விஜயலட்சுமி ரமணன்

இந்திய வான்படை அதிகாரி

விஜயலட்சுமி ரமணன் (Vijayalakshmi Ramanan) விசிட்ட சேவா பதக்கம் (27 பிப்ரவரி 1924 – 18 அக்டோபர் 2020) ஓர் இந்திய மருத்துவரும், இராணுவ அதிகாரியுமாவார். இவர் இந்திய வான்படை அதிகாரியாக நியமிக்கப்பட்ட முதல் பெண்ணும் ஆவார். மேலும் இந்தியாவின் பல இராணுவ மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சை நிபுணராக பணியாற்றினார். 1977இல் இராணுவத்தின் விசிட்ட சேவா பதக்கத்தைப் பெற்றார். கடைசியாக 1979இல் ஒரு பிரிவின் தளபதியாக[1] [2] பணியாற்றி ஓய்வு பெற்றார்.

வான்படை அதிகாரி

விஜயலட்சுமி ரமணன்
பிறப்பு(1924-02-27)27 பெப்ரவரி 1924
சென்னை, பிரித்தானிய இந்தியா
இறப்பு18 அக்டோபர் 2020(2020-10-18) (அகவை 96)
பெங்களூர், கருநாடகம், இந்தியா
சார்பு இந்தியா
சேவை/கிளை இந்திய வான்படை
சேவைக்காலம்1955 முதல் 1979
தரம் இந்திய வான்படை அதிகாரி
தொடரிலக்கம்4971 MED (MR-3056)
விருதுகள்விசிட்ட சேவா பதக்கம்
துணை(கள்)கே. வி. இரமணன்

ஆரம்ப கால வாழ்க்கை

தொகு

விஜயலட்சுமி 1924 பிப்ரவரி 27 அன்று சென்னையில் பிறந்தார்.[3] இவரது தந்தை டி.டி. நாராயண ஐயர் முதலாம் உலகப் போர் வீரராகவும் பின்னர் சென்னையில் பொது சுகாதார அதிகாரியாகவும் இருந்தார்.[3][4] 1943இல் மதராசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த பிறகு மருத்துவப் பட்டம் பெற்று மருத்துவராகப் பயிற்சி பெற்றார். ஒரு மாணவராக, இவர் சென்னைப் பல்கலைக்கழகத்தில் மருத்துவத்திற்கான பால்போர் நினைவுப் பதக்கத்தையும், அறுவை சிகிச்சைக்கான பரிசையும் பெற்றவர்.[5][3] இவர் மகப்பேறியல் மருத்துவத்திலும், மகளிர் மருத்துவத்திலும் முதுநிலையைப் பெற்றார். மேலும், இந்திய இராணுவத்தில் சேருவதற்கு முன்பு சென்னையில் அறுவை சிகிச்சை நிபுணராக பணியாற்றினார்.[5]

தொழில்

தொகு

இவர், 1955ஆம் ஆண்டில் ஒரு குறுகிய சேவை ஆணையத்தின் கீழ் இந்திய இராணுவ மருத்துவப் படையில் சேர்ந்தார். இவர் இந்திய வான்படையில் நியமிக்கப்பட்டார். மேலும் 1971இல் அதன் முதல் பெண் அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.[4] இந்தியாவிலுள்ள இராணுவ மருத்துவமனைகளில் மகளிர் மருத்துவ நிபுணராக பணியாற்றியதோடு மட்டுமல்லாமல், 1962, 1966, 1971ஆம் ஆண்டுகளில் நடந்த போர்களின் போது இவர் சேவை உறுப்பினர்களுக்கு மருத்துவ சேவையையும் வழங்கினார்.[2]

1968 ஆம் ஆண்டில், கர்நாடகாவின் பெங்களூரில் உள்ள வான்படை மருத்துவமனையில் மூத்த மகளிர் மருத்துவ நிபுணராகவும், மகப்பேறியல் நிபுணராகவும் ஆனார். மேலும் சேவைகளில் குடும்பக் கட்டுப்பாட்டை ஊக்குவிக்கும் இராணுவ முயற்சிகளுக்கு தலைமை தாங்கினார். 20 மார்ச் 1953இல் ஒரு வான்படை அதிகாரியாகவும், 22 ஆகஸ்ட் 1972இல் ஒரு பிரிவின் தளபதியாகவும் நியமிக்கப்பட்டார். [6] இவர் சலகள்ளி, கான்பூர், சிக்கந்தராபாத், பெங்களூருவில் உள்ள ஆயுதப்படை மருத்துவமனைகளில் பணியாற்றினார். இந்த நேரத்தில் இவர் செவிலையர் அதிகாரிகளுக்கு மகப்பேறியலையும், மகளிர் மருத்துவத்தையும் கற்பித்தார்.[4]

இவர், 1979இல் ஒரு பிரிவின் தளபதியாக ஓய்வு பெற்றார். இந்திய ஆயுதப் படைகளின் உறுப்பினர்களுக்கு "உயர் வரிசையில் சிறப்பான சேவைக்காக" வழங்கப்படும் விசிட்ட சேவா பதக்கத்தைப் பெற்றார். பெண்கள் மற்றும் குழந்தைகளின் சிகிச்சைக்காக அப்போதைய இந்தியக் குடியரசுத் தலைவர் நீலம் சஞ்சீவ ரெட்டி 26 ஜனவரி 1977 அன்று இந்த கௌரவத்தை வழங்கினார். இந்திய ஆயுதப் படைகளுடன் தொடர்புடைய இந்திய வான்படையில் நியமிக்கப்பட்ட முதல் பெண் அதிகாரியாக இருந்த,[2] இவர் ஓய்வு பெறுவதற்கு முன்பு 24 ஆண்டுகள் இந்திய வான்படையில் பணியாற்றினார்.[4]

இந்திய விமானப்படையில் முதல் பெண் அதிகாரியாக தனது அனுபவங்களைப் பற்றி பேசிய இவர், "சில ஆண்டுகளாக, நான் வான்படையில் ஒரே பெண் அதிகாரியாக இருந்தேன். ஆரம்பத்தில், நான் ஆண்களுடன் வேலை செய்ய பயந்தேன். ஆனால் நான் தைரியமாக இருந்தேன். என்னையே எதிர்கொள்ள முடியும் என்று நினைத்தேன் " என்றார்.[3] இவர் பணியில் சேரும் போது இந்திய விமானப்படையில் பெண்களுக்கு சீருடைகள் இல்லாததால், இவர் விமானப்படை வண்ணங்களுடன் ஒரு புடவையையும், ரவிக்கையையும் அனிந்து கொண்டார்.[4]

சொந்த வாழ்க்கை

தொகு

விஜயலட்சுமி, பாரம்பரிய கர்நாடக இசைக் கலைஞராகவும் பயிற்சி பெற்றவர். மேலும், தில்லி, இலக்னோ, சிக்கந்தராபாத், பெங்களூர் போன்ற இடங்களிலிருந்து ஒளிபரப்பப்படும் அனைத்திந்திய வானொலியுடன் 15 வயதிலிருந்தே "ஏ தரம்" கலைஞராக இருந்தார்.[4] இவருக்கு சுகன்யா என்றா மகளும், சுகுமார் என்ற மகனும் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவரது கணவர் கே. வி. இரமணனும் வான்படை அதிகாரியாக இருந்தார்.[2]

இவர் அக்டோபர் 18, 2020 அன்று பெங்களூரிலுள்ள தனது மகள் வீட்டில், தனது 96 வயதில் முதுமையால் இறந்தார்.[7][2]

மேற்கோள்கள்

தொகு
  1. Swamy, Rohini (21 October 2020). "Vijayalakshmi Ramanan, first woman IAF officer & a doctor always 'prepared for an emergency'". ThePrint (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 22 October 2020.
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 "IAF's first woman officer dies at 96". The Indian Express (in ஆங்கிலம்). 21 October 2020. பார்க்கப்பட்ட நாள் 21 October 2020.
  3. 3.0 3.1 3.2 3.3 Swamy, Rohini (21 October 2020). "Vijayalakshmi Ramanan, first woman IAF officer & a doctor always 'prepared for an emergency'". ThePrint (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 22 October 2020.
  4. 4.0 4.1 4.2 4.3 4.4 4.5 "Pioneering first woman IAF officer passes away in Bengaluru". Deccan Herald (in ஆங்கிலம்). 21 October 2020. பார்க்கப்பட்ட நாள் 22 October 2020.
  5. 5.0 5.1 Ch, Shikha; ra (21 October 2020). "Vijayalakshmi Ramanan, The First Woman Officer Of Indian Air Force Dies At 96". SheThePeople TV (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 21 October 2020.
  6. "Service Record for Wing Commander Vijayalakshmi Thirupunathura Narayana Iyer 4971 MED at Bharat Rakshak.com". Bharat Rakshak (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 21 October 2020.
  7. Service, Tribune News. "Indian Air Force's first woman commissioned officer Vijayalakshmi Ramanan passes away at 96". Tribuneindia News Service (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 21 October 2020.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=விஜயலட்சுமி_ரமணன்&oldid=4148669" இலிருந்து மீள்விக்கப்பட்டது