விதிர்நிலைப் பயில்வுகள்
விதிர்நிலைப் பயில்வுகள் (Queer studies), பாலியல் பன்மைப் பயில்வுகள் (sexual diversity studies), அல்லது பெயர்பாலினப் பயில்வுகள் (LGBT studies) என்பது பாலியல் சார்புநிலைகள், பாலியல் அடையாளம், பாலின அடையாளம் பற்றிய புலமாகும். குறிப்பாக, இப்புலம் இலெசுபியன், மகிழ்நர், இருபாலியல், பெயர்பாலினம், பாலின வலியுணர்வு, பாலுணர்வின்மை, விதிர்நிலைப் பாலினம், பாலுணர்வும் பாலினமும் சார்ந்த வினவல், பாலின ஊடுறவு, பெயர்பாலினப் பண்பாடுகள் ஆகிய கருப்பொருள்களைச் சார்ந்த சிக்கல்களை ஆய்வு செய்கிறது.[1]
முதலில் இப்புலம் பெயர்பாலின வரலாறு, இலக்கியக் கோட்பாடு ஆகியவற்றை மட்டும் மையப்படுத்தித் தொடங்கியது என்றாலும், இப்போது உயிரியல், சமூகவியல், மனநோய், மானிடவியல், அறிவியலின் வரலாறு ஆகிய அறிவியல் புலங்களில் எழும் பல சிக்கல்களையும் தன் கருப்பொருளின்கீழ் உள்ளடக்கி, விரிவுபடுத்தப்பட்டுள்ளது.[2] மெய்யியல்,உளவியல், பாலுணர்வியல், அரசியல், அறவியல், பிற புலங்களில் அடையாள ஆய்வு, வழ்க்கைநிலை, வரலாறு, பெயர்பாலினரின் புலன்காட்சி ஆகிய கருதுபொருள்களைச் சார்ந்து எழும் பாலியல் சிக்கல்களையும் ஆய்வு செய்கிறது. யேல் பல்களைக்கழகத்தின் இலெசுபியன், மகிழ்நர் பயில்வு சார்ந்த இலாரி கிரேமர் முன்முயற்சி ஆய்வுக் கட்டிலின் தலைவரான மரியான்னி இலப்பிரான்சு ,[3] " இப்போது நாம் ' ஒத்தபாலின உணர்வுக்கான காரணம் எது?' என்பதை மட்டுமன்றி, [மேலும்] ' கலப்புப் பாலின உணர்வுக்கான காரணம் எது?' , ' சிலர் கண்ணோட்டத்தில் ஏன் பாலுணர்வு இவ்வளவு ஆழமாக மையப்படுகிறது?' என வினவத் தொடங்கியுளோம் " எனக் கூறுகிறார்..[2]
விதிர்நிலைப் பயில்வுகள் என்பதும் மெய்யியலையும் இலக்கியக் கோட்பாட்டஈயும் மையப்படுத்திய பகுப்பாய்வான விதிர்நிலைக் கோட்பாடு என்பதும் ஒத்தவையல்ல; முன்னது, சமூகப் புனைவான பாலியல் அடையாளம் குறித்த கருத்தினங்களை உய்யநிலையில் கேள்விகேட்டு அறைகூவல் விடுக்கும் அறிவுப் புலமாகும்.[2]
பின்னணி
தொகுபல கல்லூரிகள், பால், பாலுணர்வு, பாலியற் சார்புநிலைகளை ஆயும் புதிய புலத்துக்குக் கல்வித் திட்டங்களை வழங்குகின்றன,<ref name="Boston.com 2009-06-03"/லண்மையில் ஐக்கிய அமெரிக்காவிலும் 40 க்கும் மேலான சான்றிதழ், பட்டப் படிப்புகள் ஐந்து நிறுவனங்களால் வழங்கப்படுகின்றன; பிற உலக நாடுகளிலும் இதையொத்த கல்வித் திட்டங்கள் வளர்ந்துவருகின்றன.
வரலாறு
தொகுமிக முந்தைய விதிர்நிலைக் குமுகாய ஆய்வு இலெசுபிய ஆய்வாளரான மில்ரெடு பெறிமனின் 1930 ஆண்டுப் புரட்சிகரத் தலைப்பான ஒத்த பாலின ஈர்ப்பின் உளவியல் நிகழ்வு ஆகும்.இந்த ஆய்வு அவர் சால்ட்லேக் நகரத்து பொகிமிய அரங்கில் சந்தித்த 23 இலெசுபியப் பெண்கள், 9 மகிநர் ஆண்கள் ஆகியோரது பட்டறிவுப் பகிர்வை அடிப்படையாகக் கொண்டதாகும்.இந்த ஆய்வில் பெரும்பாலான இலெசுபியப் பெண்களும் மகிழ்நர் ஆண்களும் இளமை முதலே ஒத்த பாலினக் காமப் பட்டறிவைக் கொண்டிருந்தமையைக் கூறியுள்ளனர்.ஏறக்குறைய, 1920 களில் ஐக்கிய அமெரிக்காவின் பல பெருநகரங்களில் இலெசுபிய, மகிழ்நர் கிளைப் பண்பாடுகள் பல சிறுபான்மைக் குழுக்களில் தோன்றி நிறுவப்பட்டுள்ளது.
இலெசுபிய, மகிழ்நர் பயில்வுகள் மகிழ்நர் வரலாறு குறித்த பல நூல்கள் வெளியாகியதும் 1970 களில் தோன்றியது. இனவிளக்கப் பயிவுகளாலும் மகளிர் பயில்வுகளாலும் ஊக்கமுற்று இவையொத்த தனி அடையள ஆய்வுகள் சார்ந்த கல்விப் புலங்கள் உருவாகின. பிராங்பர்ட் பள்லியின் உய்யநிலை ஆய்வு அடக்கப்பட்ட இலெசுபிய, மகிழ்நர் வாழ்க்கை வரலாற்றை வெளிக்கொணர வழிவகுத்தது; மேலும் இது இலக்கியக் கல்விப் புலங்களில் இலக்கியக் கோட்பாட்டு ஆய்வுக்கி ஊக்கமூட்டியது. எனவே, சமூகத்தால் புனைவுற்ற மரபான பாலியல் அடையாளத்துக்கு அறைகூவல் விடுத்து விதிர்நிலைக் கோட்பாடு எழுச்சி கண்டது.
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Archived copy" (PDF). Archived from the original (PDF) on March 19, 2013. பார்க்கப்பட்ட நாள் July 12, 2013.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link) lists these names and similar acronyms at various academic departments. - ↑ 2.0 2.1 2.2 Branch, Mark Alden (April 2003). "Back in the Fold". Yale Alumni Magazine. YaleAlumniMagazine.com. பார்க்கப்பட்ட நாள் January 29, 2015.
- ↑ "Larry Kramer Initiative for Lesbian and Gay Studies at Yale". Yale.edu (Internet Archive). March 13, 2007. Archived from the original on March 13, 2007. பார்க்கப்பட்ட நாள் June 4, 2009.
மேலும் படிக்க
தொகு- Dynes, Wayne R. (ed.) Encyclopedia of Homosexuality. New York and London, Garland Publishing, 1990
- Halwani, Raja, Carol V. A. Quinn, and Andy Wible (Eds.) Queer Philosophy. Presentations of the Society for Lesbian and Gay Philosophy, 1998-2008. Amsterdam and New York, NY, Rodopi, 2012
- McRuer, Robert (2006). "Crip Theory: Cultural Signs of Queerness and Disability", New York University Press.
வெளி இணைப்புகள்
தொகு- College Equality Index
- University Queer Programs
- Undergraduate Journal of Sexual Diversity Studies at the University of Toronto
- The Rockway Institute for LGBT research in the public interest at Alliant International University
- The Gay, Lesbian, Bisexual, Transgender Historical Society
- Trikster - Nordic Queer Journal
- Lesbian and Gay Research in UK Universities and Colleges(compiled in 2006)
- LGBT Studies Minor at the University of Louisiana at Lafayette