விக்கிப்பீடியா பேச்சு:விக்கி அதிகாரிகள் பள்ளி
விக்கிப்பீடியா:விக்கி நிர்வாகிகள் பள்ளி கொள்கையில் உறுதி அளித்தபடி, புதிய அதிகாரிகளைத் தேர்ந்தெடுப்பது தொடர்பான வழிமுறைகளை இங்கு உரையாடலாம்.
முதல் வரைவு
தொகு(இது உரையாடலைச் சட்டென முன்னெடுக்கும் வகையில், ஏற்கனவே விக்கி நிர்வாகிகள் பள்ளிக் கொள்கையைப் பின்பற்றி முன்மொழியப்படுகிறது. பயனர்களின் கருத்துக்கு ஏற்ப அடுத்தடுத்த வரைவுகளை உருவாக்கலாம்.)
விக்கி அதிகாரிகள் பள்ளி என்னும் இத்திட்டம், தமிழ் விக்கிப்பீடியாவில் தொடர்ந்து பல அதிகாரிகளை உருவாக்கிப் பயிற்றுவித்து, தலைமுறைகள் தாண்டிய தலைமைத்துவத்தையும் தொடர்ச்சியையும் உறுதி செய்யும் நோக்கோடு பரிந்துரைக்கப்படுகிறது.
இத்திட்டத்தின் மூலம், ஒவ்வொரு அரை ஆண்டுக்கும் ஆகக் கூடுதலாக 2 புதிய அதிகாரிகளை இந்தப் பள்ளியில் சேர்த்துப் பயிற்றுவிக்கலாம்.
இவர்கள்:
அதிகாரிகளாக முன்மொழியப்படும் தேதி நிலவரத்தின் படி,
- குறைந்தது 5000 முதன்மை வெளித் தொகுப்புகள்
- குறைந்தது 250 கட்டுரைகள் உருவாக்கம்
- குறைந்தது இரண்டு ஆண்டுகள் நிருவாகியாகப் பங்களிப்பு
ஆகியவற்றைச் செய்து
- கடந்த ஒரு ஆண்டு காலக்கட்டத்தில் ஏதேனும் ஒரு சில மாதங்களிலேனும் முனைப்புடன் செயற்பட்டிருப்பவராகவும்
- பொதுவாக, மற்ற பயனர்களுடன் கனிவுடன் பழகுபவராகவும்
- பொதுவாக, தமிழ் விக்கிமீடியா திட்டங்கள் வளர்ச்சியைக் காணும் வகையில், அதற்காக கட்டுரை ஆக்கத்துக்குக் கூடுதலாக பிற பயனர்களுக்கு உதவ முனைதல், பயிற்சிப் பட்டறைகளில் பங்கேற்றல் போன்றவற்றைச் செய்ய முனைபவராகவும்
- பொதுவாக, தமிழ் விக்கிமீடியா விதிகள், பண்பாட்டை மதித்து, கற்றுக் கொண்டு, அதன் வழி நடக்க முனைபவராகவும்
- பொதுவாக, பயனர்கள் பிணக்குத் தீர்வை முன்னிட்டோ மற்ற சூழலிலோ அதிகாரிகளை அணுகி நம்பிக்கையின் அடிப்படையில் பகிரும் கருத்துகள்/விவரங்கள் ஆகியவற்றை இரகசியம் காப்பராகவும்
- பொதுவாக, பிணக்குகளில் தீர்வுகளை எட்டச் செய்பவராகவும்
- பொதுவாக, மற்ற நிருவாகிகள்/அதிகாரிகளுடன் கலந்து உரையாடி இணக்க முடிவைச் செயற்படுத்துபவராகவும்
இருந்தால் போதுமானது.
இந்தப் பண்புகளை உடைய இரண்டு நிருவாகிகள் தங்களைத் தாங்களே முன்மொழியலாம். அல்லது, மற்ற பயனர்கள் தக்கவர்களை அடையாளங்கண்டு பரிந்துரைக்கலாம். முன்மொழியும்போது என்ன காரணத்துக்காப் பரிந்துரைக்கிறோம் என்பதைக் குறிப்பிட வேண்டும். அதற்கு நிருவாகிகள் தங்கள் ஏற்பைத் தெரிவிக்க வேண்டும்.
தமிழ் விக்கிப்பீடியாவின் பாதுகாப்பை முன்னிட்டு, இதுவரை குறிப்பிடத்தக்க அளவிலான பிற தமிழ் விக்கிப்பீடியா பயனர்கள் நேரில் பார்த்திராத நிருவாகிகள், புனைப்பெயரில் மட்டும் அறியப்படும் நிருவாகிகள் தங்கள் அடையாள அட்டையை விக்கிமீடியா அறக்கட்டளை இடம் ஒப்படைக்கலாம். இவர்களை ஒருமுறை முகம் பார்த்து உறுதிசெய்யும் பொறுப்பை மேலாளர்கள் (Stewards) எடுத்துக் கொள்ளலாம். Steward தேர்வுக்கு இவ்வாறு அடையாள அட்டை கோரும் வழக்கம் ஏற்கனவே செயற்பாட்டில் உள்ளது.
இந்தப் பரிந்துரைகள் மீது மற்ற பயனர்கள் ஒரு வார காலம் ஆதரவு/எதிர்ப்பு/நடுநிலை வாக்குகளை இடலாம். இங்கு தகுதிகளைப் "பொதுவாக" என்று குறிப்பிடுவதன் நோக்கம், இவற்றுக்குப் புறம்பாக ஓரிருமுறை புரிதல் இன்றியோ உணர்ச்சி வசப்பட்டோ நடந்த நிகழ்வுகளைப் பெருந்தன்மையுடன் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்கே. ஒருவர் தொடர்ந்து எத்தகைய செயற்பாடுகளில் ஈடுபடுகிறார் என்பதை வைத்து ஒருவரது பக்குவத்தைக் கவனித்தால் போதுமானது.
இவர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்படும்
- இரண்டு நிருவாகிகளுக்கு
- அடுத்த ஆறு மாதங்களுக்கு
உடனடியாக அதிகாரி அணுக்கம் வழங்கப்படும். தேவைப்பட்டால் அதிகாரிகள் உரையாடலுக்கான தனிப்பட்ட மடற்குழு அல்லது IRC channel உருவாக்கப்படும். அதிகாரிகள் ஒருங்கிணைந்து செயற்படுவதற்கான நடைமுறைகள் Stewardகள் பின்பற்றுவதைப் போன்று அமையும்.
ஆறு மாத காலத்துக்குப் பிறகு அதிகாரிகளின் செயற்பாட்டுக்கு ஏற்ப, தொடர்ந்து
- 1 ஆண்டுக்கு நீட்டிப்பு
- நிலையான நிர்வாக அணுக்கம்
என்று அதிகாரி அணுக்கத்தைத் தரலாம்.
- 6 மாத காலத்துக்குப் பிறகு, மீண்டும் மீண்டும் புதிய அதிகாரிகள் தங்கள் அணுக்கத்தை நீட்டிக்கக் கோரிக்கை வைக்கத் தேவையில்லை. அதிகாரி அணுக்கத்தைத் தக்க முறையில் பயன்படுத்துவோருக்கு அதிகாரிகள் தாமாகவே நீட்டிப்பு வழங்குவர்.
- அதிகாரி அணுக்கத்தைப் பெற்றமையாலேயே ஒரு பயனர் குறிப்பிட்ட அளவு கூடுதலாக விக்கி, அதிகாரிப் பணிகள் ஆற்ற வேண்டும் என்ற அழுத்தத்துக்கு உட்படுத்தப்பட மாட்டார். ஒருவர் அவரது அதிகாரி அணுக்கத்தை முறைகேடாகவும் சமூக விதிகளுக்கு முரணாகவும் பயன்படுத்துகிறார் என்று கருதக்கூடிய நிலையிலும், இது தொடர்பாக முறையீடுகள் எழும் நிலையிலும் மட்டுமே நீட்டிப்பு மறுஆய்வுக்கு உட்படுத்தப்படும்.
- ஒவ்வொரு அரையாண்டின் தொடக்கத்திலும், புதிய அதிகாரிகளைத் தேர்ந்தெடுக்கும் முன், இக்கொள்கையை மேம்படுத்த வாய்ப்புண்டா என்பதை ஆய்வு செய்ய ஒரு வார காலம் கலந்துரையாடல் நடைபெறும்.
- இந்த அணுகுமுறையின் வெற்றியைத் தொடர்ந்து ஆறு மாதத்துக்கு ஒரு முறை, புதிய அதிகாரிகளை இந்தப் பள்ளியில் இணைத்துப் பயிற்றுவிக்கலாம்.
கருத்துகள்
தொகுபயனர்கள் தங்கள் கருத்துகளை கீழே தெரிவிக்கலாம்.
- விக்சனரி, விக்கிமூலம் போன்ற பிற தமிழ் விக்கிமீடியத் திட்டங்களுக்கும் புதிய அதிகாரிகள் வேண்டும். அது இத்திட்டங்களை மேலும் வளப்படுத்தும். தற்போது இதுபோல நிர்வாகப் பள்ளிகளை நிறுவவும், தானியங்கி அணுக்கம் வழங்கவும், இச்சூழல் புரியா பிறமொழியினரிடம் அணுக்கம் கேட்க வேண்டியுள்ளது. தற்போதுள்ள நிலை, பிறரிடம் நமது உரிமைகளை விட்டுக்கொடுத்து, தன்னாட்சியை இழந்துள்ளோம் அல்லவா?--த♥உழவன் (உரை) 07:17, 16 ஏப்ரல் 2019 (UTC)
- @Info-farmer: விக்சனரியில் அதிகாரி அணுக்கத்துக்கு விண்ணப்பியுங்கள். பயனர் வாக்கெடுப்புக்கு ஏற்ப முடிவு செய்வோம். விக்கிமூலம் போல் பயனர் நடமாட்டம் அதிகம் இல்லாத விக்கிகளில் உலகளாவிய மேலாளர்கள் தான் முடிவெடுக்கிறார்கள். அதற்கு நியாயமான சில காரணங்களும் உள்ளன. இதில் தன்னாட்சி இழப்பு என்ற அளவுக்கு நான் எதுவும் நினைக்கவில்லை. தேவையின் அடிப்படையில் அவர்கள் எப்போதும் உதவிகளை நல்கி வருகிறார்கள். நட்புடனேயே செயற்படுகிறார்கள். --இரவி (பேச்சு) 19:30, 20 ஏப்ரல் 2019 (UTC)
- @Ravidreams:வழக்கமாக நீங்கள் பரிந்துரைப்பீர்கள். நாங்கள் ஏற்றுக் கொள்வோம். உங்கள் பரிந்துரைக்காகக் காத்திருக்கிறேன்.--த♥உழவன் (உரை) 02:48, 23 ஏப்ரல் 2019 (UTC)
- @Info-farmer: விக்சனரியில் அதிகாரி அணுக்கத்துக்கு விண்ணப்பியுங்கள். பயனர் வாக்கெடுப்புக்கு ஏற்ப முடிவு செய்வோம். விக்கிமூலம் போல் பயனர் நடமாட்டம் அதிகம் இல்லாத விக்கிகளில் உலகளாவிய மேலாளர்கள் தான் முடிவெடுக்கிறார்கள். அதற்கு நியாயமான சில காரணங்களும் உள்ளன. இதில் தன்னாட்சி இழப்பு என்ற அளவுக்கு நான் எதுவும் நினைக்கவில்லை. தேவையின் அடிப்படையில் அவர்கள் எப்போதும் உதவிகளை நல்கி வருகிறார்கள். நட்புடனேயே செயற்படுகிறார்கள். --இரவி (பேச்சு) 19:30, 20 ஏப்ரல் 2019 (UTC)
வேறு கருத்துகள் ஏதும் இல்லா நிலையில் மேலே காணும் வரைவு இன்னும் மூன்று நாட்களுக்குப் பிறகு வாக்கெடுப்புக்கு நகரும். நன்றி--இரவி (பேச்சு) 08:01, 26 ஏப்ரல் 2019 (UTC)
- @Ravidreams: பொதுவான தகுதி வரையறை எனக்கு ஏற்புடையதாகவுள்ளது. அடையாள அட்டையை ஒப்புவிப்பதில் ஏதும் இடருள்ளதா பார்க்க வேண்டும். தனிப்பட்ட காரணங்களுக்காகச் சில அதிகாரிகளும் நிருவாகிகளும் தனிநபர் அடையாளங்களைக் காட்டாமல் இருந்துள்ளனர். அவர்களையும் கேட்கலாம். -- சுந்தர் \பேச்சு 12:07, 25 சூன் 2019 (UTC)
- @Mayooranathan, Ravidreams, Natkeeran, and Shanmugamp7: அடையாளத்தை வெளியிடாமல், தேவைப்படுமிடத்தில்மட்டும் நிறுவும் வழிமுறையான en:Template:Committed_identity#Obtaining_a_hash ஏற்புடையதாக இருக்குமா? -- சுந்தர் \பேச்சு 07:06, 30 ஆகத்து 2019 (UTC)
அதிகாரிகள் தேர்ந்தெடுப்பு தொடர்பில்
தொகுநான் பின்வரும் சில பரிந்துரைகளை முன்வைக்க விரும்புகிறேன்.
- அதிகாரி என்பதை மேல் அணுக்கர், பொறுப்பாளர் என்பதுபோல பெயர்மாற்றம் செய்யலாமா?
- நெடுநாட்களாக நிருவாகியாகப் பங்களித்துவரும் கனக சிறீதரனுக்கு இப்பொறுப்பை ஏற்க விருப்பமிருந்தால் பரிந்துரைக்க எண்ணுகிறேன். நிருவாகிகளைப்போலன்றி அதிகாரி அணுக்கத்தைச் செயற்படுத்துவதற்கான தேவை குறைவுதான். ஏற்கனவே இருக்கும் அதிகாரி அணுக்கம் பெற்றவர்கள் மாறிமாறி வந்து செயல்படுத்தி வருகிறோம். இருப்பினும் தற்செயலாக இதில் தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளதால் இன்னுமொருவரை பரிந்துரைக்க எண்ணுகிறேன். கட்டாயத்தேவை இருப்பதாகக் கூறவில்லை.
- விக்கிப்பயனர்களுள் சண்முகத்துக்கு அடுத்தபடியாக நம்மில் யாரும் meta:Stewards பொறுப்பிற்கு விண்ணப்பக்கவில்லை போலிருக்கிறது. சண்முகமும் 2022 ஆண் ஆண்டுக்குப்பின் அப்பொறுப்பிலில்லையென நினைக்கிறேன். நீச்சல்காரன் போன்றோர் விண்ணப்பிக்கலாமென நினைக்கிறேன்.
-- சுந்தர் \பேச்சு 11:46, 22 மே 2023 (UTC)
- பெயர் மற்றம் குறித்த உரையாடலுக்கு இப்பக்கம் உகந்ததாக இருக்காது. ஏற்கனவே இங்கே உரையாடலாம். இரண்டாவது கருத்துடன் உடன்படுகிறேன். மூன்றாவது கருத்திற்கு நன்றி, நேரமும் அனுபவமும் இருக்காதென நினைக்கிறேன். -நீச்சல்காரன் (பேச்சு) 01:22, 23 மே 2023 (UTC)
- நன்றி, நீச்சல்காரன். ஒப்புகிறேன்.
- அதிகாரிப்பொறுப்பு தொடர்பில் உங்கள் கருத்தை அறிய விரும்புகிறேன், சிறீதரன். @Kanags: -- சுந்தர் \பேச்சு 02:07, 23 மே 2023 (UTC)
- @Sundar: அதிகாரிப் பொறுப்புக்கு என்னைப் பரிந்துரைத்தமைக்கு நன்றிகள். ஆனால் என்னால் இப்பொறுப்பை ஏற்றுக் கொள்ள முடியாதிருக்கிறது. நீச்சல்காரன் இப்பொறுப்பிற்கு மிகவும் தகுதி வாய்ந்தவராக நான் கருதுகிறேன். அவரது பெயரை நான் பரிந்துரைக்கிறேன். மறுப்புச் சொல்ல மாட்டாரென நம்புகிறேன்.--Kanags \உரையாடுக 10:44, 23 மே 2023 (UTC)
- @Kanags: உங்கள் பரிந்துரைக்கு நன்றி. இவ்வணுக்கத்தின் தேவையை உணர்கிறேன், தேவையெனில் அணுக்கத்தை ஏற்கிறேன். ஆனால் அதிகாரிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான கொள்கைப் பக்கத்தில் வழிகாட்டல்கள் இல்லை என நினைக்கிறேன். நிர்வாகிகள் பள்ளி போல இங்கும் வழிகாட்டலை உருவாக்கிவிட்டு, பின்னர் யோசிப்போம். -நீச்சல்காரன் (பேச்சு) 07:28, 24 மே 2023 (UTC)
- இருவருக்கும் நன்றி. வழிகாட்டல்களை எட்டிவிட்டுத் தொடர்வோம். -- சுந்தர் \பேச்சு 12:03, 25 மே 2023 (UTC)