வினோத் மங்காரா

மலையாளத் திரைப்பட இயக்குநர்

வினோத் மங்காரா (Vinod Mankara) கேரளாவைத் தளமாகக் கொண்ட ஒரு இந்திய எழுத்தாளரும் திரைப்பட இயக்குநரும் ஆவார். ஆரம்ப காலத்தில் அச்சு ஊடகங்களில் பகுதிநேரப் பத்திரிகையாளராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கிய இவர் புது தில்லி, இந்தியாவின் பிற முக்கிய நகரங்களில் பணியாற்றியுள்ளார். மின்னணு ஊடகத்தில் இவரது தொழில்வாழ்க்கை சூர்யா தொலைக்காட்சியில் தொடங்கியது, அங்கு இவர் திட்ட மேலாளராகப் பணியாற்றினார். துபாயைத் தளமாகக் கொண்ட தொலைக்காட்சி நிறுவனமான மத்திய கிழக்கு தொலைக்காட்சியில் தலைமை மேலாளர், நிகழ்ச்சிகள் பொறுப்பிலும் இருந்துள்ளார். இந்தியாவிஷனில் தலைமைத் தயாரிப்பாளராகவும் பணிபுரிந்தார். இப்போது மலையாளத் தொலைக்காட்சி நிறுவனமான ஏசியாநெட்டில் மூத்த தயாரிப்பாளராக இருந்து வருகிறார். இவர் பாலக்காடு அருகே மங்காரா கிராமத்தைச் சேர்ந்தவர்.

வினோத் மங்காரா

2015 இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் வினோத் மங்காரா (வலது)
தேசியம்இந்தியன்
பணிஎழுத்தாளர், தயாரிப்பாளர்

திரைப்படவியல்

தொகு

இயக்குநர் பணிகள்

தொகு
ஆண்டு படம் பணிகள் மொழி குறிப்புகள்
இயக்குனராக தயாரிப்பாளராக எழுத்தாளராக
2010 கரையேலக்கு ஒரு கடல் தூரம் ஆம் மலையாளம் ஆம் மலையாளம்
2017 கம்போஜி ஆம் ஆம் மலையாளம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=வினோத்_மங்காரா&oldid=4169193" இலிருந்து மீள்விக்கப்பட்டது