விக்கிப்பீடியா பேச்சு:2006 தமிழ் விக்கிப்பீடியா ஆண்டு அறிக்கை/2006 Tamil Wikipedia Annual Review

ரவியின் குறிப்புகள்

தொகு

ஒரு குறிப்புக்காக பேச்சுப் பக்கத்திலாவது பதிந்து வைக்கத்தக்க பிற விதயங்கள்:

  • எட்வர்டின் புள்ளிவிவரத் தரவுகள் - அதை தொடர்ந்த தரக் கண்காணிப்பு விழிப்புணர்வு.
  • காணாமல் போகும் நிர்வாகிகள், பயனர்கள் ! (ஸ்ரீநிவாசன் திரும்ப வந்துவிட்டார் !)
  • விசமப் ப யனர் கணக்குகள் உருவாக்கப்பட்டது (தமிழ் விக்கிபீடியாவில் திட்டமிட்ட முதல் விசமத்தனம் இது தான்)
  • விக்சனரி வளர்ச்சி, விக்கி செய்திகள் தொடங்கப்பட்டது.
  • கெடு வைத்து தேவை இல்லாத கட்டுரைகளை நீக்கியது.
  • புதுக் கட்டுரைகளை எழுதுவதோடு ஏற்கனவே உள்ள கட்டுரைகளை மேம்படுத்த முனைந்தது.
  • f - "ஃவ்" எழுத்துச் சீர்மையை தமிழ் விக்கிபீடியாவில் அறிமுகப்படுத்தியது.
IE பெட்டியாக காண்பித்தது. Firefox இல் இருந்து வெட்டி ஒட்டினேன். "ஃப்" என்றும் பயன்படுத்துகின்றாகள்தானே. இந்த அறிமுகம் எப்பொழுத், எங்கு நடந்தது? !!! --Natkeeran 03:36, 10 டிசம்பர் 2006 (UTC)
  • உங்களுக்குத் தெரியுமா, சிறப்புப் படிமம் பகுதிகள் தொடக்கம்.
  • துறை சார், ஆர்வம் சார் பங்களிப்புப் போக்குகள் - கலாநிதி - மேலாண்மை, கணக்கு முறைகள்; நிரோ - திரைப்படங்கள்; சிந்து - இசை.
  • மாஹிரின் கருவி - விக்கிபீடியாவின் வளர்ந்து வரும் அறிமுகத்துக்கான சான்று.

--Ravidreams 15:49, 4 டிசம்பர் 2006 (UTC)

டெரன்ஸ்: தமிழ் விக்கிபீடியாவின் சுயவிமர்சனம்

தொகு

10,000+ கட்டுரைகளைக் அண்மிக்கும்/கடக்கும் ஆண்டு

தொகு

தவி 2007 இல் 10,000 கட்டுரைகளை அண்மிக்கும் அல்லது கடக்கும் ஆண்டு. எனவே தவி அடுத்த நிலைக்கு செல்ல்லும். தவி இவ்வாண்டின் குறைகளை திரும்பி பார்ர்த்து கொண்டால் 2007ஐ நல்ல முறையில் எதிர்கொள்ள முடியும். நான் கண்ட முக்கிய குறைகளை இங்கு குறிக்கிறேன். இது தவியின் சுவிமர்சணமாதலால் குறைகள் அதிமாக நோக்குதல் பிழையல்ல.

அடிப்படை கட்டமைப்பு

அடிப்படையான கட்டமைப்புகளை மேலும் வலுப்படுத்துவது அவசியமாகிறது. இவை நோக்கிய எனது கருத்துக்களை இங்கே பதிகிறேன். தலைக்கு ஏறும் போது ஒவ்வொன்றாக எழுதுகிறேன்.

படிமங்கள்

தொகு

படிமங்கள் பற்றி நாம் இதுவரை பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. 10,000 கட்டுரைகளை எட்டும் போது இது முக்கியமாக நோக்கப்படும்.

Fair use

(இதற்கு தமிழ் என்ன?) படிமங்களுக்கான விதிமுறைகள விரிவு படுத்தப்பட வேண்டும். இதன்போது ஆங்கில விக்கியளவு கடுமையான விதிகள் தேவையற்றவை எனினும் சில விதி முறைகளை ஆக்குவது நலம். (ஏ+கா இணைய தளத்தின் பெயர் கொண்ட படிமங்கள்) விதிகள் தெளிவாக எழுதப்படுவது விக்கியில் சனநாயகத்தை மேம்படுத்த உதவும்.

மூலம்

இக்குறையை நானே பலமுறை விட்டிருக்கிறேன். படம் எங்கிருந்து எடுக்கப்பட்டது என்பதற்கான மூலம் கட்டாயம் சேர்க்கப்படல் வேண்டும்

பொது உரிமம்

பொது உரிமம் தொடர்பான படிமங்களில் வெறுமனே அதை குறிக்காமல் ஏன் (சொந்த படைப்பு, காலத்தால் முந்தியது, இந்திய பதிப்புரிமைச் சட்டப்படி...) என்பதைக் குறித்தல்

நீக்கம்

பொறுத்தமற்ற படிமங்கள் நீக்குவதற்கான ஒரு விதி முறை வேண்டும்.

--டெரன்ஸ் \பேச்சு 13:33, 6 டிசம்பர் 2006 (UTC)

விரைவில் இது குறித்து கொள்கைகளை வரையறுப்போம், டெரென்ஸ். இது மிகவும் கவனிக்கப்பட வேண்டிய ஒரு விதயம் தான்--Ravidreams 07:26, 7 டிசம்பர் 2006 (UTC)

கொள்கை மற்றும் வழிகாட்டிப் பக்கங்கள்

தொகு

இவற்றை ஒவ்வொரு பயனரும் பகிர்ந்து மொழிப் பெயர்த்து முடித்தல் வேண்டும் இது 2007 முடிவடைவதற்குள்ளாக செய்ய வேண்டிய முன்னோடியான வேலையாகும் இவை அப்படியே ஆங்கில விக்கியில் இருந்து வெட்டி ஒட்டப்பட்டுள்ளன அதற்கு மேலாக ஒன்றும் செய்யப்படவில்லை. உதாரணமாக:

இவற்றில் சிலவற்றை நான் மார்ச் முதல் (இப்ப விக்கி விடுமுறையில் உள்ளேன்!!) மொழிமாற்றம் செய்கிறேன் ஏனையவர்களும் (மிக தீவிர பயனகள்) இவற்றை மொழி பெயர்த்தால் 2007க்குள் அடிப்படை வழிக்காட்டிகளை மொழிமாற்றி விடலாம்.--டெரன்ஸ் \பேச்சு 03:31, 8 டிசம்பர் 2006 (UTC)

(இப்ப விக்கி விடுமுறையில் உள்ளேன்!!) :-) எல்லா உதவி, வழிகாட்டி, கொள்கை, கையேட்டு பக்கங்களையும் பட்டியலிட்டு. duplicate அல்லது பிரதிகளை நீக்கி. முக்கியமானவற்றை செழுமையாக்க வேண்டும். உதவி பக்கங்கள் 20-25 மேல் எட்டாதவாறு இருந்தால் நன்று. இதைச் செய்ய வேண்டும் என்று பல இடங்களில் நானும் சொல்லி விட்டேன். பார்க்கலாம். --Natkeeran 03:40, 8 டிசம்பர் 2006 (UTC)

தொகுப்பு பெட்டி

தொகு
 

ஆங்கில விக்கியில் தொகுப்பு பெட்டிக்கு கீழாக பல கருவிகளை கொண்ட ஒரு பகுதி காணப்படுகிறது அதனை தவியுலும் சேர்க்க முடியாதா?--டெரன்ஸ் \பேச்சு 03:31, 8 டிசம்பர் 2006 (UTC)

ஆமாம், இதைப் பற்றி GanashK இடமும் கேட்டுள்ளேன். படங்களை அடையாளப்படுத்தி, வகுப்பதை இது மிகவும் இலகுவாக்கும். --Natkeeran 03:43, 8 டிசம்பர் 2006 (UTC)


தமிழில் எழுதுவது எப்படி

தொகு

தமிழில் எழுதுவது எப்படி என்ற இணைப்பினை முதற்பக்கத்தில் தருவதனை அவசியமாகக்கருதுகின்றேன் ஏன் கூறுகின்றேன் என்றால் நான் வந்த புதுசில் மிகவும் கஷ்டப்பட்டேன்.தமிழில் எழுதக்கற்கவே ஒரு மாதகாலம் பிடித்தது.இதனை தெளிவாக எளிய முறையில் முதற்பக்கத்தில் வழங்கக்கோருகின்றேன் மிக மிக முக்கியம் எவ்வாறு எ கலப்பையினை பதிவிறக்க்ம் செய்வது எங்கிருந்து என்று எளிய முறையில் வழங்கப்பட வேண்டும்.

தற்பொழுது வலைப்பதிவுகளில் பலரும் தமிழில் எழுதுவது எப்படி என்று கையேடுகள் வெளியிட்டு வருகிறார்கள். அவற்றை தொகுத்தும், கூடுதலாக தமிழ் விக்கிபீடியாவுக்கு என மெருகேற்றி எழுதியும் நிச்சயம் ஒரு கையேடு வெளியிடுவோம். 2006 இறுதிக்குள் இதை செய்யலாம் என்று வைத்துக் கொள்வோம். முதற்பக்கத்தில் மட்டுமன்றி, அனைத்துப் பக்கங்களின் மேலும் தெரிகிற மாதிரி செய்வோம். இதை செய்ய வேண்டும் என்று பலரும் பல காலமாக நினைத்து வருவது தான். இதற்கான அவசியத்தை அவசரத்தை சுட்டிக் காட்டியதற்கு நன்றி.--Ravidreams 07:26, 7 டிசம்பர் 2006 (UTC)

5 மில்லியன் கட்டுரைகள்

தொகு

மேலும் வெகுவிரைவில் 10,000 கட்டுரைகளென்ன மில்லியனை அடைவோம்.5 மில்லியன் பெரிய கட்டுரைகள் தமிழ் விக்கிபீடியாவிற்கு அளிக்கும்வரை எனக்கு மரணம் இல்லை.குறுங்கட்டுரைகளல்ல.பெரிய கட்டுரைகள். --நிரோஜன் சக்திவேல் 03:25, 7 டிசம்பர் 2006 (UTC)

உங்கள் ஆர்வம் மகிழ்ச்சியூட்டுகின்றது. எனினும் நீங்கள் 5 இலட்சத்தை (500 000???) 5 மில்லியன் (5,000,000) என்று குறிப்பிட்டுவிட்டீர்களோ என்று எண்ணத் தோன்றுகின்றது. :-) --Natkeeran 03:45, 7 டிசம்பர் 2006 (UTC)

5 மில்லியனைத்தான் குறிப்பிட்டேன் என் வாழ்நாள் முழுதும்.முடியாதா என்ன.--நிரோஜன் சக்திவேல் 03:47, 7 டிசம்பர் 2006 (UTC)

ஊக்கமுள்ள 100 இளைஞர்கள் இருந்தால் இந்தியாவையே மாற்றிக் காட்டுகிறேன் என்றார் விவேகானந்தர். அது தான் என் நினைவுக்கு வருகிறது. தற்போது விக்கிபீடியாவில் முனைப்புடன் பங்களிப்பவர்கள் 10 பேர் என்று வைத்துக் கொள்வோம். இது போல் இன்னும் 100 பேர் இணைந்தால் கூட நாம் சாதிக்கவல்லது நிறைய இருக்கிறது. 10 பேர் சேர்ந்து 5000 கட்டுரைகளை ஓராண்டு காலத்துக்குள் எழுதி இருக்கிறோம் வரும் பத்தாண்டுகளில் உள்ள சாத்தியம் நிறைய உண்டு. பெரிதினும் பெரிது கேள், உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் என்று கொள்ள வேண்டும். என்னை பொறுத்தவரை கட்டுரை எண்ணிக்கை, தரம் , பரப்பு மூன்றும் முக்கியம். எந்த விதயத்தையும் ஆங்கிலத்தில் அறிந்து கொள்ளலாம் என்பது போல் உலக அறிவு எதையும் தமிழில் சிறப்பாகப் பெறலாம் என்னும் நிலை வர வேண்டும். அதற்கு விக்கிபீடியாவும் ஒரு கருவி. காலப்போக்கில் விக்கிபீடியாவின் செயல்பாடு, முக்கியத்துவம் மாறலாம். ஆனால், இங்கு தோன்றும் ஊக்க உணர்வு தமிழ் இணையம், தமிழ்ச் சமூகத்தின் பிற பகுதிகளுக்கும் பரவும் என்பது தான் முக்கியமான நம்பிக்கை.
நிரோ, உங்கள் ஊக்கம் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. விக்கிபீடியாவுக்கு பங்களிப்பதில் சம நேரம் பிற தமிழ் நூல்கள், அறிவுத் துறைகளை அறிந்து கொள்வதிலும் நாம் செலவிடுதல் நலம். அப்பொழுது நம் சொல் வளம், எழுத்தாற்றல், அறிவு வளமடையும். அது விக்கிபீடியா கட்டுரைகளின் தரத்திலும் வெளிப்படும். இன்னொன்று, ஒரு நாளைக்கு 10 நல்ல கட்டுரைகளை நான் எழுதினாலும் 10 ஆண்டுகளில் 30, 000 கட்டுரைகள் தான் எழுத முடியும். எனவே, தனித்துச் செயல்படுவதோடு நின்று விடாமல், விக்கிபீடியாவை பற்றி அறியச் செய்ய உதவலாம். இதை உங்கள் நண்பர்கள், உடன் பணியாற்றுபவர்கள் தொடங்கி செய்யலாம். விக்கிபீடியா தள நிர்வாகத்தில் பங்கு கொண்டால், புதிதாக வரும் பயனர்களை எளிதாக விரைவில் பங்களிக்கச் செய்யலாம். கட்டுரை எழுதுவது தாண்டியும் தமிழ் விக்கிபீடியா வளர்ச்சிக்கு நாம் பல களங்களில் கவனம் செலுத்த வேண்டும். தமிழ் வளர்ச்சிக்கு விக்கிமீடியாவையும் தாண்டி சமூகத்தில் இணையத்தில் செய்யப்பட வேண்டியது நிறைய இருக்கிறது. அது குறித்த தெளிவும் செயல்திட்டமும் அணுகுமுறையும் நமக்குத் தேவை. இணையத்தின் மூலம் தொழில்நுட்பத்தின் மூலம் ஒத்த கருத்துள்ளவர்கள் சந்திக்க இயல்வது, கூட்டாக உழைக்க முடிவது சாத்தியப்பட்டிருப்பது இந்த நூற்றாண்டின் மிக முக்கியமான கண்டுபிடிப்பு என்றே சொல்ல வேண்டும். பார்க்கலாம். இன்னும் 10 ஆண்டுகள் கழித்து திரும்பி பார்த்தால் தமிழ் விக்கிபீடியா, தமிழ் ஆக்கங்கள், கணித்தமிழ், தமிழ் வளர்ச்சி எவ்வளவு தூரம் நாம் கடந்திருப்போம் என்று பார்க்கலாம். மெல்லத் தமிழ் இனித் தழைக்கும் என்பது தான் என் அசைக்க முடியாத நம்பிக்கை.--Ravidreams 07:26, 7 டிசம்பர் 2006 (UTC)
காணாமல் போன பயனர்கள் பற்றியெல்லாம் பேசுகின்றீர்கள்...என்ன செய்வது எனக்கு படிப்புச்சுமை அதிகமாகிவிட்டது. விக்கிப்பீடியாவிற்கு எழுதுவதற்கு நேரம் கிடைப்பதே பெரிய கஷ்டமாக இருக்கின்றது. இயலுமானவரை பங்களிக்க முயல்கின்றேன்..!! என்றும் விக்கிப்பீடியாவை மறவேன்...--ஜெ.மயூரேசன் 09:19, 7 டிசம்பர் 2006 (UTC)
ம் நிரோஜனின் மலையளவு நம்பிக்கை என்னை மலைக்க வைக்கின்றது.தொடர்ந்து பயனர்கள் எண்ணிக்கை அதிகரித்தபோதும் பலரால் ஒரு கட்டுரையேனும் தொகுக்கமுடியாது போனதிற்கு என்ன காரணம் என ஒரு அலசலுக்கு வரவேண்டும்.அப்போதுதான் தவி எண்ணிக்கையிலும் தரத்திலும் மேலும் சிறப்படையும் என நம்புகின்றேன்.ஆங்கில விக்கிக்கு இணையாக தரத்தில் நம் தவி வளர வேண்டும் என்பதே என் ஆவா.--கலாநிதி 16:57, 7 டிசம்பர் 2006 (UTC)


மயூரேசன், காணாமல் போகும் பயனர்கள் பற்றி சொல்வது சில சமயம் வேடிக்கைக்கு தான் :). அவர்களை திருப்பி கொண்டு வர வேண்டும் என்ற நோக்கில் தான். சந்தோஷ், ஹரிகிஷோர் காணாமல் போனாலும் அவர்களை வேறு வழிகளில் கண்டறிந்த அன்புத் தொல்லை கொடுத்தாவது கொண்டு வர முடியும். ஆனால், பப்படு போன்ற அருமையான பயனர்கள் காணாமல் போவது தான் இழப்பு. ஒரு வேளை அப்படி காணாமல் போவதற்கு தமிழ் விக்கியில் காரணங்கள் ஏதேனும் இருக்கம் என்றால், அதை திருத்திக் கொள்ளலாமே என்பது தான் என் விருப்பம். ஆனால், அதற்கு வழியில்லை.
காணாமல் போபவர்கள் இரண்டு வகை - 1. பயனர் பக்கத்தில் ஒரு வித தொடர்புத் தகவலும் தராமல் திடீரென்று காணாமல் போபவர்கள் (எ.கா. - பப்படு). 2. விக்கிபீடியாவுக்கு வெளியில் தொடர்பில் இருப்பவர்கள், ஆனால் விக்கியில் பங்களிக்க முனையாமல் இருப்பவர்கள் - இவர்களில் பெரும்பாலானோருக்கு வேலைப்பளு தான் காரணம் (எ.கா - செல்வா, சந்தோஷ், மயூரேசன்)
விக்கி விடுப்பு போடுபவர்கள் இரண்டு வகை - 1. பங்களிப்பு குறைக்கப் போகிறேன், விக்கி விடுப்பில் போகப் போகிறேன் என்று அறிவிப்பு மேல் அறிவிப்பு விட்டாலும், ஏதாச்சும் சில தொகுப்புகளாக செய்து கொண்டே இருப்பவர்கள் ;)(எ.கா - நான் ;), சுந்தர் :), நற்கீரன் :)) 2. அறிவிப்பே விடாமல் விடுப்பில் போக நேர்ந்து, பிறகு தாமாகவே திரும்ப வருபவர்கள் (எ.கா - ஸ்ரீநிவாஸ், மயூரன்)
பங்களிப்பவர்கள் இரண்டு வகை - 1. திட்டமிட்ட கட்டுரை எண்ணிக்கை, பரப்பு இலக்குகளுடன் எழுதுபவர்கள் (எ.கா. மயூரனாதன், கோபி, டெரன்ஸ், கனக்ஸ்). 2 திட்டமின்றி எழுதுபவர்கள் (எ.கா - நான் தான் ;)!)
கலாநிதி, பங்களிப்பை தூண்ட இயலாததற்கு தமிழ் விக்கிபீடியா, தமிழ் இணையத்துக்கு என்ற தனிப்பட்ட பிரச்சினைகள் உள்ளன. அவை ஏற்கனவே அலசப்படிருக்கின்றன. குறிப்பிடத்தக்கவை, தமிழ்ப் பேசும் பகுதிகளில் குறைவாக இருக்கும் இணைய அணுக்கம், தமிழ் கலைச்சொல் குறைபாடு, தமிழ்த் தட்டச்சுக் குழப்பங்கள், தமிழில் கட்டுரை எழுதும் பயிற்சியின்மை. இது போக விக்கிபீடியாக்களுக்கு பொதுவான பிரச்சினைகள் சில உள்ளன. அவை - விக்கிபீடியாவை தொகுக்கலாம் என்பதே பலருக்குத் தெரியாது. தெரிந்தாலும், மீடியாவிக்கி புரிந்து கொள்ளத்தக்கதாய் இல்லை. உதவிப்பக்கங்கள் போதுமானதாக இல்லை. பதிவு செய்த பயனர் எண்ணிக்கைக்கும் பங்களிப்பாளர் எண்ணிக்கைக்கும் இடையில் ஆங்கில விக்கியிலும் குறிப்பிடத்தக்க இடைவெளி உண்டு என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.--Ravidreams 19:52, 7 டிசம்பர் 2006 (UTC)

விஜயஷண்முகம் கருத்துக்கள்: பன்முக பார்வை (Wide and Diversified Scope)

தொகு

இதுவரை பதிவாகியுள்ள கட்டுரைகளில் பல பூகோலம், அரசியல், சமயம், கலை, தனிநபர் குறித்தவையாகவே அமைந்திள்ளன, இதிலும் இந்தியா, இலங்கை, தமிழ் தொடர்புடையவையே அதிகம். நாம் அனேகமாக தாய்மொழி அல்லது தாய்நாடாக அதை கொண்டுள்ளதே இதற்குக் காரணம்.

ஆனால் ஒரு களைக்களஞ்சியத்திற்கு பன்முக பார்வை மிக அவசியம். இதை அவதானித்து கட்டுரைகளை சேர்த்தால் த.வி சிறப்புபெறும்.

கொள்கைகள் மற்றும் தத்துவக்கோட்பாடுகள், இலக்கியம் (தமிழ் அல்லாத பிற), அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் (கணினி அல்லாத பிற) போன்ற துறைகள் பன்முக பார்வை கொண்ட கட்டுரைகள் எழுத ஏதுவானதாக இருக்கும்.

பிற மொழி விக்கி பக்கங்களை தமிழாக்கம் (Translation/Transliteration) செய்வது அதிகமானால் மட்டுமே எண்ணிக்கை இலக்கை அடைய முடியும்.

- நவீன தமிழர் சமுதாயத்தில் த.வி புரட்சிமிக்கதொரு திட்டம். இத்திட்டம் மென்மேலும் வளர்ந்து சிறப்புபெற எனது வாழ்த்துக்களும், முயற்சிகளும்..... விஜய் 03:29, 8 டிசம்பர் 2006 (UTC)

விஜயசண்முகம், த. வி உரையாடல்களில் தரம், எண்ணிக்கைக்கு ஈடாக கட்டுரை பரப்புக்கும் முக்கியத்துவம் தந்து அலசப்பட்டு வந்திருக்கிறது. மேலோட்டமாக பார்க்கையில் தற்பொழுது தமிழ் விக்கிபீடியாவில் ஒரு சில கட்டுரைப் பிரிவுகள் நிறைய கட்டுரைகளை கொண்டிருப்பது உண்மை தான் - எடுத்துக்காட்டுக்கு, தமிழ்நாடு, இலங்கை, திரைப்படங்கள் குறித்த கட்டுரைகள். ஆனால், அனுபவம் வாய்ந்த பயனர்களான மயூரனாதன், செல்வா, கோபி போன்றோர் பலதரப்பட்ட தலைப்புகளில் எழுதிக்கொண்டு தான் வருகிறார்கள். தமிழ்ப்படங்கள் போக இந்தி, தெலுங்கு, ஆங்கிலம், சப்பானிய மொழித் திரைபடங்கள் குறித்து கூட நிரோ எழுதுகிறார். இது மிகவும் நல்ல ஒரு விதயம். இதை திட்டம் போட்டு நிறைவேற்ற முடியும் என்று தோன்றவில்லை. ஏனென்றால், விக்கி நாட்டுத் திட்டம் போன்ற சில திட்டங்களை முன்னெடுத்தாலும், ஆர்வமுடையவர்கள் மட்டுமே பங்களிப்பர். யாரையும் வற்புறுத்த முடியாது. பல தரப்பட்ட ஆர்வம் உடைய பங்களிப்பாளர்கள் வரும்போது கட்டுரைப்பரப்பின் அகலம் தானாக விரியும். அது வரை பொறுத்திருக்க வேண்டும் தான். ஆனால், நம் விக்கிபீடியாவின் வளர்ச்சியை அளக்கும்போது எண்ணிக்கை, தரம் ஆகியவற்றுக்கு ஈடாக கட்டுரைப் பரப்பையும் கவனிக்க வேண்டும் என்பது முக்கியமான விதயம்--Ravidreams 09:16, 9 டிசம்பர் 2006 (UTC)

பாலாஜியின் கருத்துக்கள்

தொகு

இந்த ஆண்டில் தமிழ் விக்கிபீடியா வேகமாகவும், தரத்துடனும் வளர்ந்திருப்பது தெரிகிறது. இதனை சாத்தியமாக்கிய அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள்!

படிமங்கள்

தொகு

படிமங்களை வகைப்படுத்துவது பற்றி நாம் இப்போது சிந்திப்பது மிகவும் நல்லது. எனினும் காப்புரிமைப் பற்றி பலரின் கருத்துக்களிலிருந்து நான் சற்று மாறுபடுகிறேன். நான் படிமங்களைப் பதிவேற்றும் போது முடிந்தவரை அப்படிமம் சம்மந்தப்பட்ட அதிகாரப்பூர்வ தளத்திலிருந்து எடுக்கிறேன். அப்படி முடியாவிட்டால் கூகில் செய்து எடுத்துக்கொள்கிறேன். காப்புரிமைப் பற்றி நான் பெரிதும் அலட்டிக்கொள்வதில்லை.

பாலாஜி, இங்கு உங்களிடம் முற்றிலும் வேறுபடுகின்றேன். முற்றிலும் கட்டற்ற முறையில் இருப்பதுதான் தொலைநோக்கில் நல்லது. இங்கு வரும் ஒரு பயனர், ஒரு படத்தை பிரதி செய்து பயன்படுத்தும்பொழுது அதன் பதிப்புரிமை பற்றி பயப்படாமல் பயனபடுத்தும் வண்ணம் இருக்க வேண்டும். நாம் கட்டற்ற படங்களை மட்டுமே பயன்படுத்துவோம் என்றால், அவர்களும் அப்படி அனுமதி தர முன்வருவார்கள். அப்படியான ஒரு சூழலே நன்று. இந்த நோக்கிலான சிந்தனையே கட்டற்ற என்ற கொள்கைக்கு பொருந்தும். மேலும், Creative Commons, GNU GPL, Wikipedia Commons, NASA என்று படங்கள் கிடைக்கின்றன. தமிழ் நாட்டு அரச தளங்களையும் தங்கள் படங்களை PL தர வேண்டும் என்று வேண்டுதல் விட வேண்டும். இதுவே தொலை நோக்கில் சரியான வழி. --Natkeeran 01:36, 9 டிசம்பர் 2006 (UTC)
நற்கீரனுடன் உடன்படுகிறேன். உண்மையில், விக்கிபீடியா போன்ற பொதுநல அமைப்பின் மீது அதுவும் தமிழ்நாட்டில் யாரும் வழக்கு போட மாட்டார்கள் என்பது உண்மை தான். போட்டாலும் ஒரு தலைமுறைக்கு வழக்கு இழுக்கலாம். ஆனால், இங்கு விதயம் மாட்டிக் கொள்கிறோமா என்பது பற்றி இல்லை. நாம் செய்வது சரியா என்பது தான். (நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவுமே சரிங்கிறீங்களா ;)) பாலாஜி, ஓரிரு மாதங்கள் முன்பு வரை நான் கூட உங்கள் மனப்பான்மையுடன் தான் இருந்தேன். ஆனால், இப்பொழுது கருத்து மாற்றங்களை கொண்டுள்ளேன். ஒரு பயனுள்ள கலைக்களஞ்சியத்தை உருவாக்குகிறோம் என்பது எவ்வளவு முக்கியமோ அந்த அளவு அது முறையானதாகவும் கட்டற்றதாகவும் இருக்க வேண்டும் என்பதும் முக்கியம். நாளை தமிழ் விக்கிபீடியா இறுவட்டுகள், தமிழ் விக்கிபீடியா அச்சுப் பதிப்புகள் வரும். அப்பொழுது, நம் படிமங்களை பயன்படுத்த முடியாமல் போவதால் என்ன நன்மை? கலைக்களஞ்சியத்தை வளர்ப்பதோடு, கட்டற்ற செயல்பாடு, கொள்கை, ethics, principles, பண்பாடு ஆகிய இதரக் கூறுகளையும் நம் தமிழ்ச்சூழலில் வளர்க்க முற்படலாமே? அதற்கு விக்கிபீடியா ஒரு களமாகவும் முன்மாதிரியாகவும் ஏன் இருக்கக்கூடாது? நாம் எவ்வளவு தான் பூசி மெழுகினாலும் காப்புரிமை மீறல் என்பது ஒரு திருட்டு தான். யாரும் கண்டுபிடிக்கும் வரை திருடலாம், ஊர்க் காரியத்துக்காக திருடலாம் என்று உண்டா என்ன? திருட்டு திருட்டு தான். தற்பொழுது கட்டற்ற படிமங்கள் குறைவாக இருப்பதாகத் தோன்றலாம். ஆனால், எண்மப் படக்கருவிகளின் பெருக்கத்தால், படிமங்களை பகிர்ந்து கொள்ளும் போக்கு அதிகரித்து வருவதை flickr போன்ற தளங்களில் கவனிக்கலாம். அடுத்த முறை ஊருக்கு போகும்போது நானே கூட சில படங்களை எடுத்து இப்படிப் பகிரலாம். நிலைமை வெகு விரைவில் மாறும், பாலாஜி.
பொதுவாக தமிழ்நாட்டில் அச்சு நூல்களை படி எடுப்பது, திரைப்பட வட்டுக்களை படி எடுப்பதை குற்ற உணர்வு இல்லாமல் செய்து கொண்டிருக்கிறோம். அதே தவறை நாம் விக்கிபீடியாவிலும் செய்ய வேண்டாமே. இதன் மூலம் தமிழ்ச் சமூகத்தில் பிறரின் படைப்புகளுக்கு மதிப்பு தரும் நற்பண்பை வளர்த்தெடுக்கலாம். தவிர, கீழே நற்கீரன் சொல்லி உள்ள அனைத்துக் கருத்துக்களுடனும் முழுக்க உடன்படுகிறேன்--Ravidreams 10:31, 9 டிசம்பர் 2006 (UTC)


உரையாடல் பக்கங்களில் நிறைய எழுத விரும்பாததால், சுருக்கமாக பதிலளிக்க முயற்சிக்கிறேன்!
1. நாம் தீர்க்க விரும்பும் பிரிச்சனையை முதலில் தெளிவாக்கிக் கொள்ள வேண்டுமென்று நினைக்கிறேன். படிமங்களை பதிவேற்றும் போது அதன் காப்புரிமை நிலையை தெளிவாகக் குறிப்பிட வேண்டும் என்பதுதான் முக்கியம். எனவே tag மற்றும் மூலம் குறிப்பிடப்படாத படிமங்களை அகற்றுவதை நான் ஆதரிக்கிறேன்.
2. எனினும் பயணர்களின் பங்களிப்புகள் மேலும் அதிகரிக்க வேண்டுமென்றால் possibly non-free என்று வரையறுக்கத்தக்க படிமங்களையும் நாம் அனுமதிக்க வேண்டும். அத்தகைய படிமங்கள் எப்போது அகற்றப்பட வேண்டுமென்பது த.வி.யின் கொள்கையைப் பொருத்தது. (சில ஆண்டுகள் என்று வைத்துக்கொள்வதுகூட நல்லது!)
3. நல்ல நோக்கம் (GFDL) மற்றும் நடைமுறைச் சாத்தியம் (rampant piracy in India) இரண்டிற்கும் நடுவில் நாம் செயல்பட வேண்டியிருக்கிறது. இப்போது த.வி.யில் பங்களிப்போரில் பலர் வளர்ந்த நாடுகளிலிருப்பது கவணிக்கத்தக்கது. தமிழ்கம், ஈழம், சிங்கப்பூர், மலேசியா போன்ற இடங்களிலிருந்து பெருமளவில பங்களிப்புக்கள் வரவேண்டும். நமக்கு நேரம் மட்டுமே முதலீடாக இருக்கலாம். அவர்களுக்கு இணையத் தொடர்புக்கான செலவு உள்ளிட்ட பல முதலீடுகள் இருக்கலாம். அதற்கு எற்றார் போல த.வி. கொள்கைகளை ஏற்படுத்த வேண்டும்.
4. த.வி.யில் பங்களிக்க வருபவர்களின் கொள்கைகளை மாற்ற நாம் முயற்சிக்கத் தேவையில்லை! நான் விண்டோஸ் உள்ளிட்ட காப்புரிமையுள்ள மென்பொருள்களை (முறையாக வாங்கியிருந்தும்) முற்றிலிலுமாகப் புறக்கணிக்கிறேன். அதனால் இந்தியாவில் pirated விண்டோஸ் பயன்படுததுவோரை நான் குறை சொல்ல வேண்டுமா என்ன?்
5. நான் பதிவேற்றிய படிமங்கள் அனைத்தும் public domain, fairuse, possibly non-free என்று வரையறுக்கத்தக்கவையே. பெரும்பாலானவற்றுக்கு நான் மூலத்தையும் குறிப்பிட்டுள்ளேன். எனினும் தங்களுக்கு ஆட்சேபனையிருந்தால் அவற்றை அகற்ற முன்வருகிறேன்.
பாலாஜி 16:56, 9 டிசம்பர் 2006 (UTC)

காரணங்கள்:

1. GPLலில் வெளியிடப்படும் படிமங்கள் மிகவும் குறைவே. ஊடகங்களில் வெளியிடப்படும் படிமங்களை நாம் பயன்படுத்துவதை அதன் உரிமையாளர்கள் ஆட்சேபிக்கிறார்கள் (அல்லது ஆட்சேபிப்பார்கள்) என்பதற்கு தற்போது நம்மிடம் தெளிவான Pointers எதுவும் இல்லை. த.வி. போன்ற பொது நல அமைப்புகள் மிது யாரும் வழக்கு போடமாட்டார்களென நம்புவோம்.

குறைவாக இருக்கலாம், ஆனால் நீங்கள் படங்களை எடுத்து அப்படி பகிரும் பொழுது அந்த பொதுச் சொத்து வட்டம் விரியும். இப்பொழுது பலரும் digital camara மூலம் படம் எடுத்து பகிர முற்படுகின்றார்கள். அப்படியான படங்கள் காலப்போக்கில் பெருகும் என்றே எதிர்பார்க்கலாம். --Natkeeran 01:36, 9 டிசம்பர் 2006 (UTC)

2. எனினும் யாரேனும் ஆட்சேபித்தால் அப்போது குறிப்பிட்ட அந்த படிமத்தை நீக்கிவிட்டால் போகிறது. கூகுல் விடியோ, யூடியுப் போன்ற வனிக நிறுவணங்களே கூட இதே கொள்கையைப் பின்பற்றுகின்றன. ஆட்சேபத்திற்குரிய படிமத்தை நாம் நீக்கத் தயாராக இருக்கும் வரை த.வி சட்டரீதியாக Vulnerable இல்லை என்றே நினைக்கிறேன்.

அப்படிப்பட்ட வணிக நிறுவனங்கள் செய்வதால் பொது நல - இலாப நோக்க மற்ற த.வி. செய்ய வேண்டும் என்று சொல்வதின் தர்க்கம் புரியவில்லை. எனது கருத்து என்னவென்றால் பயனர் த.வி. படம் ஒன்றை தரவிறக்கம் செய்யும் பொழ்து 100% வீதம் பதிப்புரிமை பற்றி கவலைப்படாமல் தரவிறக்க வேண்டும். --Natkeeran 01:36, 9 டிசம்பர் 2006 (UTC)

3. நமக்கு முன்பாக இரண்டு வழிகள் இருக்கின்றன. FUDக்கு (Fear, Uncertanity and Doubt) பயந்து படிமங்களை சேர்க்காமல் இருப்பது! அல்லது படிமங்களை (மூலத்தோடு) சேர்த்து த.வி.யை பயனர்களுக்கு மேலும் சிறப்பாகத் தருவது!

மேலே சுட்டியபடி, அனேக கட்டுரைகளுக்கு PD, GNU GPL, CC ஆகிய கட்டற்ற உரிமைகளுடன் படம் கிடைக்கும், கிடைக்கின்றது. இது FUD இல்லை. இது விடுதலை பற்றியது.
இவை எனது தனிப்பட்ட கருத்துக்களே. த.வி. தெளிவான நிலைப்பாடு தற்சமயம் இல்லை, ஆனாலும் பதிப்புரிமை உள்ள படங்களை அனுமதி இன்றி சேர்க்கப்படாததென்பதே எமது புரிந்துணர்வு, மற்றும் ஆ.வி. கொள்கை. --Natkeeran 01:36, 9 டிசம்பர் 2006 (UTC)

சகோதர தமிழ் அமைப்புக்களின் உதவியை நாடுவது

தொகு

இணையத்தில் தமிழில் எழுதுபவர்களுக்கு எந்தவொரு தட்டுப்பாடும் இல்லை! தினமும் நூற்றுக்கணக்கான தமிழ் வலைப்பதிவுகள் வெளிவருகின்றன. லினக்ஸ் தமிழாக்கக் குழுக்கள், மதுரைத் திட்டம், தமிழ்மனம் போன்ற அமைப்புகளைத் தொடர்பு கொண்டு அவர்களோடு பரஸ்பரம் உதவிக்கொள்வது பற்றி விவாதிக்கலாம். அவர்கள் தமது Domain knowledge மூலம் சிறப்பான கட்டுரைகள் எழுதலாம். நாமும் Proof Reading போன்ற அவர்களது தினசரித் தேவைகளில் உதவலாம்.

பாலாஜி, நம்மில் ஆர்வமுள்ளவர்கள் ஏற்கனவே தமிழ் லினக்ஸ் குழுக்கள், மதுரைத்திட்டம் போன்ற பொதுத் திட்டங்களில் இயங்கி வருகிறோம். இதன் மூலம் இரு தரப்புக்கும் ஏன்கனவே பயன் இருந்து வருகிறது. நேரடியாக அங்குள்ளவர்கள் இங்கு பங்களிக்காவிட்டாலும் ஒரு தகவல் ஆதாரமாக தமிழ் விக்கிபீடியாவை சுட்டிக் காட்டுகிறார்கள். அதுவே தமிழ் விக்கிபீடியாவுக்கு பெரிய விளம்பரம் தான்.
ஆனால், தமிழ்மணம் போன்றவை இதில் இருந்து வேறுபட்டவை. முதலில், பொதுத் திட்டம் கிடையாது. அங்கு நாம் பங்களிக்கும் வேலையும் இல்லை. ஆனால், தமிழ்மணம், அதிலுள்ள இணைந்துள்ள பதிவுகளின் மூலம் ஏற்கனவே தமிழ் விக்கிபீடியாவுக்கு நல்ல அறிமுகம் கிடைத்துள்ளது. இத்தனை பேர் பதிவெழுதும் போது ஏன் யாருமே தமிழ் விக்கிபீடியாவுக்கு வர மாட்டேன் என்கிறார்கள் என்பது தொடக்கத்தில் என்னையும் அரித்த கேள்வி தான். ஆனால், விக்கிபீடியா, வலைப்பதிவு ஆகிய இரண்டையும் மேலும் அறிய அறிய இது குறித்த தெளிவு வந்திருக்கிறது. தமிழில் எழுதுகிறார்கள் என்பது தவிர விக்கித் திட்டங்கள், வலைப்பதிவுகள் ஆகிய இரண்டுக்கும் வேறு எந்த ஒற்றுமையும் இல்லை. பாலே நடனம் ஆடுபவரும், பரதநாட்டியம் ஆடுபவரும் காலால் தான் ஆடுகிறார்கள் என்பது எந்த அளவுக்கு நீட்டிப் பார்க்கப்பட்ட ஒற்றுமையோ அந்த அளவு ஒற்றுமை தான் இதுவும். இரண்டும் வேறு வேறு களங்கள்; ஊடகங்கள்; ஒன்றில் இயங்குபவருக்கு இன்னொன்றில் ஆர்வமோ திறமோ இருக்கு வேண்டும் என்று அவசியமில்லை. வலைப்பதிபவர்கள் பலர் விக்கிபீடியாவில் பங்களிக்காமல் இருக்கலாம். விக்கிபீடியாவில் பங்களிக்கும் மயூரனாதனுக்கு வலைப்பதியும் ஆர்வம் இல்லாமல் இருக்கலாம்.
விக்கிபீடியா பங்களிப்புக்கும் வலைப்பதிவுப் பங்களிப்புக்கும் உள்ள முக்கிய வேறுபாடுகளை கீழே பட்டியலிடுகிறேன். இதுவே வலைப்பதிவில் புழங்கும் அளவுக்கு தமிழ் விக்கிபீடியாவில் ஆட்கள் புழங்காததற்கு காரணம்:
1. வலைப்பதிவில் என்ன வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் எவ்வளவு ஆங்கிலம் கலந்து வேண்டுமானாலும் பேச்சுத் தமிழிலும் எழுதலாம் - விக்கிபீடியா என்ற கலைக்களஞ்சியத்தில் இன்னது தான் எழுத வேண்டும், இப்படித் தான் எழுத வேண்டும், நல்ல தமிழில் தான் எழுத வேண்டும் என்ற ஒரு கட்டுப்பாடு உண்டு. எடுத்துக்காட்டுக்கு, வலைப்பதிவில், அசினுக்கு கால்வலி என்றும் பிரதமருக்கு தொண்டை அடைப்பு என்றும் கூட எழுத முடியும்; விக்கிபீடியாவில் முடியாது. நல்லா கீறியா, கலக்குற மாமு என்று வலைப்பதிவில் பின்னூட்டம் இடலாம்; விக்கிபீடியா பேச்சுப் பக்கங்களில் இது வரை உரைநடைத் தமிழில் தான் உரையாடி வருகிறோம். கணக்குக்கு இணையாக தமிழ் தான் பலருக்கு பள்ளியில் பயமுறுத்தும் பாடம். இந்த நிலையில் தமிழ் விக்கிபீடியாவில் பலரும் எழுதத் தயங்குவது புரிந்து கொள்ளத்தக்கதே. பேச்சுப் பக்கங்களில் தற்பொழுது இளக்க நடை தான் இருக்கிறது. ஆனால், கட்டுரைத் தமிழ் நடையை அப்படி இளக்க முடியாது.
2. வலைப்பதிவுகளில் தனி நபர் வெளிச்சம், விளம்பரம் நிறைய உண்டு. இந்த போதைக்கு பழக்கப்பட்டு எழுதுகிறவர்களும் நிறைய உண்டு. எடுத்துக்காட்டுக்கு, ஒரு நாளுக்கு மூன்று நான்கு வலைப்பதிவு இடுகை இடுபவர்கள். வலைப்பதிவுகளில் 'நான்' என்பது தவிர்க்க முடியாத ஒன்று. - விக்கிபீடியாவிலோ கட்டுரைப்பக்கங்களில் கையெழுத்து கூட இட முடியாது. கட்டுரை வரலாற்றில் கூட தனி நபருக்கு முன்னுரிமை ஏதும் இல்லை. தன்னிலை, முன்னிலையில் கட்டுரை எழுத முடியாது. கொஞ்சமாவது பொது நலம் இல்லாவிட்டால், விக்கிமீடியா திட்டங்களில் பங்களிக்க முடியாது. கை நிறைய சம்பளம் வாங்கி வீணாய்ச் செலவு பண்ணுபவனை ஏன் பொதுக்காரியத்துக்கு ஒன்றும் தருவதில்லை என்று கேட்பது போலத் தான் ஏன் வலைப்பதிவில் வெட்டியாக நேரம் கழிப்பவர்கள் விக்கிபீடியாவுக்கு வருவதில்லை என்று கேட்பது. எத்தனை பேர் சமூகத்தில் பொது நோக்கில் செயல்படுகிறார்கள்?
3. அடுத்து மனப்பான்மை பிரச்சினை. வலைப்பதிவுகளில் நீங்கள் சரி என்று நினைப்பதை எழுதிக் கொள்ளலாம். யார் கருத்துக்கும் செவி சாய்க்கத் தேவை இல்லை. தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று பிடிவாதம் பிடிக்கலாம். - விக்கிபீடியாவில் செயல்பட திறந்த மனநிலை அவசியம். எத்தனை பேருக்கு இந்த திறந்த மனப்பான்மை இருக்கிறது?
4. வலைப்பதிவில் கூட்டம் சேர்க்கலாம். கோஷ்டி சேர்க்ககலாம் - விக்கிபீடியாவில் இது முடியாது; கூடாது. பல நேரங்களில் தீர்க்கமாகத் தனியாக இயங்க வேண்டி வரும். 2003 தொடங்கி 2005 தொடக்கம் வரை மயூரனாதன் தன்னந்தனியாக விக்கிபீடியாவில் கட்டுரை எழுதிக் கொண்டிருந்தார். அப்புறம் சுந்தர், சந்தோஷ், ஹரிகிஷோர் எல்லாரும் வந்து சேர்ந்தோம்..அப்புறம் ஒவ்வொருவராக வரத் தொடங்கினார்கள். இப்பொழுது கூட தனிப்பட்ட துறை கட்டுரைகளை எழுதும்போது தனித்தே இயங்க வேண்டி இருக்கிறது. எத்தனை மயூரனாதன்கள் சமூகத்தில் இருப்பார்கள்?
5. உண்மை, நடுநிலைமை, திறந்த மனப்பான்மை, பிறர் கருத்துக்கு மதிப்பு, தனி நபர் முன்னிறுத்தாமை, காப்புரிமைக்கு மதிப்பு, நல்லெண்ணச் செயல்பாடு, இணக்க முடிவு போன்ற பல விக்கிபீடியா செயல்பாட்டுத் தூண்கள் தமிழர்களுக்கும் வலைப்பதிவு உலகத்துக்கும் அதிகம் பழக்கப்படாத விஷயங்கள்.
6. வலைப்பதிவுகளில் அங்கீகாரம் எதிர்ப்பார்த்துச் செயல்படுபவர்கள் நிறைய. தமிழ் விக்கிபீடியாவிலோ இப்படி நாம் ஒரு குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு மாற்றி மாற்றி பாராட்டிக் கொண்டிருப்பதில்லை. இயல்பிருப்பான ஒரு புரிந்துணர்வுடன் அவரவர் ஒரு அர்ப்பணிப்புடன் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். எத்தனை பேர் நிரோ, கோபி, கனக்ஸ், டெரன்ஸ் போல் இயங்குவார்கள் என்று நினைக்கிறீர்கள்?


ஆக, விக்கிபீடியா குறைகள், மீடியா விக்கி குறைகள், தமிழ் கலைச்சொல்லாக்கக் குறைகள் என்பதை தாண்டி, விக்கிபீடியாவுக்கான பங்களிப்புக் குறைவை எந்த ஒரு பொதுத் திட்டத்துக்கும் காணப்படும் ஊக்கக்குறைவாகவும் காண வேண்டும். உண்மையில் சமூகத்தின் பிரச்சினைகள், மனப்பாங்குப் பிரச்சினைகள் தான் ஆதாரக் காரணம். என்ன தான் மீடியாவிக்கியை முன்னேற்றினாலும், உதவிக் குறிப்புகளை தந்தாலும், கலைச்சொற்களை உருவாக்கினாலும் விக்கிபீடியா பங்களிப்பாளர் எண்ணிக்கை மாயாஜாலம் போல் உயரும் என்று எதிர்பார்க்க முடியாது. அகலப்பாட்டை இணைய இணைப்பு அதிகரிக்கும்போது தமிழகத்தில் இருந்து புது வெள்ளம் போல் விக்கிபீடியா பயனர்கள், பங்களிப்பாளர்கள் உயர்வார்கள் என்பது உறுதி. நிச்சயம் 2010ஆம் ஆண்டுக்கு முன் இந்த மாற்றத்தை காணலாம். ஆனால், இப்படி பொங்கி வரும் புதுப் பங்களிப்பாளர்களில் தரமான, விக்கிபீடியா கொள்கைகளை அறிந்து இசைந்து எழுதுபவர்கள் என்பவர்கள் குறைந்த அளவாகவே இருப்பார்கள். விக்கிபீடியா பண்பாடு ஒரு in-built filter போல் செயல்பட்டு இந்தப் பண்பில் வளர இயலாதவர்களை தானாகவே வடிகட்டி விடுகிறது என்று தான் தோன்றுகிறது. இது ஒரு விதத்தில் நல்லது தான். தமிழ்மணத்தில் போய் பார்த்தால் எத்தனை பேர் சல்லித்தனமாக அடித்துக்கொண்டு கிடக்கிறார்கள் என்று காணலாம். அப்படி உள்ளவர்கள் மெல்ல இங்க எந்த அவலும் கிடைக்காது. ஆனால், வருங்காலத்தில் பிழை திருத்த, உரை திருத்த, குறுங்கட்டுரை எழுத நிறைய பங்களிப்பாளர்கள் வந்து சேர்வார்கள் என்ற நம்பிக்கை மட்டும் நிறைய இருக்கிறது. தரமான விரிவான கட்டுரை எழுதுவது ஒரு கலை தான். அதற்கான பயிற்சியும் பொறுமையும் எல்லாருக்கும் அமைந்து விடுகிறதில்லை.


70 மில்லியன் தமிழ் மக்கள் இருந்தும் ஏன் இவ்வளவு குறைவான பங்களிப்புகள் என்பது நியாயமான கேள்வி. ஆனால், விடை எளிது. அளவில், தரத்தில் பெரிய ஜெர்மன், டச்சு விக்கிபீடியாவை உருவாக்கும் அந்நாட்டு மக்கள் சோற்றுக்கும் உடைக்கும் இருப்பிடத்துக்கும் அல்லாடுவதில்லை. ஆனால், 70 மில்லியன் தமிழ் மக்களில் இவற்றைப் பற்றி கவலைப்படாத அடுத்த தலைமுறைக்கு பாதுகாப்பாக சொத்து சேர்க்க நினைக்காத மக்கள் எத்தனை பேர் இருப்பார்கள். மிஞ்சிப் போனால் இலட்சக்கணக்கில் இருக்கலாம். இவர்களில் தமிழறிவு கூடி, தமிழார்வம் மிகுந்து, பொது நோக்கில் செயல்படுபவர்கள் எத்தனை பேர் இருப்பார்கள்? ஆயிரக்கணக்கில் இருந்தால் கூட ஆச்சர்யம். காலங்காலமாக நம்ம ஊரில் நல்ல காரியம் செய்வது என்றால் கோயில் கும்பாபிசேகத்துக்கு பணம் தருவது, அனாதை குழந்தைகளுக்கு உணவு போடுவது என்று தான் ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள். அதைத் தாண்டித் தொலைநோக்கில் சிந்தித்துச் செயல்படுபவர்கள் குறைவு. சிந்தனை இருப்பவர்களும் வாழ்க்கைச் சுழலில் சிக்கிக் கொள்கிறார்கள். மனிதனின் அடிப்படைத் தேவைகள் என்ற இந்த ஆங்கில விக்கி கட்டுரையை அவசியம் பார்க்கவும். இதில் உள்ள முக்கோணத்தில் உள்ள மேல் இரு நிலைகளில் உள்ளவர்கள் மட்டுமே தற்பொழுது விக்கிபீடியாவுக்கு பங்களிப்பவர்கள் என்று கருதலாம். அடுத்த நாள் வாழ்க்கை கேள்விக்குரியாக வறுமை, போர் ஆகியவற்றில் பாதித் தமிழ் மக்கள் இருக்கிறார்கள். கொஞ்சம் நல்ல நிலையில் இருப்பவர்கள் அடுத்தத் தலைமுறைக்கும் அதை நிலைநிறுத்த ஓடிக்கொண்டிருக்கிறார்கள். இதில் மொழி, பண்பாடு பற்றி கவலைப்பட செயல்பட மக்களுக்கு நேரம் ஏது? தற்பொழுது விக்கிபீடியாவில் தீவிரமாக இயங்கி வருபவர்கள் இரு அகவைகளை சேர்ந்தவர்கள் மட்டுமே. ஒன்று மயூரனாதன், செல்வா போன்று தங்கள் வாழ்க்கை நிலைநிறுத்தல்களை முடித்து விட்டு சமூக்கத்துக்குப் பங்களிக்க நினைக்கும் 45 வயதுகளை தாண்டியவர்கள். இல்லை, பெரிய கவலைகள்,பொறுப்பும் இல்லாமல், விளையாட்டுத் தனமும் மிகுந்து, அதே வேளை சமூக உத்வேகமும் மிகுந்து இருக்கும் 19 - 30 வயதுக்கு உட்பட்ட நான், சுந்தர், நற்கீரன், கோபி, மயூரன், மயூரேசன், உமாபதி போன்றோர். மாணவப் பருவத்தில் இருந்து விடுபட்டு சமூகத்தில் புதிதாக நுழையும் நாங்கள் ஏன் இந்த சமூகத்தில் ஒரு மாற்றத்தை கொண்டு வரக்கூடாது என்ற உந்துதலிட் பால் செயல்படுவதாக கருதலாம். ஆனால், வேலைப்பளு, இல்லறக் கடமைகள் என்ற சுழலில் சிக்கும்போது எத்தனை பேர் இதே முனைப்போடு பங்களிப்போம் என்பதை காலம் தான் சொல்ல வேண்டும். ஆனால், இருக்கிற ஒரே நம்பிக்கை நாம் இப்பொழுது போட்டு வைக்கும் அடித்தளத்தில் தொடர்ந்து பங்களிக்க புதிது புதிதாக ஆட்கள் வருவார்கள் என்பது தான்.


விக்கிபீடியாவில் பங்களிப்புக் குறைவு என்பதை நுட்பம் தாண்டி, மொழி தாண்டி சமூக நோக்கில் சிந்திக்க வேண்டும். சமூகம் முன்னேறினால் அதற்கு அப்புறம் என்ன என்று bore அடிக்கும். அப்பொழுது ஐரோப்பியக் காரர்கள் மாதிரி ஊருக்கு ஒரு அருங்காட்சியகம் கட்டி நம் பண்பாட்டை, மொழியை காக்க, பெருமை பறைசாற்ற முன்வருவோம். மொழி என்பது சமூகத்தின் ஒரு கூறு தான். மரத்தில் இலை போல். மரத்துக்கு இலை பெரும் உதவி செய்கிறது. ஆனால், இலைக்கு மட்டும் தண்ணீர் ஊற்றி மரத்தை வளர்க்க முடியுமா என்ன? மரமாகிய சமூகத்தை வளர்த்தெடுப்பதில் தான் நாம் அதிகம் கவனம் செலுத்த வேண்டும். மரத்தின் வளத்துக்கு இலை ஒரு சாட்சி. மொழி போன்ற ஒவ்வொரு இலையும் பட்டுப் போகப் போக வேர் உலுத்துக் கொண்டிருக்கிறது என்பதையே சுட்டும். அதனாலேயே நாம் விழித்துக் கொண்டு செயல்பட வேண்டி இருக்கிறது. இலையின் இருப்புக்கு வேரே ஆதாரம். வேரைக் காக்க விக்கிபீடியாவுக்கு வெளியே செய்யப்பட வேண்டியது நிறைய இருக்கு!!!!--Ravidreams 10:31, 9 டிசம்பர் 2006 (UTC)


ரவி, மிகவும் பரந்த தளத்தில், ஆழமாக, திறந்த மனநிலையில் உங்கள் கருத்துக்களை பகிர்ந்துள்ளீர்கள். நன்றி. இப்படி வெளிப்படையாக பகிர ஒரு சிலருக்கே துணிவு இருக்கின்றது. எமது எதிர்பார்ப்புக்கள் சற்று மீறிச் செல்கின்றதோ என்று நினைக்கவும் தோன்றுகின்றது. இளவயதில் மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என்று பலர் கருதுவார்கள். பின்னர் "life script" log in அல்லது lock out செய்து விடும். ரவி, தமிழ்மணம், தவி வெவ்வேறு ஜீவன்கள். இங்கு ஒப்பீடும் தேவையில்லை, போட்டியும் இல்லை, அங்கலாய்ப்பும் தேவையற்றது. அது உங்களுக்கும் தெரியும்.
ஒவ்வொருவொருக்கும் ஒரு Circle of Concern இருக்கும். அதற்குள் த.வி. விழுந்தால் நன்றே, ஆனால் அவசியமில்லை. உண்மையில் இதை விட முக்கியமான விடயங்கள் பல உண்டு. இந்தியாவில் இருந்து வந்த உங்களுக்கு வாழ்வியலைப் பற்றி உணர்த்த எடுத்துக்காட்டுக்கள் தேவையில்லை. இவை பற்றி தனி மடல் பின்னர் போடுகின்றேன். உங்கள் விரிவான பகிர்தலுக்கும் மீண்டும் நன்றிகள். --Natkeeran 02:09, 10 டிசம்பர் 2006 (UTC)

விக்கி தொழில்நுட்பம்!

தொகு

கூகுல் போன்ற தேடுபொறிகளில் த.வி.யின் (தமிழ், தமிழ்நாடு, ஈழம்) பற்றிய கட்டுரைகள் முதல் பக்கத்திலேனும் வருவதற்கு என்ன செய்ய வேண்டுமெனக் கண்டுபிடிக்க வேண்டும். (How to improve Pagerank?)

உரையாடலில் முயற்சி/கால விரயம்?!!

தொகு

'Be Bold in editing' என்னும் கருத்தை மேலும் தீவிரமாகக் கடைபிடிக்க வேண்டும்! ஒருவர் ஒரு கட்டுரையை மாற்றவோ, நீக்கவோ விரும்பும் போது அதனை உருவாக்கியவரும், நிர்வாகிகளும் தாராளமாக அனுமதிக்கவேண்டும். மாற்ற விரும்புபவரின் கருத்துக்கள் தவறாகவே கூட இருக்கலாம்! எனினும் அதைப் பற்றி உரையாடல் பக்கத்தில் விலாவரியாக விவாதித்து காலத்தை விரயமாக்கத் தேவையில்லை. ஒரு கட்டுரையை தைரியமாக அழித்தவர் நிச்சயம் வேறு பல கட்டுரைகளை எழுதுவார்!

பாலாஜி 06:44, 8 டிசம்பர் 2006 (UTC) யார் வேண்டுமானாலும் தொகுக்கலாம் என்பது சரியே ஆனால் எதை வேண்டுமானாலும் ("மாற்ற விரும்புபவரின் கருத்துக்கள் தவறாகவே கூட இருக்கலாம்") தொகுக்கலாம் என்பதில் உடன் பாடில்லை.. உரையாடல் பக்கங்களில் நேரம் விரயமாவது போல தோன்றினாலும் அவ்வுரையாடல்களில் இருந்து தேவையான பல கொள்கைகள் இணக்கமுடிவுகள் எட்டப்பட்டுள்ளது. ஓரே விடயத்தை மீண்டும் மீண்டும் வெவ்வேறு பக்கங்களில் செய்வதை தாவிர்த்துதான் வந்துள்ளோம். என்னை பொறுத்தவரை கட்டாயம் உரையாடல்கள் இருக்க வேண்டும் அது கட்டுரையினதும் தவியினதும் மேம்பாட்டுக்கு உதவியாக இருக்கும். உரையாடல் நேரத்தில் கட்டுரை எழுதினால் நலம் என்கிறீர்கள் அது சரிதான் ஒருவர் எழுதிய கட்டுரையை அடுத்த நாள் இன்னொருவர் காரணம் கூறாது அழித்தால் மூல பயனர் மீண்டும் கட்டுரை எழுத முனைவாரா? 'Be Bold in editing' என்பதில் என்னை பொறுத்த வரை தவி இப்போதைக்கு தேவையற்றது. ஆங்கில விக்கியில் பெரும் எண்ணிக்கையில் பயனர்ர்கள் உள்ளனர் ஆகவே அங்கு இது சரிவரலாம் இங்கு இருப்பதோ கொஞ்சம் பேர் அதிலும் அடிக்கடி வருவதோ சிலர் எப்படி சரி வரும்.--டெரன்ஸ் \பேச்சு 09:23, 12 டிசம்பர் 2006 (UTC)

மயூரநாதன்: எனது கருத்து

தொகு

இந்த ஆண்டறிக்கையை எழுதியதற்காக நற்கீரனுக்கு முதலில் நன்றிகள். ஆண்டு இறுதியில் எங்களுடைய கடந்த கால நடவடிக்கைகளைத் திரும்பிப் பார்த்துக் கொள்ளவும், அடுத்த ஆண்டுக்கான நடவடிக்கைகளைத் திட்டமிடவும் இது நல்ல வாய்ப்பாக அமையும்.

பல பயனர்களும் இங்கே தவியின் வளர்ச்சிக்கான பல கருத்துக்களை முன்வைத்துள்ளார்கள். இவை பற்றி வருகின்ற ஆண்டில் நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும்.

முதலாவதாகத் தரமான கட்டுரைகளின் எண்ணிக்கையைக் கூட்டுதல் முக்கியமான ஒரு பணியாகும். கட்டுரைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்குப் பங்களிப்பாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது தவிரச் சிறந்த வழி வேறு எதுவும் கிடையாது. தமிழில் பங்களிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதில் உள்ள தடங்கல்களை ரவி எடுத்துக்காட்டினார். கலைச்சொல் பற்றாக்குறை, கணனியில் தமிழில் உள்ளீடு செய்வதில் உள்ள பிரச்சினைகள், தமிழில் போதிய பயிற்சியின்மை என்பன முக்கியமானவைதான். கலைச்சொல் பிரச்சினையால், நான் எழுத எண்ணியுள்ள கட்டுரைகள் பலவும் கூடத் தடைப்பட்டுள்ளன. இதற்கு விக்சனரியின் கலைச்சொல் பகுதியை முறைப்படி வளர்ப்பது அவசியம். கட்டுரைகளை அதிகரிப்பதற்குத் தானியங்கிகளை மட்டுப்படுத்தப்பட்ட அளவில் பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த ஆண்டில் கணேஷின் தானியங்கி இவ்வகையில் நல்லதொரு முயற்சியாக அமைந்தது. வரும் ஆண்டிலும் இந்த வகையிலும் நல்ல பல கட்டுரைகளை உருவாக்க முடியும் என எதிர்பார்க்கிறேன். கட்டுரைகளின் தரம் பற்றிக் கருதும்போது, பெருமளவு குறுங் கட்டுரைகளைத் தரமுயர்த்துவதும், பெரிய கட்டுரைகள் பலவற்றையும் கூட முழுமையாக்குவதும் முக்கியமான விடயமாக உள்ளது. டெரன்ஸ் எடுத்துக்காட்டியது போலப் பல கட்டுரைகளுக்குப் படிமங்கள் சேர்க்கப்பட வேண்டியுள்ளது. நல்ல படங்கள் கட்டுரைகளின் பயன்படுதன்மையைப் பெருமளவு அதிகரிக்கக் கூடியன. எனவே இதிலும் கூடிய கவனம் செலுத்த வேண்டும். பல துறைக் கட்டுரைகளை தமிழ் விக்கிபீடியாவில் வரச் செய்வதற்கு பல் துறைகளையும் சேர்ந்த பங்களிப்பாளர்கள் வருவது முக்கியமானது. எனினும் தற்போதைக்கு ஆங்கில விக்கிபீடியாவிலுள்ள கட்டுரைகளை மொழிபெயர்ப்பதன்மூலம் ஓரளவு இக் குறையைத் தீர்க்கலாம் என்பது எனது கருத்து. Mayooranathan 10:45, 8 டிசம்பர் 2006 (UTC)

உமாபதியின் கருத்துக்கள்

தொகு

இக்கட்டுரையை எழுதிய அனைவருக்கும் கருத்துக்களைத் தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள். இவ்வாண்டிலேயே சகோதரத்திட்டமான விக்கி செய்திகள் ஆரம்பிக்கப்பட்டது. இதை என்னால் இயன்றவரை முன்னெடுக்க இருக்கின்றேன். பயனர்கள் எண்ணிக்கை 1, 000 தாண்டியதும் கட்டுரைகள் 5, 000 தாண்டியதும் ஆர்வமூட்டுபவையே. இதற்காக இரவு பகலாக அயராது ஊதியம் ஏதுமின்றித் தன்னலம் கருதாது தமிழ் மக்களின் அறிவாற்றலை மேம்படுத்தும் வகையில் தமது நேரத்தை மிகவும் பிரயோசனமாக முறையில் செலவழித்த விக்கிபீடியாப் பயனர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். விக்கிபீடியா "ஆல் போல் தளைத்து அறுகு போல் பரவி" வையகம் என்றும் அறிவைப் பரப்பும் என்றே நான் நிச்சயமாக நம்புகின்றேன். யாழ் நூலகத்தை தீவைத்து எரித்தவுடன் தமிழர்களின் அறிவுத்தாகத்தைத் தீர்துவிடலாம் எனச் சில இனவாதிகளின் சூழ்ச்சிகளை முறியடித்து நூலகம் திட்டம் போன்றே தமிழ் விக்கிபீடியாவும் இணையமூடாக அறிவுப்பசியை தீர்க்கவுதவும் ஓர் ஊடகமாக விளங்குவதையிட்டுப் பெருமகிழ்ச்சியடைகின்றேன். பயனர்கள் எண்ணிக்கை நிச்சயமாக அதிகரிக்கவேண்டிய ஒன்றே. தமிழ் தொடர்பான சில யாகூ! குழுக்கள் 10, 000 இற்கும் அதிகமான பயனர்களைக் கொண்டுள்ளது நாமும் இதை நிச்சயமாக அடைவோம் என்றே நம்புகின்றேன். எட்டவேண்டிய இலக்குகள் எனது கருத்துப்படி

  • தமிழ் விக்கிபீடியா குறுவட்டை (CD ROM) வெளியிடுதல்.
  • லினக்ஸ் தளத்தில் தமிழை உள்ளீடு செய்வதில் காலதாமதம் ஏற்படுகின்றதெனினும் ஒப்பிண் ஆபிஸ் போன்றவற்றில் வேகமாக இயங்குகின்றது. இதற்குக் காரணம் இந்திய மொழிகளில் Render பண்ணுவதில் லினக்ஸ் பயர்பாக்ஸ் உலாவியில் வேகக்குறைவேதும் இருக்கலாம். ஆராயந்து தீர்க்கபடவேண்டிய ஒன்று
  • லினக்ஸ் பற்றிய கட்டுரைகள் மற்றும் விளக்கங்கள் - கட்டுரைகள் நிச்சயமாகப் போதாது அதிகரிக்கவேண்டும்.
  • கணினி பற்றிய பல கட்டுரைகள் விரிவாக்கபடவேண்டும்.
  • இலங்கைக் கோயில்கள் பற்றிய கட்டுரை - அநேகமான கோயில்கள் பற்றிய கட்டுரை போதாது அதிகரிக்க முயற்ச்சிக்கின்றேன். --Umapathy 14:26, 8 டிசம்பர் 2006 (UTC)

கருத்து தெரிவிக்க அழைத்த நற்கீரனுக்கு நன்றியை தெரிவித்து என் கருத்தினை பதிக்கின்றேன்:2006 தவிக்கு வளர்ச்சிகரமான ஆண்டு என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை இதே வளர்ச்சி தேக்கமைடையாமல் வரும் ஆண்டுகளிலும் தொடர விருப்பம் கொண்டுள்ளேன். 2006 ன் குறைபாடுகள்

  • ஆண்டின் ஆரம்பத்தில் தவிக்கியில் நிகழும் செய்தி,அது தொடர்பான நபர்கள் பற்றி உடனுக்குடன் இற்றைபடுத்தும் தன்மையினை கொண்டிருக்கவில்லை.ஆனால் தற்போது இது போதுமான அளவு நிவர்திக்கப்படுள்ளது.(ரவிராஜ் MPகொலை,எயிட்ஸ் தினம்,கிரண் தேசாய்...போன்றன)
  • கொள்கைபக்கங்கள்,உதவி பக்கங்கள்,வழிகாட்டிகள் போன்ற விக்கிபீடியா பகுப்பில் உள்ள மிக முக்கிய விளக்கங்கள் தமிழ்ப்படுத்தாமல் இருப்பது. படிமங்கள் தொடர்பான விதிமுறை வார்ப்புரு போன்றன நிவர்திக்கவேண்டிய விடயங்கள் இருக்கின்றன.
  • தனியே இலங்கை பயனர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது தவியை வேறுதளதிற்கு இட்டு செல்லும் என பயம்கொள்கின்றேன்.
  • சிலரால் மட்டும் தவி கட்டியாளப்படல்.பயனர்கள் புகுபதிவுகளுடன் பங்களிப்பினை நிறுத்திகொள்ளவது.

2007 ல் விரும்புவது:

  • தவி 10,000 கட்டுரைகள் என்ற இலக்கை (goal) வரையறுக்க வேண்டும் என பரிந்துரை செய்கின்றேன்.செயற்திட்டமொன்று தன்னால் அடையக்கூடிய இலக்கினை தேர்ந்தெடுப்பது திட்டமிடலின் முக்கிய கூறாகும்.
  • ஒவ்வொரு மாதமும் அல்லது காலாண்டிற்கும் ஒருதடவை புள்ளிவிபர ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும்.
  • முதல் பக்கத்தில் தமிழில் தட்டச்சுவது பற்றிய இணைப்பினை தருதல்.
  • முடிந்தவரை பகுப்புக்களை குறைத்தல்.கிட்டத்தட்ட இது ஒவ்வொரு கட்டுரைக்கும் ஒன்று என்ற அடிப்படையில் நீண்டு செல்கின்றது.
கலாநிதி, பகுப்புக்கள் பற்றி நானும் ரவியும் சற்று ஆய்ந்து கொண்டிருக்கின்றோம். ஆர்வம் இருந்தால் தெரியப்படுத்துங்கள் சில குறிப்புக்களைப் பகிரமுடியும். ஆரம்பத்தில் பகுப்புக்கள்/கட்டுரைகள் விழுக்காடு சற்று அதிகமாக இருக்கும். எதிர்பார்த்ததுதான். மேலும் கட்டுரைகள் எண்ணிக்கைகள் அதிகரிக்கும் பொழுது இந்த விழுக்காடு குறையும். இருப்பினும் பொருத்தமற்ற பகுப்புக்களை நீக்குவதும் பொருத்தமான பிற பகுப்புக்களை ஆக்குவதும் த.வி. ஒரு தொடர் நிகழ்வே. --Natkeeran 02:31, 10 டிசம்பர் 2006 (UTC)
  • நிர்வாகிகளின் எண்ணிக்கையினை அதிகப்படுத்தல்.
  • தமிழ் இலக்கியம்/இலக்கணம் தொடர்பில் கட்டுரைகள் மேம்படுத்தப்பட வேண்டும்.
  • இறுவட்டு வெளியீடு/பொதுத்தளத்தில் தவி விளம்பரப்படுத்தல்/தவிக்கிபீடியர்கள் சந்திப்பினை ஏற்படுத்தல்.

இவ்விருப்பங்கள் எனையவர்கள் பங்களிப்பு சார்ந்துள்ளபோதும் என் அறிவிற்கு எட்டியதை செய்ய உறுதி கூறுகின்றேன்--கலாநிதி 16:43, 9 டிசம்பர் 2006 (UTC)

நற்கீரன் கருத்துக்கள்

தொகு

நுணுக்கமான விளக்கம் தரும் கட்டுரைகள் வேண்டும்

தொகு
“இரண்டு வயதுக் குழந்தை தனது தந்தையிடம் அப்பா ‘கப்பல்னா என்னப்பா? எனக் கேட்டால் அதற்கு அக்குழந்தையின்
தந்தை கப்பல்னா நாம ரோட்ல கார்ல போறம்ல அதுமாதிரி தண்ணீல போறதுக்குக் கப்பல்ன்னு பேர்’ என எளிய விளக்கம்
அளிப்பார்.  

அதே குழந்தை ஐந்து ஆறு வயதில் அதே கேள்வியைக் கேட்கும் போது கப்பல் என்பது நீவழிப் போக்குவரத்திற்கு உதவும்
வாகனம்.  படகின் பெரிய வடிவம் என விளக்க்கம் கூறலாம்.  

அதே குழந்தை மேலும் வளர்ந்து பத்து பதினைந்து வயதில் கேட்கும் போது பொதுவாக இரும்பு நீரில் மூழ்கும் தன்மை
உடையது.  ஆனால் ஒரு பொருள் வெளியேற்றும் நீரின் கொள்ளளவும், அதனால் நீரின் மீது ஏற்படும் அழுத்தமும் என 
இயற்பியல் விளக்கங்களுடன் முழுமையாகப் பதிலுரைக்க வேண்டியதிருக்கும்.

ஆனால் தமிழில் மருத்துவம் எழுத வருபவர்கள் மட்டும் முதலிரண்டு நிலைகளிலேயே நின்று விடுகின்றனர்.  பலர் தமிழில் 
அதுபோன்ற முயற்சி தேவையில்லை என்றும் சிலர் தமிழில் அவ்வாறு தர இயலாது என்னும் கருத்துக்களுடன் உள்ளனர்.”  

மேற் குறிப்பிட்ட கருத்துக்களை நரம்பு மண்டல நோய்கள் என்ற தனது நூலுக்கான முன்னுரையில் மருத்துவர் ஐ. எஸ். ஜெயசேகர் தந்துள்ளார். இவை மிகவும் யதார்த்தமான கருதுக்கள். தமிழ் அறிவியல் புத்தகங்கள் பல சிறு துணுக்குகள் அல்லது குறுங்கட்டுரைகளின் கோர்வையாவே அமைவது வழக்கம். இதைவிடுத்து நுணுக்கமாக ஆயும் நூல்கள் அரிது.


த.வி. விளக்கங்கள் எந்த நிலையில் அமைதல் வேண்டும்? அனேகமான கட்டுரைகள் மருத்துவர் ஐ. எஸ். ஜெயசேகர் குறிப்பிட்ட மூன்றாம் நிலையில் அமைவதே நன்று.

த.வி. கட்டுரைகளை மூன்று வகைகளாக்கலாம்

  1. அறிமுகக் கட்டுரைகள் (பொது நடை, பரந்த பொருள்)
  2. விளக்கக் கட்டுரைகள்
  3. நுண்/நுட்பக் கட்டுரைகள் (துறைசார் நடை, துல்லிய பொருள்)

வளர்ச்சியை வளப்படுத்தல்

தொகு

த.வி. தொடர்ந்து கடந்த ஆண்டு வீதத்தில் வளர்ச்சி பெறுமா, அல்லது ஒரு மேல் வரம்பை தட்டுமா என்பது 2007 உரிய ஒரு கேள்வி. வெகு விரைவில் 700 இருந்து 7000 என வளரும் என எதிர்ப்பார்க்கப்பட்ட தமிழ் வலைப்பதிவு உலகம் அந்த வேக விகதத்துக்கு ஈடுகொடுக்கவில்லை. இணையத்தில் இலாபகரமாக இயங்கும் தமிழ் மொழியை மையமாக கொண்ட எந்த இணையத்தளமும் இல்லை என்றும் சொல்லாம். தமிழ் கணிமை நோக்கி முனைப்பாக செயற்பட்டு வந்த உத்தமம் கடந்த இரண்டு வருடமாக எந்த செயலாக்கத்திலும் ஈடுபட்டதாக தெரியவில்லை. யுனிக்கோட் பிரச்சினை கூட தீரவில்லை. இந்த சூழலில் த.வி. தொடர்ந்து வளருமா என்பது ஒரு சிக்கலான கேள்வியே. இருப்பினும், இணையத் தொடர்பு விரிவு, த.வி. தொடர்ந்து பல தளங்களில் களங்களில் அறிமுகம், பயன் அதிகரிப்பு ஆகியவை த.வி. தொடர் வளர்ச்சிக்கே இட்டுச் செல்லும் என கருதலாம். 2007 ஆம் ஆண்டில் வளர்ச்சி விகிதம் குறையலாம், ஆனால் வளர்ச்சி இருக்கும்.


வளர்ச்சி வரவேற்கப்படு வேண்டும் அதேவேளை, த.வி. தயாரகவும் இருக்க வேண்டும். வளர்ச்சி கான்சர் போல அமைந்து விடக்கூடாது. பலதரப்பட்டோரை உள்வாங்குவற்கு ஏதுவான அத்திவாரங்களை நாம் உறுதி செய்ய வேண்டும். டெரன்ஸ் சுட்டியது போல கொள்கை, வழிகாட்டிகள், உதவி ஆகியவற்றை திட்டமிட்டு பகிர்ந்து த.வி. இற்கு ஏற்றவாறு ஆக்கிக் கொள்ளவேண்டும்.

  1. அனைத்து உதவி பக்கங்களையும் பட்டியலிடல்.
  2. மொழி பெயர்ப்பு: மொழி பெயர்ப்பு செய்யும் பொழுது த.வி. ஏற்றவாறு மாற்றி எழுதுதல்.
  3. த.வி. ஆ.வி. விட சிறிய திட்டம். எனவே எமக்கு ஆ.வி. இருக்கும் எல்லா நிர்வாக விடயங்களும் எமக்கு தேவையாக இருக்காது.

வேகமான வளர்ச்சியைவிட, தரமான நிதானமான வளர்ச்சியே மேல்.

அவரவுக்கு ஏற்ற முறையில், ஏற்ற நேரத்தில், நேரடிப் பங்களிப்பு

தொகு

த.வி. நல்ல திட்டம்தான். ஆனால், இங்கு யாரையும் யாரும் நிர்பந்திக்க முடியாது. செய்யப்பட வேண்டிய பணிகளை பட்டியலிடலாம், ஒருங்கிணைக்கலாம், முக்கியமான பணிகளை அடையாளப்படுத்தலாம். ஆனால் நிர்பந்திக்க முடியாது. அதுதான் த.வி. வின் இயல்பு. அவரவர் அவரவருக்கு ஏற்ற முறையில், ஏற்ற நேரத்தில், நேரடியாக பங்களிக்க முடியும். அதுவே, த.வி. வின் ஈர்ப்பு.

படிமங்கள்

தொகு

படிமங்கள் பற்றி மேலே பாலாஜின் பதிவில் பகிரப்பட்டுள்ளது. தெளிவான கொள்கை (கட்டற்ற உரிமை உள்ள படிமங்கள்), செயலாக்கம் (implementing the classification of image upon uploading) நிறைவேற்றப் படவேண்டு.

விக்கிபீடியா தமிழ் நடை அல்லது கட்டுரை அமைப்பு

தொகு

தமிழ் விக்கிபீடியாவில் பயன்படுத்தப்படும் தமிழ் நடையை விக்கிபீடியா தமிழ் நடை எனலாம். இது கட்டுரைத் தமிழ் நடையையே பெரும்பாலும் ஒத்து இருந்தாலும் சில தனித்துவ பண்புகள் உண்டு. த.வி. கட்டுரை அமைப்பை அல்லது நடையை பினவருமாறு வரையறை செய்யலாம்:

  1. வரையறை
  2. விளக்கம்/விரிவு
  3. (கணித விபரிப்பு)
  4. மேற்கோள்கள் அல்லது அடிக்குறிப்புகள்
  5. ஆதாரம்
  6. வெளி இணைப்புகள்/பகுப்பு/ஆங்கில விக்கி இணைப்பு

பொதுவாக கட்டுரைத் தமிழ் நடையில் வரையறையை முதல் பந்தியில் தரவேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆனால் கலைக்களஞ்சிய கட்டுரைக்கு அது அவசியம். இணைக்கப்படும் பிற பந்திகள் அந்த மைய வரையறையை கருவாக வைத்து விளக்கம்/விரிவு தரவேண்டும். இறுதியில் தகுந்த மேற்கோள்கள், ஆதாரங்கள் தரவேண்டும். மேலும் வெளி இணைப்புகள், ஆங்கில விக்கிக்கான இணைப்பு ஆகியவற்றை தொடுத்து, வகைப்படுத்தலும் செய்தல் வேண்டும்.

தமிழ் விக்கி நடை தமிழில் அறிவியற் தமிழ் நடை, நுட்பத் தமிழ் நடை, விமர்சனத் தமிழ் நடை, திறனாய்வு தமிழ் நடை என்பவற்றுடன் ஒத்தே இருக்கும். அதாவது தன்னிலையிலோ முன்னிலையிலோ எழுதப்படாமல் படர்க்கையில் எழுத வேண்டும். அதாவது விடய நோக்கில், புறவயமாக எழுதல் நன்று. தேவையற்ற புகழ்ச்சியுரைகளைத் தவிர்த்து தகவலை மையமக வைத்து கட்டுரை வரைதல் நன்று. மேலும், பொது எழுத்து நடைக்கும், இலக்கண விதிமுறைகளுக்கும் கட்டுப்பட்டு எழுதுதலே நன்று.

தமிழ் விக்கிபீடியா தரமறிதல் முறைமையும் தரங்களும் (தரமும் முக்கித்துவமும்)

தொகு

தரங்கள்

தொகு
  1. சிறப்புநிலை/ சிறப்புக் கட்டுரை
  2. நல்லநிலை/ நல்ல கட்டுரை
  3. இடைநிலை/ இடைநிலைக் கட்டுரை
  4. ஆரம்பம்/ஆரம்ப நிலைக் கட்டுரை
  5. குறைநிலை/ குறை நிலைக் கட்டுரை

முக்கியத்துவம்

தொகு
  1. அதி உயர் முக்கியத்துவம்
  2. உயர் முக்கியத்துவம்
  3. இடைநிலை முக்கியத்துவம்
  4. குறை முக்கியத்துவம்
  5. தெரியாது / முக்கியத்துவம் தெரியாது

(மேலும் விபரங்களுக்கும் ஆலமரத்தடியைப் பார்க்கவும்)

பரப்பு

தொகு

தமிழ் விக்கிபீடியாவின் பரப்பு மட்டுப்படுத்தப்பட்டதே என்பதை சிலர் மேலே சுட்டிக்காட்டியுள்ளனர். அதற்கு பதிலாக பல்துறைசார் பங்களிப்பை மேம்படுத்துவதே தீர்வு என்றும் சொல்லப்பட்டது. அது சரிதான். மருத்துவம், சட்டம், போக்குவரத்தியல், வேளாண்மை, மகளிரியல் எனப் பல துறைகள் இன்னும் தொடப்படவில்லை. எனினும், இங்கிருக்கும் பலரும் வெவ்வேறு துறைகளிலும் பங்களிக்க முடியும். எ.கா. கணிதம், தினசரி வாழ்வியல்.

வகைப்படுத்தல்

தொகு

வகைப்படுத்தல் தொடர்பாக நான், ரவி குறிப்புகள் எடுத்து வருகின்றோம். Knowledge Management, Information Design, Subject Heading List (Wikipedia:இயல் தலைப்புகளின் பட்டியல்), Controlled Vocabulary போன்ற அம்சங்களை நோக்கி குறிப்புகள் எடுத்து வருகின்றோம். த.வி. தற்போதைய தாய்பகுப்புக்களையும் வகைப்படுத்தும் முறைமை நோக்கியும் அலசி வருகின்றோம். விரைவில் த.வி. வில் மேலும் தகவல்கள் இணைக்கப்படும்.


முதற்பக்கத்தில் மதமும் (ஆன்மீகம்) , அரசியலும் சமூகத்திற்க்கு பிரிவுகளாக உள்ளன. இவை இரண்டும் தனி கிளைகளாக இருக்க வேண்டும். இந்த இரண்டு பிரிவுகளிலும் ஆயிரக்கணக்கன கட்டுரைகள் வர வாய்ப்புள்ளது--விஜயராகவன் 09:52, 11 டிசம்பர் 2006 (UTC)

Stars, Cookies & Bable Boxes

தொகு

பாராட்டுக்கள் நன்று. ஆனால் ஆ.வி. போன்று Stars, Cookies போன்றவையை த.வி. தவிர்க்கலாம். அவை சிறுபிள்ளைத் தனமாக எனக்குத் தோன்றுகின்றது. ஒரு அளவுக்கு மீறி Bable Boxes அப்படியே.

எளிமை, எளிமை, எளிமை

தொகு

குறைகள்

தொகு
  1. இன்றைப்படுத்தல் ஒழுங்கின்மை.
  2. காட்சிப்படுத்தலில் கவனமின்மை.
  3. தமிழ் விக்கிபீடியா தொகுப்பதுக்கு இலகு என்ற தப்புக் கணக்கு.
  4. அறிவிக்கப்படும் கூட்டுமுயற்சிக் கட்டுரைகளுக்கு பங்களிப்பு அரிதாக கிடைப்பது.

--Natkeeran 02:24, 11 டிசம்பர் 2006 (UTC) (விரியும்)


கோபியின் கருத்துக்கள்

தொகு

அனைத்துப் பயனர்களதும் கருத்துக்களை ஆர்வத்துடன் படித்தேன்; மகிழ்ச்சி. நான் கூற அதிகம் இல்லை.

இணையத்தில் தமிழ் உள்ளடக்க உருவாக்கம் என்பது பெருமளவில் இலக்கியம், சினமா ஆகிய துறைகளுடன் குறுகிக் காணப்படுகிறது. வலைப்பதிவுகள் போன்றவை மிகப் பரந்த விடயப்பரப்புக்களை உள்ளடக்குகின்றனவாயினும் அவற்றின் நம்பகத்தன்மை கேள்விக்குரியது. தமிழ் விக்கிபீடியா நல்லதொரு உசாத்துணையாக வளர வேண்டும்.

ஆதலால் கலைக்களஞ்சியத்தரம் பேணுவதில் நாம் இன்னும் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்பதையே நான் வலியுறுத்துகிறேன்.. கோபி 17:31, 12 டிசம்பர் 2006 (UTC)

அதிக பகுப்புக்கள் இருப்பது விக்கிபீடியாவின் வளர்ச்சியைப் பாதிக்கும்

தொகு

அளவுக்கதிகமான பகுப்புக்கள் இருப்பது கட்டுரைப் பரப்பு விரிவடைவதைத் தடுப்பதாக இருக்கும். ஒரு வாசகருக்கும் கூட பகுப்புக்களூடாக நகரும்போது சலிப்புத் தோன்றும். ஒரு உதாரணத்துடன் விளக்குகிறேன்.

பாலூட்டிகள் என்ற பகுப்பினுள் பூனை, நாய், குதிரை என்ற கட்டுரைகள் வரும். இவை முறையே பூனைப்பேரினம், நாய்ப்பேரினம், குதிரைப் பேரினம் ஆகிய பகுப்புக்களுள் ஆரம்பத்திலேயே அடக்கப்பட்டால் புலியின் வகைகள், கழுதை, நரி போன்ற கட்டுரைகள் உருவாவது தடைப்படும். காரணம் யாதெனின் இக்கட்டுரைகள் உள்ளனவா இல்லையா என்பதை பங்களிப்பவர்கள் இலகுவாகத் தெரிந்து கொள மாட்டார்கள். வாசகரும் ஒரு கட்டுரையை வாசிக்க ஒரு பகுப்பினுள் நுழையும் அனுபவத்தை விரும்ப மாட்டார். ஆகவே பாலூட்டிகள் பகுப்பினுள் கட்டுரைகள் தொடர்ந்து அதிகரித்துக் குறித்த பேரின விலங்குகள் தொடர்பான கணிசமான கட்டுரைகள் உருவாக்கப்பட்ட பின்னர் பகுப்பு மாற்றங்கள் செய்யப்படுவது நன்று. (இது எடுத்துக் காட்டு மட்டுமே. குறித்த பகுப்புக்களைச் சென்று பார்வையிட வேண்டியதில்லை.) கோபி 19:11, 12 டிசம்பர் 2006 (UTC)

கோபி, உங்கள் கருத்துடன் உடன்படுகிறேன். தொடக்கத்தில் ஒரு தாய்ப்பகுப்பில் கட்டுரைகளை குவித்து அங்கு நெரிசல் அதிகமானால், துணைப்பகுப்புகளை உருவாக்கி அதற்கு கட்டுரைகளை நகர்த்தலாம். கொஞ்சம் வேலை அதிகமாகும். இருந்தாலும், வாசிப்பனுபவத்தை செம்மாயக்க இது உதவும்--Ravidreams 20:48, 12 டிசம்பர் 2006 (UTC)
ஒரு கட்டுரைக்கு ஒரு பகுப்பு என்பது வரவேற்கத்தக்கதல்ல என்றாலும், அதனால் தவறிருப்பதாக நான் நினைக்கவில்லை. வாசகர் முதற் பக்கத்திலிருந்து கட்டுரைகளுக்கு (top down approach) செல்வாரா? அதற்கு எற்றார் போல் த.வி. அமையவேண்டுமா என்று தெரியவில்லை. உதாரணத்துக்கு நான் ஆ.வி.யை பயன்படுத்துவது கூகுல் அல்லது ஆ.வி. முதற் பக்கத்திலுள்ள தேடு பொறி மூலமாகத்தான். பிறகு ஒரு கட்டுரை தொடர்பான பிற கட்டுரைகளுக்கு செல்வேன். (bottom up or siblings approach). இதைப்போலவே த.வி.யிலும் தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் தேட விருப்பம். மேலும் கோபி குறிப்பிட்டுள்ள பிரச்சனையைத் தீர்க்க
1. நாய் கட்டுரை நாய்ப் பேரினம், பாலூட்டி இரண்டிலுமே இடம்பெற வேண்டும். அதாவது தாய் பகுப்பு மிகப் பெரியதாக இல்லாதவரை, கீழுள்ள பகுப்புகளின் கட்டுரைகள் தாய் பகுப்பிலும் இடம்பெற வேண்டும்.
2. portal கள், 'தெரியுமா' போன்ற பகுதிகளை விரிவாக்க வேண்டும்.
பாலாஜி 23:52, 12 டிசம்பர் 2006 (UTC)
பகுப்புகளில் பாலாஜி சொல்வது போல் கீழிருந்து மேல் அணுகுமுறையை அதிகம் பின்பற்றப்பட வாய்ப்பிருக்கிறது. தாய்ப்பகுப்பில் இட்டுப் பின்னார் துணைப்பகுப்புக்கு நகர்த்துவது - தாய்ப்பகுப்பு, துணைப்பகுப்பு இரண்டையும் இட்டுப் பின்னர் தாய்ப்பகுப்பை அழிப்பது இரண்டிலும் வேலை ஒன்று தான். ஆனால், இரண்டாம் முறையில் பயன் அதிகம் இருப்பது போல் இருக்கிறது. இங்கு எழும் ஒரு கேள்வி, எந்த அளவு மேல்நிலையில் உள்ள தாய்ப்பகுப்பை இட வேண்டும் என்பது. சில பகுப்புகள் பகுப்புக்குள் பகுப்பாய் நீள்வது நாம் அறிந்ததே. இங்கு பகுப்புகளை folder போல் கருதாமல் சிட்டைகள் (label) போல் கருதலாம். --Ravidreams 03:55, 13 டிசம்பர் 2006 (UTC)

மயூரேசனின் பார்வையில் 2007 ம் ஆண்டு

தொகு

2007 ல் செய்யக் கூடியவை. இது வரை தமிழ் விக்கிப்பீடியா ஆக்கபூர்வமான வழியிலேயே வளாந்து வந்துள்ளது. இதை யாரும் மறுக்க முடியாது. இனிமேல் 2008 ஆரம்பப்பகுதியில் 10,000 கட்டுரைகள் என்ற இலக்கை அடையலாம் என்பதே என் எதிர்பார்ப்பு.

வலைப்பதிவர்களை இங்கு ஈர்ப்பது என்பது தேவையில்லாதது. அவர்களுக்கு இந்த முயற்சி பற்றி நன்கு தெரியும். ஆயினும் விக்கியில் பணி செய்வது அலுவலகத்தில் பணி புரிவது போன்றது. வலைப்பதிவோ சொந்தக் கம்பனி போன்றது, உங்கள் இஷ்டத்துக்கு ஏதும் பண்ணிவிட்டுப்போகலாம். அவர்களை இங்கு எடுத்தால் மேலும் குளப்பங்களை அதிகரிக்கவே உதவும். தமிழ் மணத்தில் பார்த்தீர்கள் என்றால் தெரியும் எதற்கெல்லாமோ சண்டை இட்டுக்கொண்டு இருக்கின்றார்கள்.

பரிந்துரைகள்

தொகு
  • படிமங்கள் பற்றிய ஒரு தெளிவான நிலைப்பாடு. இயன்றவரை திறந்த மூல படிமங்களைப் பயன்படுத்த வேண்டும்.
  • குறு வட்டில் தமிழ் விக்கிப்பீடியா வெளிவரவேண்டும்.
  • அதிகாரிகள் அதிகரிப்பு தேவையற்றது. பங்களிக்கும் பயனர்களின் (Active members) அதிகரிப்புடனேயே இது அதிகரிக்கப்பட வேண்டும்.
  • வரவேற்புக் குழு ஒன்றை அமைக்கலாம். இது புதுப்பயர்களுக்கு எவ்வாறு தட்டச்சிடுவது போன்ற அடிப்படை விடயங்களில் உதவலாம். இது பயனர்களை தங்கவைக்க உதவும்.
  • கட்டுரைகளை இயன்றவரை மொழிபெயர்க்காமல் நமது தமிழ் நடையில் எளிய தமிழில் எழுத முயல வேண்டும்
  • தமிழ் தட்டச்சிடுவது எப்படி என்பது பற்றி எழுத வேண்டும். நான் ஏற்கனவே ஒரு கட்டுரை எனது வலைப்பதிவில் எழுதியுள்ளென். அதை விக்கிப்பீடியர்கள் பயன்படு்த்த விரும்பினால் அது அடியேனுக்குப் பெருமையே!
  • குறுங்கட்டுரைகள் குறைய வேண்டும். இது நல்லபடியாகவே நடக்கின்றது. குறிப்பாக கோபி போன்றோர் இவ்விடையத்தில் சிறப்பாகப் பங்களிக்கின்றனர்.

வாழ்த்துக்கள். எமது வெற்றியை நாளைய சரித்திரம் சொல்லும்..--ஜெ.மயூரேசன் 07:36, 15 டிசம்பர் 2006 (UTC)

கலாநிதி அவர்களுக்கு!

தொகு

இலங்கைப் பயனர் அதிகமமாவதால் என்னாகுமென்று பயப்படுகின்றீர்கள். இலங்கை தமிழர்கள் விக்கிப்பீடியாவிற்கு பங்களிக்கக் கூடாதா?. இலங்கைத் தமிழர்கள் என்ன இங்கே பொய் எழுதும் பொய்யர்கள் என்று சொல்ல வருகின்றீர்களா?--ஜெ.மயூரேசன் 07:36, 15 டிசம்பர் 2006 (UTC)

தீயினால் சுட்டபுண் ஆறலாம் ஆறாது நாவினால் சுட்ட வடு


மயுரேசன், அவர் அந்தக் கருத்தில் சொல்லவில்லை என்று நினைக்கின்றேன். அவரது அக்கறை என்னவாக இருக்கும் என்று நான் ஊகிப்பது என்னவென்றால், இலங்கைப் பயனர்கள் அதிகரித்து சென்றால் நூலகம் போன்ற ஒரு திட்டம் என்ற தோற்றப்பாட்டை உருவாக்கிவிடும். அதிகபடி இலங்கை தொடர்பான கட்டுரைகள் சேர்ந்து த.வி. உலக நோக்கு தேக்கம் கண்டுவிடும் என்றும் கருதியிருக்கலாம். மேலும், சில சர்சைகளுக்கும் இது வழிகோலலாம் என்று அவர் கருதியிருக்கலாம். எ.கா. எழுதுக்கூட்டல், பார்வைகள்.
மேலும், எந்து ஒரு கூட்டுத்திட்டத்தின் வெற்றிக்கும் பயனர்களின் diversity அவசியம், இல்லாவிட்டால் எல்லோரும் ஒரேமாதிரி சிந்தித்து groupthink அல்லது herd mentality வந்துவிடும். அது ஆபத்தானது. தமிழ்நாட்டு பயனர்களின் பங்களிப்பு இன்றியமையாதது. தற்போ உள்ள் நிலை மோசமில்லை என்றே எனக்கு தோன்றுகின்றது. ஆனால் நிச்சியம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம். --Natkeeran 02:45, 16 டிசம்பர் 2006 (UTC)
நன்றி நற்கீரன் நானும் அவ்வாறேதான் எண்ணுகின்றேன், கலாநிதி ஆர்வத்துடன் நூலகங்கள் வேறு இடங்களில் இருந்தும் தகவல்களைச் சேகரித்து விக்கிபீடியாவில் பங்களித்து வருகின்றார். இது தொடர்பாக பயனர் பேச்சு:ஜெ.மயூரேசன்#ஆண்டு அறிக்கையில் செய்தியொன்றை ஏற்கனவே இட்டுள்ளேன். --Umapathy 08:44, 16 டிசம்பர் 2006 (UTC)
நக்கீரன்,உமாபதி க.க.போ. இலங்கை பயனர்களுக்கு சமமாக இந்திய தமிழர்களும் பங்களிக்க வேண்டும் என்ற ஆவாவிலே இக்கருத்தினை வெளியிட்டேன்,விக்கிபீடியா பொதுதளமல்லவா? --கலாநிதி 16:54, 16 டிசம்பர் 2006 (UTC)

கலாநிதி, நீங்கள் மேற்கண்ட நோக்கில் சொன்னீர்கள் என்று தான் நான் ஊகித்தேன். தமிழக பயனர்கள் வருவார்கள்..விரைவில் வருவார்கள்..வந்து கொண்டே இருக்கிறார்கள் ;)--Ravidreams 17:09, 16 டிசம்பர் 2006 (UTC)

கலாநிதி அவர்களே நீங்கள் கூறியது சரியே!
அதற்காக இலங்கைப் பயனர்களின் ஈடுபாட்டை சந்தேகத்துடன் பார்க்காதீர்கள். தமிழகத் தமிழர்கள் வரவேண்டும். தமிழின் தாய்வீட்டிலிருந்து தமிழர்கள் வருவது இங்கு பன்முகத்தன்மையை அதிகரித்து சரியான பாதையில் இட்டுச்செல்லும் என்பதில் ஐயமில்லை. ஐயம் தீர்த்த உமாபதி, நக்கீரன், ரவி ஆகியோருக்கு நன்றிகள் ;) --ஜெ.மயூரேசன் 05:35, 18 டிசம்பர் 2006 (UTC)

நற்கீரன் கவனிக்க

தொகு

நற்கீரன், அனைவரின் கருத்துக்களின் சாரத்தையும் எடுத்து திட்டப்பக்க அறிக்கையை மேம்படுத்தித் தர இயலுமா? இதை தமிழ் விக்கிபீடியா வலைப்பிதிவில் போடலாம்.--Ravidreams 17:07, 12 பெப்ரவரி 2007 (UTC)

Return to the project page "2006 தமிழ் விக்கிப்பீடியா ஆண்டு அறிக்கை/2006 Tamil Wikipedia Annual Review".