விஜயகாந்த் வியாசுகாந்த்

விஜயகாந்த் வியாஸ்காந்த் (Vijayakanth Viyaskanth, பிறப்பு:5 திசம்பர் 2001), இலங்கையின் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒரு துடுப்பாட்ட வீரரும், நேர்ச்சுழல் பந்துவீச்சாளரும் ஆவார்.[1][2]

விஜயகாந்த் வியாசுகாந்த்
Vijayakanth Viyaskanth
தனிப்பட்ட தகவல்கள்
பிறப்பு5 திசம்பர் 2001 (2001-12-05) (அகவை 22)
யாழ்ப்பாணம், இலங்கை
மட்டையாட்ட நடைவலக்கை
பந்துவீச்சு நடைநேர்ச்சுழல் வலக்கை
பங்குபந்து வீச்சாளர்
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2020 முதல்யாழ்ப்பாணம் கிங்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை இ20 மு.த
ஆட்டங்கள் 13 2
ஓட்டங்கள் 29 2
மட்டையாட்ட சராசரி 9.66 2.00
100கள்/50கள் 0/0 0/0
அதியுயர் ஓட்டம் 10* 2
வீசிய பந்துகள் 282 42
வீழ்த்தல்கள் 19 1
பந்துவீச்சு சராசரி 16.78 23.00
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0
சிறந்த பந்துவீச்சு 3/24 1/23
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
4/– 4/–
மூலம்: கிரிக்கின்ஃபோ, 26 திசம்பர் 2022

இவர் 2020 திசம்பர் 4 இல் 2020 லங்கா பிரிமியர் லீக் சுற்றில் யாழ்ப்பாணம் இசுடாலியன்சு அணிக்காக தனது முதலாவது இருபது20 போட்டியில் விளையாடினார்.[3] 2021 நவம்பரில், யாழ்ப்பாணம் கிங்சு (முன்னைய இசுட்டாலியன்சு) அணியில் 2021 லங்கா பிரிமியர் லீக் போட்டிகளில் விளையாடத் தேர்தெடுக்கப்பட்டார்.[4] 2022 சூலையில், மீண்டும் 2022 லங்கா பிரிமியர் லீக் போட்டிகளில் யாழ்ப்பாணம் கிங்சு அணிக்காக விளையாடத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[5] இத்தொடரில் மொத்தம் 13 இலக்குகளைக் கைப்பற்றி, அதிக இலக்குகளை வீழ்த்திய வீரர்களில் ஒருவராக இருந்தார்.[6][7] 2022 திசம்பரில், வியாசுகாந்து வங்காளதேச பிரிமியர் லீகின் 2022-23 போட்டிகளில் சட்டோகிரம் சாலஞ்சர்சு அணியில் விளையாடத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[8][9]

2023 ஆகத்தில், 2024 பன்னாட்டு லீக் இ20 சுற்றில் கலந்து கொள்வதற்காக எம்ஐ எமிரேட்சு அணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டார்.[10] இச்சுற்றில் இவர் 8 இலக்குகளைக் கைப்பற்றி, அவரது அணிக்கு மிகவும் சிக்கனமான பந்துவீச்சாளராக, ஒரு ஓவருக்கு 5.43 ஓட்டங்கள் எடுத்தார்.[11] இவர் தனது முதலாவது முதல்-தரப் போட்டியை 2023 செப்டம்பர் 22 இல் தமிழ் யூனியன் அணிக்காக நொண்டெசிக்றிப்டு அணிக்கு எதிராக விளையாடினார்.[12]

2024 ஏப்ரலில், 2024 இந்தியன் பிரீமியர் லீக் சுற்றில் விளையாடுவதற்காக சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் வனிந்து அசரங்கவிற்காக சேர்த்துக்கொள்ளப்பட்டார்.[13]

மேற்கோள்கள்

தொகு
  1. "Vijayakanth Viyaskanth". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 4 December 2020.
  2. "Vijayakanth Viyaskanth spins himself into Jaffna history books". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 6 December 2020.
  3. "11th Match (N), Hambantota, Dec 4 2020, Lanka Premier League". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 4 December 2020.
  4. "Kusal Perera, Angelo Mathews miss out on LPL drafts". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 10 November 2021.
  5. "LPL 2022 draft: Kandy Falcons sign Hasaranga; Rajapaksa to turn out for Dambulla Giants". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 6 July 2022.
  6. "Avishka Fernando, Kusal Mendis and Carlos Brathwaite feature in ESPNcricinfo's LPL XI". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 2022-12-30.
  7. "Most Wickets- LPL 2023". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 2022-12-30.
  8. "LPL emerging player Viyaskanth gets first Foreign League". NewsWire (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-12-30.
  9. "Welcome to Challenger family, Vijay!". Chattogram Challengers (via Facebook) (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-12-30.
  10. "13 SL cricketers picked for ILT20 league". NewsWire (in அமெரிக்க ஆங்கிலம்). 2023-08-21. பார்க்கப்பட்ட நாள் 2024-04-09.
  11. Mukherjee, Abhishek (2024-04-09). "IPL 2024: Who Is Vijayakanth Viyaskanth, The Rookie Sri Lanka Spinner Replacing Wanindu Hasaranga?". Wisden (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-04-09.
  12. "NCC vs Tamil Cricket Scorecard, , Group B at Colombo, September 22 - 24, 2023". ESPNcricinfo (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-04-09.
  13. Sanjeewa, Kanishka (2024-04-09). "Sunrisers Hyderabad rope in Vijayakanth Viyaskanth for IPL 2024". ThePapare (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-04-09.

வெளி இணைப்புகள்

தொகு