விசால்கர்
விசால்கர் (Bishalgarh), வடகிழக்கு இந்தியாவில் உள்ள திரிபுரா மாநிலத்தின் மேற்கில் அமைந்த சிபாகிஜால மாவட்டம் மற்றும் விசால்கர் வருவாய் வட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரமும், நகராட்சியும் ஆகும். இது திரிபுரா மாநித் தலைநகரான அகர்தலாவிற்கு தெற்கே 21.1 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
விசால்கர்
বিশালগড় | |
---|---|
நகரம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | திரிபுரா |
மாவட்டம் | சிபாகிஜாலா மாவட்டம் |
உட்கோட்டம் | விசால்கர் |
உள்ளூர் மொழிகள் | வங்காள மொழி, கோக்போராக் மொழி |
அரசு | |
• வகை | நகராட்சி |
• நிர்வாகம் | விசால்கர் நகராட்சி |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 21,085 |
நேர வலயம் | ஒசநே+05:30 (இந்திய சீர் நேரம்) |
PIN | 799102 |
ஐஎசுஓ 3166 குறியீடு | IN-TR |
இணையதளம் | tripura |
போக்குவரத்து
தொகுஅகர்தலா-கர்ஜீ நிலையங்களை இணைக்கும் இருப்புப் பாதை விசால்கர் தொடருந்து நிலையம் வழியாகச் செல்கிறது.[1]
மக்கள் தொகை பரம்பல்
தொகு2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி 19 வார்டுகளும், 5,216 வீடுகளும் கொண்ட விசால்கர் நகரத்தின் மக்கள் தொகை 21,085 ஆகும். அதில் ஆண்கள் 10,640 மற்றும் பெண்கள் 10,445 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 982 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 9.6% ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 3542 மற்றும் 23 ஆகவுள்ளனர்.
இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 84.17%, இசுலாமியர் 15.62% மற்றும் பிறர் 0.20% ஆகவுள்ளனர்.[2]