விக்கிரமங்கலம்
விக்கிரமங்கலம் (Vikramangalam) என்பது இந்திய ஒன்றியம், தமிழ்நாட்டின், மதுரை மாவட்டம், செல்லம்பட்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஒரு சிற்றூர் ஆகும். இது விக்கிரமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்டது.
விக்கிரமங்கலம் | |
---|---|
சிற்றூர் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | மதுரை |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே.) |
அஞ்சல் குறியீட்டு எண் | 625 207 |
அமைவிடம்
தொகுஇந்த ஊரானது மாவட்ட தலைநகரான மதுரையிலிருந்து 29 கிலோமீட்டர் தொலைவிலும், மாநிலத் தலைநகரான சென்னையில் இருந்து 504 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.[1] இப்பகுதியில் நீண்ட நெடிய நாகமலைத் தொடரும், சிறு குன்றுகளும் நிறைந்துள்ளன.
வரலாறு
தொகுகி. பி. 11 ஆம் நூற்றாண்டில் பாண்டிய நாடு சோழர்களின் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. அப்போது சோழர்களின் அரச பிரதிநிதியாக பாண்டிய நாட்டை விக்கிரம சோழ பாண்டியன் (கி.பி. 1050-1079) என்பவன் ஆண்டு வந்தான். அவனால் வணிக நகராக இந்த ஊர் உருவாக்கபட்டு விக்கிரம சோழபுரம் என்று அழைக்கபட்டது. இந்த வணிக நகரானது அக்காலத்தில் புகழ்பெற்று விளங்கிய திசையாயிரத்து ஐநூற்றுவர் என்று புகழ்பெற்ற வணிகக் குழுவினருடன் தொடர்புடையதாக இருந்துள்ளது. விக்கிரமங்கலத்தில் உள்ள பிற்காலப் பாண்டியர் காலக் கல்வெட்டில் இந்த ஊர் தென் கல்லகநாட்டில் உள்ள விக்கிரம சோழபுரம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விக்கிரம சோழபுரம் என்ற பெயரே பிற்காலத்தில் விக்கிரமங்கலம் என மருவியுள்ளது.[2]
இந்த ஊருக்கு அருகில் உள்ள உண்டாங்கல் மலையில் இரண்டு சமணக் குகைகள் உள்ளன. குகைகளில் சமணப் படுக்கைகளும், கிமு இரண்டாம் நூற்றாண்டை சேர்ந்த ஏழு தமிழி கல்வெட்டுகளும் உள்ளன.[3]
ஊரில் உள்ள கோயில்கள்
தொகுமேற்கோள்
தொகு- ↑ "Vikramangalam Village , Chellampatti Block , Madurai District". www.onefivenine.com. பார்க்கப்பட்ட நாள் 2023-05-13.
- ↑ "சோழரும் பாண்டியரும் கட்டியெழுப்பிய கலைக் கருவூலம்!". Hindu Tamil Thisai. 2023-05-11. பார்க்கப்பட்ட நாள் 2023-05-13.
- ↑ "பார் ஆக மாறிய சமணர் படுகை". Dinamalar. 2020-08-21. பார்க்கப்பட்ட நாள் 2023-05-13.