நல்ல மாற்றங்களே. மற்றும்படி ஃக, ஃவ என எழுதுவதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. மன்னர் ஞானேந்திராவை ஆங்கில ஊடகங்கள் Gyanendra என்றும் Gayanendra என்றும் எழுதுகின்றன. அதையே பார்த்து தமிழ் ஊடகங்களும் கயனேந்திரா என எழுதுகின்றன.--Kanags \உரையாடுக 09:22, 10 சூலை 2012 (UTC)
- சிறீதரன், நீங்கள் ஏன் ஃக என்பதை ஏற்கமுடியவில்லை என்றும் ஆனால் ஃப என்பதை ஏற்கின்றீர்கள் என்றும் கூறினால் புரிந்துகொள்ள இயலும். தமிழில் முதலில் ஃ வராது என்பது உண்மை (அடுத்து வரும் எழுதுத்து எதுவாக இருப்பினும்). ஆனால் இடையே ஃ என்பதோடு (ஃ = அஃகேனம் எனவே அஃகேனத்தோடு) பல வல்லின எழுத்துகள் வருவதைக் காட்ட முடியும். ஆனால் வகரம் முதலான பிற இடையினங்களோ, மெல்லினங்களோ, உயிரெழுத்துகளோ வருவதில்லை. ஆனால் ஃஃ என்று இரட்டித்தும் வரும் (ஓசை நிரப்ப வரும். இதிலிருந்து நான் அறிவது அதற்கென ஓசை உண்டு, சார்ந்து வரும் சார்பெழுத்தே எனினும்). நான் கண்டவரை ஆய்த எழுத்து க, ச, ட, த, ற ஆகியவற்றோடு வருதைக் கண்டிருக்கின்றேன் ஆனால் பகரத்தோடு வருவது அரிது. கஃபு என்று வரும் என யாப்பருங்கல விருத்தியுரை கூறுகின்றது. பப்பத்து (பத்துப்பத்தாக) என்பதற்கு மாறாக பஃபத்து என்றும் கூறலாம் (பஃபத்து என்பதை paHbaththu என்று ஒலிக்க வேண்டும். ஆனால் அந்த H என்பது மிகக்குறைந்து ஒலிக்கும் அங்கு அதிக நேரம் நின்றுவிடல் கூடாது). ஆய்தம் வரும் தனிச்சொற்கள் பலவும், தொடர்மொழிகளும் உள்ளன அஃகு, எஃகு, பஃறி (= படகு), கஃசு ( = காற்பலம் என்னும் எடை) என பல தனிச்ச்சொற்கள் உள்ளன, ஆனால் தொடர்மொழியாக வரும்பொழுது ஃ என்னும் எழுத்துக்குப் பிற உயிர்மெய் எழுத்துகள் வரலாம். அஃகான், அஃறிணை, அஃகேனம் எனப் பல எடுத்துக்காட்டுகள் தரலாம். அஃகு என்றால் சுருங்கு (வினைச்சொல்) என்று பொருள். சுருங்கிய என்னும் பொருளில் சிறிய என்பதைக் குறிக்க அஃகடிய என்றும் வரும் (உஃகடிய என்றால் பெரிய என்று பொருள். உகப்பு = உயர்வு, உயர்ச்சி என்றும் பொருள்). எனவே இடையே வரும்பொழுது ஃ என்னும் அஃகேனத்துக்குப் பின்பு வல்லின உயிர்மெய் எழுத்துகள் வரலாம். ஓசை நிரப்ப அஃகேனமே இரட்டித்தும் வரலாம். ஆனால் மொழி முதலில் ஃப, ஃக, என வருதல் கூடாது. அப்படி நாம் எழுதினால் அது புதுவழக்கு. ஃப = Fa என்று எழுதும் பழக்கம் மிக அண்மையிலேதான் உருவானது. ப.வே மாணிக்கனார் என்னும் பொறியியலாளர் உருவாக்கிய புதுமை. இடையேதான் வரும் எனினும், ஃக போன்ற பிற யாவும் நன்கு அறிந்த ஒலிகளே. Hamilton என்னும் பெயரை ஃகாமில்டன் என்று எழுதக்கூடாது எனில், இஃகாமில்டன் என்று எழுதலாம். இஃகிட்லர் என்று எழுதலாம் (இதிலும் சிறு இலக்கணப்பிழைகள் உள்ளன). ஃ என்பது உண்மையில் காற்றொலித் திரிபை (குறிப்பாக உரசொலியாக வருவதைக்) குறிக்கும். பெரும்பாலும் ககரத்தின் காற்றொலித்திரிபு என்பதே பலரும் கொள்வது. ஆனால் கஃசு, பஃறி, அஃது முதலான பல சொற்களில் அது மிக நுட்பமான காற்றொலி கொண்டதாக உள்ளது. மிக நுட்பமான H எனக் கொள்ளலாம், ஆனால் H அன்று. "H" போன்ற, ஆனால் மிகுநுட்பமான, சார்ந்துவரும் ஒலி. எப்படி எந்தவிதமான "உரிமையும்" இன்றி ப.வே. மாணிக்கனார் ஃப என்பதை Fa என்பதற்கு ஈடாகப் பயன்படுத்தினாரோ (இதனை ஏற்காதவர்கள் மிகப்பலர் இருக்கின்றனர்), அதே போலத்தான் நானும் எந்தவிதமான "உரிமையும்" இல்லாமல், வகரத்தின் திரிபுதான் Fa என்றறிந்து ஃவ என வழங்குகின்றேன். Fa = ஃவ என்றும் ஃப = pha என்றும் கொள்ளலாம் என்பது இன்னொரு கருத்து. ஒலியை மட்டுமே முன்னிறுத்திப் பேசினால், அஃகேனம் காறொலித் திரிபு தரும் சார்பொலி என்று கொண்டால், இப்படி வழங்குவது முற்றிலும் பொருந்தும். ஃவ என்பதை நீக்க வேண்டும், கூடாது எனில், உங்களோடு முழுவதுமாக உடன்பட்டு நீக்க நானே முன்னிற்பேன், ஆனால் அதே போல ஃப என்பதையும் நீக்கவேண்டும். Fermi என்பதை வெர்மி என்றும் எழுதலாம். ஃபெர்மி என்று எழுதுவதினும் ஃவெர்மி என்று எழுதுவது பொருத்தமானது. தமிழில் வெர்மி, பெர்மி என்று எழுதினால் பிழை அன்று (ர்மி என்று வருவதும் பிழை என்பதைத்தவிர). இந்தப்பிழையை ஏதோ வரட்டு இலக்கண விதி என நினைக்க வேன்டாம், மிக மிக அருமையான, மொழியியல் நுண்ணறிவு மிக்க, விதி. ரகர மெய் ர் என்னும் எழுத்துக்குப் பிறகு சிறு உயிரொலி இல்லாமல் மகர உயிர்மெய்கள் வருவது "கடினம்" (இயல்பன்று) - எனவே பெருமி, வெருமி என்று கூறுதல் இலக்கணப்பிழை அற்றது. ஆனால் பெர்மி, வெர்மி என்று எழுதலாம் என்று கொள்ளலாம். ஒரு பிழை செய்தால் எல்லாப்பிழைகளும் செய்யலாம் என்றோ, ஒன்று கூடாது எனில் எதுவுமே கூடாது என்றோ கொள்வது பொருத்தம் அன்று. நான் டெட்சுயா ஃவுஜித்தா என்று Fujita Tetsuya என்று உரோமன் எழுத்தில் எழுதும் நிப்பானிய அறிஞரைப் பற்றிய குறுங்கட்டுரையை எழுதினேன். இதனை புச்சியித்தா தெத்துசுயா என்று எழுதுவதாலோ, புச்சியித்தா அளவுகோல் (Fujita scale) என்று அவர் முன்மொழிந்த சுழிக்காற்று (தோர்னேடோ) அளவுகோலைக் குறிப்பிடலாம். அதாவது ஃவு இல்லாமலும் ஜி இல்லாமலும் எளிதாக நன்கு எழுதலாம். ஆய்த எழுத்தைப் பற்றி அறிய இந்நூலில், பக்கங்கள் 45-52 வரை படித்துப்பாருங்கள். இராம.கி அவர்கள் விக்சனரி குழுமத்தில்] எழுதியுள்ளதையும், நான் இங்கே விக்கிப்பீடியாவில் பல இடங்களில் எழுதியுள்ளதையும் படித்துப் பார்க்கலாம். (நான் இன்னும் ஓரிரு நாட்கள் விடுப்பில் இருப்பேன்). தமிழ் இலக்கணம் என்பது மிகவும் அறிவார்ந்த நுட்பமான இயல்பான விதிமுறைகள். தமிழ் மொழியை அதன் சீரிளமையைக் காத்து வந்துள்ளது எனில் மிகையாகாது. கூடியமட்டிலும் பின்பற்றுவது மிகவும் நல்லது. அப்படிப் பின்பற்றுவது சீர்திருத்தம் அன்று!! --செல்வா (பேச்சு) 16:36, 10 சூலை 2012 (UTC)
//வேறெங்கோ ஃபேஸ்புக் ஐ முகநூல் என்று சொல்வது சரி என்று சொல்லுவதற்கு மட்டும் பயன்படுத்தலாம். அப்போ மட்டும் பொதுவழக்கு தேவைப்படுகிறது.//
முகநூல் என்று வேறெங்கும் அல்ல. முகநூலின் முதற்பக்கத்தில் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. --மதனாகரன் (பேச்சு) 14:59, 10 சூலை 2012 (UTC)
- தென்காசி சுப்பிரமணியன், Box, Fox, Pox என்பதை வேறுபடுத்திக் காட்ட முடியாதது நமக்கு மட்டும் அன்று பல மொழியாளருக்கும் உண்டு. எல்லா ஒலியன்களும் எல்லா மொழிகளிலும் இராது. மேலும் ஒலிப்பைக் கொண்டு, ஒலியெழுத்துகளாக எழுதும் மொழிகளில் Red (சிவப்பு) Read (படித்தான்/ள்/ர்) என்பதை வேறுபடுத்திக்காட்ட இயலாது. paul, pall ஆகியவற்றை வேறுபடுத்திக் காட்ட இயலாது. முதலில் வரும் இடத்தில் முதன்மொழியின் வழக்கைச் சுட்டிக்காட்டிவிட்டு (அவர்கள் எழுத்தில்), நாம் மேலே நம் மொழிக்கு உகந்த வழியில் செல்ல வேன்டியதுதான். ஆங்கிலத்தில் புலி, புளி, புழி என்பதை எப்படி எழுதிக்காட்டுவீர்கள்? அது அவர்கள் சிக்கல், அவர்கள் தீர்த்துக்கொள்ளட்டும், எனக் கூறுவது, மொழிக்கு மொழி, பெயர்ப்பில் பலவிதமான சிக்கல்கள் இருக்கும் என்னும் பொது விதியை ஒப்புக்கொள்ளாமை ஆகும். பிறமொழி போலவே தமிழ் மொழியிலும் இப்படிச் சிக்கல்கள் இருக்கின்றன. ஆங்கிலத்தில் box, boks, baux என்று பலவிதமாக எழுதக்கூடியவற்றை ஒலியை மட்டும் வைத்து எழுதினால் வேறுபடுத்திக்காட்ட இயலாது. ஆங்கிலத்தில் so, sew, sow ஆகிய அனைத்துமே ஒரே விதமாகவே ஒலிப்பர் (கேட்பவர் சூழல் அறிந்தே புரிந்துகொள்ளவேண்டும்). so என்பதை ஃசோ என்று எழுதினாலும் ஸோ என்று எழுதினாலும் அந்த மூன்று சொற்களையும் வேறுபடுத்திக்காட்ட இயலாது. எனவே கிரந்தமோ பிற முறைகளையோ ஒலிப்பைக் காட்ட நுழைத்தால் தீர்வு ஏற்படாது. தமிழை, தமிழ்முறையை மதிக்கவேண்டும்! சிறு நெகிழ்ச்சி காட்டலாம் என்றால் எல்லாம் செய்யலாம் என்று பொருள் இல்லை. --செல்வா (பேச்சு) 16:59, 10 சூலை 2012 (UTC)
- ஒலிப்பை முன்வைத்து எழுதிக்காட்டும் அனைத்துலக ஒலியன் எழுத்துமுறையிலும் (IPA) red, read முதலானவற்றை வேறுபடுத்திக்காட்ட முடியாது. --செல்வா (பேச்சு) 17:16, 10 சூலை 2012 (UTC)
- //...ஆனால், தகுந்த இடங்களில்// தகுந்த னு முடிவு செய்யறது யார்? கோடிக்கணக்கான தமிழ் மக்களுக்கு 40 பேர் இருக்ககூடிய விக்கிப்பீடியா போன்று ஒரு சிறிய தளம் எப்படி செய்யமுடியும்? நியாமா?//
- தகுந்தது என முடிவு செய்வது நல்ல தமிழறிவுடன் அணுகுவோர், தமிழ் அறிந்தோர். அவற்றைக் கருதி நாம் முடிவு செய்கின்றோம். தமிழ் விக்கிப்பீடியாவும் நீங்கள் சுட்டும் ஊடகங்களைப் போல் பார்க்கப்படும் ஓர் ஊடகமே. தமிழ் விக்கிப்பீடியா ஒரு நாளைக்கு 138,000 தடவை பார்க்கப்படுகின்றது. ஒரு மாதத்துக்கு 4.1 மில்லியன் முறை பார்க்கப்படுகின்றது. மேலே இரவி கூறியது போல் ஊடகங்கள் ஒன்றை எழுதுவதால் அது பொது வழக்காகாது, பொதுமக்கள் ஏற்புபெற்றதாகாது. இங்கே கலந்துரையடியும் மறுத்துக்கூறியும் செய்வது போல், அதுவும் திறந்த நிலையில், அங்கு செய்யப்படுவதில்லை, எனவே இது இன்னும் சிறந்தது. அண்மையில் தினமணி என்னும் நாளிதழில் "நியூட்ரானுக்கு நிறை இல்லை" என்று எழுதியது, இகிசு போசான் கண்டுபிடிப்புப் பற்றி எழுதிய கட்டுரையில், அதனால் நியூட்ரானுக்கு நிறை இல்லை என்று பொருள் ஆகிவிடாது. தமிழ் ஊடகங்களில் எழுதுவோர் சரியான தமிழ் அறிவோடோ, பொது அறிவோடோ, பொறுப்புணர்வோடோ எழுதுகின்றார்கள் என்று கூறமுடியாது, ஆகவே அவர்களின் தமிழை ஏற்புடைய பொதுத்தமிழ் என்று கூற முடியாது. இதே போல பாடநூல்களிலும் பல பிழைகள் உள்ளன. விக்கிப்பீடியாவில் கலந்துரையாடி எங்கெங்கு சரியான வழக்கங்கள் உள்ளனவோ, அவற்றைக் கூடியமட்டிலும் எடுத்தாண்டு சரியாக எழுதலாம். --செல்வா (பேச்சு) 20:51, 10 சூலை 2012 (UTC)
- * எப்பொழுது பொதுமக்கள் ஏற்புடையதாகிறது என்பதற்கு எது அளவுகோல்? கிரந்தம் பொதுவழக்கில் இருக்கிறதா இல்லையா? இல்லை அதுவும் எதோ ஆதிக்க ஊடகங்களின் சூட்சியா? தொல்காப்பியத்தின்படி இலக்கணப் பிழை என்ற அளவில் மட்டும் வாதத்தை வைக்க வேண்டுகிறேன். பொது மக்களின் ஏற்பு நிலை பற்றி நீங்கள் எவ்வாறு அறிவீர்கள்? எப்பவுமே நான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்றால் இங்கு வாதிடுவதே நேர விரையம். எல்லா முறையும் அறிவு அடிப்படையில் வாதிடலாம் வாங்க என்று கூறிவிட்டு "நான் சொல்வது தான் சரி என்று சொன்னால்", அறிவடிப்படையில் வாதிடுபவர்கள் விலகவே செய்வார்கள். சரி தினமணி நாளிதழில் இகிசு போசான் பற்றி கருத்துப்பிழையுடன் பதித்துவிட்டார்கள், அதனால் தமிழ் ஊடகங்களில் எழுதுவோர் சரியான தமிழ் அறிவோடோ, பொது அறிவோடோ, பொறுப்புணர்வோடோ எழுதுகின்றார்கள் என்று கூறமுடியாது. அருமையான கூற்று. இதற்கு பெயர் பறந்து விரந்த பொதுக்காரணியாக்கல் (sweeping generalization) என்று கூறுவார்கள். சப்பகட்டு வாதங்கள் தேவையில்லையே, அறிவடிப்படையில் வாதிடலாமே? ஸ்ரீகாந்த் (பேச்சு) 20:52, 11 சூலை 2012 (UTC)
//*//...ஆனால், தகுந்த இடங்களில்// தகுந்த னு முடிவு செய்யறது யார்? கோடிக்கணக்கான தமிழ் மக்களுக்கு 40 பேர் இருக்ககூடிய விக்கிப்பீடியா போன்று ஒரு சிறிய தளம் எப்படி செய்யமுடியும்? நியாமா?//
தமிழ் பல்லாயிரம் ஆண்டு தொன்மையுடையது. அதற்குக் கிடைத்திருக்கும் ஒரு இலக்கண நூலான தொல்காப்பியம் மட்டும் இரண்டாயிரம் ஆண்டு தொன்மை உடையது. அன்றில் இருந்து இன்று வரை எத்தனைத் தலைமுறைகளாக எத்தனைக் கோடி தமிழர்கள் வாழ்ந்துள்ளனர்? இவர்கள் ஏற்புடன் தான் தமிழ் இலக்கணம் பின்பற்றப்பட்டு வந்தது? நீங்கள் மேலே கேட்டுள்ள கேள்வி உண்மையில் இலக்கணத்துக்குப் புறம்பாக மொழியில் மாற்றங்களை உருவாக்குவோரிடம் கேட்க வேண்டிய கேள்வி. கிரந்தமானாலும் சரி, ஆய்தத்தை முறை தவறிப் பயன்படுத்துவதானாலும் சரி அவை பயன்பாட்டில் இருக்கும் காலத்தில் அவற்றைத் தவிர்த்துப் பின்பற்றி எழுதும் வழக்கமும் உள்ளது. சிறீதரன் சுட்டியபடி உலக ஊடகமான பி. பி. சி. ஆகட்டும் உள்ளூர் சந்தில் உள்ள கடை ஆகட்டும் fக்குப் பதில் ப எழுத்தை மட்டும் பயன்படுத்தி எழுதி வழக்கம் இருந்தே வருகிறது. மொழியின் இலக்கணத்துக்குப் புறம்பான ஒரு புதுமையையோ சீர்கேட்டையோ புகுத்தத்தான் நீங்கள் கூறுவது போல் தமிழ் விக்கிப்பீடியாவுக்கு உரிமை இல்லையே தவிர, ஏற்கனவே உள்ள நடைமுறையைக் கேட்பதற்கும் செயல்படுத்துவதற்கும் முழு உரிமை உண்டு.--இரவி (பேச்சு) 06:25, 11 சூலை 2012 (UTC)
- நீங்கள் சீர்கேடாகப் பார்க்கும் விஷயத்தை நான் பரிணாம வளர்ச்சியாகப் பார்க்கிறேன். ஃப பயன்பாடு பெயர்ச்சொல் தவிர பிற இடங்களில் பயன்படுத்துவது இலக்கணப்பிழையாகலாம் என்பது என் கருத்து. ஃப பயன்பாட்டின் வரலாறு என்ன? அதனை முன்மொழிந்த மொழியியலாளர்களின் கருத்து என்ன? தமிழ்நாடு, இலங்கை, சிங்கப்பூர் பள்ளிகளில் ஃப பயன்பாடு கற்றுக்கொடுக்கபடுகிறதா இல்லையா? (ஆசிரியர்கள் தயவு செய்து பதிலளிக்கவும்). இல்லை என்றால் எப்படி மக்கள் ஃப ஐ f என்று உச்சரிக்கிறார்கள்? தொல்காப்பியத்தை தனிமையில் வைத்துப்பார்த்தால்(isolated view) நாம் இன்று எழுதுவது தமிழே அல்ல என்று கூட யாரேனும் ஒருவர் சொல்லலாம். தமிழ் விக்கிப்பீடியாவின் தலையாய நோக்கம் இன்றைய மக்கள் தமிழில் தவற்களஞ்சியத்தைத் தருவது. மொழியின் பரிணாம வளர்ச்சியை/சீர்கேட்டையோ மாற்றுவது அல்ல. நன்றி. ஸ்ரீகாந்த் (பேச்சு) 20:52, 11 சூலை 2012 (UTC) விருப்பம்--Sank (பேச்சு) 16:16, 14 சூலை 2012 (UTC)
//தப்பான உதாரணம். பொது வழக்குக்கும் உலக வழக்குக்கும் வித்தியாசம் இருக்கு. நான் கூறுவது தமிழ் மொழி பொது வழக்கு// நீங்கள் குறிப்பிடும் தமிழ் மொழிப் பொது வழக்கு என்றால் என்ன? அதன் ஆதாரத்தைச் சற்று விளக்குவீர்களா?
//இலங்கை, சிங்கப்பூர் பள்ளிகளில் ஃப பயன்பாடு கற்றுக்கொடுக்கபடுகிறதா இல்லையா? (ஆசிரியர்கள் தயவு செய்து பதிலளிக்கவும்)// இலங்கையிலிருந்து ஆசியர்கள் இப்போது விக்கிக்குப் பங்களிக்கிறார்களா? --Anton (பேச்சு) 13:07, 12 சூலை 2012 (UTC)
ஸ்ரீகாந்தின் கருத்திற்கு உடன்படுகிறேன். இது போன்ற உரையாடல்கள் மீண்டும் மீண்டும் திறன்குறைப்பு ஊக்கிகளேயன்றி வேறில்லை. எனவே, தயவுசெய்து தற்போதைய நிலையே தொடர (status-quo) விரும்புகிறேன். இது போன்ற விவாதங்கள் பல புதிய பயனர்களைப் பயமுறுத்தும் என்பதில் மட்டும் எனக்கு மாற்றுக்கருத்தில்லை. இனி இங்கு உரையாடுவோர் விருப்பம். -- சூர்யபிரகாஷ் உரையாடுக 10:49, 19 சூலை 2012 (UTC)
மெய்யெழுத்துகளில் சொற்களைத் தொடங்குதல்
தொகு- என் முன்மொழிவு, மெய்யெழுத்துகளில் தொடங்கி ஒரு சொல், அது வேற்றுமொழிச்சொல்லாயினும், வழங்கல் கூடாது. --செல்வா (பேச்சு) 23:07, 14 சூலை 2012 (UTC)
- வணிகப்பெயரே ஆயினும், உயிரொலி சேர்த்தே மொழிவழக்கப்படி எழுதுதல் வேண்டும். எடுத்துக்காட்டாக, "க்ரியா" என்னும் தமிழ் அகராதியை குறிக்க கிரியா தமிழ் அகராதி என்று எழுதி "க்ரியா" தமிழ் அகராதி என்று இது அழைக்கப்படுகின்றது எனக் கூறலாம். நன்கு அறியப்பட்ட மொழியியல் அறிஞர் ஆகிய பேராசிரியர் முனைவர் ச. இராசேந்திரன் (இவர் தற்கால மொழியியல் அறிவில் நல்ல பயிற்சி உடையவர்), தான் எழுதிய தமிழில் சொல்லாக்கம் என்னும் நூலில் (பக்கம் 400) "கிரியாவில் பெயரடைகளாகத் தரப்பட்டுள்ள 'செய்த" பெயரச்சம்..." என்று மரபுப்படி இகரம் சேர்த்தே எழுதியுள்ளார். --செல்வா (பேச்சு) 23:07, 14 சூலை 2012 (UTC)
- வணிகப் பெயரை அப்படியே எழுத வேண்டுமாகிய உரிமை இருப்பதாகக் கொண்டால், தமிழ்மொழிக்கும் அதற்கான உரிமை இருக்கும் அல்லவா? வணிகத்தின் பெயரால் மொழியைச் சிதைக்க உரிமை ஏதும் இருப்பதாகக் கொள்ளல் இயலாது. வணிகப்பெயரில் முதலில் மெய்யெழுத்து இருக்கும்படியாக தமிழில் எழுதி இருந்தால்- எ.கா. கிரியா ("க்ரியா") என்று மேற்கோள் குறிகள் இட்டு எழுதிக்கட்டலாம் பிறைக்குறிகளுக்குள். திரைபப்டங்கள் "ப்ரண்ட்ஸ்" என்று இருந்தால், பிரண்ட்ஸ் ("ப்ரண்ட்ஸ்") என்றோ, பிரண்ட்ஃசு ("ப்ரண்ட்ஸ்") என்றோ எழுதிக்காட்டலாம். ஒருவர் "Aழgappன் Bakery" என்று பெயர் இட்டிருந்தால் ஆங்கிலத்திலோ, தமிழிலோ அப்படியேதான் எழுத வேண்டும் என்று சொல்லல் இயலாது. London என்னும் பெயரை, உரோமன் எழுத்தில் எழுதும் ஐரோப்பிய மொழிகள், ஏன் பிரான்சிய மொழியில், எசுப்பானிய, போர்த்துகீசிய மொழியில் Londres என்று எழுதுகின்றனர்? ஏன் "Londino" (Λονδίνο) என்று கிரேக்க மொழியில் எழுதுகின்றனர்? Londra என்று இத்தாலிய துருக்கி மொழிகளிலும், Londen என்று இடாய்ச்சு இடச்சு மொழிகளிலும், Londer என அல்பேனியனிலும், Londýn என செக்கு, சுலோவாக்கு மொழுகளிலும் Londyn எனப் போலந்திய மொழியிலும் Lundúnir என ஐசுலாந்தியத்திலும் இன்ன பிறவாக பிறமொழிகளிலும் எழுதுகின்றனர்? தனி மாந்தர் பெயரே ஆனாலும் இலத்தீன் போன்ற மொழிகளில் அவர்கள் மொழிப்படியே திருத்தியே வழங்குகின்றனர் (எ.கா Carolus Linnæus என்று இலத்தீனில் அறியப்படும் பெயர் Carl Linnaeus அல்லது Mikołaj Kopernik என்று அறியப்படும் பெயர் Nicolaus Copernicus என்றும், இடாய்ச்சு இத்தாலிய மொழிகளில் முறையே Nikolaus Kopernikus; Nicolò Copernico என்றும் வெவ்வேறாக வழங்கும். எல்லாம் உரோமன் எழுத்தைக்கொன்டு எழுது மொழி என்பதையும் கருத்தில் கொள்ளுங்கள்.). எனவே மொழியில் வழக்குப்படியே பெயர்ச்சொல் ஆயினும், வணிகப்பெயர் ஆயினும் எழுதுதல் வேண்டும். அடையாள முத்திரையில் எப்படி வேன்டுமானாலும் இருக்கலாம் (இங்கும்கூட விதிமுறைகள் உள்ளனவாம். விருப்பத்தைத் தெரிவிக்கும் கட்டைவிரலை மேல்நோக்கிக் காட்டும் குறி ("Like") மிகவும் இழிவான சுட்டாக, குறியீடாக சில நாடுகளில் கருதப்படுகின்றது (அமெரிக்காவில் நடுவிரலைக்காட்டுவது போல்). எனவே வணிக நிறுவனத்துக்கு உரிமை இருபப்துபோல் மொழிக்கும் மொழி மரபுக்கும் முன்னுரிமை உண்டு. --செல்வா (பேச்சு) 23:07, 14 சூலை 2012 (UTC)
- இந்தத் தனிப்பெயர், வணிகப்பெயர், பெயர்ச்சொல் என்பதைக் காட்டித் தமிழில் முறையில்லாதவற்றைச் செய்வதை ஏற்கக் கூறுவது பொருந்தாது. Tȟatȟáŋka Íyotake என்னும் பெயரை ஆங்கிலேயர் "Sitting Bull" என்றும், Maȟpíya Lúta என்னும் பெயரை "Red Cloud" என்றும் வழங்கும் உரிமை இருப்பதாகக் கொள்வோர், அதனை ஏற்போர், சிறு திரிபுகளை, அதுவும் தமிழ் மொழியியல்பை ஒட்டி நிகழ்வதை மறுப்பது பொருந்தாது. பெயர்ச்சொல்லே ஆயினும் வழங்குமொழியின் தேவை கருதி தக்க மாற்றங்கள் செய்வது தவறாகாது, அதற்கு உரிமை உண்டு. இரெடு கிளௌடு என்று ஆங்கிலேயர் அழைக்கப்போய், எசுப்பானியரும் Nube Roja (செம்மேகம்) என்று அழைக்கின்றனர். நாம் தமிழில் Sitting Bull-ஐ வீற்றிருக்கும் எருது என்று அழைக்கின்றோம் (ஒருவரை எருமைமாடு, காளைமாடு என்றால் அது ஏற்புடையதா? என்று கேட்பதில்லை, ஆனால் தமிழில் எழுதும்பொழுது மட்டும் சிறுமாறுபாடுகளையும் பெரிதாக்கிப் பேசுகின்றனர். தமிழ் விக்கிப்பீடியாவில் கூடிய மட்டிலும் முறை சார்ந்து எழுதுவதும், அறிவடிப்படையான காரணங்களை முன்வைத்து எழுதுவதும் நல்லது என்று நினைக்கின்றேன். எல்லா மொழிகளுக்கும் இருக்கும் உரிமை மூத்த, தொன்மொழிகளில் ஒன்றாகிய தமிழ் மொழிக்கு மட்டும் இல்லையா என்றும் எண்ணிப்பார்க்க வேண்டும்) --செல்வா (பேச்சு) 14:21, 17 சூலை 2012 (UTC)
- வணிகப் பெயரை அப்படியே எழுத வேண்டுமாகிய உரிமை இருப்பதாகக் கொண்டால், தமிழ்மொழிக்கும் அதற்கான உரிமை இருக்கும் அல்லவா? வணிகத்தின் பெயரால் மொழியைச் சிதைக்க உரிமை ஏதும் இருப்பதாகக் கொள்ளல் இயலாது. வணிகப்பெயரில் முதலில் மெய்யெழுத்து இருக்கும்படியாக தமிழில் எழுதி இருந்தால்- எ.கா. கிரியா ("க்ரியா") என்று மேற்கோள் குறிகள் இட்டு எழுதிக்கட்டலாம் பிறைக்குறிகளுக்குள். திரைபப்டங்கள் "ப்ரண்ட்ஸ்" என்று இருந்தால், பிரண்ட்ஸ் ("ப்ரண்ட்ஸ்") என்றோ, பிரண்ட்ஃசு ("ப்ரண்ட்ஸ்") என்றோ எழுதிக்காட்டலாம். ஒருவர் "Aழgappன் Bakery" என்று பெயர் இட்டிருந்தால் ஆங்கிலத்திலோ, தமிழிலோ அப்படியேதான் எழுத வேண்டும் என்று சொல்லல் இயலாது. London என்னும் பெயரை, உரோமன் எழுத்தில் எழுதும் ஐரோப்பிய மொழிகள், ஏன் பிரான்சிய மொழியில், எசுப்பானிய, போர்த்துகீசிய மொழியில் Londres என்று எழுதுகின்றனர்? ஏன் "Londino" (Λονδίνο) என்று கிரேக்க மொழியில் எழுதுகின்றனர்? Londra என்று இத்தாலிய துருக்கி மொழிகளிலும், Londen என்று இடாய்ச்சு இடச்சு மொழிகளிலும், Londer என அல்பேனியனிலும், Londýn என செக்கு, சுலோவாக்கு மொழுகளிலும் Londyn எனப் போலந்திய மொழியிலும் Lundúnir என ஐசுலாந்தியத்திலும் இன்ன பிறவாக பிறமொழிகளிலும் எழுதுகின்றனர்? தனி மாந்தர் பெயரே ஆனாலும் இலத்தீன் போன்ற மொழிகளில் அவர்கள் மொழிப்படியே திருத்தியே வழங்குகின்றனர் (எ.கா Carolus Linnæus என்று இலத்தீனில் அறியப்படும் பெயர் Carl Linnaeus அல்லது Mikołaj Kopernik என்று அறியப்படும் பெயர் Nicolaus Copernicus என்றும், இடாய்ச்சு இத்தாலிய மொழிகளில் முறையே Nikolaus Kopernikus; Nicolò Copernico என்றும் வெவ்வேறாக வழங்கும். எல்லாம் உரோமன் எழுத்தைக்கொன்டு எழுது மொழி என்பதையும் கருத்தில் கொள்ளுங்கள்.). எனவே மொழியில் வழக்குப்படியே பெயர்ச்சொல் ஆயினும், வணிகப்பெயர் ஆயினும் எழுதுதல் வேண்டும். அடையாள முத்திரையில் எப்படி வேன்டுமானாலும் இருக்கலாம் (இங்கும்கூட விதிமுறைகள் உள்ளனவாம். விருப்பத்தைத் தெரிவிக்கும் கட்டைவிரலை மேல்நோக்கிக் காட்டும் குறி ("Like") மிகவும் இழிவான சுட்டாக, குறியீடாக சில நாடுகளில் கருதப்படுகின்றது (அமெரிக்காவில் நடுவிரலைக்காட்டுவது போல்). எனவே வணிக நிறுவனத்துக்கு உரிமை இருபப்துபோல் மொழிக்கும் மொழி மரபுக்கும் முன்னுரிமை உண்டு. --செல்வா (பேச்சு) 23:07, 14 சூலை 2012 (UTC)
- வணிகப்பெயரே ஆயினும், உயிரொலி சேர்த்தே மொழிவழக்கப்படி எழுதுதல் வேண்டும். எடுத்துக்காட்டாக, "க்ரியா" என்னும் தமிழ் அகராதியை குறிக்க கிரியா தமிழ் அகராதி என்று எழுதி "க்ரியா" தமிழ் அகராதி என்று இது அழைக்கப்படுகின்றது எனக் கூறலாம். நன்கு அறியப்பட்ட மொழியியல் அறிஞர் ஆகிய பேராசிரியர் முனைவர் ச. இராசேந்திரன் (இவர் தற்கால மொழியியல் அறிவில் நல்ல பயிற்சி உடையவர்), தான் எழுதிய தமிழில் சொல்லாக்கம் என்னும் நூலில் (பக்கம் 400) "கிரியாவில் பெயரடைகளாகத் தரப்பட்டுள்ள 'செய்த" பெயரச்சம்..." என்று மரபுப்படி இகரம் சேர்த்தே எழுதியுள்ளார். --செல்வா (பேச்சு) 23:07, 14 சூலை 2012 (UTC)
மெய்யொலிக்கூட்டங்கள்
தொகு- இங்கும் சிறு நெகிழ்ச்சிகள், உறழ்ச்சிகள் தவிர, மிக மிகப் பெரும்பாலும் தமிழ் முறையைப் பின்பற்றுவதே சிறந்தது. பக்தி, சக்தி போன்றவையு, தர்மி, பெர்மி, போன்றவையும் பிறழ்ச்சி என்றாலும் "சிறிய" மாறுபாடு என்று :ஏற்கலாம்" (ஏற்கவேன்டும் என்று கூறவில்லை), ஆனால் இங்கும் பத்தி, சத்தி, பெருமி, தருமி என்று எழுதுவதில் பெரிய சிக்கல் ஏதும் இல்லை. பல நூல்களில் பத்தி, சத்தி என்றே எழுதியும் வந்திருக்கின்றார்கள். இவற்றை "விதிகளைப் பின்பற்றுவது" என்று கொள்வதைவிட, உண்மையில் தமிழர்கள் தேர்ந்தளித்த எளிமை, அறிவுடைய என்று கொள்ளல் பொருந்தும். மிகப்பெரும்பாலான தமிழர்களுக்கு சிக்கல் இல்லாதவை. --செல்வா (பேச்சு) 23:34, 14 சூலை 2012 (UTC)
- ஆங்கில ஒலிப்புக்கு ஏற்ப மெய்யெழுத்துக் கூட்டங்களைத் திரித்து எழுதுவது இல்லாமல் இருப்பது நல்லது. ஆங்கில ஒலிப்பைக் காட்ட -ண்ட்- என்பது போல் தமிழ் மரபில்லா ஒலிக்கூட்டங்களை எழுதிக்காட்டலாம், ஆனால் சொல்லாக வழங்கும்பொழுது தமிழ் முறைப்படி (ஒலிப்பு முறைப்படி) எழுதுவதே நல்லது.--செல்வா (பேச்சு) 23:34, 14 சூலை 2012 (UTC)
- ஆங்கில விக்கிப்பீடியாவில் உள்ள Consonant_cluster என்னும் பக்கத்தைப் பார்க்க வேன்டுகின்றேன். அதில் உள்ளதை அப்படியே ஏற்கவேன்டும் என்றும் நான் கூறவில்லை. ஆனால் தமிழில் தெளிவான விதிமுறைகள் வரையறுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் பின் பற்றுவது தவறாகாது. மேலும் அவற்றில் தெளிவான அறிவடிப்படையான காரணங்களும், தமிழ் மொழியின் இயல்பும் மரபும் பொதிந்துள்ளன. சுலாவிய மொழிகளில் வழங்கும் மெய்யெழுத்துக்கூட்டங்களைச் சொல்லிப்பாருங்கள் " štvrť /ʃtvr̩tʲ/, zmrzlina /zmr̩zlɪna/, žblnknutie /ʒbl̩ŋknutje/ " அவை அம்மொழியாளருக்கு இயல்பாக இருக்கலாம், அவை அப்படியேதான் நம்மொழியிலும் வழங்க வேண்டும் என்று எந்த விதிமுறையும் கிடையாது. சொல்லப்போனால் வேற்றுமொழிச் சொற்களை எப்படி உள்வாங்க வேண்டும் என்று விதிமுறைகள் உள்ள மொழி தமிழ். கனடாவின் முதற்குடிகளின் மொழிக்குடும்பங்களில் ஒன்றாகிய சாலிசிய மொழிக்குடும்பத்தைச் சேர்ந்த பெல்லா கூலா என்றும் அழைக்கப்படும் நுக்ஃசால்க்கு (Nuxálk) மொழிச்சொல் /xɬpʼχʷɬtʰɬpʰɬːskʷʰt͡sʼ/ என்று ஒலிக்குமாம். அவற்றில் உயிரொலியே இல்லாமல் 13 மெய்யெழுத்துகள் ஒலிக்குமாம் (!!) வேற்றுமொழிச்சொற்களைக் கூடிய மட்டிலும் முதல்மொழிக்கு நெருக்கமாக வழங்க முற்படுவது நல்ல முயற்சியே, ஆனால் அதற்காக நம் மொழியின் விதிகளை விட வேண்டும் என்பது ஏற்புடையதாகாது. தேவையான இடங்களில் தக்க உயிரொலி பெய்து (சேர்த்து) நமக்கு எளிதாக நம் மொழிக்கு உகந்தவாறு ஒலிக்கும்படி எழுதுவது நல்லது. --செல்வா (பேச்சு) 18:18, 18 சூலை 2012 (UTC)
மொழி முதல் வாரா எழுத்துகளில் தொடங்குதல் (எ.கா. ர, ல, ற, ழ ட ....) சொற்களைத் தொடங்குதல்
தொகு- இதற்கான விதிகள் தெளிவாக தமிழில் உண்டு. தக்கதோர் உயிரெழுத்தை முன்னே இட்டு எழுதுதல் வழக்கம். இது தமிழ் மொழிக்கும் மட்டும் அன்று பிற பல மொழிகளுக்கும் உண்டு, அவர்களிடையே விதி என்று இல்லாவிட்டாலும். இதனை மொழியியலாளர்கள் prosthetic vowel என்கின்றனர். துணை உயிரொலியை முன்னிட்டு ஒலித்தல். இந்தி மொழி பேசுவோரும் இந்தியாவைச் சேராத பிற மொழியாளர்கள் பலரும்கூட இப்படி ஒலிப்பர் - school என்பதை இசுக்கூல் என்பது போல. இதனைத் தமிழில் முறை செய்து இயல்புடன் வழங்குகின்றோம், அவ்வளவே. எனவே இலண்டன், இராமன், இடாய்ச்சு என்பது போல எழுதுதலே முறை. டொராண்டோ என்று வழங்குவதைக் காட்டிலும் தொராண்டோ என்று வழங்கலாம். டகரத்தில் தொடங்கும் சொற்களைத் தகரத்தில் தொடங்கலாம். இதனால் யாழ்பாணத்தமிழர்ககளுக்கும் தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கும் ஏற்புடைய ஒரு முறையாகவும் இது அமையும் வாய்ப்புள்ளது. இது புதிதன்று, நற்றமிழ் முறையே! றாபேட், ராபர்ட்டு என்பதை விட இராபர்ட்டு என்றோ வேறு விதமாக முறை சார்ந்து எழுதுதலே நல்லது. எனவே தமிழில் மொழிமுதல் வாரா எழுத்துகள் விதியைக் கடைபிடித்தல் இயலக்கூடிய ஒரு முறையே. --செல்வா (பேச்சு) 23:24, 14 சூலை 2012 (UTC)
கொள்கை
தொகுஃ, க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன், ஜ், ஸ், ஷ், ஹ், க்ஷ், ட, டா, டி, டீ, டு, டூ, டெ, டே, டை, டொ, டோ, டௌ, ற, றா, றி, றீ, று, றூ, றெ, றே, றை, றொ, றோ, றௌ, ங, ஙா, ஙி, ஙீ, ஙு, ஙூ, ஙெ, ஙே, ஙை, ஙொ, ஙோ, ஙௌ, ஞ, ஞி, ஞீ, ஞு, ஞூ, ஞே, ஞோ, ஞௌ, ண, ணா, ணி, ணீ, ணு, ணூ, ணெ, ணே, ணை, ணொ, ணோ, ணௌ, ன, னா, னி, னீ, னு, னூ, னெ, னே, னை, னொ, னோ, னௌ, ய, யி, யீ, யு, யூ, யெ, யே, யை, யொ, யோ, யௌ, ர, ரா, ரி, ரீ, ரு, ரூ, ரெ, ரே, ரை, ரொ, ரோ, ரௌ, ல, லா, லி, லீ, லு, லூ, லெ, லே, லை, லொ, லோ, லௌ, வு, வூ, வொ, வோ, ழ, ழா, ழி, ழீ, ழு, ழூ, ழெ, ழே, ழை, ழொ, ழோ, ழௌ, ள, ளா, ளி, ளீ, ளு, ளூ, ளெ, ளே, ளை, ளொ, ளோ, ளௌ, ஜ, ஜா, ஜி, ஜீ, ஜு, ஜூ, ஜெ, ஜே, ஜை, ஜொ, ஜோ, ஜௌ, ஸ, ஸா, ஸி, ஸீ, ஸு, ஸூ, ஸெ, ஸே, ஸை, ஸொ, ஸோ, ஸௌ, ஷ, ஷா, ஷி, ஷீ, ஷு, ஷூ, ஷெ, ஷே, ஷை, ஷொ, ஷோ, ஷௌ, ஹ, ஹா, ஹி, ஹீ, ஹு, ஹூ, ஹெ, ஹே, ஹை, ஹொ, ஹோ, ஹௌ, க்ஷ, க்ஷா, க்ஷி, க்ஷீ, க்ஷு, க்ஷூ, க்ஷெ, க்ஷே, க்ஷை, க்ஷொ, க்ஷோ, க்ஷௌ ஆகிய எழுத்துகளில் விக்கிப்பீடியாக் கட்டுரைகளைத் தொடங்கக்கூடாது என்ற கொள்கையை (விதிவிலக்கு: குறிப்பிட்ட மெய்யெழுத்துப் பற்றிய கட்டுரை) அறிவிக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன் (விக்கிப்பீடியாத் தலைப்புகள் கிரந்த எழுத்துகளில் ஆரம்பிப்பதைத் தவிர்ப்பது நல்லதே.). --மதனாகரன் (பேச்சு) 13:34, 15 சூலை 2012 (UTC)
ங, ஙா, ஙி, ஙீ, ஙு, ஙூ, ஙெ, ஙே, ஙை, ஙொ, ஙோ, ஙௌ, ஞ, ஞி, ஞீ, ஞு, ஞூ, ஞே, ஞோ, ஞௌ போன்ற எழுத்துக்களில் வேற்று மொழிப் பெயர்கள் வர வாய்ப்புள்ளது. அவற்றை என்ன செய்ய வேண்டும்.--பாஹிம் (பேச்சு) 14:37, 15 சூலை 2012 (UTC)
ஞிமிறு-வண்டு,ஞமலி-நாய் இவற்றுக்கு என்ன செய்வது?? இதைப்போல் இன்னும் பல சொற்கள் உண்டு--Sank (பேச்சு) 14:50, 15 சூலை 2012 (UTC)
- ஞிமிறு, ஞமலி முதலியவை தமிழ்ச் சொற்கள் அல்லவே. தமிழ்ச் சொற்கள் ஞகர வரிசையில் ஞா, ஞெ, ஞொ என்பனவற்றில் மட்டுமே தொடங்கும். வேற்று மொழிப் பெயர்களுக்கு அ, இ, உ ஆகிய எழுத்துகளில் பொருத்தமானதை முன்னுக்கு இடலாம். இங என்றவாறு தொடங்கலாம். --மதனாகரன் (பேச்சு) 12:07, 16 சூலை 2012 (UTC)
- ஞிமிறு, ஞமலி என்பன தமிழ்ச்சொற்கள்தாம், ஆனால் எப்படிச் சகரத்தில் சொல் தொடங்காது என்று தொல்காப்பியத்தில் கூறியது (அது இடைசெருகலாக இல்லாததாக இருந்தால்) மாறிவந்துள்ளதோ அதுபோன்று ஞிமிறு, ஞமலி என்பனவும் மாறி வந்துள்ளன. ஞிமிறு என்பதும் மிஞிறு என்றும் சங்க இலக்கியத்திலேயே வந்துள்ளன (:வரிஞிமி றார்க்கும் வாய்புகு கடாஅத்து (புறநா. 93, 12)." என்பதையும் மிஞி றார்க்குங் கமழ்கடாத்த (புறநா. 22). என்பதையும் சென்னைத் தமிழ்ப்பேரகராதியே சுட்டுகின்றது. --செல்வா (பேச்சு) 14:13, 16 சூலை 2012 (UTC)
- இதே போல ஞமலி என்பதையும் பெருபாணாற்றுப்படை, பட்டினப்பாலை ஆகிய நூல்களில் ஆண்டிருப்பதைக் காணலாம். பிற இடங்களில் தக்க உயிரெழுத்தை முன்னே இட்டு வழங்கலாம். இதில் பெரிய சிக்கல் ஏதும் இல்லை. --செல்வா (பேச்சு) 14:24, 16 சூலை 2012 (UTC)
- ஞிமிறு, ஞமலி என்பன தமிழ்ச்சொற்கள்தாம், ஆனால் எப்படிச் சகரத்தில் சொல் தொடங்காது என்று தொல்காப்பியத்தில் கூறியது (அது இடைசெருகலாக இல்லாததாக இருந்தால்) மாறிவந்துள்ளதோ அதுபோன்று ஞிமிறு, ஞமலி என்பனவும் மாறி வந்துள்ளன. ஞிமிறு என்பதும் மிஞிறு என்றும் சங்க இலக்கியத்திலேயே வந்துள்ளன (:வரிஞிமி றார்க்கும் வாய்புகு கடாஅத்து (புறநா. 93, 12)." என்பதையும் மிஞி றார்க்குங் கமழ்கடாத்த (புறநா. 22). என்பதையும் சென்னைத் தமிழ்ப்பேரகராதியே சுட்டுகின்றது. --செல்வா (பேச்சு) 14:13, 16 சூலை 2012 (UTC)