விக்கிப்பீடியா பேச்சு:விக்கித் திட்டம் பேச்சு விக்கிப்பீடியா
இந்தக் கட்டுரை விக்கித் திட்டம் பேச்சு விக்கிப்பீடியாவில் ஒரு பகுதியாகும். இக்கட்டுரையை பேச்சு வடிவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உங்களுக்கும் இத்திட்டத்தில் விருப்பமானால் தயவு செய்து பேச்சுப் பகுதியில் உரையாடவும். |
கட்டுரைத் தெரிவு
தொகு- முதற்பக்க கட்டுரைகளுக்கு முதலில் ஒலி வடிவில் அமைக்கலாம். பிறகு ஒலிவடிவில் சேர்க்கப்படுவனவற்றை அதிகாரிகள் சரிபார்த்தபின் வெளியிடும் படியாக அமைக்கவும். அதன் பிறகு பயனர்கள் எந்த பக்கங்களை விக்கியில் அதிகம் தேடுகிறார்கள் என்பதனை விக்கி புள்ளி விவரங்களில் இருந்து எடுத்து அவ்வகையான பக்கங்களில் முதலில் ஒலி வடிவம் கொண்டுவரலாம். --இராஜ்குமார் 12:28, 6 ஆகஸ்ட் 2010 (UTC)
- கட்டுரைகளைத் தெரிவு செய்யும் போது சிறப்புக் கட்டுரைகள் அல்லது சிறப்புக்கட்டுரை போல பூரணமான கட்டுரைகளைத் தேர்ந்து எடுக்குமாறு பணித்துள்ளனர் ஆங்கில விக்கியில். ஆங்கில விக்கியை பின்பற்றவேண்டும் என்பதற்கில்லை. நீங்கள் சொல்வது போல முற் பக்கத்தில் உள்ள கட்டுரைகளுடன் ஆரம்பிக்கலாம்.
- கட்டுரை ஒலியாக்கம் முடிவுற்றவுடன், அதை என்னொருவர் சரி பார்ப்பதற்கான அட்டவணை திட்டப் பக்கத்தின் முற்பக்கத்தில் விரைவில் இடப்படும். தொடர்ந்து உங்கள் கருத்துக்களைத் தெரிவிக்கவும். நன்றி. --ஜெ.மயூரேசன் 13:00, 6 ஆகஸ்ட் 2010 (UTC)
விக்கித்திட்டத்தின் பெயர்
தொகுபேச்சு விக்கிப்பீடியா என்பதை விட பேசும் விக்கிப்பீடியா என்ற பெயர் பொருத்தமாக இருக்கலாம். அதிகம் பார்க்கப்படும் கட்டுரைகளுக்கான தரவுகளைப் பெற்று அவற்றுக்கு முன்னுரிமை தந்து ஒலிவடிவாக்கலாம்--இரவி 18:10, 6 ஆகஸ்ட் 2010 (UTC)
- ரவி நானும் அதைத்தான் நினைத்து கருத்து தெரிவிக்க இங்கு வந்தேன். பேசும் விக்கிப்பீடியா என்பதில் விக்கிப்பீடியா என்கிற வார்த்தை (பெயர்வெளியில் உள்ள விக்கிப்பீடியா) இருமுறை வருகிறது, அதனால் விக்கிப்பீடியா:பேசும் விக்கி என்று சுறுக்கலாமே? --மாஹிர் 16:30, 10 ஆகஸ்ட் 2010 (UTC)
- மாஹிர், விக்கிப்பீடியாவின் பெயரிடல் கொள்கையின் படி விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் என்பது கட்டாய சொற்களாகின்றது. அதைவிட எஞ்சியிருக்கும் பகுதியான பேச்சு விக்கிப்பீடியா என்பதை பேசும் விக்கிப்பீடியா என்று மாற்றலாம் என்பது என் எண்ணம். --ஜெ.மயூரேசன் 17:50, 10 ஆகஸ்ட் 2010 (UTC)
தமிழ் பேச்சு விக்கிபீடியா திட்டத்தின் சில ஆங்கில பேச்சுக் கட்டுரைகள்
தொகு@Kanags @தமிழ்க்குரிசில்@Parvathisri தமிழ் விக்கிபீடியா பேச்சு விக்கிப்பீடியா திட்டத்தில் சில ஆங்கில பேச்சு கட்டுரைகள் தமிழில் இணைக்கப்பட்டுள்ளன அந்த ஆங்கில கட்டுரைகளை தமிழ் விக்கிபீடியா இருந்து நீக்க வேண்டும் என்பதை எனது வேண்டுகோள் கருத்து தெரிவிக்கவும். நன்றி
தமிழ் விக்கிப்பீடியாவில் ஆங்கில பேச்சு கட்டுரைகள் உதாரணங்கள்:
ஸ்ரீவேங்கடகிருஷ்ணண் (பேச்சு) 14:59, 31 மார்ச் 2023 (UTC)
- @Parvathisri @தமிழ்க்குரிசில்
- தமிழ் விக்கிப்பீடியாவில் ஆங்கில பேச்சு கட்டுரை பட்டியல்
- மேலும் சில ஆங்கில கட்டுரைகள் உள்ளது அதை இந்த பகுப்பில் சென்று பார்க்கவும்.
- பகுப்பு:பேச்சுக் கட்டுரைகள் ஸ்ரீவேங்கடகிருஷ்ணண் (பேச்சு) 15:28, 31 மார்ச் 2023 (UTC)
- @Kanags நீங்கள் இயேசு என்னும் கட்டுரையிலிருந்து ஆங்கில பேச்சு விக்கிபீடியா ஒலிக்கோப்பினை நீக்கினீர்கள் அதற்கு மிக்க நன்றி. அதேபோன்று இன்னும் சில ஆங்கில பேச்சுக் ஒலி கோப்புகள் உள்ளன. சில கட்டுரைகளில் அதை நானே நீக்கி விடலாமா? தயவு கூர்ந்து பதில் அளிக்கவும். மிக்க நன்றி ஸ்ரீவேங்கடகிருஷ்ணண் (பேச்சு) 15:59, 2 ஏப்ரல் 2023 (UTC)
- @Sriveenkat: ஆங்கிலத்தில் இருந்தால் அவற்றை நீங்களே நீக்கலாம்.--Kanags \உரையாடுக 06:38, 3 ஏப்ரல் 2023 (UTC)
- மிக்க நன்றி ஸ்ரீவேங்கடகிருஷ்ணண் (பேச்சு) 06:58, 3 ஏப்ரல் 2023 (UTC)